November 7, 2009

டிஷ்யூங் - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009..!!!

ஊருக்கு ஒதுக்குப்புறமான ரகசிய ஆய்வுக்கூடம். வட்ட மேஜையைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள்.

"இது சாத்தியமா டாக்டர்?"

டாக்டர் என்றழைக்கப்பட்ட புரொபசர் கியூட்டன் (நியூட்டனின் பாதிப்பு) நிமிர்ந்து பார்த்தார். குள்ள உருவம். நரைத்த தாடி. கண்ணாடிக்குப் பின் தீர்க்கமான கண்கள். கொஞ்சம் மறை கழண்ட கேஸ் தான் என்றாலும் அறிவியலில் புலி. திருகுனி புத்தியால் ஆராய்ச்சி ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்க முயன்று பிடிபட்டவர். பத்தாண்டு காலம் களிசோறுடன் கடுங்காவல். இரண்டாடுகளுக்கு முன் வெளியே வந்து மீண்டு(ம்) ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறவர்.

"என் மேல் நம்பிக்கை இல்லையா?"

"அதற்கில்லை.. இயற்கைக்கு மாறாக எப்படி?"

"அறிவியல் ஒரு மர்மதேசம்.. இங்கே எதுவும் நடக்கும்.."

"டிவியில் திகில் நாடகங்கள் நிறைய பார்ப்பீர்களா டாக்டர்..?"

கியூட்டன் முறைத்துப்பார்க்க கேட்டவன் வாயை மூடிக் கொண்டான்.

"என்னோடு வாருங்கள்". எழுந்து நடக்கத் தொடங்கினார். "அணுகுண்டு பற்றிய ஒரு ஆராய்ச்சியின் போது எதேச்சையாகத்தான் இதைக் கண்டுபிடித்தேன். இன்னும் கொஞ்ச நாட்கள்தான். உலக நாடுகள் எல்லாம் என் காலடியில் கிடக்கும்."

ஒரு அறையைத் திறந்து உள்ளே நுழைந்தார். லேசான இருட்டு அறையெங்கும் பரவி இருந்தது. அங்கே சதுர வடிவில் ஒரு மேஜை. அதன் மீது செத்துப்போன ஒரு நாயின் உடம்பு கிடந்தது. கியூட்டன் தன் கோட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு வினோத வடிவிலான ஒரு துப்பாக்கியை எடுத்தார்.

"இந்த நூற்றாண்டின் அதி அற்புதமான கண்டுபிடிப்பைக் காண தயாராகுங்கள் மானிடர்களே.."

துப்பாக்கியில் இருந்து பிரகாசமான ஒளிக்கற்றை நாயின் மீது பாயத் தொடங்கியது. சரியாக ஐந்து நிமிடங்கள் முடிந்த போது.. நாயின் உடம்பில் அசைவுகள். மெதுவாக எழுந்து நின்ற நாய் சிறிது நேரத்திலேயே வேகமாக குரைக்கத் துவங்கியது. பார்த்தவர்களின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து போயின.

"இக்கி..இக்கி..இக்கி.." வெறித்தனமாக சிரித்துக் கொண்டிருந்தார் கியூட்டன்.

"நிறுத்துங்கள் டாக்டர். சிரித்துத் தொலைக்கிறீர்கள். பயமாய் இருக்கிறது." ஒருவன் கத்தினான்.

"என் கண்டுபிடிப்பை பற்றி இப்போது என்ன சொல்லுகிறீர்கள்?"

"மிருகத்துக்கு உயிர் கொடுத்தீர்கள். சரி. மனிதனுக்கு..?"

அடுத்த அறைக்கு வந்தார்கள். அங்கே மேஜையில் ஒரு மனிதனின் பிணம். மீண்டும் துப்பாக்கியில் இருந்து பாய்ந்தன அதிசயக் கதிர்கள். சற்றே நேரத்தில் மாண்டவன் மீண்டான். இறக்கும் முன்பு அவனுக்கு இருந்த நினைவுகள் அப்படியே இருந்ததுதான் ஆச்சரியம்.

