July 12, 2010

மெட்ராசப்பட்டிணம் - தமிழில் ஒரு "டைட்டானிக்" முயற்சி..!!!

ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழில் ஒரு அட்டகாசமான காதல் படம். (நண்பர்கள் மன்னிக்கவும்.. எனக்கு வி.தா. பிடிக்கவில்லை..) சுதந்திரத்துக்கு முந்தைய மெட்ராஸில் நடக்கும் ஒரு காதல் கதையை ரொம்பவே அழகாக சொல்லி இருக்கிறார்கள். "சர்வ" நாசத்திற்கு பிறகு ஆர்யா நடித்து இருக்கும் படம். கிரீடம், பொய் சொல்லப் போறோம் போன்ற படங்களை தந்த விஜய் இயக்கியிருக்கிறார். கல்பாத்தி.எஸ்.அகோரத்தின் தயாரிப்பு.2010 - லண்டன். எப்போதோ தலையில் பட்ட அடியால் கோமா நிலைக்கு போகவிருக்கும் வயதான ஏமி, அவசரமாக இந்தியாவுக்குப் போக வேண்டும் என்கிறார். தன்னுடைய பேத்தியுடன் சென்னைக்கு வருகிறார். அங்கே பரிதி என்றொரு மனிதரைத் தேடுகிறார்கள். யார் அவர்? சாகும் தருவாயில் ஏமி ஏன் பரிதியைத் தேட வேண்டும்? கதை 1945-க்கு தாவுகிறது. சாதாரண சலவைத் தொழிலாளி பரிதி. மதராசப்பட்டிணத்தின் கவர்னரின் மகள் ஏமி. இருவருக்கு உள்ளும் காதல் நுழைகிறது. ஆனால் நாட்டின் சுதந்திரமும், விதியும் அவர்களைப் பிரிக்கின்றன. பரிதியின் உயிரைக் காப்பாற்ற அவனைப் பிரிகிறாள் ஏமி. தன்னிடம் பரிதி கொடுத்த தாலியைத் தான் இறப்பதற்குள் திருப்பித் தந்து விட வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஏமி சென்னைக்கு வந்து இருக்கிறார். அவருடைய ஆசை நிறைவேறியதா? ஏமியைப் பிரிந்த பிறகு பரிதி என்ன ஆனான்? இருவரும் சந்தித்தார்களா? படத்தப் பாருங்கப்பா..கட்டுமஸ்தான உடம்போடு கிண்ணென்று ஆர்யா. அலட்டிக் கொள்ளாமல் நச்சென்று நடித்து இருக்கிறார். சுதந்திர தின இரவில், தன்னிடம் இருந்து பிரிந்து விட்டதாக எண்ணிய நாயகியை ரயில் நிலையத்தில் பார்த்தவுடன் மனிதருக்கு ஒரு சந்தோசம் கண்களில் மின்னுகிறது பாருங்கள்.. கிளாஸ். அதிசயமாக ஆர்யாவுக்கு நகைச்சுவைக் காட்சிகளும் அருமையாக சூட் ஆகின்றன. நல்ல வேளையாக ஆர்யாவை தாத்தா வேஷம் போட்டெல்லாம் காட்டவில்லை. யாருப்பா இந்த ஏமி ஜாக்சன்? எங்கய்யா பிடிச்சீங்க?கொஞ்சம் சதை போட்ட லிசாரே மாதிரி கும்மென்று இருக்கிறார். காலைப்பனியில் நனைந்த ரோஜா போல அத்தனை அழகு. சந்தோசம், வெட்கம், சோகம், அழுகை என எல்லாமும் ரொம்ப நேர்த்தியாக... பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.வில்லன் ராபர்ட் எல்லீசாக வருபவரும், ஆர்யாவின் நண்பர்களாக வருபவர்களும் நன்றாக நடித்து இருக்கிறார்கள். குஸ்தி வாத்தியாராக வருகிறார் நாசர். சலவைத் தொழிலாளர்களின் தலைவராக பாலாசிங். நிறைவு. கார் டிரைவராக வரும் ஜீவாவும், உதவி செய்வதாக பணம் பிடுங்கும் அவருடைய பாசாக வருபவரும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். ஆனால் எல்லோரையும் தூக்கி சாப்பிடுபவர் மொழி பெயர்ப்பாளராக வரும் காலம் சென்ற வி.எம்.சி.ஹனீபா தான். மனிதர் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். தத்தக்க புத்தக்க என்று அவர் மொழி பெயர்க்கும் அழகும், சிக்கலான கட்டங்களில் அவருடைய உடல்மொழியும்.. அதகளம் பண்ணுகிறார். வி வில் மிஸ் யு சார்..நிஜமும் நினைவுகளும் என மாறி மாறிப் பயணிக்கிறது படம். முதல் பாதி முழுக்க சிரிப்பு, இரண்டாம் பாதி செண்டிமெண்ட் என பக்காவான திரைக்கதை. படத்தில் மனத்தைக் கவரும் முக்கியமான காட்சிகள் சில..

