January 10, 2011

உக்கார்ந்து யோசிச்சது (10-1-11)

சென்னையில் இருக்கும் பிரபல பதிவரின் வீடு. இரவு மணி பத்து.

“உங்கள நான் எத்தன மணிக்குள்ள வரணும்னு சொல்லியிருந்தேன்?”

“அது இல்லம்மா.. அது வந்து..”

“உங்களுக்கு பெர்மிஷன் எத்தன மணி வரைக்கும் கொடுத்தேன்.. நீங்க எப்போ வர்றீங்க..? எனக்கு விளக்கமெல்லாம் வேணாம். பதில் வேணும்..”

“அதும்மா.. புத்தகத் திருவிழாக்கு போயிட்டு ஒம்போது மணிக்குள்ள வந்திரலாம்னுதான் போனேன். ஆனா பிரண்ட்ஸ் எல்லாம் பார்த்தேனா.. கொஞ்சம் லேட் ஆகிப்போச்சு..”

“பெரிய வெங்காய பிரண்ட்ஸ்.. எனக்குத் தெரியாதாக்கும்..? சொல்லத்தான் முடியும். எக்கேடோ கெட்டுப் போங்க.. எனக்கென்ன வந்துச்சு? இன்னைக்கு உங்களால நானும் பட்டினிதான்...”

தங்கமணி கோபித்துக் கொண்டு போக பிரபல பதிவர் தானே சமையலறைக்குள் நுழைந்து தோசை எல்லாம் ஊற்றி கெஞ்சிக் கூத்தாடி அவரைத் தாஜா பண்ணி சமாதானம் பண்ணுகிறார்.

ஆத்தாடி.. கொஞ்சம் லேட்டா வந்ததுக்கே இப்படியா? கல்யாணத்துல இம்புட்டு சட்டச்சிக்கல் இருக்கா? ரொம்பக் கஷ்டம் போலயே.. (யார் அந்த பிரபல பதிவர்னு கடைசில சொல்றேன் மக்களே..)

***************

எல்.கே.ஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை என்னோடு கூட படித்த தோழி அவள். பள்ளியை விட்டு போன பிறகு சுத்தமாக தொடர்பு விட்டுப் போயிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பாக வலைப்பதிவுகளின் மூலம் என்னை அடையாளம் கண்டு கொண்டு போனில் அழைத்திருந்தாள். திருமணம் முடிந்து ஆஸ்திரேலியாவில் இருப்பதாகச் சொன்னாள். மதுரை வரும்போது கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்றும் சொன்னாள்.

சொன்னதுபோலவே போன வாரம் மதுரை வந்து என்னை அழைத்தாள். சந்திக்கப் போயிருந்தேன். ஆச்சரியத்துடன் கூடிய சந்தோஷ கணங்கள். இரண்டு பிள்ளைகள். ஒருத்தி ஆறாவதும் இன்னொருவள் ஐந்தாவதும் படிக்கிறார்களாம். கிளம்பும் சமயம். தோழியின் பிள்ளைகளுக்கு ஐஸ்கிரீமும் சாக்லெட்டுகளும் வாங்கித் தந்தேன்.

“தேங்க்யூ அங்கிள்..”

என்னது அங்கிளா? அவ்வ்வ்வ்வ்வ்.. பாண்டியா.. நெஜமாவே நமக்கு வயசு ஆகிடுச்சோ? ஙே...

***************

பதிவுலகில் எனக்கு புது வருடம் ரொம்ப நன்றாகவே ஆரம்பித்து இருக்கிறது. தமிழ்மணம் போட்டியில் என்னுடைய இரண்டு இடுகைகள் இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன.



என்னை விட நன்றாக எழுதிய நண்பர்கள் பலர் உண்டு என்பதை நான் அறிவேன். இருந்தும் இந்த இடுகைகள் தேர்வாகி இருக்கிறதென்றால் அது உங்களுடைய அன்பால்தான். வாக்களித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

***************

இளம் தலைமுறை நடிகர்களில் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடிப்பது தனுஷ்தான் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறது “ஆடுகளம்” டிரைலர். கெளப்புடா கெளப்புடா தம்பி எனும் மதுரை பாஷையும், கையை உயர்த்தி கொன்டேபுடுவேன் என சொல்லும்போது சுண்டுவிரல் சற்றே மடங்கி நிற்பதும் என அச்சு அசல் மதுரைக்காரனின் உடல்மொழி. படம் திரைப்பட விழாக்களுக்கும் போவதாக சொல்கிறார்கள். பட்டையைக் கிளப்ப வெற்றிமாறன் குழுவினருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

***************

சமீப காலமாக பார்த்த பாடல்களில் ரொம்பப் பிடித்திருப்பது அய்யனாரின் “ஆத்தாடி ஆத்தாடி” பாடல்தான். நாயகி மீரா நந்தன் ரொம்ப ஹோம்லியாக மனதை அள்ளிக் கொள்கிறார். ரவுடிகள் மீரா நந்தனின் துப்பட்டாவைப் பறித்துக் கொள்ள, அதை பிடுங்கி விட்டு அவர்கள் மீது பாயும் ஆதியும், அவரைத் தடுத்து நிறுத்த முயலும் மீராவும் என விஷுவல்ஸ் எல்லாமே கொள்ளை அழகு.


