December 13, 2010

காதலைப் பற்றியும் பற்றாமலும்


ஒவ்வொரு முறையும்
காதலித்து தோற்கும்போது

இதுவேயென்

கடைசி
காதலாய்
இருக்க
வேண்டுமென
பிரார்த்தித்துக்
கொள்கிறேன்
காலக்கொடுமைக்கு
என்
பிரார்த்தனைகளும்
தோற்றே
போகின்றன

***************

நீ
நான்

ன்நா

நீ

நான்
நீ
நீ
நான்
எப்படிப்
பார்த்தாலும்
காதலுக்கு

இரண்டு
பேர்
தேவையாய்
இருக்கிறது

***************

நேற்றோருத்தியிடம் இதைத்தான்
சொல்லிக்
கொண்டிருந்தேன்
இன்று
உன்னிடம் இதைச்
சொல்லிக்
கொண்டிருக்கிறேன்
இது தோற்பின்
நாளை
வேறோருவளிடமும்
நான்
இதைச் சொல்லக் கூடும்
காதலிகள்
மாறிக் கொண்டிருக்கிறார்களே
தவிர
மாறாமலே இருக்கிறதென் காதல்

21 comments:

Mohan said...

மூன்று கவிதைகளுமே நன்றாக இருந்ததுங்க!

vasu balaji said...

/மாறாமலே இருக்கிறதென் காதல்/
செல்லாத நோட்டு மாதிரி செல்லாத காதலோ.

test said...

எல்லாமே சூப்பரா இருக்கு!

//காதலிகள் மாறிக் கொண்டிருக்கிறார்களே தவிர
மாறாமலே இருக்கிறதென் காதல்//

ஹைலைட்!!! :-)

arasan said...

உங்க முயற்சிக்கு பலன் கிட்டும்...

மூன்றும் அருமை

sathishsangkavi.blogspot.com said...

வாத்தியாரே கவிதை கலக்கல்...

இந்த வருடம் ஈரோட்டு சங்கமத்துக்கு மறக்காம வந்துருங்க...

நையாண்டி நைனா said...

supero super....
appadiye ingyum paarthidunga...

http://ulagamahauthamar.blogspot.com/2010/12/blog-post_13.html

http://naiyaandinaina.blogspot.com/2010/12/blog-post.html

பெசொவி said...

super!

Balakumar Vijayaraman said...

//வேறோருவளிடமும்//

வேறொருத்தி?

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி மோகன்

பாலா சார்,
காதலை நாம எப்படிப் பார்க்கிறோம்கிறதைப் பொருத்துத்தான் அது செல்லுமா செல்லாதான்னு சொல்ல முடியும்..:-))

ஜீ, ரொம்ப நன்றிங்க

அரசன், ஊக்கம் வேறையா? ரைட்டு..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

சங்கவி, நாம இல்லாமையா? கண்டிப்பா வர்றேன் தலைவரே

நைனா, நான்னா மட்டும் உங்களுக்கு மூக்குல வேர்க்குமே? இதுல கவிதைக்கு எதிர்க்கவிதைக்கு எதிர்க்கவிதையா.. அவ்வ்வ்வ்

நன்றி பெ.சொ.வி

பாலா, இலக்கணப்பிழையா? கவனிக்கிறேன் நண்பா

பாலா said...

//ஒவ்வொரு முறையும்
காதலித்து தோற்கும்போது
இதுவேயென்
கடைசி காதலாய்
இருக்க வேண்டுமென
பிரார்த்தித்துக் கொள்கிறேன்
காலக்கொடுமைக்கு
என் பிரார்த்தனைகளும்
தோற்றே போகின்றன//

எனக்காகவே எழுதப்பட்ட வரிகள் போல இருக்குது சார் ! மூன்று கவிதைகளுமே அருமை.

Anonymous said...

முதலாவதும் மூன்றாவதும் யதார்த்தமான உண்மை.

இரண்டாவது கவிதை அழகு.

கார்த்திகைப் பாண்டியன் said...

பாலகிருஷ்ணன், வீட்டுக்கு வீடு வாசப்படிடா தம்பி..:-))

இந்திரா,முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..

சுவாமிநாதன் said...

//ஒவ்வொரு முறையும்
காதலித்து தோற்கும்போது
இதுவேயென்
கடைசி காதலாய்
இருக்க வேண்டுமென
பிரார்த்தித்துக் கொள்கிறேன்
காலக்கொடுமைக்கு
என் பிரார்த்தனைகளும்
தோற்றே போகின்றன..//
இதில் எந்த பிராத்தனையை முதலில் செய்கிறீர்கள்.

//நீ
நான்
ன்நா
நீ
நான் நீ
நீ நான்
எப்படிப் பார்த்தாலும்
காதலுக்கு
இரண்டு பேர்
தேவையாய் இருக்கிறது//
பாத்து சார் இரண்டு பேர் வேணும்னா அது உங்களையும் சேர்த்துத் தானே....

//நேற்றோருத்தியிடம் இதைத்தான்
சொல்லிக் கொண்டிருந்தேன்
இன்று உன்னிடம் இதைச்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
இது தோற்பின்
நாளை வேறோருவளிடமும்
நான் இதைச் சொல்லக் கூடும்
காதலிகள் மாறிக் கொண்டிருக்கிறார்களே
தவிர//
அவளுக்கு காதலனும் மாறிக்கொண்டே தான் இருக்கிறான்.

THOPPITHOPPI said...

அருமை

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மூன்று கவிதைகளுமே நன்றாக இருந்ததுங்க.
எல்லாமே சூப்பரா இருக்கு!

//காதலிகள் மாறிக் கொண்டிருக்கிறார்களே தவிர
மாறாமலே இருக்கிறதென் காதல்//

ஹைலைட்!!! :-)
உங்க முயற்சிக்கு பலன் கிட்டும்...

மூன்றும் அருமை
வாத்தியாரே கவிதை கலக்கல்..

supero super....

super!

எனக்காகவே எழுதப்பட்ட வரிகள் போல இருக்குது சார் ! மூன்று கவிதைகளுமே அருமை.

முதலாவதும் மூன்றாவதும் யதார்த்தமான உண்மை.

இரண்டாவது கவிதை அழகு.

அருமை

மாணவன் said...

//காதலிகள் மாறிக் கொண்டிருக்கிறார்களே
தவிர
மாறாமலே இருக்கிறதென் காதல்//

சூப்பர்.....

Madhavan Srinivasagopalan said...

உங்களது இந்தப் பதிவினை, நான் இன்று (19 டிசம்பர் 2010 ), வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். முடிந்தால் இங்கு வந்து படித்து விட்டு உங்கள் கருத்தினை சொல்லவும். நன்றி !

தேவன் மாயம் said...

காதலி இல்லாதவர்கள் பாவம் கா.பா!

மதுரை சரவணன் said...

கவிதைகள் நிஜவாழ்வின் பிரதிபலிப்பாக இருப்ப்தால் எனக்கு எளிதாகப் புரிகிறது... வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

நடத்துங்க கா.பா... :-)

பற்றியும் பற்றாமலும் என்றாலே அனுஜன்யாவும், தொட்டடுத்து நர்சிம்மும் நினைவில் வருவதை தவிர்க்க இயலவில்லை.