எழுதலாமா வேண்டாமா என்கிற பெரிய குழப்பத்தோடும் கொஞ்சம் பயத்தோடுமே இந்த இடுகையை எழுதுகிறேன். இதை எழுதுவதன் காரணமாக நான் ஒரு குறிப்பிட்ட மதத்தை எதிர்க்கிறேன் என்றோ இன்னொரு மதத்தை ஆதரிக்கிறேன் என்றோ முத்திரை குத்தப்பட்டு விடும் அபாயம் இருப்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். அதனால் முதலிலேயே சொல்லி விடுகிறேன் - எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மதம் என்கிற பெயரால் மனிதர்கள் அடித்துக் கொண்டு சாகக் காரணமாயிருக்கும் கடவுள் என்கிற வஸ்துவையே காணாமல் போக்கடித்து விட வேண்டும் என நம்புவன் நான். (ஸ்ஸ்ஸ்.. அப்பா... எப்படி எல்லாம் பயப்பட வேண்டி இருக்கு? ) ரைட்டு.. இப்போ மேட்டருக்கு வருவோம்.
என்னுடைய நல்ல நண்பன் அவன். கிருத்துவ மதத்துக்கு பத்து வருடங்களுக்கு முன்பு மாறியவன். போன வெள்ளிகிழமை சாயங்காலம் எனக்கு போன் செய்திருந்தான்.
"டேய்.. சனிக்கிழமை சாயங்காலம் சர்ச்சுல ஏதோ படம் போடுறாங்களாம். வர்றியா?"
எனக்கு குஷியாகி விட்டது. பைபிள், டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென் ஹர் போன்ற பழைய படங்கள் ஏதோ போடப்போகிறார்கள் போல.. சர்ச்சில் போடுவதால் கண்டிப்பாக அந்த படங்களில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். எனக்கு வரலாறு சார்ந்த பழைய படங்கள் பார்ப்பதில் ஆர்வம் ஜாஸ்தி. சரியென்று ஒப்புக் கொண்டு விட்டேன்.
சனிக்கிழமை மாலை. முதல் ரோவில் எனக்காக சேர் எல்லாம் போட்டு வைத்திருந்தார்கள். ரொம்பக் கூச்சமாகப் போய் விட்டது.
"என்னடா இது?"
"இல்லடா என் பிரண்டு வர்றான்னு பாதர்கிட்ட சொன்னேன். அதான் இப்படி.."
சரி என்று ஆர்வமாக போய் உட்கார்ந்தாயிற்று. படத்தைப் போட்டார்கள்.
எரிநரகம்
என்னடா இது.. இப்படி ஒரு படம் பத்தி நாம கேள்விப்பட்டதே இல்லையே? எனக்கு லைட்டா அல்லையப் பிடிக்கிற மாதிரி இருந்தது. அடுத்த ஒரு மணி நேரம் நடந்த கொடுமையை என்னவென்று சொல்ல?
பூமியில் பாவம் செய்தவர்களுக்கு நரகத்திலே என்ன மாதிரியான தண்டனை தருவார்கள் என்பது பற்றிய படமது. திருடுபவன், மனைவிக்கு துரோகம் செய்பவன், கடவுளை மறுப்பவன் என பல மனிதர்கள்.. அவர்களுக்கு டிசைன் டிசைனாக தண்டனைகள். கண்ணில் ஊசியைக் குத்துகிறார்கள். எண்ணைச் சட்டியில் போட்டு வறுக்கிறார்கள். மூஞ்சியில் இருந்து புழுப்புழுவாக வருகிறது.
அவ்வவ்.. நான் உனக்கு என்னடா துரோகம் பண்ணினேன்? நண்பனைத் திரும்பிப் பார்த்தால் அவன் எனக்கு ஒண்ணும் தெரியாதுடா என்று பார்வையாலையே கெஞ்சுகிறான்.
முதல் ரோ என்பதால் எழுந்து போகவும் முடியவில்லை. ரொம்ப நேரம் கழித்து அப்படி இப்படி என்று படம் முடிந்தது. விட்டாண்டா பருப்புரசம் என்று கிளம்பலாம் எனப் பார்த்தால் அதற்குப் பிறகு நடந்ததுதான் ஹைலைட்.
பாதர் பொறுமையாக என்னிடம் நடந்து வந்தார். "கார்த்தி.. பார்த்தீங்க இல்லையா? உங்கள மாதிரி ஆளுகளுக்காகத்தான் இந்த படமெல்லாம் போடுறம். பார்த்து நீங்க திருந்தணும். ஆண்டவரை ஏத்துக்கணும். அவரோட மடி உங்களுக்காக எப்பவும் காத்துக்கிட்டு இருக்கு. இப்போ இருக்குற தப்பான இடத்துல இருந்து வெளிய வரணும். அங்கேயே இருந்தா நீங்களும் நரகத்துல கிடந்து சாகணும். புரியுதா?"
