ண்ணே.. வெற்றிமாறண்ணே.. கையக் கொடுண்ணே.. பின்னிப்புட்டீல்ல.. கொஞ்ச நாளாவே நம்ம ஊரு படம்னாலே லைட்டா டெர்ரரா இருந்துச்சுண்ணே.. பத்து நாள் தாடியோட ஒரு நாதாரி, எதுக்குனே தெரியாம அவன விரும்புற ஒரு பிகரு, சாதிப் பிரச்சினை, பாடாவதியா ஒரு கொலகாரக் கிளைமாக்ஸ்னு கொலையா கொன்டுக்கிட்டு இருந்தாய்ங்கண்ணே.. டே முட்டாப் பயலுகளா.. அதையும் மீறி இந்த ஊருல சொல்லாத கதைங்க இன்னும் எம்புட்டு இருக்கு பாருங்கடான்னு புதுசா ஒரு களத்தோடையும் கதையோடையும் எறங்கி மிரட்டி இருக்க பாரு.. பட்டாசுண்ணே.
"ஆடுகளம்”னு சொன்னவுடனே நெறைய பேரு வெறுமனே சாவச்சண்டை நடக்குற இடம்னு நெனச்சுக்கலாம். ஆனா இந்தப் படத்துல அதையும் மீறி நெறய விஷயம் இருக்கு. இந்த ஒலகம்தான் உண்மையான ஆடுகளம். இங்க நான், நீங்க, நம்மள சுத்தி இருக்குற எல்லாரும் வெளாடுறோம். வாழ்க்கைங்கிற சுவாரசியமான ஆட்டம். இதுல நல்லவன் கெட்டவன்னு யாரும் இல்ல. சுத்தி இருக்குற சூழல்தான் ஒரு மனுஷன் என்னவா இருக்கான்னு தீர்மானிக்குது. “நான்” அப்படிங்குற விஷயம் மனுஷன என்னவா மாத்துது.. இதுதான் ஆடுகளம்.

சாவச்சண்டை விடுறதுல பேட்டைக்காரன் குரூப்புக்கும் ரத்தினம் குரூப்புக்கும்தான் முட்டு. சாவலைத் தாண்டி மனுஷனுக்கு மானந்தாண்டா எல்லாம்கிற ரீதியில நடக்கிற சண்டைங்க. இதுல எப்பவுமே ஜெயிக்கிறது பேட்டைக்காரன் குரூப்புதான். அவர் குரூப்போட முக்கியமான கைங்க தொர, கருப்பு மற்றும் அயூப். ரத்தினம் குரூப்போட கடசி கடசியா ஒரு சண்டை விடுறாங்க. அதுல பேட்டைக்காரன் சொல்ல மீறி சண்டை விட்டு ஜெயிச்சுக் காட்டுறான் கருப்பு. இங்கதான் அவனுக்கு அனத்தம் பிடிக்குது. இனி நாம ஒண்ணுமில்லாமப் போயிடுவோமோங்கிற பேட்டைக்காரனோட பயம் எல்லாத்தோட வாழ்க்கையையும் எப்படித் திருப்பிப் போடுதுங்கிறதுதான் கதை.
கருப்பு தனுஷ் - படத்தோட மொத நாயகன். தம்பி.. இந்த குட்டி ஜட்டின்னு எல்லாம் படம் நடிக்குறத விட்டுப்புட்டு ஒழுங்கு மரியாதையா இப்படி தேடி தேடி நடிங்கப்பு. இதுதான் உங்க பேர சொல்லும். பயபுள்ள கண்ணு படம் பூரா இம்சை பண்ணுதுய்யா.. இடைவேளைல வர்ற சாவச்சண்டல கண்ணுல இருக்குற தீவிரம் என்ன, டாப்சி நான் இவனத்தான் லவ் பண்றேன்னு சொன்னவுடனே தெரியுற சந்தோஷம் என்ன, கடசில எல்லாம் செஞ்சது நீதானாண்ணேன்னு வெந்து போறது என்ன.. அடிச்சான் பாருய்யா சிக்ஸரு. ஆத்தா செத்த பொரவு டாப்சிகிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது டக்குன்னு திரும்பிப் பார்த்து ஆத்தா கூப்பிட்ட மாதிரி இருந்துச்சுன்னு சொல்லும்போது.. ப்ச்.. அம்சமான நடிப்பு. இதுவரைக்கும் வந்ததுல காதல்கொண்டேனுக்குப் பொரவு இதுதான் தனுஷோட சூப்பர் படம்னு தைரியமா சொல்லலாம்.
