January 28, 2011

எஸ்.எம்.எஸ் மொக்கைகள் (2)

1980 - டி பி (IDBI) பேங்க்ல அம்பானிக்கு லோன் தர முடியாதுன்னு சொன்னாங்க. இன்னைக்கு அதே பேங்கை நாம வாங்கலாமான்னு அம்பானி யோசிச்சுக்கிட்டு இருக்காரு. மனுஷன் நினைச்சா சாதிக்க முடியாதது எதுவுமே இல்லைன்னு இதுல இருந்து தெரியுது. அதே மாதிரி..

இப்போ.. 2011 - எனக்கு கனரா பேங்க்ல லோன் தர மாட்டேன்னு சொல்லிடாங்க. அதனால கண்டிப்பா 2025..

ரொம்ப யோசிக்காதீங்க. நான் மறுபடியும் லோன் தான் அப்ளை பண்ணப் போறேன். ஏன்னா.. கனரா பேங்க் கவர்மெண்டு பேங்க். விலைக்குக் கேட்டா கொன்டேபுடுவாங்க..

***************

டீச்சர்: உன்னோட பேர் என்னமா?

பெண்: ஐஸ்வர்யா

டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?

பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க..

டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..

***************

இரண்டு குடிகாரர்கள் ரயில்வே தண்டவாளத்தின் மீது நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

"மச்சி என்னடா இவ்ளோ தூரம் நடந்தும் படியேறியும் இன்னும் நாம மேல போகவே இல்லையே.."

"அட அது கூட பரவாயில்ல மாமு.. சனியன் புடிச்சவனுங்க.. கைப்பிடிய எம்புட்டு கீழ வச்சிருக்காங்க பாரு.."

***************

சர்தாரும் அவருடைய மனைவியும் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டில் அப்ளை செய்திருந்தார்கள். ஜட்ஜ் எவ்ளவோ சொல்லியும் ரெண்டு பேரும் பிரியணும்னு தீர்மானமா சொல்லிட்டாங்க. கடைசியா ஜட்ஜ் கேட்டார்.

"உங்களுக்குத்தான் மூணு பிள்ளைங்க இருக்காங்களே.. அவங்கள எப்படி பிரிச்சுப்பீங்க.."

ரொம்ப யோசிச்சுட்டு சர்தார் சொன்னார்.

"சரி விடுங்க.. நான் அடுத்த வருஷம் டைவர்ஸ் பண்ணிக்கிறேன்.."

***************

காதலர் தினம் இருப்பதால்தான் என்னமோ, அந்த மாதத்திற்கு கூட ஆயுள் குறைவு..

***************

பெண்களின் கண் அசைவுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஆனால் ஒரு உண்மையான ஆண் நண்பனின் கண் அசைவுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் உண்டு.

"மச்சி.. டக்குன்னு திரும்பாத.. ஒரு சூப்பர் பிகரு நம்மள கிராஸ் பண்ணிப் போகுது.."

***************

மயிலுக்கும் கிளிக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன?

மயில் தேசியப்பறவை..

கிளி ஜோசியப்பறவை...

ஓகே ஓகே நோ டென்ஷன்.. இந்த மாதிரியான அறிவாளி விஷயமெல்லாம் எனக்குத்தான் தெரியுமாக்கும்..

***************

எனக்குக் கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு. நல்லா விம் போட்டு வெளக்குனீங்கன்னா வசதியா இருக்கும்.

-> தண்ணிப்பாம்புக்கு ஜல்ப்பு பிடிக்குமா?

-> கருப்பா இருக்குற எருமைமாடு எப்படி வெள்ளக் கலர்ல பால் கொடுக்குது?

-> சரக்கு ரயில் தள்ளாடுமா?

-> பிராந்திய ஹாட் டிரின்க்னு சொல்றாங்களே.. அதை அப்படியே குடிக்கணுமா இல்ல ஆத்திக் குடிக்கணுமா?

-> ஒல்லியா இருக்குற பின்ன (pin) ஏன் குண்டூசின்னு சொல்றோம்?

-> கொசு கொட்டாவி விடுமா?

- இவண்
இப்படியெல்லாம் யோசிச்சாலாவது பெரிய விஞ்ஞானி ஆக முடியுதான்னு முயற்சிப்போர் சங்கம்.

இப்போதைக்கு அவ்ளோதான். இம்மாதிரியான கடிகள் இனிமேல் அடிக்கடி தொடரும். நெக்ஸ்டு மீட் பண்ணுவோம்..:-)))

15 comments:

எல் கே said...

//பிராந்திய ஹாட் டிரின்க்னு சொல்றாங்களே.. அதை அப்படியே குடிக்கணுமா இல்ல ஆத்திக் குடிக்கணுமா?
//

தண்ணி கலந்து அடிக்கணும் ..

Anonymous said...

//இம்மாதிரியான கடிகள் இனிமேல் அடிக்கடி தொடரும். நெக்ஸ்டு மீட் பண்ணுவோம்..://

அய்யயோ.. அய்யயோ.. காப்பாத்துங்க.

சமுத்ரா said...

:D

Umapathy said...

ha ha ha

siva said...

nice ones...

Sriakila said...

ha..ha..ha.. Super!

ஆதவா said...

ஹாட் ஹாட் ஹாட்.... எல்லா மொக்கைகளும் நல்ல மொக்கைகளே!

குமரை நிலாவன் said...

hi hi hi nice

Riyas said...

super.. jokes

Anbu said...

கலக்கல் அண்ணே..

தங்கராசு நாகேந்திரன் said...

ஹா ஹா கொசு கொட்டாவி விடுமா ஹாட் டிர்ங்க ஆத்திக் குடிக்கனுமா சிரிச்சு சிரிச்சு மாள முடியல நல்ல பதிவு நன்றி தோழா

சுவாமிநாதன் said...

வளர்க உமது மொக்கை புகழ்

kannamma said...

முடியல ...................ஓவர் மொக்க

Unknown said...

பாஸ் நாங்களும் மதுரகரைங்கதான் .....சும்மா செம்மையா கலக்குறிங்க போங்க suberb

மதுரை சரவணன் said...

ஜோக்குகள் அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்