உன்னக் கேட்டேனா? நான் உன்னக் கேட்டேனா?
எனக்கு இதுதான் புரிய மாட்டேன் என்கிறது. என்னுடைய கடவுள் நல்லவர் என்று சொல்லுவது வேறு. உன்னுடைய கடவுள் கேவலமானவர் அவரை சார்ந்து இருந்தால் நீ நாசமாகத்தான் போவாய் என்கிற ரீதியில் பேசுவது எப்படி சரியாகும்?
நான் படித்த பள்ளியில் இருக்கும் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். "இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் எனச் சொல்லுகிறார்களே.. அது எப்படி வந்தது தெரியுமா? ஆரம்பத்தில் கடவுளிடம் நூறு கோடி தேவதைகள் இருந்தார்கள். அவர்களில் லூசிபர் என்கிற சாத்தான் பிரிந்து போனபோது அவனோடு மூன்றில் ஒரு பங்கு தேவதைகளும் பிரிந்து போனார்கள். அவர்கள்தான் இந்த இந்து மத தெய்வங்கள். ஆக இதத்தனையும் சாத்தான்கள்.." பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவில் அவரைப் பொறுத்தவரை சாத்தான் கோவில்.
எந்த மதமும் பிற மதத்து மக்களை தூஷிக்க வேண்டும் என எனக்குத் தெரிந்து சொன்னதில்லை. அப்புறமும் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள்?
நான் படித்த காருண்யா கல்லூரியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும் இதே மாதிரித்தான் இருந்தது. அங்கே இருந்த பசங்கள் எல்லாருமே.. காலையில் எழுந்தவுடன் ஒரு பிரார்த்தனை.. நல்ல சாப்பாடு கிடைக்க ஒரு பிரார்த்தனை.. கிடைத்தது என ஒரு பிரார்த்தனை.. நாள் நன்றாக போக வேண்டும் என்று.. சற்றே அதிகப்படியான முஸ்தீபுகள்.
சீக்கிரம் திருந்து ஆண்டவரிடம் அடைக்கலம் ஆகு இல்லையேல் மவனே நீ சட்னிதான் என்பது போன்ற மிரட்டல் அங்கே வெகு சாதாரணமாக வரும்.
சாயங்காலம் பிரேயர் செல்லுக்குள் போனால் பயந்தடித்துக் கொண்டு ஓடிவர வேண்டும். அத்தனை பேரும் மாரில் அடித்துக் கொண்டு அழுவார்கள். இந்த உலகம் எங்களுக்கு வெறுத்து விட்டது ஆண்டவரே சீக்கிரம் எங்களை திவ்ய தேசத்துக்கு கூட்டிப் போங்கள் என்கிற ரீதியில் இருக்கும்.
மதத்தின் மீதும் கடவுளின் மீதும் நாங்கள் ரொம்பத் தீவிரமாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்ளும் நடவடிக்கையாகவே இது எனக்குப் படுகிறது. இதன் அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்? நாம் பெரும்பான்மையாக இல்லாத ஒரு சமூகத்தில் தங்களின் இருப்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆழ்மன பயம் காரணமாக இருக்கலாமோ?
பதினெட்டு வருடங்கள் கிருத்துவ பள்ளி மற்றும் கல்லூரிகள் படித்ததால் அவர்களுடைய பழக்க வழக்கங்களை நிறைய அருகே இருந்து கவனிக்கும் வாய்ப்பு இருந்ததாலும் இங்கே கிருத்துவமதத்தை மட்டுமே முன்னிறுத்தி நான் பேசி இருக்கிறேன். என் சந்தேகங்கள்.. இது போன்ற நடைமுறைகள் தேவையில்லை என நான் நினைப்பதைச் சொல்வதற்காகவே.. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல..
(ஆரோக்கியமான விவாதங்களை எதிர்நோக்கி.. தனிமனித தாக்குதல்கள் வேண்டாம்..)
என்னுடைய நல்ல நண்பன் அவன். கிருத்துவ மதத்துக்கு பத்து வருடங்களுக்கு முன்பு மாறியவன். போன வெள்ளிகிழமை சாயங்காலம் எனக்கு போன் செய்திருந்தான்.
"டேய்.. சனிக்கிழமை சாயங்காலம் சர்ச்சுல ஏதோ படம் போடுறாங்களாம். வர்றியா?"
எனக்கு குஷியாகி விட்டது. பைபிள், டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென் ஹர் போன்ற பழைய படங்கள் ஏதோ போடப்போகிறார்கள் போல.. சர்ச்சில் போடுவதால் கண்டிப்பாக அந்த படங்களில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். எனக்கு வரலாறு சார்ந்த பழைய படங்கள் பார்ப்பதில் ஆர்வம் ஜாஸ்தி. சரியென்று ஒப்புக் கொண்டு விட்டேன்.
சனிக்கிழமை மாலை. முதல் ரோவில் எனக்காக சேர் எல்லாம் போட்டு வைத்திருந்தார்கள். ரொம்பக் கூச்சமாகப் போய் விட்டது.
