June 13, 2011

டப்பிங் படங்கள்

"சொல்றே நீ என்ன என்கிட்டே..", "இருக்கு அழகா பொண்ணு ஒங்க வீட்ல.." இந்த ரீதியிலான காமெடி வசனங்களை ஹிந்தி டப்பிங் நாடகங்கள் வாயிலாக 90களில் தமிழ்நாட்டின் எல்லார் வீட்டின் வரவேற்பறைகளிலும் கேட்டு மகிழ்ந்து இருக்கிறோம். ஜுனூன் தமிழ் என புதிதாக ஒரு தமிழ் வடிவத்தையே உருவாக்கிய பெருமை டப்பிங் மக்களுக்கு உண்டு. ஆனாலும் தமிழ் சினிமாவில் டப்பிங் படங்கள் ஆரம்ப காலம் தொட்டே மிக முக்கியமான இடத்தைப் பிடித்து வந்திருக்கின்றன.

எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் டப்பிங் படம் விட்டாலாச்சார்யாவின் கந்தர்வக்கன்னி. மாயாஜாலப் படங்களின் மீதான ஒரு மோகத்தை எனக்குள் காந்தாராவ் நடித்த அந்தப்படம் விதைத்துப்போனது. அதன் பிறகு மாயமோதிரம், மாயத்தீவு ரகசியம், ஜகன்மோகினி என்று தேடித்தேடி பார்த்தேன். மதுரை முருகன் தியேட்டரில்தான் இந்தப்படங்கள் பெரும்பாலும் (செகண்ட்) ரிலீஸ் ஆகும். இது போன்ற மாயாஜாலப் படங்களில் பெரும்பாலும் ஒரே கதைதான். உலகையே ஆளத் துடிக்கும் மந்திரவாதி, ராஜகுமாரன் - குமாரி, ஒரு ஜோக்கர், அவரை விரட்டும் காதலி பேய், ஏழு கடல் தாண்டி ஒளிந்திருக்கும் தீயவனின் உயிர் என்று போய்க் கொண்டே இருக்கும்.



ஆனால் இவற்றில் பெரிய காமெடியே பேய்களுக்கு விட்டல் தரும் யுனிபார்ம் தான். ஒரு நீண்ட தலைகாணி உறை போன்ற துணியில் தைக்கப்பட்ட வெள்ளை அங்கிகளுக்குள் உடம்பு பிதுங்கி வழிய (அதுவும் ஆண் பேய் என்றால் ரொம்பக் கேவலமாக இருக்கும்..) பேய்கள் அடிக்கும் கூத்து எல்லாமே செம மொக்கையாக இருக்கும். கவர்ச்சி நடனம் என்கிற ஒன்றை பெரிய அளவில் பேச வைத்த பெருமையும் இந்த பேய் டான்சர்களுக்கே போய்க் சேர வேண்டும். கருமாந்திரம் பிடித்த காஸ்ட்யூமில் இருக்கும் பேய் நாயகனைக் கண்டால் கிளுகிளுப்பாக செம பிகராக மாறி விடும்.

ஜெயமாலினியை யாரும் மறக்க முடியுமா? ஜெகன்மோகினியில் அடுப்புக்குள் காலை வைத்து சமையல் செய்யும் காட்சி இன்றும் பேசப்படும் ஒன்று. அதை நமீதாவை வைத்து ரீமேக் செய்கிறேன் பேர்வழி எனப் படுத்தியது காலத்தின் கொடுமை. கடைசியாக வந்த மாயாஜாலப் படம் பாலகிருஷ்ணா, ரோஜா நடித்து வெளிவந்த வீரபிரதாபன் என்று ஞாபகம். கணவனே கண் கண்ட தெய்வத்தில் ஆரம்பித்து மணாளனே மங்கையின் பாக்கியம் வரை சகல மந்திரப் படங்களையும் உல்டா பண்ணி இருந்தார்கள். படம் பப்படம் - ஓடவில்லை. ஆனாலும் ஏழெட்டு வயதில் ஆரம்பித்த மாயஜால டப்பிங் படங்களின் மீதான பிரியம் இன்று வரை தொடர்கிறது.

இனி காலத்தில் கொஞ்சம் முன்னோக்கி பயணிப்போம். 90களின் ஆரம்பத்தில் ஒரு பெண் புயல் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டைத் தாக்கி டப்பிங் படங்களுக்கான வரவேற்பை அதிகரிக்க செய்தது. அது விஜயசாந்தி - படம் வைஜெயந்தி .பி.எஸ். அந்த ஒரு படம் நல்லா இருந்ததே என்று நம் மக்கள் போய்ப் பார்த்ததுதான் வினை. அடுத்து அவருடைய எல்லாப் படங்களையும் டப் செய்து நம்மைப் பாடாய்ப் படுத்தினார்கள். "டாஆஐஈஈஇ"என்று கேவலமாக கத்திக் கொண்டு அவர் பாய்ந்து பாய்ந்து அடித்ததைப் பார்த்து நம் பெண்கள் எல்லாம் வீட்டுக்குள் புருஷன்மாரைப் போட்டு மொத்தி எடுத்ததாக ஏஜன்சி தகவல்கள் சொன்னது. மறவர் மகள் என்ற படத்தில் அவரும் பாலகிருஷ்ணாவும் குத்த வைத்து அம்மியில் மசாலா அரைத்த காட்சியைப் பார்த்து காரம் தாங்காமல் தாய்க்குலம் எல்லாம் கண்ணீர் சிந்தி தியேட்டரே நீரில் மிதந்தது.



