July 26, 2009

வெடிகுண்டு முருகேசன் - திரைவிமர்சனம்..!!!


குறைந்த பட்ஜெட். நடிக்கத் தெரிந்த நல்ல நடிகர்கள். சாதாரணமான கதை. அலட்டிக் கொள்ளாத திரைக்கதை. தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்ளும் நகைச்சுவை காட்சிகள். போதாக்குறைக்கு வடிவேலுவின் காமெடி. அப்புறம் தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்டான மதுரைப் பக்கம் இருக்கும் கதைக்களம். எல்லாத்தையும் கலந்து கட்டி அடித்தால் "வெடிகுண்டு முருகேசன்" ரெடி.


ஊரில் இருக்கும் டீக்கடைகளுக்கு தண்ணீர் ஊற்றி பிழைப்பு நடத்தி வருபவர் பசுபதி. தன் கூடப் படித்த புத்தி சரியில்லாத பெண்ணை தன்னோடு வைத்து காப்பாற்றி வருகிறார். பசுபதியின் நல்ல மனதைப் பார்த்து அவரை காதலிக்கிறார் போலிஸ்காரரான ஜோதிர்மயி. ஒரு கட்டத்தில் புத்தி சுவாதீனம் இல்லாத பெண்ணை வில்லனின் தம்பி கெடுத்து விடுகிறார். நியாயம் கேட்கும் பசுபதியை கொல்லும் முயற்சியில் செத்தும் போகிறார். தம்பியின் சாவுக்கு பழி வாங்கத் துடிக்கும் வில்லனிடம் இருந்து பசுபதி எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.


சரியும் தவறும் கலந்த சாதரண மனிதன்... இப்படித்தான் அறிமுகம் ஆகிறார் பசுபதி. சாராயம் குடித்துக் கொண்டும், ஊரில் இருக்கும் எல்லாரையும் சத்தாய்த்துக் கொண்டும் திரிபவர். மனநிலை சரியில்லாத பெண்ணைக் காப்பாற்றும் காட்சியில் உருக வைக்கிறார். நகைச்சுவை காட்சிகளில் பின்னி எடுக்கிறார். ஓவராக சவுண்டு விடுவதை மட்டும் குறைத்துக் கொண்டிருக்கலாம். போலீஸ வேலைக்கு போகப் பிடிக்காமல் பொசுக் பொசுக்கென்று அழுபவராக ஜோதிர்மயி. ஒரு விபச்சாரக் கேசில் தான் பசுபதியை முதல் முதலாக சந்திக்கிறார். ஆனால் அவர் மீதே காதல் கொள்வது முரண். மற்றபடி நன்றாக நடித்து இருக்கிறார்.


அலெர்ட் ஆறுமுகமாக வடிவேலு. இரண்டாம் பாதியின் காதாநாயகன். களவாணியாக வருகிறார். கைப்புள்ள ரேஞ்சுக்கு இல்லை என்றாலும் சிரிக்க வைக்கிறார். போலீஸ இன்ஸ்பெக்டரின் பேண்டுக்குள் கையை விட்டு மாட்டிக் கொள்ளும் காட்சியில் தியேட்டர் குலுங்குகிறது. பொன்னி என்னும் மனநிலை சரியில்லாத பெண்ணாக நடித்து இருப்பவர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார், வில்லனாக வருபவரும் நன்றாக காமடி செய்கிறார். வில்லன்னா பொழுதுபோக்கு இருக்கக் கூடாதா என்று சூரியன் எப்.எம்முக்கு பொன் போடுவது செம லொள்ளு. செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ஜட்ஜாக நடித்து இருக்கிறார்.


படம் நல்லா எடுத்தா இவங்களே கை தட்டுவாங்கன்னு மக்களை பார்த்து சொல்றது.. ரவுடி கூட்டத்தை கல்லால் அடிக்கும் பசுபதி அதன் பிறகு ஏதோ சம்பந்தம் இல்லாமல் உளறி விட்டு, இதுதாண்டா பன்ச் டயலாக் என்பது... சிறைக்குள் இருக்கும் பசுபதியை பார்த்து ஜோதிர்மயி வெட்கப்பட, போச்சுடா.. இப்ப நான் போய் பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டு வரணும் போல இருக்கேன்னு பசுபதி பொலம்பறது.. கிளைமாக்சில் வில்லன் திருந்திட்டானாம், இதுல ஏதும் புதுசா இல்லைன்னு கலாய்க்கிறது.. படத்தில் சகட்டு மேனிக்கு எல்லாரையும் ஓட்டி இருக்கிறார்கள்.


தினாவின் இசையில் சாரலே பாட்டு மட்டும் ஓகே. பின்னணி இசையில் காது கிழிகிறது. படத்தில் வசனங்கள் அருமை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பல நல்ல விஷயங்களை சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள். வசனம் எழுதி இயக்கி இருப்பவர் மூர்த்தி. "கருப்பசாமி குத்தகைதாரர்" படத்தை இயக்கியவர். இன்னும் நல்ல கதையாக தெரிவு செய்து இருக்கலாம். இரண்டாம் பாதி நகர மாட்டேன் என்று அடம் பிடிப்பதால் வடிவலுவை வைத்து ஓட்டி இருப்பதை தவிர்த்து இருக்கலாம். சிரிக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி இயக்குனர் படம் எடுத்து இருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறார்.


