அய்யயயோ.. எங்களை யாராவது காப்பாத்துங்களேன்..
ப்ளீஸ்.. வேண்டாம்.. என்னை விட்டுருங்க..
என்னையப் பார்த்தா உனக்குப் பாவமா தெரியலையா..
நாங்க என்ன பாவம் செஞ்சோம்...
இந்த வசனம் எல்லாம் பொதுவாக தியேட்டரில் ஓடும் படங்களில் வருபவை. ஆனால் இதே வசனங்கள் தியேட்டரில் படம் பார்க்கும் மக்களிடம் இருந்து வந்தால்? அங்கே வேட்டை ஓடுகிறது என்று அர்த்தம்.

1990 களில் கே.பாக்யராஜ் அவசர போலிஸ் 100 என்றொரு படம் எடுத்தார். எம்.ஜி.ஆர் நடித்து வெளிவராத அண்ணா நீ என் தெய்வம் படத்தில் இருந்து சில காட்சிகளையும் இணைத்து இருப்பார். இரண்டு பாக்யராஜ்கள். அண்ணன் பயந்தாங்கொள்ளி. போலிசாக இருப்பார். தம்பி தைரியமானவர். தவறுகளை தைரியமாக தட்டிக் கேட்பவர். தம்பி செய்யும் வீரதீர செயல்களின் பலன் எல்லாம் அண்ணனுக்குக் கிடைக்கும். ஒரு கட்டத்தில் தம்பி ஆபத்தில் சிக்கிக் கொள்ள அண்ணனுக்கு வீரம் வந்து வில்லன்களை நொக்கி எடுக்க எல்லாம் சுபம். இந்த படத்தைத்தான் ரீமேக் செய்து ரசிகர்களை வேட்டை ஆடி இருக்கிறார் லிங்குசாமி.
கிட்டத்தட்ட வடிவேலு நடிக்க வேண்டிய கைப்புள்ள அண்ணன் கேரக்டரில் மாதவன். பார்க்கவே பாவமாக இருக்கிறது. வருகிறவன் போகிறவன் எல்லாரிடமும் அடி வாங்குகிறார். போதாக்குறைக்கு ஆர்யாவும் மாதவனை சந்தடி சாக்கில் ஒரு மிதி மிதித்துக் கொள்கிறார். கால்களில் அடிபட்டுக் கிடக்கும் மாதவனுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக ஆர்யா அடி வாங்கும் காட்சியில் தியேட்டரே சிரிக்கிறது. என்ன கொடுமை சார் இது? எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் சுற்றும் அதே ஆர்யா. பஞ்ச் பேசுவதும் சண்டை போடுவதும் மட்டுமே வேலை. நடுநடுவே வரும் காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.

சமீரா ரெட்டியை தாவணியில் பார்த்தபோது தோன்றியது - முப்பது வருசத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆகி இருக்க வேண்டியவ.. இன்னும் இப்படியே சுத்திக்கிட்டு இருக்கா. வாயாடிப் பெண்ணாக அவர் பேசும் வசனங்கள் எதுவுமே லிப் சின்க் ஆகாமல் படுத்தி எடுக்கிறது. அவரும் படத்தில் இருக்கிறார். அவ்வளவே. சமீராவின் தங்கையாக அமலா பால் ஆர்யாவின் ஜோடி. அவருடைய உடல்வாகுக்கு கவர்ச்சி காட்டினால் விளங்கவில்லை. ஆனால் மேக்கப் போட்ட அமலாவை விட மேக்கப் இல்லாத அந்தக் காந்தக் கண்களே அழகு. படத்தில் ஓரளவு ரசிக்கும்படியாக இருப்பவர் அவர் மட்டுமே. ஹீரோ எண்ட்ரி ஆகும்வரை டெர்ரர் மேனாகவும் அவர் வந்த பின்பு காமெடி பீசாகவும் மாறும் வழக்கமான வில்லனாக அசுதோஷ் ராணா. கடைசி காட்சி வரை டாய் டாய் என்று கத்திவிட்டு கிளைமாக்சில் செத்துப்போகும் ரொம்ப நல்ல மனிதர்.
மொத்த ரணகளத்திலும் ஒரே கிளுகிளுப்பு படம் முடிவதற்கு சற்று முன்னால் வரும் பப்பரப்பா பாப்பப்பா பாட்டு. அதைத் தவிர்த்து மற்ற பாடல்களில் எல்லாம் செமத்தியாக கோல் போட்டிருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. படத்துக்கு ஒளிப்பதிவு நீரவ் ஷா என்று டைட்டிலில் போட்டார்கள். வேறு எதுவும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சண்டைக் காட்சிகள் அமைத்த புண்ணியவான் யாரோ.. எங்கிருந்தாலும் வாழ்க. அத்தனை பேரும் ஆர்யா விரல் பட்டாலே பறக்கிறார்கள். சரி விட்டுரலாம்.. மொத்தக் கோலமுமே அலங்கோலம் எனும்போது இந்தப் புள்ளி சரியில்லை அந்த வண்ணம் சரியில்லை எனப் புலம்பி என்ன பிரயோஜனம்?