படத்தோட ரெண்டாவது ஹீரோ பேட்டைக்கரனா வர்ற ஈழக்கவிஞர் வ ஐ ச ஜெயபாலன். இடுங்கின கண்ணும் வெளுத்த மீசையுமா ரொம்ப சுளுவா மத்த எல்லாரையும் தூக்கிச் சாப்பிடுறாரு மனுஷன். கடைசி காட்சில குத்துப்பட்டு வர்ற தனுஷைப் பார்த்து சந்தோஷமா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அவனுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுன்னதும் தெறிச்சு ஓடுறார் பாருங்க.. மெரட்டி இருக்காரு. பொறாம கண்ண மறைக்க காதலிச்சு கூட வந்த பொண்டாட்டியவே தப்பாப் பேசுற சீன்ல எந்திரிச்சுப் போய் ஓங்கி அடிக்கலாமான்னு நமக்கே வெலம் வெலமா வருது. அவருக்குக் கொரல் கொடுத்திருக்குற அண்ணன் ராதாரவிக்கு ஒரு பெசல் நன்றி. அத்தன உணர்ச்சியயும் அழகா கொரல்லயே கொண்டு வந்திருக்குறாரு.

எங்க ஊருப்பக்கம் கை வண்டில ஐஸ் கொண்டுட்டு வருவாய்ங்கண்ணே. அதுல பால் ஐஸ்னு ஒரு ஐட்டம். அம்புட்டு வெள்ள வெளேர்னு இருக்கும். இத்தூணூண்டு குச்சிய கைல புடிச்சுக்கிட்டு.. அது ஒரு அழகிய நிலாக்காலம். ஹி ஹி ஹி.. டாப்சியப் பாக்குறப்போ அந்த பால் ஐஸ் ஞாபகம் தாண்ணே வருது. வட்ட மூஞ்சி, முட்டக்கண்ணு, வழவழான்னு கையும் காலும்.. உன்ன வெள்ளாவில வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா? அது பேசுற இங்கிலிஷு கலந்த தமிழு அம்புட்டு அழகுண்ணே.. புள்ளைய மாதிரியே. படத்துல பெருசா வேலை இல்லைன்னாலும் கண்ணுக்கு குளுர்ச்சியா வந்து போகுது.
தலைல டோப்பா வச்சு சமுத்திரக்கனி கொரல் கொடுக்க சுத்தி திரியுற கிஷோரு, போலிஸ் ரத்தினமா வர்ற ஆளு, அவரோட கையாளுங்க, ஜெயிக்கணும்டான்னு பொலம்பிக்கிட்டே இருகுற அம்மாக்கெழவி, எப்படியாச்சும் தம்மவன் முன்னேறிடுவான்னு நம்புற தனுஷோட அம்மா, தனுஷ் கூடவே சுத்துற மாமங்காரன், சட்டகாரனுக்கு ஒண்ணுன்னா தமிழ்ப்பசங்க வருவீங்களாடான்னு கேள்வி கேக்குற ஜெயப்பிரகாஷ், பேட்டைக்காரன் பொண்டாட்டியா வர்ற மீனாள்னு எல்லா மக்களையும் பார்த்து பார்த்து எடுத்திருக்காய்ங்க. கச்சிதம்.
“யாத்தே யாத்தே” ஜி வி பிரகாஷ் பின்னியிருக்காரு. அந்தப் பாட்டும் கைலியால மூஞ்ச மூடிக்கிட்டு தனுஷ் கெட்ட ஆட்டம் போடுற “ஒத்தச் சொல்லால” பாட்டும் தியேட்டர்ல டான்சு கிழியுது. அய்யய்யோ பாட்டு அப்படியே அமைதியா மனச அள்ளிக்குது. பேக்கிரவுண்டு ம்யூசிக்கும் நல்லாப் போட்டிருக்காப்ல. படம் புடிச்ச புண்ணியவான் இருட்டுலயே முக்காவாசி படம் எடுத்திருந்தாலும் நம்ம ஊர பிரிச்சு மேஞ்சிருக்காரு. குறிப்பா சாவச்சண்ட சீன் எல்லாமே கில்மாவா எடுத்திருக்காய்ங்க. நெறய கம்ப்யூட்டர் ஜித்து வேல பண்ணி நல்லா இருக்கு. படத்துல ரெண்டே சண்ட. அதுவும் ஊருநாட்டான் சண்ட போட்டா நெஜமோ எப்படி இருக்குமோ அப்படித்தான் நேச்சரா இருக்கு.

கடைசியா வெற்றிமாறண் அண்ணே. ரொம்ப நன்றிண்ணே.. இந்த மாதிரிப் படங்கள் பார்க்கும்போதுதான் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க ஒரு சூப்பரான கதைசொல்லி. நெறைய பேரு ஃபர்ஸ்ட் ஆஃப் சூப்பர் செக்கண்ட் ஆஃப் ஓகேன்னு சொன்னாய்ங்க. ஆனா உண்மைல ரெண்டாம் பாதிதான் டாப்பு. இம்புட்டு நுணுக்கமா மனுஷ மனசோட உணர்வுகள சொல்லி இருக்கீங்க பாருங்க.. ஹாட்ஸ் ஆப். ஒரு மெட்ராஸ்காரன் இவ்ளோ கஷ்டப்பட்டு மதுரை மண்ணப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, அந்த மனுஷங்கள ரத்தமும் சதையுமா காமிச்சு இருக்கீங்க.. மறுபடியும் நன்றி. படம் ஒலகத் திரைப்பட விழாக்களுக்குப் போகுதுல்ல.. கண்டிப்பா ஜெயிப்பீங்க. அட்வான்ஸ் வாழ்த்துகள்.
