October 22, 2010

ஒரு எழுத்தாளனின் (சோகக்) கதை - 2

ஒரு எழுத்தாளனின் (சோகக்) கதை - 1

எழுத்தாளர் ஆக "நமக்கு நாமே" திட்டம்னு முடிவு பண்ணியாச்சு. ஆனா எங்க இருந்து ஆரம்பிக்கிறது?

முதல்ல எழுதுறதுக்கான சூழலை உருவாக்கணும்.

வீட்டுல என்னோட அறைல இருந்த ஜன்னலை எல்லாம் நல்லா திரை போட்டு மூடியாச்சு. எல்லாமே மூடி இருந்தாத்தான் எழுதுறதுக்கு மூடு வரும். காமா சோமான்னு சுவத்துல பூரா கிறுக்கனும். அப்புறம் அடுக்கி வச்சு இருந்த துணிகள், சாமான் எல்லாத்தையும் கலைச்சுப்போட்டு வீடு முழுக்க பரப்பி விட்டாச்சு. பப்பரக்கான்னு ஒழுங்கு இல்லாமக் கிடந்தாத்தானே கட்டுடைத்தல், பின் நவீனத்துவம், பின்னாத நவீனத்துவம் எல்லாமே.. "உனக்கு மறை கிறை கழண்டு போச்சா.."அம்மா திட்டினபோதுதான் நிம்மதியா இருந்தது. அப்போ ஒழுங்காத்தான் எல்லாத்தையும் உருப்புடாமப் பண்ணியிருக்கோம்.

அடுத்தது, எழுத்தாளனுடைய உடமைகள்.

அழுக்கு ஜிப்பா
இத்துப் போன ஜோல்னா பை
நல்ல தடியான கண்ணாடி
காந்தி காலத்து பேனா
கிலோ கணக்குல பேப்பர்
காயலான் கடை சைக்கிள்

செட் பிராப்பர்டி எல்லாத்தையும் எறக்கியாச்சு. அத்தோட கைல பேனாவோட வானத்த வெறிக்கிற மாதிரி, ஜிப்பாவோட சைக்கிள் ஒட்டிக்கிட்டு வர மாதிரி, ஆளே இல்லாத ரோட்டுல அலப்பறையா நடந்து வர மாதிரி போட்டோவும் எடுத்தாச்சு. பின்ன.. நாளைக்கு நம்ம கதை விகடன், குமுதம்ல எல்லாம் வரும்போது தேவைப்படும்ல.

என்னதான் நான் பெரிய ஆளா இருந்தாலும் நல்ல எழுத்தாளனுக்கு வாசிப்பனுபவம் முக்கியம். அதனால மைய நூலகத்துல மெம்பர் ஆகிட்டேன். யாருமே படிக்காத புத்தகங்கள் எங்க இருக்குன்னு தேடித் பிடிச்சு படிக்க ஆரம்பிச்ச போதுதான் அவர் எனக்கு அறிமுகமானாரு. புரட்சிக் கவிஞர் இடிமுட்டி. ஆகா.. நமக்கு புரட்சிக் கலைஞர் தெரியும்.. அது யாருடா இந்த புரட்சிக் கவிஞர்?

புத்தகத்த எடுத்துப் பார்த்தவன் அப்படியே மிரண்டுட்டேன். முப்பது நாற்பது பேரு முன்னுரை எழுதி இருக்காங்க. இடிமுட்டியின் இடிமுழக்கம்னு ஒருத்தர் ஆய்வு நூல் எழுதி இருக்காராம். என் புத்தகங்களின் மீதான ஆய்வுகள் பற்றிய கருத்துத் தெறிப்புகள்னு இடிமுட்டியே ஒரு புத்தகம் போட்டிருக்காரு. அடேங்கப்பா.. ரொம்பப் பெரிய ஆள்தான் போலன்னு படிக்க ஆரம்பிச்சேன்.

முதல் கவிதையே டெர்ரர்தான்.

ஓ உலக இளைஞனே
பார்க்க எடுப்பாக
இருப்பதை விட
நாலு பேருக்கு
எடுத்துக்காட்டாக நீ
இருந்தால் நாடு செழிக்கும்

அடுத்தது பெண்களுக்கான அறைகூவல்.