தமிழ் சினிமாவில் இரண்டு இயக்குனர்களை தகுதிக்கு மீறிப் புகழ்கிறார்கள் என்பது எனது எண்ணம். ஒருவர் கவுதம். இன்னொருவர் லிங்குசாமி. அதில் எந்தத் தவறும் இல்லை என மீண்டும் நிரூபித்து இருக்கிறார் லிங்குசாமி. மொக்கைக் கதை. செம மொக்கைத் திரைக்கதை. ஆனால் இந்தப் படத்தை எடுத்து விட்டு என்னமோ கிம் கி டுக் ரேஞ்சுக்கு ஒவ்வொரு சேனலாக வந்து அந்த ஆள் செய்கிற அலப்பரை இருக்கே.. முடியலைடா சாமி.
எட்டு வருசமாக விஜய் படம் பார்ப்பது கிடையாது. நண்பனுக்காக அதை மாற்ற வேண்டாமே என இந்தப் படத்துக்குப் போனேன். எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேண்டும்.
வேட்டை - அடப் போங்கையா.. படத்துக்குப் போனதுல ஒரே நல்ல விசயம் மசாலா கஃபே டிரைலர் மட்டும்தான்.

11 comments:
//எட்டு வருசமாக விஜய் படம் பார்ப்பது கிடையாது. நண்பனுக்காக அதை மாற்ற வேண்டாமே என இந்தப் படத்துக்குப் போனேன். எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேண்டும்.//
:-))))))))))))))))
வாத்தியார் சார். சில பேர் படம் ஓகேன்னு சொல்றாங்க. நீங்க என்ன ஒரேயடியா போட்டு தாக்குறீங்க
@பெருமாள் கரூர்..
அதேதாங்க.. சிரிப்பா சிரிச்சுப் போச்சு என் நிலைமை..:-))
@மோகன்குமார்
தலைவா.. அப்படி சொன்னத நம்பி மட்டும் போயிராதீங்க.. கொலக்குத்து குத்துறாய்ங்க..
//
சமீரா ரெட்டியை தாவணியில் பார்த்தபோது தோன்றியது - முப்பது வருசத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆகி இருக்க வேண்டியவ.. இன்னும் இப்படியே சுத்திக்கிட்டு இருக்கா
//
நான் ஏற்கனவே பஸ்-ல சொன்னத காப்பி அடிச்ச கார்த்திக் பாண்டியனை வன்மையாகக் கண்டிக்கிறேன் ;-)
திருட்டு விசிடி-ல கூட பாக்கத் தகுதியில்லாத படம்-ன்னு சொல்றீங்க, எஸ்கேப் ஆகிக்க வேண்டியது தான்.
ஆர்யா-அமலா பால் உதட்டு முத்தம் உங்களை ரொம்ப பாதிச்சுருச்சோ
@ஜோ
தப்புதான் நண்பா.. நன்றி கார்டு போட்டிருக்கணும்.. மன்னிச்சு..:-))
@மேவி.. இல்லை. இன்னும் ஒத்தக்கண்ணோடதான் சுத்திக்கிட்டு இருக்கேன்..:-))
இலக்கியத்தைக் கொண்டாடும் நீங்கள் கெளதம் படங்களை மட்டும் ஒதுக்குவதாகவே தெரிகிறது. அவரது படங்களில் தெரியும் காதல் காட்சிகளுக்கே தனி அழகு இருக்குங்க... நான் நினைக்கிறேன், நீங்க ”யூத்” ஐ இழந்துட்டு இருக்கீங்க......
தகுதிக்கு மீறித்தான் எல்லாருமே புகழப்படுகிறார்கள், கெளதம் ஓரளவு ஃபிட் ஆகிறார் என்பதும் உண்மைதான்
வேட்டை நல்லாயில்லையா அப்ப? நண்பன் பார்த்துட்டேன், திருப்தியா இருக்கு, நிச்சயமா நீங்க போய் பார்க்கலாம்...
விமர்சனத்தில நிறைய இடம் ரசிக்கிறமாதிரி இருந்துச்சு... காபா ஸ்டைல்.
"@மேவி.. இல்லை. இன்னும் ஒத்தக்கண்ணோடதான் சுத்திக்கிட்டு இருக்கேன்..:-))"
வொய் காபா, ஒத்தக்கண் இல்லை உமக்கு இரட்ட கண்ணும் நொள்ள தானோய். பிளஸ் ல சொல்ல வேண்டிய பதிலை இங்கன்ன சொல்லி இருக்கீர் பாரும்
பவர்ஸ்டாரின் ஆனந்தத்தொல்லை வரட்டும். ஆனந்தத்தொல்லை இலவச டிக்கெட் பெற
http://news.vikatan.com/index.php?nid=6028
aamam sariyaga sonneergal.intha padathukku ponal saavu nichayam.enna oru kolaveri thaakkuthal?
intha padathukku poravangalukku saavu nichayam.intha vishayathula namma ilaya thalapathi yaye rendu perum sernthu thookki saptanga.
Post a Comment