November 7, 2010

வல்லக்கோட்டை - திரைப்பார்வை

அர்ஜுன்: சார்.. இந்த சின்னப்பயபுள்ளைங்க எல்லாம் ஆளாளுக்கு கெட்டப் சேஞ்சு பண்ணி நடிக்குதுங்க.. நம்மளும் அந்த மாதிரி ஏதாவது செய்ற மாதிரி ஒரு கதை சொல்லுங்க..

வெங்கடேஷ்: ங்ணா.... வேணும்னா சுண்டு விரலுக்குப் பக்கத்துல கொஞ்சம் மைதா மாவு ஒட்டி ஆறாவது விரல் கெட்டப்பு போடலாங்களாண்ணா?

அர்ஜுன்: அய்யய்யோ.. நம்மளால அவ்ளோ ரிஸ்கெல்லாம் எடுக்க முடியாதுங்க.. வேறே வேறே வேறே.. வேற மாதிரி ஏதாவது சொல்லுங்க சார்..

வெங்கடேஷ்: ரைட்டு.. விடுங்க.. தமிழ்ல இதுவரைக்கும் யாருமே போடாத கெட்டப்பை எல்லாம் உங்களுக்குப் போட்டு அழகு பாக்குறோம்..

***************இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். "pirates of the carribean" ஜானி டெப் போல ஒரு கெட்டப்பு, "krishh" ஹ்ரித்திக் மாதிரி ஒண்ணு, ஆப்பிரிக்காவுல இருந்து தப்பிச்சு வந்த டுபாங்கோ மாதிரி ஒண்ணு, கடைசியா இந்தியன் தாத்தா ரீமேக் கெட்டப்புன்னு படம் பூரா அர்ஜுனுக்கு ஒரே கெட்டப் சேஞ்ச் அதகள கலாட்டா. ஆனா இதை எல்லாம் பார்க்கும்போது நம்ம “தமிழ்ப்படம்” ஞாபகத்துக்கு வரதை தவிர்க்க முடியலைங்கிறதுதான் உச்சபட்ச கொடுமை. காது ஓரமா வெள்ளையடிச்சுக்கிட்டு, தலையில நாலு சடைய மாட்டிக்கிட்டு சண்டை போடுற அர்ஜுன வில்லனுக்கு அடையாளமே தெரிய மாட்டேங்குது.. அவ்வ்வ்வ்வ்.

***************

பட்ஜெட் படங்களின் சங்கர்னு இயக்குனர் A.வெங்கடேஷைச் சொல்லலாம். ஏன்னா இவர்கிட்ட இருக்குறதும் ஒரே கதைதான். மத்தவங்களுக்கு உதவுற ஒரு நல்லவன் - ஒரு வில்லன் குரூப் - நாயகனோட சூழ்நிலை இல்லைன்னா ஒரு பிளாஷ்பேக் - விஸ்வரூபம் எடுக்கும் நாயகன் - பல கெட்டப்புகள் - சண்டை - சுபம். அதையே நடிகர்களை மட்டும் மாத்தி மாத்தி எடுத்துக்கிட்டு இருக்காரு. இந்தத் தடவை சிக்கியிருக்குறவர் அர்ஜுன்.சின்ன சின்ன குற்றங்கள் செஞ்சு நல்லவங்களுக்கு உதவுற கைதி அர்ஜுன். ஜெயில் நண்பனோட தம்பியின் உயிரைக் காப்பாத்த பணம் வேணும்கிறதால ஒரு கொலைப்பழியை ஏத்துக்க சம்மதிச்சு வல்லக்கோட்டைக்கு வர்றாரு. அங்க வில்லன்களோட அப்பாவைக் கொன்னுட்டு ஜெயில்ல இருக்குற நல்ல மனுஷன் சுரேஷ். அவரைக் கொல்லத் துடிக்கிற வில்லன் பிரதர்ஸ் - ஆசிஷ் வித்யார்த்தி அண்ட் வின்செண்ட் அசோகன்.

