சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார்.
நண்பர்: இப்போ என்ன ஆச்சு?
சர்தார்: என் தங்கை போன் பண்ணினா.. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!
***************
கோர்ட்டில்...
ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..
சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்...
ஜட்ஜ் : ஷட் அப்..
சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..
ஜட்ஜ்: ????!!!!
***************
ஹோட்டல் ஓனர்: சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?
சர்தார்:மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு.. அதுதான்.. !!!
***************
சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா?
சர்தார் B.A (Bachelor Again)
சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?
சர்தார் M.A (Married Again)
***************
சர்தார் (கவலையுடன்):வேய்ட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கலையே...
நண்பர்: அப்படி என்ன படிப்பு படிச்சீங்க?
சர்தார்: pre-KG, LKG, UKG எல்லாம் படிச்சு இருக்கோம்ல..
***************
சர்தார் 1: டேய்.. எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?
சர்தார் 2: கரண்ட் இல்லடா..
சர்தார் 1: சரி சரி, பேனையாவது போடு..
சர்தார் 2: லூசாடா நீ.. மெழுகுவத்தி அணைஞ்சிடாது?
***************
சர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..
மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..
சர்தார்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்..
***************
சர்தார் 1: நாளைக்கு சினிமாக்கு போறேன்.. வரியாடா?
சர்தார் 2: முடிஞ்சா வரேன்..
சர்தார் 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு..
***************
இங்கிலாந்து. ரயில் நிலையம். மூன்று சர்தார்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரே மூன்று வெள்ளையர்கள். சர்தார் போய் ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி வந்தார். வெள்ளைக்காரர்களுக்கோ ஆச்சரியம். எப்படி ஒரே ஒரு டிக்கட்டில் இவர்கள் பயணம் செய்கிறார்கள் என்று பார்க்க விரும்பினார்கள் . ரயில் வந்ததும் எல்லோரும் ஏறினர். டிக்கட் செக் பண்ண ஆள் வந்தபோது மூன்று சர்தாரும் எழுந்து கழிவறைக்குள் சென்று நின்று கொண்டார்கள். TTE கதவை தட்ட ஒரே ஒரு கையை மட்டும் நீட்டி டிக்கட்டை நீட்ட, அவர் போய் விட்டார்.
ஆகா, இத்தனை நாள் இதை நாம் செய்யாமல் போய் விட்டோமே என்று வெள்ளைக்காரர்களுக்கு தோன்றியது. திரும்பி வரும்போது வெள்ளைக்காரர் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தார்கள். இந்த முறை சர்தார்கள் ஒரு டிக்கட் கூட எடுக்க வில்லை. மற்றவர்களுக்கோ குழப்பம். என்னடா இந்தத் தடவை டிக்கட்டே எடுக்க வில்லை, சரி பார்ப்போம் என்று ரயிலில் ஏறினார்கள். வெள்ளை மக்கள் மூவரும் TTE வருவதைப் பார்த்தவுடன் கழிவறைக்குள் ஓடி விட்டனர். இப்போது சர்தார் ஒருவர் பொறுமையாக எழுந்து போய் கழிவறையின் கதவைத் தட்டினார்..
"சார்.. டிக்கட்..?"
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
39 comments:
சர்தார் ஜோக்ஸ் மிகவும் பிரபலம்.. இதுவும் நன்றாகவே இருந்தது.
ஏன் அதிகமாக சர்தார்களை கேலி செய்கிறோம் என்று யோசித்ததுண்டா? அவர்கள் முன்னேறுவதில் அக்கறை உள்ளவர்கள். பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள். இந்தப் பொறாமை தான் காரணம்.
தமிழர்கள் வட இந்தியர்களால் கேலி செய்யப்படுவதும் இதனால் தான்!
அவர்கள் நிறைய "மதராஸி ஜோக்ஸ்" சொல்லிக் கேட்டிருக்கிறேன் :))
நல்லா சிரிப்பு வந்துச்சுங்க.. எல்லாமே நல்லாருக்கு..
