November 1, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009..!!!


‌‌
சீனா ஐயா அவர்கள் என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார். அவருக்கு நன்றி. தொடர் இடுகையின் விதிமுறைகள் பற்றி மேலும் தகவல்கள் அறிய இங்கே சொடுக்குங்கள்.

1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?

மதுரைக்காரன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. பள்ளிப்படிப்பை மதுரையிலும், பொறியியல் இளநிலை படிப்பை கோவையிலும் முடித்தேன். ஆசிரியராக வேண்டும் என்பது லட்சியம். கொடைக்கானலில் முதல் முறையாக ஆசிரியப்பணி. பின்னர் திண்டுக்கல். அங்கேயே முதுநிலை படிப்பு. பின்பு பெருந்துறையில் வேலை. தற்போது மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர்.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

எனக்கும் நண்பர்களுக்கும் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவுகள் எப்போதுமே விசேஷமானவை. நன்றாக என்ஜாய் செய்வோம். அதுபற்றி நான் முன்னரே எழுதிய பதிவு இங்கே. சமீபத்தில் மறக்க முடியாத நிகழ்வு என்றால், நான்கு வருடங்களுக்கு முன்பு, மூன்று மணி நேரம் காத்திருந்து, மழையில் நனைந்து "ஆஞ்சநேயா' என்ற பெயரில் எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொண்டது.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

எந்த ராசா எந்தப் பட்டிணம் போனாலும், தீபாவளி அன்னைக்கு நாங்க மதுரைலதாண்ணே இருப்போம் / இருந்தோம் / இருக்கோம். மதுரையைச் சுத்துன கழுத வேறெங்கும் போகாதுன்னு சொல்வாங்க.. ஹி ஹி ஹி..

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

பண்டிகை என்றால் முன்பிருந்த உற்சாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டு வருகிறதோ எனத் தோன்றுகிறது. எனக்கு மட்டுமல்ல, பொதுவாகவே. குறிப்பாக டிவி வந்த பின்பு மக்கள் நிறையவே மாறி விட்டதைப் போன்றதொரு உணர்வு எனக்கு வெகு நாட்களாக உண்டு.

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

கல்லூரியில் சேர்ந்த பிறகு ஆடைகளை தைத்து போடும் பழக்கம் கிடையாது. ரெடிமேட்தான். எப்போதும் மதுரை ஏ.கே.அகமெதில் தான் வாங்குவேன். இந்த வருடம் அகமேத் + போத்திஸ்.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

வீட்டில் எதுவும் செய்யவில்லை. எல்லாம் கடையில்தான். இனிப்பும், காரமும் பக்கத்து வீட்டாருக்கு பகிர்ந்து கொடுப்பதற்காக வாங்கியதே தவிர, வீட்டில் உள்ளவர்களுக்கு என ஸ்பெஷலாக எதுவும் வாங்கவில்லை.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

உறவினர்களையும் ஊரில் இருக்கும் நண்பர்களையும் நேரில் சந்தித்து விடுவேன். வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்கு அலைபேசி மூலமாகவும் மாணவ நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும் வாழ்த்துகள் சொல்வேன்.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

வீடு தங்க மாட்டேன். முழுக்க முழுக்க ரவுண்ட்ஸ் தான்.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

ஆதரவு இல்லாதவர்களின் இல்லங்களுக்கு ஆடைகள், பட்டாசு வாங்கிக் கொடுப்பது என்று ஒரு சில உதவிகள் செய்வதுண்டு.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

வானம் வெளித்த பின்னும்
- ஹேமா

வானவில் வீதி - கார்த்திக்

சிவசைலம் - அத்திரி

தினசரி வாழ்க்கை
- Mayvee காசி விஸ்வநாத்


யப்பா.. நான் கூப்பிட்டு இருக்குற மகராசங்க எல்லாம் பத்து நாளுக்குள்ள எழுதிடுங்கப்பா.. அடுத்த தீபாவளி வரைக்கும் ஆக்கிப்புடாதீங்க..தாங்காது...:-))))))


16 comments:

vasu balaji said...

:). இன்னும் கொஞ்சம் உங்களை அறியத்தந்தமைக்கு நன்றி.

