July 21, 2010

From Nigeria வித் லவ்..!!!

பழகிய இடங்களின் ஊடாக தினம் தினம் ஓடியாடி செய்யும் வேலைகள். இலக்குகள் இல்லாத் தேடல்கள். ஓய்வுக்காக ஏங்கித் தவிக்கும் மனது. எதிர்பாரா நேரத்தில் கிடைக்கும் சாய்வதற்கான தோள்களில், நடுநடுவே கிடைக்கும் ஆசுவாசங்களில் ஒளிந்திருக்கிறது வாழ்க்கையின் ருசி...

- யாரோ

போன வாரத்தின் நடுவே எனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

"அண்ணே.. எப்படி இருக்கீங்க? என்ன யோசிக்கிறீங்க? குரல் அடையாளம் தெரியலையா?"

யாரப்பா இது நம்மளை இத்தனை உரிமையோடு அழைப்பது? ஒரே குழப்பம். வெகு சமீபமாக அலைபேசியைத் தொலைத்து விட்டிருந்ததால் நம்பர்கள் சரியாக இல்லாமல் ஒரு சில நண்பர்களின் கோபத்துக்கு ஏற்கனவே ஆளாகியிருந்தேன்.

"அண்ணே.. சத்தியமா தெரியலைண்ணே.. தப்பா எடுத்துக்காதீங்க.. யாருன்னு சொல்லிடுங்க.. ரொம்ப சோதிக்காதீங்க.."

"அடடா.. பயப்படாதீங்க தம்பி.. நான் ராகவன் நைஜீரியா.. எப்படி இருக்கீங்க?"

மதுரைப் பதிவுலக நண்பர்கள்

ஆகா.. நம்ம அண்ணனா? நைஜீரியா ராகவனைப் பற்றி நான் என்ன சொல்வது? இந்த பின்னூட்ட சுனாமியை அறியாதவர்கள் வலையுலகில் யாரும் இருக்கிறார்களா என்ன? பாசக்கார மனிதர். அன்பானவர். போன வருடம் இதே நேரத்தில் மதுரை வந்து பதிவுலக நண்பர்களைச் சந்தித்து எங்களை எல்லாம் சந்தோஷத்தில் ஆழ்த்தியவர். இதோ மீண்டும் வந்து விட்டார். அதற்குள் ஒரு வருடம் ஆகி விட்டதா என்ன?

நலம் விசாரிப்புகளுக்குப் பின் செவ்வாய்க்கிழமை தான் குடும்ப சகிதமாக மதுரை வருவதை உறுதி செய்தார். ரொம்ப நல்லதாகப் போயிற்று. மதுரைப் பதிவர்கள் எல்லாம் சந்தித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அண்ணன் வருவதை சாக்காக வைத்தே எல்லாரையும் சந்தித்து விடலாமே.. சரியென்று நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லியாகி விட்டது.

மூத்த பதிவர்கள் - ராகவன், தருமி, சீனா (எப்பூடி)

செவ்வாய்க்கிழமை மாலை. மதுரை ரயில் நிலையத்துக்கு எதிரே இருக்கும் ராயல் கோர்ட் ஹோட்டலில் அண்ணனுக்கு தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்ற முறை வந்தபோது தம்பி அரவிந்த் ஆசையாகக் கேட்ட ஜிகர்தண்டாவை வாங்கித் தர முடியவில்லை. எனவே இந்த முறை முன்னேற்பாடாக அவனுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொண்டு போயிருந்தோம். நாலரை மணி போல அவரது அறைக்கு சென்றபோது, முகமெங்கும் பொங்கி வழியும் சந்தோஷத்துடன் அண்ணனும் அண்ணியும் வரவேற்றார்கள். இருவருமே ஆள் கொஞ்சம் வற்றி இருக்கிறார்கள். {என்னண்ணே.. வீட்டுல ஒழுங்கா சமைக்கிறது இல்லையா..:-))))}