இதே ஜோக்ஸை சர்தார்ஜிக்கு பதிலா மதராசினு மாத்தி அங்க சொல்லுவாங்களாம், அப்படியா..
நல்லா இருந்தது ஜோக்ஸ்!!
///சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா?
சர்தார் B.A (Bachelor Again)
சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?
சர்தார் M.A (Married Again) ///
எங்கருந்துங்க புடிக்கறீங்க!
Hi Kaarthi,
Jokes Superb..
aana sardarji jokesnu solli avangala "muttaltanama" kaatunumaa..
ithai ela state manushangoludum oppitu paarkalam..
oru joke sardar,
oru joke tamilan,
oru joke bengali..
ippadi kooda vagaippaduthi irukkalam..
:-)
அந்த மெழுகுவர்த்தி ஜோக்கைத் தவிர,.மற்ற எல்லாமே எனக்கு புதுசு நண்பா.
நல்லாயிருந்தது.பகிர்வுக்கு நன்றி.
ஜோக் அருமையாக இருந்தது. நல்ல சேகரிப்பு.
super.
ஜட்ஜ் : ஷட் அப்..
சர்தார்:ஆஹ். அப்படியே அய்யாவுக்கு ஒரு ஷட் உப்பும், எனக்கு ஒரு 7அப்பும்.
செக் புக், அப்பா செத்தது போன்ற ஜோக்ஸ் மிக அருமை.
கடைசி ஜோக்கான கடைசி வரியான "சார்.. டிக்கட்..?" இது தேவையில்லை.இல்லாமல் படிக்கும்போது இன்னும் நன்றாக இருக்கும்.
Nanbaa... super nanbaa???
எல்லா சர்தார் ஜோக்கும் நன்றாகவே இருக்கிறது. சிலவற்றை முன்னரே படித்திருந்தாலும் மீண்டூம் படித்து ரசிக்கவே முடிந்தது.
சரியான சிரிப்பு நண்பா.. எல்லாமே நல்ல கலக்கல்
நாராயண .....
இந்த வாத்தியார் தொல்லை தங்க முடியல ப்பா .....
சார்...
அப்படியே உங்க மாணவர்கள் உங்களை பற்றி ஜோக் , கிண்டல் பண்ணி இருப்பாங்க ல ...
அதையும் போடுங்க .....
நாங்க எல்லாம் என்ஜாய் பண்ணுவோம் ல ....
முடிந்தால் கும்மி கூட அடிப்போம்
அந்காஆஆஆஆஆஆஆஆஅ .............
இந்த ஜோக்ஸ் உலகம் முழுவதம் இருக்கு ......
தென் அமெரிக்கர்களை வைத்து வட அமெரிக்கர்கள் இப்படி தான் ஜோக் அடிப்பாங்க .....
சிங்கள மக்கள் தமிழர்களை வைத்து ....
இன்னும் நிறைய இருக்கு ....
இந்த மாதிரி ஜோக்ஸ் க்கு எல்லாம் பிறப்பிடம் என்று பார்த்தால் அந்த கால லண்டன் தான் .....
ஏனென்றால் அந்த காலத்தில் லண்டன் யில் எல்லா நாட்டு மக்களும் வசித்து வந்ததால் ஒவ்வொரு நாட்டு மக்களின் இயல்பை வைத்து இப்படி தான் பண்ணுவார்கள்.....
தல
நீங்க விகடன் ஜோக்ஸ் டீம் ல சேர்ந்து விடுங்க ....
எல்லாம் செமையா இருக்கு
கலக்கல் நண்பா.. ரிலாக்ஸிங் ஜோக் தெரியுமா?
லோகு said...