சுரேஷைக் கொன்னுட்டு அந்தக் கொலைப்பழியை அர்ஜுன் மேல போட்டுட்டு தப்பிக்கணும்னு வில்லனுங்க பிளான் பண்றாங்க. ஆனா அர்ஜுன் மனசு மாறி ஊர் மக்களுக்கு உதவ ஆரம்பிக்கிறாரு. நடுவுல சுரேஷோட வீட்டுல வேலை பாக்குற விசுவாசி ஹரிப்ரியா கூட காதல். அப்புறம் என்ன? வில்லன்ஸ் கூடவே இருந்து விதவிதமான கெட்டப்புல அவனுங்கள அர்ஜுன் பெண்டு கழட்டுவதுதான் “வல்லக்கோட்டை”. கிளைமாக்ஸ்ல ஒரு நட்பு - துரோகம் எபிசோட் வேற.. கொடுமைடா சாமி..

***************

அர்ஜுனுக்கு வயசாகிப் போச்சு. ஆனாலும் உடம்பை கும்முன்னு வச்சிக்கிட்டு பாஞ்சு பாஞ்சு சண்டை போடுறார். சூப்பரா டான்ஸ் ஆடுறார். முகத்தை அப்பாவியா வச்சுக்கிட்டு அவர் பண்ற காமெடியும் நல்லாயிருக்கு. இந்த டப்பாப்படத்துக்கு தன்னால என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதைத் தெளிவா செஞ்சிருக்கார். நெகு நெகுன்னு நீளமா வளர்ந்து இருக்குற ஹரிப்ரியா அழகா இருக்காங்க. அதுலையும் டக்கரா சேலை கட்டி வரும் காட்சிகளில்.. ஹ்ம்ம்ம். என்ன ஒரு பிரச்சினை.. சந்தோஷம்னாலும் சரி சோகம்னாலும் சரி ஒரே மாதிரி மூஞ்சை வச்சுக்கிறதுதான் நமக்கு கஷ்டமா இருக்கு.இளிச்சவாப்பய வில்லன் கோஷ்டி பத்தி சொல்ல ஒண்ணும் இல்ல. படத்துல மத்த எல்லாமே அல்லக்கை குரூப்ஸ்தான். கஞ்சா கருப்பு கத்துற கத்துல காது ஜவ்வு கிழிஞ்சாலும் அங்கங்க சிரிக்க வைக்குறாரு. சத்யன் அர்ஜுனுக்கு ஒத்து காமெடி. கலைஞரோட “கண்ணம்மா” திரைக்காவியத்துல நடிச்ச ராசி - பிரேம் இந்தப்படத்துல துக்கடா வில்லனா வர்றார். கலைராணி இனிமேல் தமிழ் சினிமாவுல அழுவாச்சி அம்மாவா நடிக்கக் கூடாதுன்னு யாராவது தடை கொண்டு வாங்கப்பா.. படத்தில் ஷகிலா சேச்சியும் உண்டு.

***************

எல்லாப்பட விமர்சனத்துலையும் ஒண்ணுமே எழுத முடியாட்டிக்கூட ஒளிப்பதிவு அருமை, எடிட்டிங் கச்சிதம்னு எழுதலாம். இங்க அதுவும் முடியல. அத்தனையும் கருமாந்திரம். படத்தோட மொத அரை மணி நேரம் ஆங்கில கில்மா படம் மாதிரி ஒண்ணோட ஒண்ணு ஒட்டாத காட்சிகள். எப்பவும் வெங்கடேஷ் படத்துல பி.கே.பி வசனம் சொல்ற மாதிரி இருக்கும். இதுல வேற யாரோ.. அதுவும் சொதப்பல். படத்தோட ஒரே ஆச்சரியம் - தினாவோட இசை. ”மண்ணானாலும் திருச்செந்தூரில்” பாட்டு மெட்டில் ஒலிக்கும் செம்மொழியே பாட்டும், மகதீரா பாட்டும் நைஸ்.

