October 25, 2010

காதலுமாகி

எல்லோரையும் விட என்னை அதிகமாக அழ வைத்தவள் நீ.. அதனலாயே உன்னை இன்னும் அதிகமாகப் பிடிக்கிறது # காதல்

எல்லோருக்கும் ஏதோ ஒரு போதை தேவையாக இருக்கிறது. எனக்கு நீ.. # காதல்

நிறைய பேரு தமன்னா, தமன்னான்னு சொல்றாங்களே.. அவுங்க யாரு? புட்டண்ணா மாதிரி பெரிய டைரடக்கரா? # அறியாமை # நான் அப்புராணி..

வாழ்க்கையில மனுஷனுக்கு காதல் ஒரு தடவைதான் வரும்னு சொன்ன கேனப்பய யாரு # டவுட்டு

ஊடல் பொழுதுகளில், தவறை யார் செய்திருந்தாலும், முதலில் இறங்கி வந்து மன்னிப்பு கேட்பது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள் பெண்கள். கருமம், நாமும் அப்படியே நடித்துத் தொலைக்க வேண்டி இருக்கிறது # புலம்பல்ஸ் ஆப் இந்தியா

அய்யா சன் பிக்சர்ஸ் புண்ணியவான்களே.. தயவு செய்து தலைவரோட எந்திரன் படத்தை ஆகஸ்ட்ல மட்டும் ரிலீஸ் பண்ணாதீங்க.. ஏன்னா.. அதுக்கு ஒரு கறுப்பு ச(த)ரித்திரமே இருக்கு.. நாட்டுக்கு ஒரு நல்லவன்.. பாபா.. கடைசியா குசேலன்.. மறுபடியும்னா தாங்க முடியாது.. அவ்வ்வ்..# பகுத்தறிவு

அழகாக இருக்கும் பெண்கள் அழகாக இருப்பது எப்போதுமே ஆபத்து.. அவர்களுக்கல்ல.. ஆண்களுக்கு..# ஆண்ஈயம், ஆண்பித்தளை,ஆண்சொம்பு

மக்கு மகேஷ்.. சமீபத்துல இப்படி ஒரு மொக்க விளம்பரம் பார்த்ததே இல்ல.. விக்ரமுக்கு இது தேவையா? # மணப்புரம் பைனான்ஸ் ஒழிக

பொண்ணுங்க குனிஞ்ச தலை நிமிராம அடக்க ஒடுக்கமா இருக்குறது நல்ல பழக்கம்தான்.. ஆனா அதுக்காக டிராபிக்ல நட்டநடுரோட்டை கிராஸ் பண்ணும்போதும் அப்ப்ப்ப்படியே இருக்கணுமா? கருமம்டா சாமி... # கீழ விழுந்த கடுப்பு

உன்னால், உனக்காக, உன்மீது.. உண்டானது என் காதல் # காதல் ஜனநாயகம்

அம்மாவின் அருகாமையும், கவனிப்பும் கிடைப்பதற்காகவாவது அடிக்கடி காய்ச்சல் வர வேண்டும் # ஒரு ஹாஸ்டல் மாணவனின் பிரார்த்தனை

திருச்சியில் சேர்ந்த கூட்டம் வெறும் ஒன்றரை லட்சம்தான்.. முப்பது மாவட்டத்தில் இருந்து வந்த கூட்டத்தை விட திருச்சியில் இருந்தே அதிகக் கூட்டத்தைக் கூட்டுவொம் என நேரு சூளுரை.. கலைஞரை ஜெ திட்டியதைக் கேட்டு பெண்கள் கடும்கோபம்.. சாலையில் இருந்த தடுப்புகளை உடைத்து அட்டூழியம் பண்ணிய ரத்தத்தின் ரத்தங்கள்.. தண்ணீர் கிடைக்காமல் மயக்கம் போட்ட தொண்டர்களுக்கு முதலுதவி கூட செய்யாத கொடூரம்.. இரண்டாவது ரவுண்டிலும் கலைஞர் ஜெயிப்பாரா? - நக்கீரன் கட்டுரை # ஊடகங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதைத் தடுக்கவே முடியாதா..:-((((