--> சிறையில் இருந்து தங்களைக் காப்பாற்றிய ஏமிக்கு நன்றி சொல்ல ஆர்யாவும், அவருடைய நண்பர்களும் ஆங்கிலேயர்களின் பங்களாக்குள் நுழைவதும்.. அதனைத் தொடரும் நகைச்சுவைக் காட்சிகளும்..

--> வெள்ளையனோடு ஆர்யா குஸ்தியில் மோதும்போது எம்.எஸ்.பாஸ்கர் சொல்லும் வசனம்.."நானூறு வருஷம் கழிச்சு இப்போத்தாண்டா திருப்பி அடிக்கிறோம்.."

--> வாத்தியாரிடம் ஆர்யாவும் நண்பர்களும் ஆங்கிலம் கற்கும் காட்சி

--> போட்டோக்களை அன்பளிப்பாகத் தரும் ஏமிக்கு திருப்பித்தர தன்னிடம் ஏதுமில்லை என்னும் ஆர்யாவிடம், ஏமி தாலியைக் கேட்பது..

--> ஆர்யாவைக் காப்பாற்ற நண்பர்கள் உயிர் இழக்கும் காட்சிகள்..

--> கடைசியாக, கூவம் ஆற்றில் ஏமி ஆர்யாவைப் பிரிவது..படத்தில் ரவுண்டு கட்டி அடித்து இருப்பவர்.. கலை இயக்குனர் செல்வக்குமார். சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை சென்றல் ஸ்டேஷன், அதனை ஒட்டி ஓடும் கூவம் ஆறு, டிராம் வண்டிகள், கார்கள், பழைய டோபிகானா,அந்தக் காலத்து விளம்பரங்கள் மற்றும் தியேட்டர்களின் பெயரைப் பயன்படுத்தி இருப்பது என ரசித்து ரசித்து பண்ணி இருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அம்சம். ஜி.வி.பிரகாசின் இசையில் பூப்பூக்கும் தருணம், வா வா துரையம்மா, மேகமே ஆகிய பாடல்கள் அருமை. பின்னணி இசையிலும் பின்னி இருக்கிறார். ஆனால் மனிதர் காப்பி அடிப்பதை குறைத்துக் கொள்வது நலம். படத்தின் தீம் ம்யூசிக் பழைய "Mr .India" ஹிந்திப்படத்தை நினைவூட்டுகிறது. அதே போல ரகுமானிடம் இருந்தும் நிறைய இசைக்கோர்வைகளை சுட்டு பயன்படுத்தி இருக்கிறார். திருந்துங்க பாஸ்..கடைசியாக இயக்குனர் விஜய்.. கையக் கொடுங்க சார்.. காதலர்கள் ரெண்டும் பேரும் பிரிஞ்சு போறப்ப பாக்குற நமக்கு மனசு வலிக்குது பாருங்க.. அதுதான் இயக்குனருக்கான வெற்றி.. இந்த மாதிரியான மனதை வருடிச் செல்லும் காதலைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.. வித்தியாசமான களம்.. ரொம்பவே மெனக்கெட்டு செஞ்சிருக்கார் விஜய்.. கடுமையாக உழைத்து இருப்பதற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

பின்குறிப்பு : படம் முடிஞ்சு வெளில வந்து யோசிச்சுப் பார்த்தாதான் தெரியுது.. இது அப்படியே டைட்டானிக் இல்ல? மேல்தட்டுப் பொண்ணு.. கீழ்த்தட்டுப் பையன்.. பொண்ணுக்கு நிச்சயம் பண்ணி இருக்கிற ஒரு கடுவன் பூனை வில்லன்.. அங்க கப்பல்.. இங்க சுதந்திரம்.. பிரிவு.. அட ஆமாம்? அதனாலென்ன.. ஒரு நல்ல படம் எடுக்கணும்னா எதுவும் தப்பில்ல..:-)))

மதராஸப்பட்டிணம் - காதல் நகரம்

21 comments:

டம்பி மேவீ said...