. //இதே ஜோக்ஸை சர்தார்ஜிக்கு பதிலா மதராசினு மாத்தி அங்க சொல்லுவாங்களாம், அப்படியா..//
உண்மை, அவங்கயெல்லாம் விவரமான ஆளுங்கோ
அசத்தல் கார்த்திக்...
really nice jokes..சர்தார்களுடைய திறமை மேலும் சிரிக்கவச்சது வெள்ளைக்காரர்களை நினைச்சி...
ஹா..ஹா. :))
ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு.. அதுதான்.. !!!
ha ha ha ha !!!! ultimate..
நல்லா சிரிக்க வச்சிங்க.... வாழ்க வளமுடன்...
பூலோக மக்கள் சந்தோஷமாக தான் இருக்காங்க.
நானும் ஒன்று சொல்லவா?
சர்தார்ஜியை நண்பர் ஒரு புது இங்கிலிஷ் படம் பார்க்கலாம் வா என்று கூட்டிச் சென்றார். படம் போட்டதும் எம்.ஜி.எம்மின் சிங்கம் கர்ஜித்தது. இந்தப் படம் நான் ஏற்கனவே பார்த்து விட்டேனே என்று சொல்லி சர்தார்ஜி எழுந்துவிட்டார்.
சகாதேவன்
சிரிப்புத் தாங்க முடியல்லை
எல்லா ஜோக்ஸ்ம் நல்லா இருக்கு.
//சர்தார்களை அநியாயத்துக்கு ஓட்டுறோம். ஆனா உண்மையிலேயே அவங்க ரொம்ப புத்திச்சாலிங்க, திறமைசாலிங்க. ஒரு சர்தார் பிச்சைக்காரனைக் கூட யாரும் பார்க்க முடியாதுன்னு சொல்வாங்க. அதனால, அவங்க திறமையைப் பத்தி//
நம்முடைய பிரதமர் மற்றும் திட்ட கமிசன் துணை தலைவர் அலுவாலியா எல்லோரும் சர்தார்ஜி.இது போல் நிறைய பேர உயர் பதவில் இருகிறக்கள்.
எல்லாமே கலக்கல்.
இந்த சர்தார் பசங்க என்னாதான் பாவம் பண்ணாங்களோ எல்லோரும் போட்டு இப்படி புரட்டுரீங்க
எல்லாத்தையும் ரசிச்சேன்
வெள்ளைக்காரன் காலத்தில சர்தார்ஜி தனக்கு பிரச்சனயா ஆகிரலாம் நெனச்சப்போ அவன கேலி செய்ய் உருவானதுதான் சர்தார்ஜி ஜோக்ஸ்னு சொல்லுவாங்க!
எல்லாமே புதியதாகப் படிக்கிறேன்... அருமை!
ஒரு சர்தார் பிச்சைக்காரனைக் கூட யாரும் பார்க்க முடியாதுன்னு சொல்வாங்க//
யாரு???
அபியும் நானும் படத்துல தலைவாசல் விஜய் சொல்லுவாரா???
:)))
அனைத்து ஜோக்ஸும் சூப்பர் குறிப்பா கடைசி கலக்கல்...
Breaking News! சர்தார்ஜி ஜோக் இனி உலகில் கிடையாது!
http://www.jambazarjaggu.blogspot.com/
பாண்டியன், இதை பொதுவான நகைச்சுவையாகவே வைத்திருக்கலாம். புரிதலுக்கு நன்றி
முதல் இரண்டும் அட்டகாசம் :-)))
கடைசி நல்லா இருக்கு
எல்லாமே சூப்பர் தல!
// சர்தார்ஜியை நண்பர் ஒரு புது இங்கிலிஷ் படம் பார்க்கலாம் வா என்று கூட்டிச் சென்றார். படம் போட்டதும் எம்.ஜி.எம்மின் சிங்கம் கர்ஜித்தது. இந்தப் படம் நான் ஏற்கனவே பார்த்து விட்டேனே என்று சொல்லி சர்தார்ஜி எழுந்துவிட்டார். //
cool
கலக்கரிங்க போங்க....
Post a Comment