பிரபாகர் said...

அய்யா சொல்வதைத் தான் நானும். கூடுதல் தகவல்கள் உங்களைப்பற்றி.... நன்றிங்க...

பிரபாகர்.

தீப்பெட்டி said...

//வீடு தங்க மாட்டேன். முழுக்க முழுக்க ரவுண்ட்ஸ் தான். //

நானும் அப்படித்தான்..

:)

☀நான் ஆதவன்☀ said...

//யப்பா.. நான் கூப்பிட்டு இருக்குற மகராசங்க எல்லாம் பத்து நாளுக்குள்ள எழுதிடுங்கப்பா.. அடுத்த தீபாவளி வரைக்கும் ஆக்கிப்புடாதீங்க..தாங்காது...:-))))))//

ஹிஹிஹி

மேவி... said...

நாங்க எல்லாம் செம சுறுசுறுப்பு ..... தொடர் பதிவு போட்டாச்சு ..வந்து பாருங்க

Karthik said...

ஆஹா, உங்களை நான் மாட்டிவிடனும்னு இருந்தேன். :))

//மதுரையைச் சுத்துன கழுத வேறெங்கும் போகாதுன்னு சொல்வாங்க.. ஹி ஹி ஹி..

ஹாஹா. :))

இராகவன் நைஜிரியா said...

// பண்டிகை என்றால் முன்பிருந்த உற்சாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டு வருகிறதோ எனத் தோன்றுகிறது. எனக்கு மட்டுமல்ல, பொதுவாகவே. குறிப்பாக டிவி வந்த பின்பு மக்கள் நிறையவே மாறி விட்டதைப் போன்றதொரு உணர்வு எனக்கு வெகு நாட்களாக உண்டு. //

உங்க உணர்வு 100 சதவிகிதம் மிகச் சரி.

// மதுரையைச் சுத்துன கழுத வேறெங்கும் போகாதுன்னு சொல்வாங்க.. ஹி ஹி ஹி..//

இஃகி...இஃகி

அ.மு.செய்யது said...

நிறைவான இடுகை !!!!

ஸ்ரீராம். said...

பேசாமல் தீபாவளி தொடர் இடுகையை பொங்கல் இடுகையாக பெயர் மாற்றம் செய்து விடுங்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

// நான்கு வருடங்களுக்கு முன்பு, மூன்று மணி நேரம் காத்திருந்து, மழையில் நனைந்து "ஆஞ்சநேயா' என்ற பெயரில் எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொண்டது. //

ஏன்?

ஸ்ரீராம். said...

வசந்த்,
அஜித்தின் "ஆஞ்சநேயா" படம் பார்த்ததை சொல்றார்னு நினைக்கறேன். சரியா KP,

ஆ.ஞானசேகரன் said...

//எந்த ராசா எந்தப் பட்டிணம் போனாலும், தீபாவளி அன்னைக்கு நாங்க மதுரைலதாண்ணே இருப்போம் / இருந்தோம் / இருக்கோம். மதுரையைச் சுத்துன கழுத வேறெங்கும் போகாதுன்னு சொல்வாங்க.. ஹி ஹி ஹி..//

எப்படி ராசா உண்மையை சொல்லுரீங்க

ஆ.ஞானசேகரன் said...

உங்களை பற்றி மேலும் அறிந்ததில் மகிழ்ச்சி

Anbu said...

:-)

ஹேமா said...

ஐயா வாத்தியாரே எத்தனை நாள் காத்திட்டு இருந்தீங்க என்னை மாட்டிவிடன்னு !சந்தோஷம்.

உங்க பதிவு அமைதியா இருக்கு.நன்றி கார்த்தி.

சதங்கா (Sathanga) said...

மதுரையின் மனம் பதில்களில். உங்களுக்குப் பிடித்த துறையிலேயே நீங்கள் இருப்பது மிக்க மகிழ்ச்சி.

// நான்கு வருடங்களுக்கு முன்பு, மூன்று மணி நேரம் காத்திருந்து, மழையில் நனைந்து "ஆஞ்சநேயா' என்ற பெயரில் எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொண்டது. //

ரசிக்க வைத்த பதில் :)