"என்னடா இது?"
"இல்லடா என் பிரண்டு வர்றான்னு பாதர்கிட்ட சொன்னேன். அதான் இப்படி.."
சரி என்று ஆர்வமாக போய் உட்கார்ந்தாயிற்று. படத்தைப் போட்டார்கள்.
எரிநரகம்
என்னடா இது.. இப்படி ஒரு படம் பத்தி நாம கேள்விப்பட்டதே இல்லையே? எனக்கு லைட்டா அல்லையப் பிடிக்கிற மாதிரி இருந்தது. அடுத்த ஒரு மணி நேரம் நடந்த கொடுமையை என்னவென்று சொல்ல?
பூமியில் பாவம் செய்தவர்களுக்கு நரகத்திலே என்ன மாதிரியான தண்டனை தருவார்கள் என்பது பற்றிய படமது. திருடுபவன், மனைவிக்கு துரோகம் செய்பவன், கடவுளை மறுப்பவன் என பல மனிதர்கள்.. அவர்களுக்கு டிசைன் டிசைனாக தண்டனைகள். கண்ணில் ஊசியைக் குத்துகிறார்கள். எண்ணைச் சட்டியில் போட்டு வறுக்கிறார்கள். மூஞ்சியில் இருந்து புழுப்புழுவாக வருகிறது.
அவ்வவ்.. நான் உனக்கு என்னடா துரோகம் பண்ணினேன்? நண்பனைத் திரும்பிப் பார்த்தால் அவன் எனக்கு ஒண்ணும் தெரியாதுடா என்று பார்வையாலையே கெஞ்சுகிறான்.
முதல் ரோ என்பதால் எழுந்து போகவும் முடியவில்லை. ரொம்ப நேரம் கழித்து அப்படி இப்படி என்று படம் முடிந்தது. விட்டாண்டா பருப்புரசம் என்று கிளம்பலாம் எனப் பார்த்தால் அதற்குப் பிறகு நடந்ததுதான் ஹைலைட்.
பாதர் பொறுமையாக என்னிடம் நடந்து வந்தார். "கார்த்தி.. பார்த்தீங்க இல்லையா? உங்கள மாதிரி ஆளுகளுக்காகத்தான் இந்த படமெல்லாம் போடுறம். பார்த்து நீங்க திருந்தணும். ஆண்டவரை ஏத்துக்கணும். அவரோட மடி உங்களுக்காக எப்பவும் காத்துக்கிட்டு இருக்கு. இப்போ இருக்குற தப்பான இடத்துல இருந்து வெளிய வரணும். அங்கேயே இருந்தா நீங்களும் நரகத்துல கிடந்து சாகணும். புரியுதா?"
உன்னக் கேட்டேனா? நான் உன்னக் கேட்டேனா?
எனக்கு இதுதான் புரிய மாட்டேன் என்கிறது. என்னுடைய கடவுள் நல்லவர் என்று சொல்லுவது வேறு. உன்னுடைய கடவுள் கேவலமானவர் அவரை சார்ந்து இருந்தால் நீ நாசமாகத்தான் போவாய் என்கிற ரீதியில் பேசுவது எப்படி சரியாகும்?
நான் படித்த பள்ளியில் இருக்கும் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். "இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் எனச் சொல்லுகிறார்களே.. அது எப்படி வந்தது தெரியுமா? ஆரம்பத்தில் கடவுளிடம் நூறு கோடி தேவதைகள் இருந்தார்கள். அவர்களில் லூசிபர் என்கிற சாத்தான் பிரிந்து போனபோது அவனோடு மூன்றில் ஒரு பங்கு தேவதைகளும் பிரிந்து போனார்கள். அவர்கள்தான் இந்த இந்து மத தெய்வங்கள். ஆக இதத்தனையும் சாத்தான்கள்.." பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவில் அவரைப் பொறுத்தவரை சாத்தான் கோவில்.
எந்த மதமும் பிற மதத்து மக்களை தூஷிக்க வேண்டும் என எனக்குத் தெரிந்து சொன்னதில்லை. அப்புறமும் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள்?
நான் படித்த காருண்யா கல்லூரியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும் இதே மாதிரித்தான் இருந்தது. அங்கே இருந்த பசங்கள் எல்லாருமே.. காலையில் எழுந்தவுடன் ஒரு பிரார்த்தனை.. நல்ல சாப்பாடு கிடைக்க ஒரு பிரார்த்தனை.. கிடைத்தது என ஒரு பிரார்த்தனை.. நாள் நன்றாக போக வேண்டும் என்று.. சற்றே அதிகப்படியான முஸ்தீபுகள்.
சீக்கிரம் திருந்து ஆண்டவரிடம் அடைக்கலம் ஆகு இல்லையேல் மவனே நீ சட்னிதான் என்பது போன்ற மிரட்டல் அங்கே வெகு சாதாரணமாக வரும்.
