January 26, 2009

குடியரசு தினம்?!!!

வந்து போகின்றன..
சுதந்திர தினமும்,
குடியரசு தினமும்!!
ஒவ்வொரு முறையும் -
வறுமை, வன்முறை,
தீவிரவாதம்..
ஒழிக்க வேண்டுமாய்
பிரதமரின் ஆவேசப் பேச்சு!
ஆவேசம்.. பேச்சில் மட்டும்!!
அமைதியை வலியுறுத்தி
எதிர்க்கட்சியினர் ஊர்வலம்!
ஊர்வலத்தில்.. அடிதடி!!
எதற்கென தெரியாமலே
வாங்கிய மிட்டாய்க்கு
விசுவாசமாய்..
கொடிக்கு சல்யுட் அடிக்கும்
எம் குழந்தைகள் -
தெருக்களில் நிர்வாணமாய்!!
அரசு அலுவலர்க்கோ -
டிவி பார்த்து
பொழுதை கழித்திட..
வார நாட்களில் ஒரு ஞாயிற்றுக்கிழமை!!
இது போன்ற நாட்களில்
மட்டுமே - நினைவுக்கு வரும்
அந்நாள் தியாகிகள்...
இன்றைய சூழலில் சொல்வதானால்..
பிழைக்க தெரியாதவர்கள்!!!
உடன்பிறக்கா சகோதரர்
அயல்தேசத்தில் இன்னல் பட..
எதுவும் செய்ய இயலாத
பேடிகளாய் நாம்!!
எங்கோ ஒலிக்கும் பாடல் கேட்டு..
எனக்குள் சிரித்து கொள்கிறேன்!
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே...
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே"!!!!





8 comments:

Anonymous said...

sad but its true sir.. our country is yet to develop..

புல்லட் said...

உங்கட ஊரிலயுமா சேர்? நிங்கள் எங்களுக்காக கவலைப்படுறதை நினைக்க சந்தொசமாய இரக்கு! நல்ல பதிவு!

கார்த்திகைப் பாண்டியன் said...

தவறுகள் எங்கு நடந்தாலும் கவலை கொள்வது தானே மனித இயல்பு.. வருகைக்கு நன்றி தோழர்..

butterfly Surya said...

வாழ்த்துக்கள்.

சினிமா உலகம் பற்றிய எனது வலை பார்க்கவும்.

நிறை / குறை சொல்லவும்.

நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் முறையாக வருகை தந்த வண்ணத்துப்பூச்சியாருக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி பரிதி.. நீயும் உனது வகுப்பு தோழர்களும் நலம் என்று நம்புகிறேன்..

Muruganandan M.K. said...

"தெருக்களில் நிர்வாணமாய்!!" என எழுதியிருந்தீர்கள். இங்கு சுதநதிர தினத்தன்று தெருக்களே நிர்வாணமாக நிற்கின்றன.
நல்ல கவிதை

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி டாக்டர் அவர்களே..