வெடிகுண்டு முருகேசன் - சிரிப்புத் தோரணம்(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

24 comments:

cheena (சீனா) said...

நல்லதொரு திரைப்பட விமர்சனம்

Suresh Kumar said...

நல்ல விமர்ச்சனம்

நாடோடி இலக்கியன் said...

நல்ல விமர்சனம்.
(உங்க எழுத்து நடையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் தெரிகிறது நண்பா).

அத்திரி said...

சண்டே லீவு கிடையாதா? புரொபசர்

புல்லட் said...

எனக்கு அந்தப்படம் பிடிக்கலை... என்னவோ தெரியாது... எனக்கு மட்டுமில்ல இலங்கையில் எவருக்குமே பிடிக்கலை... இல்லாட்டா ஒரு படத்தை ரெண்டே நாளில் தியேட்டர விட்டு தூக்குவாங்களா?
நீங்க நல்லாருக்குன்றீங்க ? என்னவோ போங்க...

லோகு said...

மீண்டும் ஒரு அருமையான விமர்சனம்... நன்றி..

அதிசயமாய் (முதன் முதலில்) உங்கள் பதிவில் இரண்டு இடத்தில் எழுத்து பிழை.. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்போ படம் பாக்கலாம்??

வழிப்போக்கன் said...

அப்ப பாக்கலாம்ன்னு சொல்லுறீங்க..
ஓகே..
:)))

இய‌ற்கை said...

Present Sir:-)

சம்பத் said...

நல்ல விமர்சனம் பாண்டியன்...வெ.மு இன்னும் பார்க்கவில்லை....சமீபத்தில வந்த படங்களில் நாடோடிகள் தவிர அனைத்தும் மொக்கை படங்களே என்பது என் கருத்து... :(

வினோத்கெளதம் said...

கார்த்தி உங்க விமர்சனம் கூட மத்தவங்க விமர்சனத்தை பாக்குறப்ப நீங்க கொஞ்சம் பட்டும் படாம சொல்லி இருக்குற மாதிரி தெரியுது..மத்தப்படி விமர்சனம் அருமை.

டக்ளஸ்... said...

//தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்டான மதுரைப் பக்கம் இருக்கும் கதைக்களம். //

இது எப்ப மாரும்ன்னு தெரியல..உயிர எடுக்குறானுக பாவிப் பசங்க.

அ.மு.செய்யது said...

விமர்சனம் நல்லா இருக்கு கார்த்திக்...

ஆமா புரொபஸர் சினிமா விமர்சனம் எழுதுறது ஸ்டூடன்ஸ்க்கு தெரியுமா ??

பிரியமுடன்.........வசந்த் said...

நல்ல தெளிவான நடையில் விமர்ச்சனம்.....

ஆ.ஞானசேகரன் said...

நல்ல விமர்சனம்... முடிந்தால் பார்கின்றேன் நண்பா

Karthik said...
This comment has been removed by the author.
Karthik said...

//Blogger லோகு said...

மீண்டும் ஒரு அருமையான விமர்சனம்... நன்றி..

அதிசயமாய் (முதன் முதலில்) உங்கள் பதிவில் இரண்டு இடத்தில் எழுத்து பிழை.. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..//சூரியன் எப்.எம்முக்கு பொன் போடுவதுஇரண்டாம் பாதி நகர மாட்டேன் என்று அடம் பிடிப்பதால் வடிவலுவை வைத்து ஓட்டி இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.
எப்பூடி?? வாத்தியாரோட மாணவனின் திறமை.. ஐய்யா... நான் உங்கள டேக் செய்தேன்... மறந்துட்டீங்களா?? :(

குடந்தை அன்புமணி said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் நகைச்சுவை படம்னு சொல்லுங்க. பார்ப்போம்... இந்தப் படத்தையாவது பார்க்க முடியுதான்னு...(சினிமா பார்க்க போவதே அபூர்வமாகிவிட்டது நண்பா... ஏனென்றே தெரியவில்லை...)

பிரியமுடன்.........வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_3973.html

ஃப்ரண்ட்ஷிப் வாங்க வாங்க

தருமி said...

ம்...ம்.. காலேஜ் ஆரம்பிச்சாச்சா ..?

ஆதவா said...

வடிவேலு ஜோக்ஸ் ஒன்றிரண்டு பார்த்தேன்... ரசிக்கும்படி இருந்தது (சிரிக்கும்படி அல்ல.)

நர்சிம் said...

ரைட்டு..பார்க்கணும்.நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.

வால்பையன் said...

வாழ்க்கை ஒரு சினிமா சினிமா!
மூன்று மணி நேரம் தான்!

" உழவன் " " Uzhavan " said...

இதையும் விடலயா.. திரைப்படத்துறைக்கு தாங்கள் ஆற்றிவரும் தொண்டு பாராட்டுக்குரியதே. வாழ்த்துக்கள் நண்பா :-)