மதுரை மதி தியேட்டர் நேத்து செமயா கள கட்டி இருந்துச்சு. டேய் மாப்ள.. ரயில்வே காலனிடா.. ஐ ஓ டபில்யூ ஆபிஸ்டா.. டே இது நம்ம பசங்கடா.. அங்க பாரு திருப்பரங்குன்றம் கோயில்னு தியேட்டர் பூரா ஒரே பசங்க சவுண்டு. இதுல டாப்சியோட அப்பாவா நடிச்சவரும் நேத்து படம் பார்க்க வந்திருந்தாரு. ஒரே ரவுசுதான் போங்க. மொத்தத்துல அம்சமான படத்த அட்டகாசமாக் கொண்டாடிப் பார்த்த சந்தோஷம்.
ஆடுகளம் - அதகளம், அம்சம், அட்டகாசம்

21 comments:
விமர்சனம் அருமை...
என்ன நீங்க மதுரைக் காரரோ, உங்க ஊர் வட்டார வழக்குல போட்டு பொளந்துருக்கீய போங்க!!.. அப்ப படம் ஹிட்டுதான!! பாத்துடுவோம்!!
அட்டகாசம் விட்டா இன்னொரு பதிவுகூட நான் எழுதுவேன்..... :-)
ம்ம் பார்க்கனுமே, உங்க மதுரைத் தமிழ் அழகு;
பொங்கல் ஆடுகள திருவிழாதான் போங்க
Nice Review.. I also felt the same.... First super hit tamil movie in 2011 - Hats off to Vetri Maaran...
சிறுத்தை தான் ஓடிபோய் விட்டது. ஆடுகளம் நம்பினேன். பார்க்க வேண்டும்!
padam first haif oly super second half parkavey mudiala kittathatta first half kum second half kum sammanthamye illa padam parka poravanga first half mudunjona vanta padam ungalukku roma pidikkum....
வழக்கம் போல மதுரய மொக்க பண்ணாம இருந்தாய்ங்களே! அதுவே போதும்!
தமிழ்மணத்துல ஏதோ அவார்டு குடுத்திருக்காங்க. போய் வாங்கிக்கப்பு
வாழ்த்துகள் காபா
ண்ணே மொதப் பேராவை படிக்கும்போது வடக்குமாசி வீதிக்குள்ளை பூந்து வந்தது மாதிரியிருந்திச்சி. :-))
ரொம்ப சூப்பர் பாஸ் படம் பார்கவில்லை உங்கள் விமர்சனத்தை சொன்னேன்
nice!!!
அசத்திட்டிங்க.. பார்த்துருவோம் :)
நானும் எத்தனையோ திரைப்பட விமர்சனங்களை படித்திருக்கிறேன். இதுதான் "டாப்" புன்னு சொல்வேன். விமர்சனம் எழுதிய தம்பியின் எழுத்துகள் ஒரு சிறந்த எழுத்தாளனின் அனுபவத்தை வெளிப்படுத்தின. வாழ்க உன் வீரிய மிக்க எழுத்துகள். வெல்க தமிழ்.
ம்ம் .. ம்...
உண்மை தான்.
நானும் பார்த்தேன், ரசித்தேன். வியந்தேன்.
அருமையா எழுதி இருக்கீங்க.. இப்பத்தான் நானும் இந்தப்படத்தைப்பத்தி எழுதி இருக்கேன்
ரசித்தேன் படத்தை(டாப்ஸீ பொண்ணு) விடவும் உங்கள் விமர்சனத்தை... :)
வெள்ளாவி வச்சு தான் (தப்சியை) வெளுத்தாங்கய்யா! அது மாதிரி மதுரை தமிழ வச்சு விமர்சனத்த வெளுத்திருகீங்க. சூப்பரு ண்ணே.....
படம் பார்த்ததும் உங்களுக்குப் பின்னூட்டம் இடணும்னு நினச்சேன். கொஞ்சம் தாமதமாச்சு.
படம் ரொம்ப நன்கு இருந்தது. பிடிக்காதன் தனுஷ் பிடிச்சிருந்தது.
அந்தக் காதல் மட்டும், அதுவும் ஆங்கிலோ-இந்தியப் பொண்ணோடு இல்லாம இருந்திருந்தா இந்தப் படம் எனக்கு நிரம்ப பிடித்திருக்கும். படத்தின் ‘லெவலும்’ உயர்ந்திருக்கும்.
Post a Comment