இன்றைய மங்கை
அவள்
பொங்கி வரும் கங்கை
தோழியே உனக்குத்
தொல்லை கொடுப்பவனை
தோல்செருப்பால்
தொரத்தி தொரத்தி அடி

காதல் கவிதைகள்ல எப்படி பட்டையைக் கெளப்புறாரு பாருங்க..

பூவும் பொண்ணும் ஒண்ணு
அறியாதவன் வாயில மண்ணு

வானில் இருப்பது வெண்மதி
என் காதலே எனக்கு வெகுமதி

ஐயோ ஐயோ.. எனக்குப் படிக்க படிக்க சந்தோஷமா இருக்கு. கவிதை எழுதுறது இம்புட்டு ஈசின்னா கண்டிப்பா நாமளும் கவிஞன் ஆகிடலாம்டா.. கஷ்டப்பட்டு அவரோட வீட்டைக் கண்டுபிடிச்சு போயிட்டேன்.

"எழுத்தாளன் ஆகணும்னு ஆசை சார். யாரையுமே பார்க்கக் கூடாதுன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா உங்க புத்தகத்தைப் படிச்ச பின்னாடி... முடியல.. அதான் ஓடோடி வந்துட்டேன்.."

மனுஷனைக் கைல பிடிக்க முடியல. உள்ளே போய் ஒரு நூறு, இருநூறு புத்தகத்த எடுத்துட்டு வந்தாரு. எல்லாமே வாரமலர், குடும்ப மலர் மாதிரியான புத்தகங்கள். எல்லாத்துலையும் அவர் கவிதையும், கதையும் வந்திருக்காம்.

"கவிதை எழுதுறது ரொம்ப ஈசி தம்பி. இப்போப் பாருங்க.. நாலு திசை இருக்கு. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் மறைகிறான். வடக்கும் தெற்கும் எப்போதும் ஒன்று கூடுவதே இல்லை. அவ்வளவுதான். இதையே கொஞ்சம் மாத்திப் பாருங்க.. கவிதை ரெடி.."

இதை.. இதை.. இதை.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

"உங்கள சுத்தி இருக்குற விஷயங்கள நல்லா கவனிச்சாலே போதும். அப்புறம் எழுதுங்க.. கதையும் கவிதையும் ஊத்து மாதிரி.. சும்மா அப்படியே உங்க நாபிக்கமலத்துல இருந்து பீறிக்கிட்டு வரும்"

எனக்கு புல்லரிக்குது. அவருக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன். வெளில வானத்துல ஒரு காக்கா கத்திக்கிட்டே பறந்து போகுது. உடனே எழுதுனேன் ஒரு கவிதை.

காகமே
இந்தக் கேடு கெட்ட மனிதர்களோடு
பேச மாட்டேன் என
சொல்வதற்காகத்தான்
(டூ)கா (டூ)கா
என்று கரைகிறாயோ?

அடுத்து நடந்தது எல்லாம் சரித்திரம் நண்பா. என்னோட வாழ்க்கைய நான் எலக்கியத்துக்கே அர்ப்பணிக்க முடிவு பண்ணிட்டேன். ஒரு நாளைக்கு இருபத்தெட்டு மணி நேரமும் எழுத்துத்தான். விடுறதில்லை. எலக்கியத் திமிங்கலம்னு பேரு வாங்காம விடுறதில்லை. கண்ணுல பாக்குற எல்லாத்தையும் பதிவு பண்ண ஆரம்பிச்சேன். மனுஷன், மரம், நாய், நரி, நண்டு , நட்டுவாக்கிளி.. எதையும் விட்டுவைக்கல.

ஒவ்வொரு கதையும், கவிதையும் நான் இந்த நாட்டுக்குத் தந்த பொக்கிஷம். ஆனா இந்த பாழாப்போன தமிழ்ச்சூழல்ல எழுத்தாளன யாரு மதிக்கிறா? நான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பின கதைய எல்லாம் ஒரு பயலும் மதிக்கல. சரி.. அவனுங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான். அதுக்காக நான் எழுதாம இருக்க முடியுமா?

வீட்டுலதான் நம்மள ஒரு கணக்காவே எடுத்துக்கலைன்னா.. இந்த சேக்காளிப் பயலுவ.. "அது நம்ம பக்கமாத்தான் வருதுன்னு" ஜுராசிக் பார்க்கப் பார்த்த மாதிரி அவனுகளும் நம்மள கண்டாலே ஓடுறானுங்க. அப்படி அவனுகள நான் என்னத்த கேட்டுட்டேன்? ஏண்டா.. என் எழுத்த எல்லாம் புத்தகமா போடுறீங்களான்னு கேட்டேன். இது ஒரு குத்தமா? சரி விடுங்க பாஸ்.. இவங்க எப்பவுமே இப்படித்தான். இதெல்லாம் பார்த்தா எழுத்தாளன் ஆக முடியுமா?