சாயங்காலம் பிரேயர் செல்லுக்குள் போனால் பயந்தடித்துக் கொண்டு ஓடிவர வேண்டும். அத்தனை பேரும் மாரில் அடித்துக் கொண்டு அழுவார்கள். இந்த உலகம் எங்களுக்கு வெறுத்து விட்டது ஆண்டவரே சீக்கிரம் எங்களை திவ்ய தேசத்துக்கு கூட்டிப் போங்கள் என்கிற ரீதியில் இருக்கும்.
மதத்தின் மீதும் கடவுளின் மீதும் நாங்கள் ரொம்பத் தீவிரமாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்ளும் நடவடிக்கையாகவே இது எனக்குப் படுகிறது. இதன் அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்? நாம் பெரும்பான்மையாக இல்லாத ஒரு சமூகத்தில் தங்களின் இருப்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆழ்மன பயம் காரணமாக இருக்கலாமோ?
பதினெட்டு வருடங்கள் கிருத்துவ பள்ளி மற்றும் கல்லூரிகள் படித்ததால் அவர்களுடைய பழக்க வழக்கங்களை நிறைய அருகே இருந்து கவனிக்கும் வாய்ப்பு இருந்ததாலும் இங்கே கிருத்துவமதத்தை மட்டுமே முன்னிறுத்தி நான் பேசி இருக்கிறேன். என் சந்தேகங்கள்.. இது போன்ற நடைமுறைகள் தேவையில்லை என நான் நினைப்பதைச் சொல்வதற்காகவே.. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல..
(ஆரோக்கியமான விவாதங்களை எதிர்நோக்கி.. தனிமனித தாக்குதல்கள் வேண்டாம்..)
131 comments:
ஒருவர் அந்த மதத்தைப் பற்றி படித்து, அறிந்து, உணர்ந்து பிறகு மதமாற்றத்தைப் பற்றி முடிவெடுத்தால் பிரச்சனை இல்லை.
அதை விடுத்து இந்த மதத்தில் இருந்தால் நரகத்திற்கு செல்வாய் என்பதெல்லாம் கேவலமான விசயம். இதை யார், யார் மீது திணித்தாலும் கேவலம் கேவலமே.
எல்லா மதமும் அன்பை மட்டுமே போதிக்கின்றன. அறநெறி, ஒழுக்கத்தை மட்டுமே கடைப்பிடிக்கச் சொல்கின்றன. அதைச் சொல்லும் விதம் வேண்டுமானால் வேறுபடலாம். அவ்வளவே.
இதை அன்பே சிவம் (உங்களைப் போல) என்று நினைத்தாலும் சரியானதே.
1988-1992ல் என் அத்தை மகன் காருன்யாவில் படித்தார். பல கதைகளை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இந்த விவாதத்தை வைக்க எதற்கு பயப்பட வேண்டும்?
ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் நண்பரே...
நானும் 12 ஆண்டுகள் கிறித்துவ கான்வெண்ட்டில்தான் படித்தேன்..
அது கத்தோலிக்கக் கிறித்துவர்கள் நடத்தும் நிறுவனம்.. கத்தோலிக்கத்தில் இந்த எதிர்மறை பிரச்சாரம் எல்லாம் இல்லை.. நேரடியாக நல்ல விசயங்களை மட்டும் சொல்வார்கள்.. பிடித்தால் மட்டும் அங்கு போய் அமரலாம்.. என்கிற ரீதியில் இருக்கும்...
மற்றபடி மதமாற்றம் என்கிற ரீதியில்.. பிற மத துவேஷம் என்பதாக அவர்களது நடவடிக்கை இருக்காது...
ஆனால்.. பெந்தகோஸ் என்று ஒரு வகை கிறித்துவர்கள் இருக்கிறார்கள்.. அதைச் சேர்ந்தவர்கள்தான் சிலர்.. இத்தகைய செயல்களில் இறங்குகிறார்கள்...
அவர்களுக்கு கிறித்துவர்களுக்குள்ளேயே ஆதரவு இல்லை.. விட்டுத்தள்ளுங்கள்...
click and read
மதம்மாற்ற செய்ய மொள்ளமாரித்தனம்.
.....
nalla soneengal- go to visit my blog too- கேப்ட்டன் ஒரு காமடி பீசு: வெத்துவேட்டு விஜயகாந்த்.
இந்த உலகில் பைசாவுக்கு அருகதை இல்லாத விசயங்களுக்கெல்லாம் தமிழ் மக்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று சிலர் கூறுவது உண்மைதானோ? தமிழக அரசியலின் திசையை தீர்மானிப்பவர்களாக திரையுலக மாந்தர்கள் இருக்கும் அவலத்தினை பார்க்கும் போது அது பொய்யில்லை என்றே தோன்றுகிறது. பின்னே ஒரு தி.மு.க, அ.தி.மு.க தொண்டனுக்கு
ஆம் நண்பா!...