ஜெரி - அண்ணன் - மதுரை சரவணன்

ஐந்து மணிக்கு மேல் நண்பர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். சீனா ஐயா தன்னுடைய துணைவியார் அம்மா.செல்விஷங்கர் அவர்களுடன் வந்து சேர்ந்தார். ஸ்ரீதர், பாலகுமார், மதுரை சரவணன், ஜெரி, சுந்தர் (முன்னாள் பதிவர்?) ஆகிய நண்பர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். காரைக்குடியில் இருந்து தானைத்தலைவர் தேவன்மாயமும் வந்து சேர்ந்து கொள்ள ஆட்டம் களை கட்டத் தொடங்கியது. பதிவர்கள் ஒன்று கூடினால் கும்மிக்கு கேட்கவா வேண்டும்? கடைசியாக தருமி ஐயாவும் வந்து சேர்ந்து கொள்ள ஒரே கலாட்டாதான்.

1983 -ஆம் வருடத்தில் தான் எடுத்த மீனாட்சி அம்மன் கோவிலின் படத்தை அழகாக லாமினேட் செய்து அண்ணனுக்காக எடுத்து வந்தருந்தார் ஐயா.

அரவிந்துடன் தருமி அய்யா

அதே போல மதுரைப் பதிவர்களின் சார்பாக ஒரு சிறிய நினைவுப்பரிசும் (கொற்கை - ஜோ டி குருஸ்) வழங்கப்பட்டது.

அரவிந்துடன் சீனா ஐயாவும் அம்மாவும்

இரவு ஹோட்டலின் ரூப் டாப்பில் அனைத்து நண்பர்களுக்கும் அருமையான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ராகவன் அண்ணன். சமீபத்தில் தருமி ஐயாவின் "அமீனா" மொழிபெயர்ப்பு புத்தகத்துக்கு சிறந்த புத்தகம் என "திசை எட்டும்" இதழ் கொடுத்திருக்கும் விருதுக்காக பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. நண்பர்களின் பார்வைக்காக சில படங்கள் இங்கே..ஸ்ரீ - அண்ணன் - தேவன்மாயம்

சுந்தர் - பாலகுமார் - கா.பா - சீனா ஆகியோருடன் அண்ணன்

பாட்டு, சினிமா, பதிவுலகம் என எல்லா விஷயங்களையும் பேசியபடி மொக்கை போட்டு முடித்தபோது மணி பத்து ஆகி விட்டிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரங்கள்.. சுத்தமாகப் போனதே தெரியவில்லை. மனது லேசாகி ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அன்புக்கு நன்றி கூறி நண்பர்கள் எல்லோரும் விடைபெற்றுக் கொண்டோம். மகிழ்ச்சியான இது போன்ற தருணங்கள்தான் வாழ்வை இன்னும் சுவாரசியம் ஆக்குகின்றன இல்லையா? அருமையானதொரு வாய்ப்பைக் கொடுத்த ராகவன் அண்ணனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மதுரைப் பதிவர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்..!!!

(ஹி ஹி ஹி.. அப்புறம் அந்த மேல சொல்லியிருக்கிற யாரோ.. நானாகக் கூட இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க..)

நண்பர் மதுரை சரவணின் இடுகையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்..

29 comments:

நேசமித்ரன் said...

படமும் பகிர்வும் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதும் மிக்க சந்தோஷம்

அனைவருக்கும் அன்பு

நையாண்டி நைனா said...

thalaa.. ennaiyum aatathile serthu konga......

ராம்ஜி_யாஹூ said...

nice, thanks for sharing

வானம்பாடிகள் said...

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்

மதுரை சரவணன் said...

அருமை கார்த்தி ...போட்டியில் கலந்து கொள்ளவும்... ராகவன் செல்லும் வரை ...அண்ணன் செவ்வாய் கிரக கவிஞன் வரும் வரை ...தொடர் பதிவுகள் ராகவனை பற்றி படித்து கருத்திடவும்.