இதே காலகட்டத்தில் இன்னொரு மனிதர் தெலுங்கு வழியாக தமிழுக்குள் நுழைந்தார். மீசைக்காரன் - டாக்டர் ராஜசேகர். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பேர் வைப்பதில் புரட்சி பண்ணிய பெருமகனார். "எவனா இருந்தா எனக்கென்ன", "எங்கடா உங்க எம்.எல்.", "அடேய் தான் பம் பாசக்" என்றெல்லாம் பெயர் வைத்து டெர்ரர் காட்டிய மனுஷன். இந்தப் படங்களுக்கு எல்லாம் வசனம் எழுத என்றே ஒரு புண்ணியவான் இருந்தார். பெயர் மருதகாசி என நினைக்கிறேன். பழைய காலத்துப் படங்களில் பெரிய ஆளாக இருந்தவர். டேய் என்று காட்டுக்கத்தல் கத்தும் டெக்னிக்கை, இன்றைக்கு எல்லா ரவுடி நாயகர்களும் சொல்வதை, ஆரம்பித்து வைத்தவர் இவராகத்தான் இருக்கும்.

தெலுங்கு மகாஜனங்களின் ரசனையே தனி. ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறு இங்கே.. ராத்திரி நேரம். காட்டு வழியே வரும் நாயகன் நாயகி. அடைமழை. ஒதுங்கி நிற்க ஆளில்லாத மண்டபம். ஈரம் சொட்ட சொட்ட செம செக்சியாக நாயகி நாயகனைப் பார்த்து உதட்டைக் கடிப்பாள். காய்ச்சல் வந்த மாதிரி கண்கள் எல்லாம் சொருகி கிட்டே வந்து நாயகன் அவள் தோளில் கை வைக்க.. ஆகா என நாம் நிமிர்ந்து உட்காருவோம். திடுமென எங்கிருந்து வந்தார்களெனத் தெரியாமல் ஒரு முப்பது ஜாரிகள் களத்தில் இறங்கி அவர்களோடு நாயகன் நாயகி மழையில் கும்மாங்குத்து டான்ஸ் ஆடுவார்கள் பாருங்கள்... அவர்கள் தலையில் இடி விழ. நாம் சகலமும் அடங்கி அமைதியாகி விடுவோம். ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. டான்ஸ் என்றால் அது கொல்டி மக்கள்தான். பிஸ்து கிளப்புவார்கள்.

அவர்கள் ரசனைக்கு இன்னொரு சான்று. மன்னன் என்று ஒரு படம். தலைவர் நடித்தது. அதை மெகா ஸ்டார், நக்மா நடிக்கப் படமாக்கினார்கள்.(தமிழில் இது அர்ஜுன் என்று வெளியானது. நக்மா.. யம்மம்மா..) படம் சூப்பர் ஹிட். கொஞ்ச நாள் கழித்து நம்ம தலைவர் படத்தையும் தெலுங்கில் டப் செய்ய அது இன்னும் பெரிய ஹிட். ஒரே படத்தை இரண்டு தடவை எடுத்தாலும் வெற்றி பெறச் செய்யும் புண்ணிய ஆத்மாக்கள். கதை கச்சடா எல்லாம் எதுக்கு.. ரெண்டு பாட்டு நாலு பைட்டு மூணு கில்மா இருக்கா.. படம் பாரு மாமேய் எனச் சொல்லும் விச்ராந்தியான மக்கள். இன்றைக்கு தமிழ் சினிமா கூட அதை நோக்கித் தான் போய்க்கொண்டிருப்பது நமக்குத் தேவையில்லாத விஷயம்.

மந்திரம், கில்மா என்றெல்லாம் டப்பிங் பண்ணிக் கொண்டிருந்தபோது 2000த்தின் அருகாமையில் வெளிவரத் தொடங்கிய ஆங்கிலத் டப்பிங் படங்கள் புதியதொரு சகாப்தத்தை உருவாக்கின. ...லி என்ன பேசுறான்னே புரியல பேசியே கொல்றாண்டா, சண்டைன்னா அப்படி இருக்கணும் தெரியுமா ஆனா எதுக்கு சண்டை போடுறாங்கன்னுதான் தெரியல என்று பயங்கரமாக பீல் பண்ணி ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருந்த நம் ஆட்களுக்கு, மெட்ராஸ் பாஷையில் பொளந்து கட்டும் கிரிஸ் டக்கரும் நெல்லை பாஷை பேசும் ஜாக்கி சானும் ரொம்பவே நெருக்கமாகிப் போனார்கள். பைரேட்ஸ் மாதிரியான படமெல்லாம் தமிழில் பார்க்கவிட்டால் சுத்தமாக எனக்கெல்லாம் ஒன்றுமே புரிந்திருக்காது. இருந்தாலும் "என்கிட்டே மோதாதே" பாட்டுக்கு ஜெட்லி டான்ஸ் ஆடுவது எல்லாம் விஜய் டிவியின் வன்கொடுமைதான் .