இதுபோல் எனக்கும் அனுபவம் இருக்கிறது. உங்களைப் படித்தபின் கண்டிப்பாய் பகிர்ந்துகொள்ளலாமென முடிவு செய்திருக்கிறேன்....
பிரபாகர்...
பதினெட்டு வருஷமா..? ஆத்தாடியோவ்!
ஒரு ரெண்டு வருஷம் ஒருத்தனை பக்கத்துல வச்சுக்கிட்டு, நான் பட்ட பாடு இருக்கே..
அய்ய்யய்ய்ய்ய்ய்யோ.
மதங்கள் வேண்டுமா? வேண்டாமா? என்று ஒவ்வொருவரின் மனதை பொறுத்தது நண்பா. ஆனால் மதம்... மதம் பிடித்து ஆடும் போது தான் பிரச்சினை. ஆக சில மனிதர்களில் தான் பிரச்சினை இருக்கிறது.
இப்போம் எல்லாம் மதங்களை, சாதிகளை அரசியல் ஆக்கி விட்டார்கள். இதை வைத்து தான் நிறைய பேர் அரசியல் நடத்துகிறார்கள். என்ன செய்ய... என்ன செய்ய முடியும்..
பிறரை தூண்டி விட்டு அதில் குளிர் காயும் மோசமான மனிதர்கள் வாழும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேற என்ன சொல்ல...
எல்லா மதங்களும் போதிப்பது அன்பை தான். அதை மறந்து விட்டு சுயநலத்திற்காக செயல்படுகிறவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவதே நல்லது.
// திருடுபவன், மனைவிக்கு துரோகம் செய்பவன், கடவுளை மறுப்பவன் என பல மனிதர்கள்.. அவர்களுக்கு டிசைன் டிசைனாக தண்டனைகள். கண்ணில் ஊசியைக் குத்துகிறார்கள். எண்ணைச் சட்டியில் போட்டு வறுக்கிறார்கள். மூஞ்சியில் இருந்து புழுப்புழுவாக வருகிறது.//
நிரந்தர சொர்கத்தை நம்பும் கூட்டம் எல்லாமும் இதே கதையைத்தான் சொல்லுகின்றன. எனக்கு சொர்கத்துல ஆப்பாயிலும் அவிச்ச முட்டையும் கிடைக்குமான்னு கேட்டுச் சொல்லுங்க, என் நண்பன் ஒருத்தன் ரொம்ப நல்லவன் இதையெல்லாம் விரும்பிச் சாப்பிடுவான் :)
Good one, but god is not one.:)
ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் நண்பரே...இந்த விவாதத்தை வைக்க எதற்கு பயப்பட வேண்டும்
FOLLOWWWWWWWWWWWW
கத்தோலிக் மதத்தினரால் பிரச்சினையே இல்லை என்று சொல்லுமளவு நடந்து கொள்வார்கள். புரொட்டஸ்டன் மற்றும் பென்டிக்கோஸ் பிரிவினர் தொல்லை தான் தாங்கவே முடியாது. மதம் மாறினால் சில செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்வார்களாம். கடவுளை விக்கிறார்கள்.
எந்த ஒரு விஷயம் நம்மள ஆறுதல் இல்ல அமைதி படுத்துதோ அது கடவுள்!பயப்படுத்தி வந்தா அதுக்கு பேர் பயந்தானே தவிர பக்தி கிடையாது -னு நினைக்கிறேன்..eppthume amaithiyai theduvom......
எங்கள் மதம் மட்டுமே உண்மையான மதம் மத்தவைஎல்லாம் வெறும் பொய் மதங்களே, குறிப்பாக இந்து மதம் ஒரு பிசாசு மதம்!!! அப்படி நாங்கள் சொல்லுவதற்கு காரணம் மத நல்லிணக்கம் மட்டுமே. நீகள் அதை எல்லாம் கேட்டு சும்மா இருக்க வேண்டும். அதுவும் மத நல்லிணக்கமே. அதற்க்கு இன்னும் ஒரு பெயர் மதச்சார்பின்மை! அதாவது இந்து மதத்தை மட்டும் திட்டி என்மதமே மேல் என்று சொல்லுவது செகுலர் தன்மை! மேலும் இந்து மதத்தை பழிப்பது எங்கள் உரிமை. நாங்கள் எல்லா இடங்களிலும் அதை மைக்கு போட்டு சொல்லுவோம் அதை எதிர்த்து உங்களை போன்ற இந்துக்கள் ஏதாவது வாயை திறந்தால் அதற்க்கு பெயர் இந்து மதவாதம்! சங்கு பரிவார் பாசிசம். பார்பனிய இந்து மதத்தின் கோர முகம்! ஆதலால் நாங்கள் உங்களின் மதத்தையும், நம்பிக்கையையும், கடவுளார்களையும் பழிப்பதை நீங்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்! அது உங்கள் தலை எழுத்து, ஏனென்றால் எங்கள் கடவுளே மெய், நீங்கள் எல்லாம் பாவிகள்! அதை நீங்கள் கண்டித்தால் நாங்கள் குறியோ முறையோ என்று கத்துவோம், மதச்சார்பின்மை செத்து விட்டது என்று ஓலம் போடுவோம், மைனாரிடிகளை இந்தியாவில் நசுக்குகிறார்கள் என்று உங்கள் மேலேயே காரி துப்புவோம், மேலும் வெள்ளைக்காரனிடம் கண்ணீர் விட்டு பணம் கேட்போம். அதை கேட்டு ரோமில் உள்ள போப்பு முதல் அமெரிக்காவில் இருக்கும் சோப்பு வரை உங்களை வந்து ஆப்படிப்பார்கள்!
