May 30, 2011

தண்டவாளத் தனிமையில் உருளும் கூழாங்கல்


செடார் மரங்கள் அடர்ந்திருக்கும் மலைச்சரிவில்
சின்னஞ்சிறு செடிகளுக்கு
மழை பொழிய மறுக்கும் மேகங்கள்
விதுரனின் கூழாங்கல்லாய்ச்
சமைந்து நிற்கின்றன
பேசப்படாத வார்த்தைகள்
எப்படிப் பார்த்தாலும்
முதுகினைக் காட்டுவதில்லை
ரசம் போன கண்ணாடிகள்
கைவிடப்பட்ட ரயில் நிலையத்தின்
கடைசி மீதமுள்ள பணியாளன் இவன்
தனிமையின் மொழி தொடங்கி
தொலைந்து போகும் நிழல்கள் வரை
துளை வழி கசியும் நீரென
கிளம்பிக் கொண்டே இருக்கும் கேள்விகள்
பதில்கள் கிடைக்காதெனத் தெரிந்தும்
ராமனின் பாதம் எதிர்நோக்கி
காத்திருக்கிறாள் அகலிகை
ஹெம்லாக்கை அருந்தியபின்னும்
காதுகளைத் திறந்தே வைத்திருந்தார்
சாக்ரடீஸ்.

8 comments:

சாகம்பரி said...

//தனிமையின் மொழி தொடங்கி
தொலைந்து போகும் நிழல்கள் வரை// நிழல்கூட இல்லாத தனிமை இருளில் கிட்டுமோ?

Balakumar Vijayaraman said...

கார்த்தி, வார்த்தைகள் தேர்வு நல்லா இருக்கு. (சிலது புரியலேன்னாலும் :) )

இராஜராஜேஸ்வரி said...

ராமனின் பாதம் எதிர்நோக்கி
காத்திருக்கிறாள் அகலிகை..//
Interesting.

தோழி said...

காபா :)))

அருமை. எழுத்தோவியம்

கார்த்திகைப் பாண்டியன் said...

சாகம்பரி..
கேள்வியே அதுதானேங்க? எந்த மாதிரியான நேரங்களில் நம் நிழலைத் தொலைக்கிறோம்.. எதெது நம் நிழலாக இருப்பவை..?

பாலா..
நன்றி.. நேர்ல விளக்கமா பேசுவோம்..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

இராஜராஜேஸ்வரி..
நன்றி தோழி..:-))

தோழி..
//அருமை. எழுத்தோவியம்//

அம்புட்டு வொர்த் இல்லீங்க..
உங்க அன்புக்கு நன்றி..:-))

தோழி said...
This comment has been removed by the author.
மேவி... said...

ஒன்னும் சொல்லுறதுக்கில்லை