April 5, 2010

இதுவும் கடந்து போகும்..!!!

"நேத்து மேட்ச் பார்த்தீங்களா? முரளி விஜய் பட்டையக் கிளப்பிட்டான்ல.. அடிச்ச எல்லா ஷாட்டுமே கிளாஸ்.. அவன் இப்படிக் கூட விளையாடுவானான்னு எனக்கு ஒரே ஆச்சரியம்.."

"நேத்து மூத்தவள வந்து பார்த்துட்டு போயிருக்காங்க.. என்ன சொல்லப் போறாங்கன்னு ஒரே கவலையா இருக்கு.."

"உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லா நடக்கும்.."

"சும்மா தேவையில்லாம பேசிக்கிட்டு இருந்த.. பல்லப் பேத்துடுவேன்.. எங்க ஆளையும் உங்க ஆளு மாதிரி நினைச்சியா..? பாட்டு எல்லாம் சூப்பரா இருக்கு தெரியும்ல.."

"ஐயோ பாவம்.. சின்ன வயசாத் தெரியுது.."

"அந்தம்மா இப்படி டம்மியா இருக்குறவரைக்கும் அவரு கவலையே பட வேண்டாம் சார்.. பாருங்க.. கண்டிப்பா அடுத்த தடவையும் அவங்க தான் ஜெயிப்பாங்க.. என்ன கட்சிக்கு உள்ள இருக்குற தலைவலி தான் அவரப் போட்டு பாடாப்படுத்துது.."

"யார் எப்படி போனா என்னங்க.. நீங்களும் நானும் வேலைக்கு போய் கஷ்டப்பட்டாத்தான் நம்ம வீட்டுல கஞ்சி.."

"எப்பத்தான் கிளியர் பண்ணுவாங்களாம்?"

"கரெக்டா பரீட்சை நேரத்துல தான் இந்த கட்டைல போறவனுங்க கிரிக்கட் விளையாடுவானுங்க? சனிப்பயலுக.. ஒரு நாடகம் ஒழுங்காப் பார்க்க முடியுறது இல்லை.."

"ஒவ்வொரு தடவையும் டெபாசிட் காலி.. இவரு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மக்களோட கூட்டணின்னு உளறிக்கிட்டு இருப்பாரோ?"

"லேட்டாப்போனா அரை நாள் சம்பளம் சார்.. ச்சீ.. பரதேசிங்க.. நம்ம பொழப்பக் கெடுக்குரதுக்கே வர்றாய்ங்க சார்.."

"ஆனாலும் இந்த வருஷம் வெயில் ரொம்பவே ஜாஸ்திதான் சார்.. பேசாம லீவு போட்டுட்டு பேமிலியோட எங்காவது போயிட்டு வரலாம்னு இருக்கேன்.."

"எல்லா எடத்துலயும் காசக் கொடுத்து ஜெயிச்சா.. என்னா சார் நடக்குது இங்க? அப்புறம் என்ன வெங்காயத்துக்கு ஜனநாயகம் பத்தி பேசணும்?"

"வண்டில ஏறிட்டா ஏதோ ராக்கெட்டுல போறதா நெனப்பு.. அப்புறம் எப்படி?"

அனுதாபங்கள், கவலைகள், புலம்பல்கள், விரக்தி, அரசியல், குடும்பம்.. அத்தனையும்.. ஆனால் இது எதுவுமே தெரியாமல்....

ஓரமாகக் கிடந்த பைக்கில் இருந்து சற்றே விலகி, தன் உதிரம் கொண்டு தானே வரைந்த நவீன ஓவியத்தின் ஊடாக தாறுமாறாக விழுந்து கிடந்தது, சற்றுமுன் வரை அவனாக இருந்த அது.

17 comments:

Raju said...

குட் ஒன்!!!

\\தன் உதிரம் கொண்டு தானே வரைந்த நவீன ஓவியம்\\

எக்ஸலண்ட் வாத்யாரே..!

vasu balaji said...

அட!

க.பாலாசி said...

வித்யாசம்... நடைமுறையின் பிரதிபலிப்பு....

தேவன் மாயம் said...

கார்த்தி அருமை!!

Balakumar Vijayaraman said...

:(

ப்ரியமுடன் வசந்த் said...

வித்யாசமான நடைமுறை சமூகத்தின்மீதான பார்வை எழுத்துக்களில் வெளிப்படுத்தியிருக்கீங்க ப்ரொஃபசர் சார்.....

kunthavai said...

:)

எல் கே said...

miga miga vidyasamana muyarchi pandiyare

பனித்துளி சங்கர் said...

மாறுபட்ட சிந்தனை . மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !

கார்த்திகைப் பாண்டியன் said...

//♠ ராஜு ♠ said...
குட் ஒன்!!!\\தன் உதிரம் கொண்டு தானே வரைந்த நவீன ஓவியம்\\
எக்ஸலண்ட் வாத்யாரே..!//

தேங்க்ஸ் டக்கு...:-)))

// வானம்பாடிகள் said...
அட!//

:-))))))

//க.பாலாசி said...
வித்யாசம்... நடைமுறையின் பிரதிபலிப்பு....//

அதேதான் தல..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தேவன் மாயம் said...
கார்த்தி அருமை!!//

நன்றி தேவா சார்..:-)))

//வி.பாலகுமார் said...
:(//

அந்த சோகம்தான் பாலா இதை எழுதத் தூண்டியது..:-(((

//ப்ரியமுடன்...வசந்த் said...
வித்யாசமான நடைமுறை சமூகத்தின்மீதான பார்வை எழுத்துக்களில் வெளிப் படுத்தியிருக்கீங்க ப்ரொஃபசர் சார்...//

நன்றி வசந்த்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// kunthavai said...
:)//

வருகைக்கு நன்றிங்க..

//LK said...
miga miga vidyasamana muyarchi pandiyare//

தாங்க்ஸ் நண்பரே..

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...மாறுபட்ட சிந்தனை . மிகவும் அருமை பகிர்வுக்கு நன்றி !//

வாழ்த்துக்கு நன்றி..

Unknown said...

அருமை

Azarudeen Batcha said...

Neraya visayatha pathuna yethaartham pathi oru vasanam potrukeenga..! aanaa intha kaadhala maranduteengalae sir..!

கார்த்திகைப் பாண்டியன் said...

//முகிலன் said...
அருமை//

நன்றி நண்பா

// Azarudeen Batcha said...
Neraya visayatha pathuna yethaartham pathi oru vasanam potrukeenga..! aanaa intha kaadhala maranduteengalae sir..!//

அசார்... உங்களுடைய தொடர்பு எண்ணை எனக்குத் தர முடியுமா? பேசலாம்..

settaikkaran said...

நல்ல பதிவு, இறுதியில் அதிர்ச்சி!

கார்த்திகைப் பாண்டியன் said...

//சேட்டைக்காரன் said...
நல்ல பதிவு, இறுதியில் அதிர்ச்சி!//

அந்த உணர்வைத்தான் கொண்டு வர முயற்சி செய்துள்ளேன் நண்பா