மேலே சொல்லுவது போல உலகில் எந்த மைனாரிடிகளும் இந்தியாவில் இருப்பது போல கட்டுக்கடங்காத சுதந்திரமோ, இதை போன்ற மதம் மாற்றி ஒரு நாகரீக அழித்தலை கவலை இல்லாமல் செய்யும் பலமோ இல்லவே இல்லை! உலகில் எங்குமே இது நடக்காது, இந்தியாவை தவிர. போலி மதச்சார்பு
வழிமுறையை ஒரு தொழிலாக செய்யும் கும்பல்கள் இங்கே பல. இவர்கள் இங்கே போடும் ஆட்டம், செய்யும் பொய் பிரச்சாரம் சில காலங்களாக மிக வன்மமாக மாறிவிட்டது! இந்தியாவில் யார் மைனாரிட்டி யார் மஜோரிட்டி என்றே தெரியாமல் போய்விட்டது.
படித்து, நகர மக்கள் இடமே இவர்கள் இப்படி அவதூறு பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால் படிக்காத பாமரர்களிடம் இந்துமதத்தை பற்றி என்னவெல்லாம் சொல்லிருப்பார்கள்??
சூ சூ ... இதுக்கு மேலே பேசாதே.......நீ பாசிச இந்துத்துவ அடிவருடி.... இந்துத்தவ நாயே....... இந்துத்துவ பாசிஸ்டு ... பாசிச மத வெறியனே.....ஆரிய பார்பனிய அடிவருடியே.... மைனாரிடிகளை அழிக்க துடிக்கும் காவி கும்பலில் ஒருவனே..... பகுத்தறிவின் எதிரியே....மதசார்பிம்மையை அழிக்க வந்த நச்சு பாம்பே...... சுயமரியாதையின் எதிரியே......பகுத்தறிவை அழிக்க வந்த புழுதியே..... என்று சில பலர் சொல்லுவது புரிகிறது !!
அப்படி இருந்தும், இந்து தன்மை இல்லாத இந்துவும் கோபம் கொள்ளும் நாட்கள் வந்து கொண்டிருக்கிறது, சிலுவை கூடத்தின் இந்த அவதூறால், மத வெறியால், அயோக்கியத்தனத்தால்!
//எழுதலாமா வேண்டாமா என்கிற பெரிய குழப்பத்தோடும் கொஞ்சம் பயத்தோடுமே இந்த இடுகையை எழுதுகிறேன். இதை எழுதுவதன் காரணமாக நான் ஒரு குறிப்பிட்ட மதத்தை எதிர்க்கிறேன் என்றோ இன்னொரு மதத்தை ஆதரிக்கிறேன் என்றோ முத்திரை குத்தப்பட்டு விடும் அபாயம் இருப்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.//
இந்த சிலுவை கும்பல்களும், அவர்களிடம் காசு வாங்கிய முற்போக்கு பிராடுகளும் காலம் காலமாக இப்படி இந்துமதத்தை சிறுமை படுத்தி, இந்துமதத்தை பேசினாலே அவன் இந்து மத வெறியன் , மைனாரிடிகளின் எதிரி என்று முத்திரை குத்தியதால், இந்த மாதிரி சப்ஜெக்ட்டை எடுத்த நீங்களே கொஞ்சம் பயப்படுவது அவர்கள் வெற்றியைதான் காட்டுகிறது! உலகில் எங்குமே நடக்காத ஒரு மனோ வசியத்தை இவர்கள் மிக லாவகமாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் செய்து விட்டார்கள்! உங்கள் மதத்தை தாறுமாறாக பேசிய ஒருவரை பற்றி நாலு வார்த்தை எழுதக்கூட நீங்கள் ஆயிரம் முறை யோசிக்கிறீர்கள் என்றால், அப்படிப்பட்டோரின் அயோக்கிய நடைமுறைகளை எதிர்க்க யார்தான் முன் வருவார்கள்!!!!! அவர்களின் வெற்றி அதில்தான்!