ஆண்களின் இயலாமை, பெண்களின் ஆயுதம், குழந்தைகளின் தேசிய கீதம் # அழுகை

காலையில எட்டு மணிக்கு எந்திரிச்சு வரச் சொல்லி உசிர வாங்குரானுங்கன்னு பொலம்பிக்கிட்டே வர்ற மக்கள வச்சுத்தான் கொடி ஏத்த வேண்டியிருக்கு.. ஞாயிற்றுக்கிழமை வந்ததால ஒரு நாள் லீவு போச்சேன்னு குறை வேற.. இன்னைக்கு சுதந்திர தின உணர்வுங்கிரது வெறும் பேச்சளவிலதான் இருக்குன்னு நண்பன்கிட்ட பொலம்பினா சிரிச்சுக்கிட்டே சொல்றான்..”விடுறா மாப்ள.. பேச்சளவுலையாவது இருக்கே..”

ஹே ஹே..அடுத்த காமெடி.. தங்க நகை வெளம்பரத்துல இளைய தலைவலி.. ஒரே சென்டி”மெண்டல்” சீன்.. அய்யோ.. எனக்கு சிப்பு சிப்பா வருகுதே..:-)))

தீபாவளி, புதுவருஷப் பொறப்பு, நண்பர்கள் தினம்.. இது எல்லாத்துக்கும் மெசேஜ் அனுப்புறதுக்கு காசு பிடிக்கிற கருமாந்திர செல்போன் கம்பெனிக்காரனுவ.. சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் மதிக்கிறதே இல்ல.. பயபுள்ளைக நம்மளப் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்காய்ங்க..:-(((

"வந்தே மாதரம்”ங்கிற தேச பக்திப் படத்துக்குக் கூட சினேகாவோட குளியலும் “கல கல”ன்னு குத்துப்பாட்டும் தேவையாயிருக்கு.. என்ன கொடுமை இது?

வாழ்க சுதந்திரம்.. வாழ்க பாரதம்..

காதலில் ஜெயித்தவனை விட, தோற்றுப்போன காதலின் நினைவுகளை சுமந்தபடி வாழ்பவன் பாக்கியசாலி # எப்படியெல்லாம் மனச தேத்திக்க வேண்டியிருக்கு.. அவ்வ்வ்வ்வ்

நீ வீசிப்போன ஒற்றைப் புன்னகையில் தொலைந்து போனவன் ஆகிறேன் நான்.. மீண்டுமொரு தரம் புன்னகை செய்.. தொலைந்தவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்கிறேன்..:-)))

”அஜித்துடன் வாய்ப்பு கிடைக்கும்போது பணியாற்றுவேன்” - குமுதத்தில் கவுதம் .“இனிமேல் அஜித் எனக்குத் தேவையில்லை” - விகடனில் கவுதம்

விகடன்ல வந்ததே உண்மையா இருக்கக் கடவதாக..

ஜக்குபாய் ஸ்டைல்ல தல சொல்லணும்னா..

“கடவுளே.. விஜயை நான் பார்த்துக் கொள்கிறேன்.. இந்த மொக்கை இயக்குனர்களிடம் இருந்து மட்டும் என்னைக் காப்பாற்று..”

இன்று மாலை கல்லூரியில் இருந்து திரும்பி வரும் வழியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பத்து வயது சிறுவனொருவனைப் பார்த்தேன்.. சத்தமாக ஒரு பாடலைப் பாடியபடி சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தான்.. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவனுக்கு இடது கை முழங்கைக்கு கீழே சுத்தமாக இல்லை.. ஆனால் அதன் சுவடுகள் ஏதுமின்றி அவன் பாட்டுக்கு மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்தான்.. ஏனொ தெரியவில்லை.. அவனைப் பார்க்கும்போது ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் சோகமாகவும் இருந்தது.. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு..:-(((

காதல்ங்கிறது ஒரு மேஜிக் மாதிரி.. யாருக்கு வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் வரலாம்.. இப்போதைக்கு, அந்த யாரோ, நானாக் கூட இருக்கலாம்..:-)))

(buzz அப்பப்போ கிறுக்கிட்டு இருந்ததோட தொகுப்பு)

12 comments:

Anonymous said...