செ.சரவணக்குமார் said...

உங்கள் சந்தோஷம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது.

அருமையான சந்திப்பும் புகைப்படங்களும் மிக நன்று.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் கார்த்தி

யாரோ சொன்னதை எல்லாம் எடுத்துப் போட்டு அந்த யாரோ யாரென்று இறுதியில் குறிப்பு வேறு கொடுத்து ...... இல்லனனா தெரியாதாக்கும் -

நல்லாருக்கு எல்லாமே

நல்வாழ்த்துகள் கார்த்தி
நட்புடன் சீனா

Joe said...

கலக்கல் சந்திப்பாக இருந்திருக்கும் போல?
புகைப்படங்கள் அருமை நண்பா!

எஸ்.ரா-வின் சிஷ்யன் என்பதை "யாரோ" எழுதிய வரிகள் நிரூபிக்கின்றன! ;-)

டம்பி மேவீ said...

poramaiya irukkunne .... trichy la pathivargal yaarachu irukkaangalaa ??

மேனஜர் முகத்தில் குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் அண்ணே...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..

எம்.எம்.அப்துல்லா said...

//1983 -ஆம் வருடத்தில் தான் எடுத்த மீனாட்சி அம்மன் கோவிலின் படத்தை அழகாக லாமினேட் செய்து அண்ணனுக்காக எடுத்து வந்தருந்தார் ஐயா.


//

தான் தீவிர நாத்திகனாய் இருந்தும் நம்புகின்றவர்களின் மகிழ்சிக்காக மீனாட்சியம்மன் கோவில் படத்தை பரிசளித்த தருமி அய்யாவின் பண்புக்கு ஒரு ராயல் சல்யூட்.குமரன் சார்கூட இப்ப லீவுல மதுரையிலதான் இருக்கார்போல. வரலையா??

டாக்டர்.தேவன்மாயம் அண்ணன் முகத்தில் ஏதோ எக்ஸ்ட்ரா பூரிப்பு தெரியுது!! என்னா மேட்டர்?? :))

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி தலைவரே!

பிரபு . எம் said...

Naan Miss pannitten :(
Happy moments..... Thank you for sharing Nanbaa :)

கார்த்திகைப் பாண்டியன் said...

// நேசமித்ரன் said...
படமும் பகிர்வும் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதும் மிக்க சந்தோஷம்
அனைவருக்கும் அன்பு//

சீக்கிரம் வந்து ஜோதியில ஐக்கியம் ஆகுங்க அண்ணே..:-))))

//நையாண்டி நைனா said...
thalaa.. ennaiyum aatathile serthu konga......//

அரே பாபாஜி.. நீங்க இன்னும் ஏரியாக்குள்ளதான் சுத்திக்கிட்டு இருக்கீங்களா?

//ராம்ஜி_யாஹூ said...
nice, thanks for sharing//

welcome boss..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//வானம்பாடிகள் said...
பகிர்வுக்கு நன்றி கார்த்திக்//

:-))))

// மதுரை சரவணன் said...
அருமை கார்த்தி ...போட்டியில் கலந்து கொள்ளவும்... ராகவன் செல்லும் வரை ...அண்ணன் செவ்வாய் கிரக கவிஞன் வரும் வரை ...தொடர் பதிவுகள் ராகவனை பற்றி படித்து கருத்திடவும்.//

விட்டுத் தாக்குறீங்களே தலைவரே.. கலக்குங்க..

//செ.சரவணக்குமார் said...
உங்கள் சந்தோஷம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது.அருமையான சந்திப்பும் புகைப்படங்களும் மிக நன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி.//

ரொம்ப நன்றி நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

// cheena (சீனா) said...
அன்பின் கார்த்தி யாரோ சொன்னதை எல்லாம் எடுத்துப் போட்டு அந்த யாரோ யாரென்று இறுதியில் குறிப்பு வேறு கொடுத்து ...... இல்லனனா தெரியாதாக்கும் நல்லாருக்கு எல்லாமே//

சும்மா ஒரு சேட்டை தானே அய்யா..:-)))

// Joe said...
கலக்கல் சந்திப்பாக இருந்திருக்கும் போல? புகைப்படங்கள் அருமை நண்பா!எஸ்.ரா-வின் சிஷ்யன் என்பதை "யாரோ" எழுதிய வரிகள் நிரூபிக்கின்றன! ;-)//

ஹி ஹி ஹி.. நன்றி ஜோ..

