September 25, 2011

ஒரு இலக்கியப் பேரொளியும் பின்னே ஞானும்

ஹலோ. கார்த்திகைப்பாண்டியன் இருக்காரா?

வணக்கம். நாந்தான் சார் பேசுறேன். சொல்லுங்க.

வணக்கம் தம்பி. உங்களுக்கு அந்தியைத் தெரியுமா?

ஓ தெரியுமே. சாயங்காலம் சூரியன் மறையறதுக்கு முன்னாடி..

தம்பி தம்பி.. அது இல்லை தம்பி..

அப்புறம்?

நான் சொல்றது எழுத்தாளர் அந்தி. கேள்விப்பட்டது இல்லையா?

இல்லீங்களே?

என்ன தம்பி இப்படிச் சொல்லிட்டீங்க? அவர் ஒரு இலக்கியப் பேரொளிப்பா. இதுவரைக்கும் 22 தொகுப்பு வந்திருக்கு. எட்டு சிறுகதைத் தொகுதி, பனிரெண்டு கவிதைத் தொகுப்பு.. கூடவே ரெண்டு நாவலும்.

ஓகோ. சரிங்க..

இருங்க.. நீங்க புத்தகம் எல்லாம் வாசிப்பீங்க தான?

நல்லாவே வாசிப்பேங்க..

என்ன வாசிப்பீங்க?

குமுதம், விகடன், கல்கி, அப்புறம்..

தம்பி தம்பி. நான் சொல்றது இது இல்லைப்பா. இது இலக்கியப் பத்திரிக்கை. இ ல க் கி ய ப் பத்திரிக்கை. புரியுதா?

ஏதோ புரியுது. ஆனா புரியலீங்க.

புரியலையா? ஹ்ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு உங்க நம்பர் தந்து பேசச் சொன்னாங்க. எங்கேயோ ஏதோ தப்பு நடந்து போச்சே.

என்னங்க நீங்களாப் பேசுறீங்க?

அதில்லை தம்பி. நாங்க ஒரு இலக்கியப் பத்திரிக்கை கொண்டு வரப் போறோம். உழைப்பால் உயர்வோம்னு பேரு. தனிச் சுற்றுக்கு மட்டும். அது பத்தி பேசலாம்னுதான் கூப்பிட்டேன். சரி விடுங்க. நீங்க அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டீங்க.

அப்படிங்களா அய்யா.. மன்னிச்சுக்கோங்க.. அப்புறம் ரொம்ப நேரமா ஒரு இலக்கியப் பேரொளி... அந்தி பத்தி சொன்னீங்களே? அவர் யாருங்க அய்யா..

அட அது நாந்தாப்பா.. போனை வை சாமி..

எல்லாம் முடிஞ்சு போச்சு. தப்பிசாண்டா பாண்டியன்.

10 comments:

அத்திரி said...

//தம்பி தம்பி. நான் சொல்றது இது இல்லைப்பா. இது இலக்கியப் பத்திரிக்கை. இ ல க் கி ய ப் பத்திரிக்கை. புரியுதா?

ஏதோ புரியுது. ஆனா புரியலீங்க.
//

என்னது.........வாத்தியாரே உங்களுக்கே புரியலையா?????????/ அப்போ நானெல்லாம்..................

settaikkaran said...

பேரொளி-ன்னா பெரிய பல்புன்னுதானே அர்த்தம்? :-)

siva said...

Super sir.

தருமி said...

//நாங்க ஒரு இலக்கியப் பத்திரிக்கை கொண்டு வரப் போறோம். //

அதுக்குத்தான் போன் வந்திருக்கு ...!

Raju said...

சஹஹிருதயர் கா.பா. அவர்களுக்கு,(கார்த்திகைப் பாண்டியன் என்று எழுதுவது சிரமமாக இருப்பதால், கா.பா என்றெழுதியிருப்பதை தயை கூர்ந்து, நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!)

முதலில் இம்மாதிரியான பூரண உள்குத்துப் படைப்புகளை எழுதுவோர் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் பட்டவர்த்தனமாக வெளித்தெரியாமல்தான் எழுதுவார்கள்.ஆனால், நீங்கள் அதைக் கட்டுடைத்துள்ள துணிவைப் பாராட்டுகின்றேன்.

மேலும், நீங்கள் ‘நானொரு இலக்கியவாதியல்லன்’ என்ற பிம்பத்தை உருவாக்க, கூடு கட்டும் பறவையையொத்ததொரு முனைப்பைக் காட்டுகிறீர்கள். இந்தப் பதிவில் அப்படியே பச்சையாகத் தெரிகின்றது அஃது!

இம்மாதிரியான பதிவுகளுக்கு மாறாக, உங்களுக்கு வந்த, வந்து கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வாசக/வாசகிக் கடிதங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பதிவிட்டு, அடுத்த கட்டடத்திற்கு நகர வேண்டுமென்பதே என் போன்ற கலை மற்றும் கொலை வெறி வாசகர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கும்.

அக்கருத்துக்கு செவி சாய்த்து, செய்து முடிப்பீர்களென்ற நம்பிக்கையுடன்,
ராஜூ மற்றும் பெயர் வெளியிட விரும்பவே விரும்பாத வாசக/வாசகிகள்.
(பின்னணியில் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைக்கிறார்)

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

பயங்கரம்

Miracle balloon decoration said...

..அருமை..

உங்கள் தளத்தை இன்று தான் (சு)வாசிக்கிறேன்..

..சபரி.. said...

..அருமை..
உங்கள் தளத்தை இன்று தான் (சு)வாசிக்கிறேன்..

குமரை நிலாவன் said...

உங்களுக்கு வந்த, வந்து கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வாசக/வாசகிக் கடிதங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பதிவிட்டு, அடுத்த கட்டடத்திற்கு நகர வேண்டுமென்பதே என் போன்ற கலை மற்றும் கொலை வெறி வாசகர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கும

repeatu

gauss said...

like