எனக்குத் தெரிந்த மட்டும் கிட்டத்தட்ட எல்லா வகையான டப்பிங் படங்கள் பற்றி பேசிவிட்டோம், ஒன்றைத் தவிர. சின்ன காசு பெத்த லாபம் என்கிற அதி தீவிர கொள்கையின்படி எடுக்கப்படும் நான்கு பேர் ஒரு ரூம் அஞ்சு நாள் ஷூட்டிங் படங்கள், முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எடுக்கப்படும் தமிழ்ப் படங்கள் (lovers in blood, honeymoon) போன்றவைதான் அவை. ஆனால் அதை எல்லாம் பேசினால் அவனா நீயி எனும் பெரும்பிரச்சினை கிளம்பக் கூடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

கதைக்காகவும் நாயகிகளுக்காகவும் இனிமேல் டப்பிங் செய்வது ஒத்துவரும் எனத் தோன்றவில்லை. ரீமேக் என்கிற விஷயம் இன்றைக்குப் பெரிதாகி விட்ட நிலையில் இனிமேல் நாம் ஆங்கில டப்பிங் படங்களை மட்டும் பார்த்து திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான் என்றே தோன்றுகிறது.

12 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

வடை... அப்படின்னு கமென்ட் போட்டா உங்களுக்கு பிடிக்காதாமே?

தமிழ்வாசி பிரகாஷ் said...

இப்ப மாவீரன்னு ஒரு டப்பிங் படம் வந்திருக்கே... ஓரளவு நல்லா இருக்குதாமே...

தருமி said...

//ஆங்கில டப்பிங் படங்களை மட்டும் பார்த்து திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான் என்றே தோன்றுகிறது.//

இதுலதான கதையெல்லாம் புரியு்து!

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரகாஷ்.. உங்க சேட்டைக்கு அளவே இல்லையா..;-)) மாவீரன் போய்ப் பாருங்க.. சூப்பரா இருக்கு...

தருமி ஐய்யா.. அனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்..:-))

Unknown said...

அவர் மருதபரணி, பாடலாசிரியர் மருதகாசியின் புதல்வர்.

மேவி... said...

"அதி தீவிர கொள்கையின்படி எடுக்கப்படும் நான்கு பேர் ஒரு ரூம் அஞ்சு நாள் ஷூட்டிங் படங்கள், முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எடுக்கப்படும் தமிழ்ப் படங்கள் (lovers in blood, honeymoon) போன்றவைதான் அவை"

அந்த மாதிரியான படங்களுக்கு எப்புடி டப்பிங் பண்ணுவாங்க????

நல்ல பகிர்வு ...

மாய மோதிரம்ன்னு ஒரு படம் ..... wolkman மாதிரியான படங்களெல்லாம் காபி அடிச்சு செமையா எடுத்திருப்பாங்க ... பார்த்திருக்கீங்களா காபா ?

மேவி... said...

"அம்மா அம்மா சற்று இங்கு வாருங்கள். ஏதொரு விசித்திரமான பிராணி ஒன்றுள்ளது "ன்னு ஆங்கில படங்களை நம்ம ஆளுங்க 1997 லையே டப்பிங் செய்ஞ்சு மக்களுக்கு இனிமா தந்தாங்க காபா

Sadhu said...

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/

Sadhu said...

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தமிழில் இது அர்ஜுன் என்று வெளியானது. நக்மா.. யம்மம்மா.//

ஹிஹி. ஊருக்கு தெரியாம ஒளிஞ்சு போய் பார்த்த படம்..

N.H. Narasimma Prasad said...

சூப்பர் பதிவு. ரொம்ப என்ஜாய் பண்ணி படிச்சேன்.

ஸ்வர்ணரேக்கா said...

//"டாஆஐஈஈஇ"என்று கேவலமாக கத்திக் கொண்டு //


//ஆகா என நாம் நிமிர்ந்து உட்காருவோம். திடுமென எங்கிருந்து வந்தார்களெனத் தெரியாமல் ஒரு முப்பது ஜாரிகள் களத்தில் இறங்கி அவர்களோடு நாயகன் நாயகி மழையில் கும்மாங்குத்து டான்ஸ் ஆடுவார்கள் பாருங்கள். அவர்கள் தலையில் இடி விழ. நாம் சகலமும் அடங்கி அமைதியாகி விடுவோம். //

--- அந்த பாடல்களை, காட்சிகளை இப்பொழுது muteல் பாருங்கள்... சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்..