//டம்பி மேவீ said...
poramaiya irukkunne .... trichy la pathivargal yaarachu irukkaangalaa //

திருச்சியா? பதிவர்களா? (அதிர்ச்சி பைத்தியம் மாதிரி படிப்பா மேவி..)

// இராகவன் நைஜிரியா said...
சூப்பர் அண்ணே... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..//

எல்லாப் புகழும் உங்களுக்குத்தாண்ணே..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
தான் தீவிர நாத்திகனாய் இருந்தும் நம்புகின்றவர்களின் மகிழ்சிக்காக மீனாட்சியம்மன் கோவில் படத்தை பரிசளித்த தருமி அய்யாவின் பண்புக்கு ஒரு ராயல் சல்யூட்.//

அதுதாண்ணே தருமி அய்யா..

//குமரன் சார்கூட இப்ப லீவுல மதுரையிலதான் இருக்கார்போல. வரலையா??//

அவரும் சீனா ஐயாவும் இன்னொரு நிகழ்வில் கலந்து கொண்டார்கள் போல.. ஆனா இங்க வரலையே....

//டாக்டர்.தேவன்மாயம் அண்ணன் முகத்தில் ஏதோ எக்ஸ்ட்ரா பூரிப்பு தெரியுது!! என்னா மேட்டர்?? :))//

தேவா.. கம்பெனி சீக்ரட்ட வெளிய சொல்ல மாட்டேங்கிறார்..

//ஆ.ஞானசேகரன் said...
பகிர்வுக்கு நன்றி தலைவரே!//

நன்றி ஞானசேகரன்

//பிரபு . எம் said...
Naan Miss pannitten :( Happy moments..... Thank you for sharing Nanbaa :)//

Shall make up next time ma.. sorry for missing you out pa..

க.பாலாசி said...

சந்தோஷமா இருக்குங்க... பதிவர்கள் ஒன்றுகூடல்னாலே ஒரு கலை வந்திடுது... நல்ல பகிர்வு...

//நானாகக் கூட இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க..//

ஆரம்பத்திலேயே தெரியும்....

ஹேமா said...

பதிவையும் படங்களையும் பார்க்கவே தெரியுது நேரில எவ்ளோ சந்தோஷமா இருந்திருப்பீங்கன்னு.எல்லாருக்கும் சுத்திப் போடச் சொல்லுங்க கார்த்தி.கண்ணு பட்டிருக்கும் !

வி.பாலகுமார் said...

நல்லா இருக்கு, கார்த்தி.

கார்த்திகைப் பாண்டியன் said...

// க.பாலாசி said...
சந்தோஷமா இருக்குங்க... பதிவர்கள் ஒன்றுகூடல்னாலே ஒரு கலை வந்திடுது... நல்ல பகிர்வு... ஆரம்பத்திலேயே தெரியும்....//

:-)))))))))

//ஹேமா said...
பதிவையும் படங்களையும் பார்க்கவே தெரியுது நேரில எவ்ளோ சந்தோஷமா இருந்திருப்பீங்கன்னு. எல்லாருக்கும் சுத்திப் போடச் சொல்லுங்க கார்த்தி.கண்ணு பட்டிருக்கும் !//

கண்டிப்பா சகோதரி..:-)

// வி.பாலகுமார் said...
நல்லா இருக்கு, கார்த்தி.//

நன்றி பாலா..

ஜோதிஜி said...

உங்களுக்கு பின்னூட்ட சுனாமி.........