இந்த உலகத்துக்கு என்னை நிரூபிக்கிற வரைக்கும் இந்த லட்சியப்பயணம் கண்டிப்பா தொடரும் பாஸ். அப்புறம்.. நீங்க தப்பா நினைக்கலைன்னா உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? ஹி ஹி ஹி.. நீங்க ஏன் என்னோட புத்தகத்த போடக்கூடாது? ஹலோ ஹலோ.. எங்க ஓடுறீங்க..

(நகைச்சுவைக்காக மட்டுமே.. யாரையும் குறிப்பிடுவது அல்ல.. நீங்க யாரையாவது பொருத்திப் பார்த்தா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.. அப்புறம் கவிதைகளுக்கான காப்பிரைட்ஸ் - கானா பானா)

16 comments:

Vidhoosh said...

நடத்துங்க... :D

நிலாமகள் said...

நல்லாவே போகுது உங்க நையாண்டி தர்பார்!!

சாந்தி மாரியப்பன் said...

செம லொள்ளு :-)))))))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எலக்கியத் திமிங்கலம் வாழ்க.

ப்ரியமுடன் வசந்த் said...

//பூவும் பொண்ணும் ஒண்ணு
அறியாதவன் வாயில மண்ணு
//

ஹிஹிஹி

வாத்யாரே இமிடேசன் நல்லாவே பண்றீங்க!

Anonymous said...

என்ன கா.பா அதுக்குள்ளே முடிச்சிட்டீங்க :(
இன்னும் எதிர்பார்த்தேனே..
காக்கா கவிதை செம :)
லொள்ளு தொடரும்னு போடுங்க!

Karthik said...

Hehehe. :-) :-)

kannamma said...

காக்கா -வ பார்த்து கவிதை எழுதிய இலக்கிய திமிங்கலம் வாழ்க!!!!!!!!!!!!

மதன் said...

"(டூ)கா (டூ)கா
என்று கரைகிறாயோ?"

ண்ணா காக்கா ஏன் கா கானு கத்துதுன்னு நான் இது வரை யோசிச்சது இல்ல....ஆனா அதுக்கு இப்படி ஒரு மனரீதியான காரணம் இருக்குனு இப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன்....ரைட்டு பட்டய கிளப்புங்க........

முரளிகண்ணன் said...

இன்னும் சில பார்ட் எதிர்பார்த்தேன்.

Anonymous said...

ஐய்யோ இந்த புள்ளைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கமா இருக்காங்களே இங்க இது பண்ற அலும்பு தாங்கலை...எப்பா என்ன என்ன பண்ண வேண்டி இருக்கு எழுத்தாளராக....

குமரை நிலாவன் said...

நடத்துங்க..... நடத்துங்க....

வார்த்தை said...

////ஒழுங்காத்தான் எல்லாத்தையும் உருப்புடாமப் பண்ணியிருக்கோம்.
அடுத்து நடந்தது எல்லாம் சரித்திரம்...
இந்த லட்சியப்பயணம் கண்டிப்பா தொடரும்...//

பெரிய பெரிய படைப்புங்கயெல்லாம், அந்த படைப்பாளியோட காலத்திக்கு பின்னாடி தான் இந்த உலகம் புரிஞ்சிகிட்டது.
உங்க படைப்போட மகத்துவத்த‌ உடனே இந்த உலகம் புரிஞ்சிக்கணுமா...?
:‍‍-)

R. Gopi said...

எல்லாம் சரி. ஆனா ஒரு முக்கியமான விஷயம் விட்டுப் போச்சு. என் பதிவுகள் படிச்சாத்தான் எளுத்தாலர்னு ஒத்துப்பேன்

பத்மா said...

நெஜமாவே ஒரு introspection க்கு உள்ளாக்குதுங்க :)) அந்த காக்கா கவிதை படித்த பின் பயமே வந்துட்டு ..கலக்குங்க சார்

Ganesh said...

அருமை.நகைசுவையுடன் கூடிய தொகுப்பு ..காக்கா கவிதை செம :P