"ஒத்துக் கொள்கிறோம் டாக்டர். நீங்கள் ஒரு மாமேதை. எத்தனை விலையானாலும் இந்த துப்பாக்கியை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். சொல்லுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?"

"இதன் சூத்திரம் அறிந்தவன் நான் ஒருவன் மட்டுமே. இதை வைத்து இந்த உலகையே ஆள்வேன்.." பரவசத்தில் ஆடிக் கொண்டிருந்தார் கியூட்டன்.

"சாரி பார் தி பிரேக்..ஆனால் டாக்டர்..?" ஒருவன் அவருடைய ஆட்டத்தை தடை செய்தான். என்ன என்பது போல கியூட்டன் அவனைப் பார்த்தார்.

"இதுவரை நீங்கள் செத்துப் போன மனிதனை உயிர்ப்பித்துக் காட்டினீர்கள். ஆனால் உயிருடன் இருக்கும் ஒருவரைக் கொன்று அவர் மீது இந்த ஒளிக்கற்றையை சோதித்துப் பார்க்க விரும்புகிறோம். எனவே.."

"அதற்கு?" கியூட்டனின் கண்களில் லேசான பயம் தோன்றியது.

அவன் சிரித்துக் கொண்டே துப்பாக்கியை எடுத்து புரொபசரின் முன் நீட்டினான்.

"அடங்கோயால..இவங்க நமக்கு மேல லூசா இருப்பாய்ங்க போல இருக்கே.. அடே மாபாதகர்களா.. என்னிடம் இருப்பது பரிசோதனைக்காக நான் வடிவமைத்த அதிசயத் துப்பாக்கி.. அதை இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது.. சுட்டு விடா....."

அவர் சொல்வதற்கு முன்பாகவே அவன் சுட்டான்.

"டிஷ்யூங்.."

29 comments:

பிரபாகர் said...

நச்சுன்னு அருமையா இருக்குங்க...

பிரபாகர்.

க.பாலாசி said...

கதை அருமையா வந்திருக்கு நண்பரே.... கடைசியில் கொஞ்சம் எதிர்பார்த்த முடிவாக அமைந்துவிட்டது. மற்றபடி கதையோட்டங்கள் மிக அருமை....

ஸ்ரீராம். said...

நீங்கள் சொன்ன டாக்டர் பாத்திரத்துக்கு டைரக்டர் கஜேந்திரன் உருவம் மனக்கண்ணில் வந்தது...!

சொல்லரசன் said...

//"சாரி பார் தி பிரேக்..ஆனால் டாக்டர்..?"//
படிக்கும் போது முடிவை ஊகிக்கமுடிகிறது.

வினோத் கெளதம் said...

நன்றாக இருந்தது கார்த்தி..

தேவன் மாயம் said...

"அடங்கோயால..இவங்க நமக்கு மேல லூசா இருப்பாய்ங்க போல இருக்கே.. அடே மாபாதகர்களா.. என்னிடம் இருப்பது பரிசோதனைக்காக நான் வடிவமைத்த அதிசயத் துப்பாக்கி.. அதை இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது.. சுட்டு விடா....."

அவர் சொல்வதற்கு முன்பாகவே அவன் சுட்டான்.

"டிஷ்யூங்.."///

அருமை ! கார்த்தி!!!

தேவன் மாயம் said...

முடிவை என்னால் யூகிக்க முடியவில்லை!!

cheena (சீனா) said...

நல்லாருக்கு காபா - எதிர்பாக்கலே

இப்படி முடியும்னு

நல்வாழ்த்துகள் வெற்றி பெற

SUREஷ்(பழனியிலிருந்து) said...

முடிவை என்னால் யூகிக்க முடியவில்லை..,

ப்ரியமுடன் வசந்த் said...

நச்சுன்னே இருக்கு கார்த்தி

வெற்றி நமக்கே..

வாழ்த்துக்கள்

Prabhu said...