எனக்கு?

வரைச்சரத்தில் கடைசி நாளில் பாருங்கள்.

தேவன் மாயம் said...

கார்த்தி!!! யாரோ சொன்னது சூப்பர்!!

தேவன் மாயம் said...

டாக்டர்.தேவன்மாயம் அண்ணன் முகத்தில் ஏதோ எக்ஸ்ட்ரா பூரிப்பு தெரியுது!! என்னா மேட்டர்?? :)///

பதிவர் சந்திப்புன்னாலே அப்படி ஆகிவிடுகிறது !இன்னும் சென்னைக்குத்தான் வரவில்லை!!

செல்வேந்திரன் said...

ராகவனின் கணிணியிலே இந்தக் கட்டுரையைப் படித்துப் பின்னூட்டம் போடுகிறேன். இந்த அன்புச் சுனாமி மையமிட்டு இருப்பது கோவையில். மதுரை அன்பர்கள் பரிசளித்தப் புத்தகத்தை கண்கள் ஒளிர ஒவ்வொருவரிடமும் காட்டிச் சிரிக்கிறார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜோதிஜி said...
உங்களுக்கு பின்னூட்ட சுனாமி.........
எனக்கு?வரைச்சரத்தில் கடைசி நாளில் பாருங்கள்.//

கண்டிப்பா பாக்குறேங்க..:-)))

//தேவன் மாயம் said...
கார்த்தி!!! யாரோ சொன்னது சூப்பர்!! பதிவர் சந்திப்புன்னாலே அப்படி ஆகிவிடுகிறது !இன்னும் சென்னைக்குத்தான் வரவில்லை!!//

ரொம்ப நன்றி தேவா சார்.. நீங்க எங்கள்ல ஒருத்தர்னு பெருமையா சொல்லுவேன்.. எப்போது கூப்பிட்டாலும் அவ்வளவு தூரத்திலிருந்து நண்பர்களுக்காக வந்து சேரும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்..:-)))

//செல்வேந்திரன் said...
ராகவனின் கணிணியிலே இந்தக் கட்டுரையைப் படித்துப் பின்னூட்டம் போடுகிறேன். இந்த அன்புச் சுனாமி மையமிட்டு இருப்பது கோவையில். மதுரை அன்பர்கள் பரிசளித்தப் புத்தகத்தை கண்கள் ஒளிர ஒவ்வொருவரிடமும் காட்டிச் சிரிக்கிறார்.//

நேற்று உங்க இடுகைய படிச்சதிலிருந்தே கூப்பிட்டு பேசணும்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன் செல்வா.. பார்த்த இங்க உங்க பின்னூட்டம்.. அண்ணானோட ரெண்டு நாள் ஜாலியா இருங்க.. வார இறுதில கூப்பிடுறேன்..

தேவன் மாயம் said...

ரொம்ப நன்றி தேவா சார்.. நீங்க எங்கள்ல ஒருத்தர்னு பெருமையா சொல்லுவேன்.. எப்போது கூப்பிட்டாலும் அவ்வளவு தூரத்திலிருந்து நண்பர்களுக்காக வந்து சேரும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்..:-)))//

நன்றியெல்லாம் சொல்லலாமா கார்த்தி!! நான் நமது குழும சகோதரன் அல்லவா!! இது என் குழுமம் என்ற எண்ணமே எனக்கு உள்ளது!!

ஜெரி ஈசானந்தன். said...

Fantabulous Dinner With Nice'gerian.

கார்த்திகைப் பாண்டியன் said...

// தேவன் மாயம் said...
நன்றியெல்லாம் சொல்லலாமா கார்த்தி!! நான் நமது குழும சகோதரன் அல்லவா!! இது என் குழுமம் என்ற எண்ணமே எனக்கு உள்ளது!!//

அது..:-))))

//ஜெரி ஈசானந்தன். said...
Fantabulous Dinner With Nice'gerian.//

Exactly Jeri..:-))))