அதே மாதிரி ஈசனின் “ ஜில்லா விட்டு ஜில்லா” பாட்டும் ஒரு சிறுகதை. ஆண்மையுடன் கூடிய அந்த ஆண்ட்டியின் நடிப்பும், அலட்டிக் கொள்ளாத நடனமும் பச்சக்கென ஒட்டிக் கொள்கிறது. இதுவரை மிஷ்கின் மட்டுமே பயன்படுத்தி வந்த நடனமுறைகளை நீட்டாக படம்பிடித்து இருக்கிறார் சசிகுமார். படம் அத்தனை நன்றாக இல்லையென்பது வருத்தமே. அடுத்த படம் நல்லா பண்ணுங்க சாமி..

***************

கலைஞரின் பக்கம் காற்று

எம்.ஜி.ஆர் உயிரோடிருந்தபோது கலைஞர் என்ற சொல்லைக்கூட உச்சரிக்க பயந்த தமிழ் சினிமா உலகம் இன்று தினமும் அவரை மேடையேற்றி அவரை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. கலைஞர் சூடுகண்ட பூனையல்லவா, சிரித்தபடியே எச்சரிக்கையோடு அனைவரையும் அருகில் அனுமதிக்கிறார். நாளை காற்று எந்த பக்கம் வீசினாலும் சினிமாக்காரர்கள் அந்தப் பக்கம் பறந்து விடுவார்கள் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்.

(பழைய புத்தகக் கடையில் பொறுக்கிய 88 ஆம் வருட பாக்கெட் நாவலில் கண்ணில் பட்டது)

***************

ஒரு கவிதை முயற்சி.. (buzzஇல் கிறுக்கியது)

உனக்கானதொரு
அடையாளத்தை
உருவாக்கு
எனச்சொல்லும்
நண்பனிடம்
எப்படி விளக்குவது
பறவைகள்
தங்கள் தடங்களை
விட்டுச் செல்வதில்லை
என்பதை

***************

ரசித்த எஸ்.எம்.எஸ்..

ஆறு வயது பையன் அவன். எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அவன் அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத் தொடங்கினான்.ஆனால் அவள் யாரென்பதை தேடிக் கண்டுபிடிக்க மட்டும் அவனால் முடியவில்லை.

இருபது வருடங்களுக்குப் பிறகு..

அவனுடைய மனைவி அலமாரியை ஒதுங்க வைக்கும்போது டைரிக்குள் அந்த புகைப்படத்தை கண்டுபிடித்தாள்.

“இந்த போட்டோ உங்களுக்கு எப்படிங்க கிடைச்சது?”

“ஏன் கேக்குற?”

“இது என்னோட போட்டோதான். ரொம்பப் பிடிச்சது. வீடு மாத்தும்போது எப்படியோ தொலஞ்சு போனது உங்ககிட்ட கிடச்சு இருக்கு..” சொல்லியப்டியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

நீதி: சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் விடாது..

அப்புறம்.. பொண்டாட்டிக்கிட்ட வாங்கி கட்டிக்கிட்ட அந்த பிரபல பதிவர் தாங்க இந்த எஸ்.எம்.எஸ்ஸையும் அனுப்புனது. அவரு.. அண்ணன் அத்திரி.

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

17 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்.. வீட்டுல பொண்ணு பார்த்திட்டு இருக்காங்களா நண்பரே... நிறைய மனதளவுல தயாராகற மாதிரி தெரியுது ;)

Balakumar Vijayaraman said...

தொகுப்பு நல்லாயிருக்கு, கார்த்தி.

யாசவி said...

நல்லா இருந்தது. எஸ்.எம்.எஸ் ஐ தவிர

:)

ஸ்வர்ணரேக்கா said...

நல்லாவே யோசிச்சிருக்கீங்க...

ஆ.ஞானசேகரன் said...

//என்னுடைய இரண்டு இடுகைகள் இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன.
//

வாழ்த்துகள்...
தொகுப்பும் அழகு

ஆதவா said...

அத்திரிக்கு வாழ்த்துக்கள் (?)
தனுஷ் குறித்த உங்கள் எண்ணமே எனதும்..
ஜோக் பரவாயில்லை..

Ganesan said...

அழகான தொகுப்பு தலைவரே..

செ.சரவணக்குமார் said...

//ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்.. வீட்டுல பொண்ணு பார்த்திட்டு இருக்காங்களா நண்பரே... நிறைய மனதளவுல தயாராகற மாதிரி தெரியுது ;)//

ஆஹா, இதான் மேட்டரா? ரைட்டு.

அத்திரி said...