இந்த நிலைமை மிக மிக மிக முத்தி போய், எனதருமை குமரியில், குமரி கிட்டத்தட்ட மேரியாகி, இந்து மதம் என்பதே ஒழிக்கபடவேண்டியது, இந்து என்றாலே ஒழிக்கபடவேண்டியவன் என்று எல்லோரும் பயமில்லாம் பேசி, சில கோவில்களையும் இடித்த பின்னர், அதை கண்டு இனி மேலும் பொறுக்க முடியாது எண்டு
பொங்கி எழுந்தார் ஐயா தாணுலிங்க நாடார்!! ஓரளவுக்கு ஏதோ தப்பித்தது குமரி! ஆனால் பாருங்கள் தாணுலிங்க நாடார்கள் எல்லா இடங்களிலும் தோன்றுவதில்லை!!
Having said all that, உங்களின் இந்த பதிவுக்கு எந்தன் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உள்ளதை உள்ள படி, உண்மையை முற்றிலுமாக, முத்திரை விழும் என்று தெரிந்தும்கூட பயப்படாமல் எழுதி விட்டீர்கள் வாழுத்த்கள் வாழுத்துக்கள்!
Well written by "NO". Excellent Boss...
ஆபிரகாமிய மதங்களின் அடிப்படையே வேறு மதத்தை ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். சகிப்புத்தன்மை என்பது அதன் அடிப்படையிலேயே கிடையாது. நல்ல பதிவு.
ஏங்க ! இவங்க கிட்ட ஜாலியா பேசிட்டு வருதை விட்டுட்டு இப்படி பதிவு எழுதறீங்களே ! படம் நடக்கும்போது சூப்பர். அப்படி குத்து, இப்படி குத்து - பாட்டு போடுன்னு சவுண்டு விட்டா அடுத்தமுறை கில்லி போட்டு இருப்பாங்க !
நான் படிச்சது திருச்சி பிஷப் ஹீபர் காலேஜ். யாரும் எந்தவித தொந்தரவும் பண்ணினது கிடையாது. ஒரே ஒரு அரைகுறை வாத்தி ஏதோ இந்த மாதிரி பேச ஆரம்பிச்சார். நம்ப அக்னிபார்வை / வெண்ணிற இரவுகள் மாதிரி ஒரு ஆளு என்னோட கிளாஸ்ல இருந்தார். சோ, அவங்க ரெண்டு பெரும் அறிவுப்பூர்வமா விவாதம் பண்ணினாங்க. . நாங்களும் ரசிச்சி பார்த்தோம். :)- அவ்வளவு தான்.
Well told "NO"..I salute u..
Well told "NO"...I salute you brother........
நண்பரே! முதலில் எனது பாராட்டுக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்! அவரவர் மதநம்பிக்கைகள் நமக்குள் இரத்த ஓட்டம்போல வெளித்தெரியாமல் இருந்தாலும், புற உலகில் நாம் பிறரிடம் அன்புகாட்டுகிறபோதோ அன்றி துன்பத்தைப் பகிர்ந்து கொள்கிறபோதோ மதம்,ஜாதி போன்ற தளைகளை வெளிக்கொணராதிருக்கிறோம். ஆனால், மதப்பிரசாரகர்களும், மதத்தின் பெயரில் வெறித்தனத்தை வளர்ப்பவர்களும் தான் நமது அனைத்து ஒட்ட வைக்கிற முயற்சிகளையும் தோல்வியடையச் செய்ய முனைகிறார்கள்.
சிறப்பான, கண்ணியமான இடுகை! இதில் கருத்துத் தெரிவித்தவர்களும் தனிமனிதத் தாக்குதல்களில் ஈடுபடாமல், நாகரீகத்தை வெளிப்படுத்தியிருப்பது நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது. அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!
மதம் அன்பையே போதிக்குதுன்னு சொல்றாங்க, ஆனா எல்லா மதமும் பயமுறுத்தி தான் வியாபாரம் பண்ணுது!
நீங்க பார்த்த படம் மாதிரி கொஞ்சம் பூசி மொழுகி தமிழில் ஒரு படம் வந்துச்சு பார்த்திங்களா கார்த்தி, அந்த படம் பேர்
அந்நியன்!
வால்பையன் said...
மதம் அன்பையே போதிக்குதுன்னு சொல்றாங்க, ஆனா எல்லா மதமும் பயமுறுத்தி தான் வியாபாரம் பண்ணுது!
நீங்க பார்த்த படம் மாதிரி கொஞ்சம் பூசி மொழுகி தமிழில் ஒரு படம் வந்துச்சு பார்த்திங்களா கார்த்தி, அந்த படம் பேர்
அந்நியன்!
//
அது தப்பு செஞ்சா தண்டனை அப்படின்னு இருந்தது, இங்க அப்படி இல்லை, நீ இங்க இல்லையா உனக்கு தண்டனை, பெரிய வித்தியாசம் இருக்கு.
மதம் அன்பையே போதிக்குதுன்னு சொல்றாங்க, ஆனா எல்லா மதமும் பயமுறுத்தி தான் வியாபாரம் பண்ணுது!//
இது முற்றிலும் சரி, பயம்தான் கடவுளின் அடிப்படை.