மீ த பர்ஸ்ட் :)

Anonymous said...

//சென்டி”மெண்டல்” சீன்//
ஹா ஹா..

//யாரு # டவுட்டு//
அதே டவுட்டுத் தான் எனக்கும் ;)

//தல..//
சூப்பர்

Unknown said...

//.. கிறுக்கிட்டு இருந்ததோட ..//

ஒத்துக்கறேன் வாத்யாரே..

குமரை நிலாவன் said...

எனக்கும் ஒரு டவுட்டு
buzz ல கிறுக்கறதுனா என்னா

வால்பையன் said...

//ஊடல் பொழுதுகளில், தவறை யார் செய்திருந்தாலும், முதலில் இறங்கி வந்து மன்னிப்பு கேட்பது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள் பெண்கள். கருமம், நாமும் அப்படியே நடித்துத் தொலைக்க வேண்டி இருக்கிறது # புலம்பல்ஸ் ஆப் இந்தியா//

எப்பருந்து தல நடிக்க ஆரம்பிச்சிங்க, சொல்லவேயில்ல!

Balakumaran Lenin said...

enna da.. engayooo padicha mathiri irukee nu padichute vandhenn!! sir um copyyy adika aaramichtarooo nu!! neenga BUZZ nu sonna odane BUSS nu poiduchu!!!!! ;) nice compilation!!

Anonymous said...

பாண்டியன் கலக்கல்ஸ்...

பொலம்ப ஆரம்பிச்சும் பொண்ணு பார்க்காமல் இருப்பது கொடுமை..

மேவி... said...

"வால்பையன் said...
//ஊடல் பொழுதுகளில், தவறை யார் செய்திருந்தாலும், முதலில் இறங்கி வந்து மன்னிப்பு கேட்பது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள் பெண்கள். கருமம், நாமும் அப்படியே நடித்துத் தொலைக்க வேண்டி இருக்கிறது # புலம்பல்ஸ் ஆப் இந்தியா//

எப்பருந்து தல நடிக்க ஆரம்பிச்சிங்க, சொல்லவேயில்ல!"

ப்ரீத்தியை காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து ....

(கார்த்தி ...வீட்டுல விஷயத்தை சொல்லிருங்க ..... பிரவு சீர் ஓட ஸ்கூல் அட்மிஷன் சீட்டையும் கேட்க வேண்டி இருக்கும்)

மேவி... said...

"காதல்ங்கிறது ஒரு மேஜிக் மாதிரி.. யாருக்கு வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் வரலாம்.. இப்போதைக்கு, அந்த யாரோ, நானாக் கூட இருக்கலாம்..:-)))"


அதே மாதிரி எப்ப வேண்டுமானாலும் நம்மை விட்டு விட்டு போகலாம் ....

தல இதுக்கு மேல லவ் லெட்டர், காதல் பார்வை, திருட்டு சிரிப்புகள், இல்லாத வார்த்தை பேசும் கண் மொழிகள் ..... இதையெல்லாம் திரும்ப பண்ண வேண்டுமா ??? பேசமா அம்மா அப்பா சொல்லுற பொண்ணை கல்யாணம் பண்ணிகொங்க

நிலாமகள் said...

நிறைய சிரிப்பு...

மன ஊனமற்ற அப்பையனின் உற்சாகம் நெகிழ்வு!

அற்ப காரணங்களுக்கெல்லாம் எவ்வளவு முகம் வாடியிருப்போம் ... அப்போதெல்லாம் அந்த பையனின் உற்சாகம் நம்மையும் தொடரட்டும்.

Mahi_Granny said...

தலைப்பே சொல்லுதையா உங்க நிலமைய .

மதுரை சரவணன் said...

:(