கதை - ரபிமெக்கார்டின்னு போட்டாங்க. அப்போ இது ஏதாவது மலையாளப்பட உல்டாவாத்தான் இருக்கணும். ஏன்யா.. ரீமேக் பண்றது கூட நல்லப்படமா பார்த்து பண்ணக்கூடாதா? இயக்குனரைப் பத்தி வேறென்ன சொல்ல? போன ரெண்டு வருஷத்துல தொடர்ச்சியா படம் கொடுத்துக்கிட்டே இருக்குற ஒரே மனுஷன் இவர்தான். சோ கூடிய விரைவில் அடுத்த டெர்ரர் படத்தை எதிர்பாருங்கள். அதுவரைக்கும்.. டொட்டடாய்ங்க்..

“நொள்ள”க்கோட்டை

10 comments:

வெறும்பய said...

அப்போ இது ஏதாவது மலையாளப்பட உல்டாவாத்தான் இருக்கணும்.

//

மலையாள படமே தான்...

சந்தேகமே இல்ல இது மம்மூட்டி, கோபிகா நடிச்ச "மாயாவி" படம் தான்...

Anonymous said...

பாண்டியன் படிச்சி முடிப்பதற்குள் முழி பிதுங்கிடுச்சி படம் பார்த்தா? எப்படியோ படம் பார்க்க இருந்த பெரும்பான்மையை காப்பாற்றிய பெருமை உங்களையே சேரும்...

டம்பி மேவீ said...

தீபாவளிக்கு வந்த எல்லா படமும் ஊத்தல் தான் போலிருக்கு ...

தல ... டிக்கெட் ரேட் எல்லாம் எப்புடி? இன்னும் இரண்டு படம் பாக்கி இருக்கு ....அதையும் பார்த்துகிட்டு விமர்சனம் எழுதுங்க

ஒற்றன் பட கதை கொஞ்சம் இதுல இருக்குற மாதிரியே இருக்கே ???

பிரபாகர் said...

தல, எதுவுமே தேறாது போலிருக்கு...?

பிரபாகர்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆனாலும் நான் பார்க்கத்தான் போறேன்..! யார் என்ன சொன்னாலும் சரி.. பின் வாங்கப் போறதில்லை..!

S.Sudharshan said...

அப்போ இதையும் திருட்டு வி சி டி லை பார்க்க வேண்டியது தான் .. அட ஒளிப்பதிவு , ஒலிப்பதிவு கூட இல்லன்னா அப்புறம் என்ன DTS :p ?

மதுரை சரவணன் said...

என்னங்க... எந்தப் படத்தைத்தான் பார்கிறது...

அருண்மொழிவர்மன் said...

//பட்ஜெட் படங்களின் சங்கர்னு இயக்குனர் A.வெங்கடேஷைச் சொல்லலாம். ஏன்னா இவர்கிட்ட இருக்குறதும் ஒரே கதைதான். மத்தவங்களுக்கு உதவுற ஒரு நல்லவன் - ஒரு வில்லன் குரூப் - நாயகனோட சூழ்நிலை இல்லைன்னா ஒரு பிளாஷ்பேக் - விஸ்வரூபம் எடுக்கும் நாயகன் - பல கெட்டப்புகள் - சண்டை - சுபம். //

நல்ல அவதானம், இதை நானும் கவனித்து இருக்கின்றேன், இருவரும் எஸ் ஏ சந்திரசேகரிடம் இருந்து வந்தவர்கள் என்பது காரணமாக இருக்கலாம்

வழிப்போக்கன் said...

இந்த படத்த எல்லாம் ஏண்ணா பாத்தீங்க...???
அர்ஜூன் இப்பெல்லாம் இப்புடி தானே நடிக்கிறாரு???

பிரபு . எம் said...

மொக்கைப் படத்துக்கு இண்ட்ரஸ்டிங்கா விமர்சனம் எழுதியிருக்கீங்க நண்பா:)
இருந்தாலும் "வல்லக்கோட்டை"க்கு தியேட்டர் போயிருப்பீங்கன்னு நினைக்கல :)