நான் சொல்லி கூடுத மாதிரியே நல்ல எழுதி இருக்கீங்க பாஸ் ....

இதற்கும் வள்ளுவர், பாரதியார் என்று பெரியவர்கள் எல்லாம் வந்து தங்களது கருத்தை சொல்லுவாங்க ன்னு நினைக்கிறேன்

டம்பி மேவீ said...

திருநெல்வேலி ஆல்வா நல்ல இருக்க வாத்தியரே

வினோத்கெளதம் said...

Nice review..

தேவன் மாயம் said...

காதலர்கள் ரெண்டும் பேரும் பிரிஞ்சு போறப்ப பாக்குற நமக்கு மனசு வலிக்குது பாருங்க.. அதுதான் இயக்குனருக்கான வெற்றி.. இந்த மாதிரியான மனதை வருடிச் செல்லும் காதலைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.. வித்தியாசமான களம்.. ரொம்பவே மெனக்கெட்டு செஞ்சிருக்கார் விஜய்.. கடுமையாக உழைத்து இருப்பதற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்.///

பார்த்து விடுவோம்!!!

குடந்தை அன்புமணி said...

படம் நல்லாருக்கு என்று பரவலாக பேச்சு... உங்க விமர்சனம் படித்ததும் இன்னும் ஆர்வமாகிவிட்டது... பார்த்துடுவோம்...

குமரை நிலாவன் said...

விமர்சனம் படித்ததும் ஆர்வமாகிவிட்டது பார்த்துடுவோம்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
நான் சொல்லி கூடுத மாதிரியே நல்ல எழுதி இருக்கீங்க பாஸ் ....இதற்கும் வள்ளுவர், பாரதியார் என்று பெரியவர்கள் எல்லாம் வந்து தங்களது கருத்தை சொல்லுவாங்க ன்னு நினைக்கிறேன்//

அடி விழும்..

//வினோத்கெளதம் said...
Nice review..//

ஹே.. என்னப்பா ஆச்ச்சு.. ஆளையே காணோம்?

//தேவன் மாயம் said...
பார்த்து விடுவோம்!!!//

பாருங்க தேவா சார்.. பிடிக்கும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
படம் நல்லாருக்கு என்று பரவலாக பேச்சு... உங்க விமர்சனம் படித்ததும் இன்னும் ஆர்வமாகிவிட்டது... பார்த்துடுவோம்...//

வாங்க தலைவரே..

//குமரை நிலாவன் said...
விமர்சனம் படித்ததும் ஆர்வமாகிவிட்டது பார்த்துடுவோம்.//

பாருங்கண்ணே..:-))))

Anbu said...

\\\நண்பர்கள் மன்னிக்கவும்.. எனக்கு வி.தா.வ பிடிக்கவில்லை..) \\\

இது தான் ஏன் என்று தெரியவில்லை...

அங்காடித்தெரு, மதராசப்பட்டினம் இந்த ரெண்டு படத்துல உள்ள காதல் காட்சிகளை இவ்வளவு ரசிச்ச நீங்க ஏன் வி.தா.வி. படம் பிடிக்கலைன்னு சொல்றீங்க..

ஒருவேளை, கவுதம் பிடிக்கலை அப்படிங்கிற காரணத்தினாலயா?
இல்லை, ஏர்.ஆர்.ரகுமான் மீயூசிக்கா.?

ஒருவேளை நீங்க அந்த படத்தை கவுதம் இயக்கலை..ஏ.ஆர்.ரகுமான் மியூசிக் போடலை..அப்படின்னு நினைச்சு ஒரே ஒரு தடவை அந்த படத்தை பாருங்க..அதுக்கும் மீறி அந்த படம் உங்களுக்கு பிடிக்கலைன்னா...

செ.சரவணக்குமார் said...

எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம்.

நன்றி பாஸ் பகிர்வுக்கு.

டம்பி மேவீ said...

" கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
நான் சொல்லி கூடுத மாதிரியே நல்ல எழுதி இருக்கீங்க பாஸ் ....இதற்கும் வள்ளுவர், பாரதியார் என்று பெரியவர்கள் எல்லாம் வந்து தங்களது கருத்தை சொல்லுவாங்க ன்னு நினைக்கிறேன்//

அடி விழும்.."