ஹி... ஹி.. நல்லா ஆர்வத்தை தூண்டுற மாதிரி, தமாசாவும் இருந்துச்சு.என்கிட்ட கொடுத்திருந்தா இந்தக் கதைய ரத்தக் களரி ஆக்கிருப்பேன்!

vasu balaji said...

நல்லா இருக்குங்க பாண்டியன்.

ஹேமா said...

கார்த்தி,"இக்கி..இக்கி..இக்கி.." இது என்ன சிரிப்பா ?

நானும் சிரிச்சிட்டேன்.விஞ்ஞான உலகத்தில் எதுவும் நடக்கலாம்ன்னு சொல்றமாதிரி இருக்கு.கற்பனைக்கு ஒரு தூரத்துக் கை தட்டல்.

ஆ.ஞானசேகரன் said...

//அதை இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது.. சுட்டு விடா....."
//


நல்லாயிருக்கு கார்த்திகைப் பாண்டியன்

பீர் | Peer said...

;)

Unknown said...

கதை நல்லா இருக்கு. இந்த மாதிரி”கண்டுபிடிப்பு” கதைகளில் 98% சதவீதம் ”கண்டுபிடித்தவர்” backfire ஆவார்.இதிலும் ஆகிறார் வித்தியாசமாக.

கொஞ்சம் சீரியஸ்தனத்தை கொண்டுவந்திருக்கலாம்.

அ.மு.செய்யது said...

கதை நல்லா வந்திருக்கு..( அடங்கோயால /// இதெல்லாம் தவிர்த்திருந்தால் ரவிஷங்கர் சொல்ற‌
சீரியஸ்னஸ் வந்திருக்குமோ என்பது என் அபிப்ராயம்.

மற்றபடி கதை நச் தான்.

இன்னும் கிரையோனிக்ஸ்..நானோடெக்னாலஜி பத்தியெல்லாம் எழுதுங்க..!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு கார்த்தி.

RAMYA said...

கதை நல்லா இருக்கு, முடிவும் இதுதான் என்று எதிர் பார்க்கலை.


//
"இதுவரை நீங்கள் செத்துப் போன மனிதனை உயிர்ப்பித்துக் காட்டினீர்கள். ஆனால் உயிருடன் இருக்கும் ஒருவரைக் கொன்று அவர் மீது இந்த ஒளிக்கற்றையை சோதித்துப் பார்க்க விரும்புகிறோம். எனவே.."
//

ஆஹா! இது எதிர்பாராத திருப்பம்.

"வினை வித்திதவன் வினையறுப்பான்" சொல்லுவாங்களே அது இதுதானா :-)

//
"அடங்கோயால..இவங்க நமக்கு மேல லூசா இருப்பாய்ங்க போல இருக்கே.. அடே மாபாதகர்களா.. என்னிடம் இருப்பது பரிசோதனைக்காக நான் வடிவமைத்த அதிசயத் துப்பாக்கி.. அதை இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது.. சுட்டு விடா....."
//

எக்கச்சக்கமா மாட்டிகிட்டார் பாவம் காப்பத்த ஏதேனும் குறுக்கு வழி கையிலேயே வச்சுக்கணும் இல்லே:)

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சு இருக்குங்க.

அத்திரி said...

சும்மா நச்னு இருக்கு...............

மேவி... said...

summa nachunnu irukku thala

அண்ணன் வணங்காமுடி said...

அருமையான கதை. வாழ்த்துக்கள்

குமரை நிலாவன் said...

கதை நல்லா வந்திருக்கு.

வால்பையன் said...

நச்சுன்னு முடிச்சிடிங்க!

பாலகுமார் said...

//கியூட்டன் (நியூட்டனின் பாதிப்பு) //

:) :)

நசரேயன் said...

கியூட்டன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Karthik said...

வாழ்த்துக்கள். :)

உங்கள் ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன். பார்த்தீங்களா?

"உழவன்" "Uzhavan" said...

கியூட்டன்.. நல்லா வச்சீங்க பேரு :-)
வாழ்த்துக்கள் நண்பா