புரொபசர் என்ன இப்படி பண்ணிட்டீங்க.............. குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் அப்பு.......................................................

அத்திரி said...

உனக்கும் ஒரு நாள் வரும்............அப்ப இருக்கு எல்லாமே...........................................

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//பறவைகள்தங்கள் தடங்களைவிட்டுச் செல்வதில்லைஎன்பதை//
உங்களைப் போன்ற ஒரு இலக்கியவாதியிடம் பழக நேர்ந்த பாக்கியத்தை எண்ணி எண்ணி மகிழ்கிறேன் அனுதினமும்.வேறென்ன சொல்ல?

மேவி... said...

கார்த்தி சார் , அத்திரி அண்ணன் வீட்டிற்கு லேட்டாக போனதற்கு நானுமொரு காரணம்... என்னோடு சேர்ந்து நான் வாங்கின்ன புஸ்தகங்களை, அந்த இலக்கிய சுமையை அவரும் சுமந்தார்


"“தேங்க்யூ அங்கிள்..”
என்னது அங்கிளா? அவ்வ்வ்வ்வ்வ்.. பாண்டியா.. நெஜமாவே நமக்கு வயசு ஆகிடுச்சோ? ஙே..."

அன்னைக்கு ரயில்வே நிலையத்தில் நிக்கும் பொழுது ...இளம் பெண்களை யாரை சைட் அடிச்சாங்க சார் ??? உங்களையா என்னையா ???

"இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன."

அங்க என்ன பண்ணுவாங்க ??? உங்க பதிவுக்கு சுத்தி போடுவாங்களா ??? இல்லாட்டி பிரிண்ட் அவுட் எடுத்து சுத்தி தூரக்க போடுவாங்களா


"ஆண்மையுடன் கூடிய அந்த ஆண்ட்டியின் நடிப்பும், அலட்டிக் கொள்ளாத நடனமும் பச்சக்கென ஒட்டிக் கொள்கிற"

இதிலிருந்தே தெரியவில்லையா ??? உங்களுக்கு வயசு ஆகிருச்சுன்னு :))))))))))))


கவிதை சூப்பரோ சூப்பர் .... ஆனா இனிமேல் சொல்லிவிட்டு செய்யுங்கள்

குமரை நிலாவன் said...

கவிதை அருமை நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

// ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
ம்ம்.. வீட்டுல பொண்ணு பார்த்திட்டு இருக்காங்களா நண்பரே... நிறைய மனதளவுல தயாராகற மாதிரி தெரியுது ;)//

அந்தக் கொடுமை கூடிய சீக்கிரம் நடந்திடும் போலத்தான் தெரியுது தலைவரே..:-))

//வி.பாலகுமார் said...
தொகுப்பு நல்லாயிருக்கு, கார்த்தி.//

நன்றி புதுமாப்பிள்ளை ..:-))

//யாசவி said...
நல்லா இருந்தது. எஸ்.எம்.எஸ் ஐ தவிர//

உங்களுக்குப் பிடிக்கலையா.. விளையாட்டா எழுதுனது தாங்க.. அடுத்த தடவை இன்னும் கவனமா இருக்கேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஸ்வர்ணரேக்கா said...
நல்லாவே யோசிச்சிருக்கீங்க...//

ரொம்ப நன்றிங்க

//ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள்...தொகுப்பும் அழகு//

நன்றி தலைவரே

//ஆதவா said...
அத்திரிக்கு வாழ்த்துக்கள் (?)
தனுஷ் குறித்த உங்கள் எண்ணமே எனதும்.. ஜோக் பரவாயில்லை..//

வாங்க ஆதவா.. நல்லா இருக்கீங்களா ? நேரம் இருந்தா கால் பண்ணுப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//காவேரி கணேஷ் said...
அழகான தொகுப்பு தலைவரே..//

நன்றிண்ணே..

//செ.சரவணக்குமார் said...
ஆஹா, இதான் மேட்டரா? ரைட்டு.//

சரவணா எல்லாம் வெறும் பில்டப்பு.. நம்பாதீங்க..:-))

//அத்திரி said...
உனக்கும் ஒரு நாள் வரும்............அப்ப இருக்கு//

இங்க அத்திரி அத்திரின்னு ஒரு மானஸ்தன் இருந்தான் அவன ஆளக் கானோமேன்னுத் தேடிக்கிட்டு இருக்கேன்.. ஹா ஹா ஹா

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஸ்ரீ said...
உங்களைப் போன்ற ஒரு இலக்கியவாதியிடம் பழக நேர்ந்த பாக்கியத்தை எண்ணி எண்ணி மகிழ்கிறேன் அனுதினமும்.வேறென்ன சொல்ல?//

அப்பூ... உனக்கு ரெண்டு ஒத போட்டாத்தான் சரிப்படும்

@mayvee
ஹாய் ஹாய் ஹாய்.. நன்றிப்பா..

//குமரை நிலாவன் said...
கவிதை அருமை நண்பரே//

நன்றி நண்பா..