ஏண்ணே? ஒரு பச்சப் புள்ளைய இப்படி போட்டு அடிக்கலாமா?

ஆதவா said...

ஒரு நல்ல படத்துக்கு நல்ல விமர்சன்ம். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இருப்பினும் பலர் நன்றாக இருக்கிறது என்றார்கள். நிச்சயம் பார்க்கவேண்டும் தியேட்டரில்.!!!

kannamma said...

muthal muraiyaa comments ellame plus point-a solleyurukkengale.appo kandippa padam paarthidavendiyathu thaan.

Karthick said...

it was a really nice movie... ur review was also nice... padam parthutu night ellam thookame varla sir... i've never felt so...

கார்த்திகைப் பாண்டியன் said...

// Anbu said...
இது தான் ஏன் என்று தெரியவில்லை...
அங்காடித்தெரு, மதராசப்பட்டினம் இந்த ரெண்டு படத்துல உள்ள காதல் காட்சிகளை இவ்வளவு ரசிச்ச நீங்க ஏன் வி.தா.வி. படம் பிடிக்கலைன்னு சொல்றீங்க..//

என்ன அன்பு இது? ஆதவன் பிடிச்ச உனக்கு ஏன் குருவி பிடிக்கலைன்னு நான் கேட்க முடியுமா? பிடிக்கலை.. அவ்ளோதானேப்பா.. அது ஒண்ணும் கொலைக்குற்றம் இல்லையே?

//ஒருவேளை, கவுதம் பிடிக்கலை அப்படிங்கிற காரணத்தினாலயா?
இல்லை, ஏர்.ஆர்.ரகுமான் மீயூசிக்கா.?//

ரகுமான் இசைக்கு எந்தக் குறையும் இல்லை.. இயக்கமும் திரைக்கதையும் பிடிக்கவில்லை.. அவ்வளவே..

/அதுக்கும் மீறி அந்த படம் உங்களுக்கு பிடிக்கலைன்னா...//

:-)))))

////செ.சரவணக்குமார் said...
எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம்.
நன்றி பாஸ் பகிர்வுக்கு.//

வாங்க நண்பா..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
ஒரு நல்ல படத்துக்கு நல்ல விமர்சன்ம். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இருப்பினும் பலர் நன்றாக இருக்கிறது என்றார்கள். நிச்சயம் பார்க்கவேண்டும் தியேட்டரில்.!!!//

கண்டிப்பா பாருங்க தலைவரே..

// டம்பி மேவீ said...
ஏண்ணே? ஒரு பச்சப் புள்ளைய இப்படி போட்டு அடிக்கலாமா?//

யாரு? நீங்களா? யோவ்.. நீ “பச்ச” புள்ளைய்யா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//kannamma said...
muthal muraiyaa comments ellame plus point-a solleyurukkengale.appo kandippa padam paarthidavendiyathu thaan.//

:-))))))

// Karthick said...
it was a really nice movie... ur review was also nice... padam parthutu night ellam thookame varla sir... i've never felt so.//

மெக்கானிக்கல் கார்த்தியா? நன்றிப்பா..

காவேரி கணேஷ் said...

கா.பா..

படத்தின் ரயில்வே கார்டாக வருபவர் நண்பர் அஜயன் பாலா, கேள்விபட்டிருப்பீர்கள்.
எழுத்தாளர், பதிவர்..இவர்.

ஜான் கார்த்திக் ஜெ said...

//காலைப்பனியில் நனைந்த ரோஜா போல அத்தனை அழகு//

ஆமா ஆமா.. விமர்சனம் நன்று!

கார்த்திகைப் பாண்டியன் said...

//காவேரி கணேஷ் said...
கா.பா.. படத்தின் ரயில்வே கார்டாக வருபவர் நண்பர் அஜயன் பாலா, கேள்விபட்டிருப்பீர்கள். எழுத்தாளர், பதிவர்..இவர்.//

ஆகா.. தகவலுக்கு நன்றி தலைவரே..

//ஜான் கார்த்திக் ஜெ said...
ஆமா ஆமா.. விமர்சனம் நன்று!//

நன்றிங்க

bharathi said...

இதுக்கு மேல இந்த படத்த விமர்சனம் பண்ண முடியாது. தலைவா.........
கலக்கிடிங்க......சூப்பர்