வரவேற்க்கத்தக்க பதிவு... பூனைக்கு யார் மணிகட்டுவது? பாண்டியன் கட்டிஇருக்கார்....
// வாழ்வை இனியதாக்குவது அன்பு. கஷ்டங்களை எல்லாம் மீளச்செய்வது அன்பு. குடும்ப வாழ்க்கையை மேன்மைபடுத்துவது அன்பு. உலக வாழ்க்கையை சுவைக்கச் செய்வது அன்பு. அழகற்றதற்கு அழகூட்டுவது அன்பு. அன்பு பொலியும் இடம் சுவர்க்கம் அன்பு மறைந்தவிடம் நரகம். மனமே நீ, அன்பில் ஊறி வளர்க.//
(மதத்தில் ஊறி மடியாதே)
அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே..................... திருமந்திரம்
//இதை எழுதுவதன் காரணமாக நான் ஒரு குறிப்பிட்ட மதத்தை எதிர்க்கிறேன் என்றோ இன்னொரு மதத்தை ஆதரிக்கிறேன் என்றோ முத்திரை குத்தப்பட்டு விடும் அபாயம் இருப்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.//
யாரோ எதோ நினைப்பார்கள் என்பதற்காக உங்கள் எழுத்துரிமைக்கு பூட்டுப் போடாதீர்கள். உங்களுக்கு பிடிக்காத கருத்துகள் இதே பதிவுலகில் இருப்பதையும் நீங்கள் பார்க்கனும், அவைகள் உங்களைக் கேட்டும், நீங்கள் தவறாகக் கொள்வீர்கள் என்றெல்லாம் நினைத்து எழுதப்படாமல் இல்லை. :)
நன்றி கோவி.. பஸ் ல் பகிர்ந்தமைக்கு..
---------------------------
எல்லா மதத்திலும் இவ்வகையான பயப்படுத்தலும் தண்டனையும் இருக்கு..
சிலர் அதை தாண்டாமலே விமர்சித்து களைத்திடுவர்..
நல்லவை 90% சொல்லப்பட்டிருக்கு.. பயமுறுத்தல் 10% க்கும் குறைவே..
அதுகூட சக மனிதனௌக்கு துன்பம் நேரும் வகையில் நடக்கக்கூடாது என்பதானாலேயே அந்த பயமுறுத்தலும்..
குழந்தையை சாப்பிட வைக்க பூச்சாண்டியை சொல்வதில்லையா அன்னை?.. அதுபோல..
ஆக நாம் எதை எடுத்துக்கொள்கிறோம் என்பதைப்பொறுத்தே...
கடவுள் இல்லையென்பரும் கூட மத புத்தகத்தை அதிலுள்ள ஒழுக்க நெறிகளை படிக்கலாம் .. ஆறுதல் , அமைதி பெறலாம் . தவறேயில்லை..
நான் ஆத்திகமும் இல்லை, நாத்திகமும் இல்லை.. பிறப்பில் ம்,அட்டுமே கிறுஸ்தவள்.. இருப்பினும் வாரந்தோறும் ஆலயத்தில் குழந்தைகளுக்கு நன்னெறி வகுப்பெடுக்கிறேன் .. ஏனெனில் அது ஒரு ஒழுக்கமுறை.. சக மனிதரை நேசிக்கவும், பகிரவும் , உதவவும் , மன்னிக்கவும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது...இதற்கு மதம் உதவுவதால் அதை நான் உபயோகிப்பதல் தவறொன்றுமில்லை என்பதென் கருத்து..
மொத்தத்தில் இப்பதிவு சிறுபிள்ளைத்தனம்...இப்படியான மனிதர்கள் இலலியென மறுக்கவில்லை இதைத்தாண்டி நல்லவற்றை , அவர்கள் தன்னலமற்ற சேவைகளை அனைத்து மதத்திலும் காணலாம்..
f
இது எப்படி இருக்கு என்றால் தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரிடம் , தான் வளர்ந்து முடித்ததும் புரியாமல் ஏற்படும் ஒரு சின்ன பிரச்னையால் , பெற்றோர்களே மோசம் என முடிவெடுப்பது போல...
மதம் நல்லவர் ஒருவருக்கு ஏணியாக பயன்படுகிறது..கெட்டவருக்கு அதுவே ஒரு ஆயுதமாக ...
@ சாந்தி
இப்பதிவி சிறுபிள்ளைதனம் என சொல்லும் பொழுது உங்களுக்குள் ஒரு மேட்டிமைத்தனம் வெளியே எட்டிப்பார்ப்பதை உங்களால் உணர முடிகிறதா!?.
என்ன சொல்ல இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியம் தான்!
//வாரந்தோறும் ஆலயத்தில் குழந்தைகளுக்கு நன்னெறி வகுப்பெடுக்கிறேன் //
நன்னெறியை ஆலயத்தில் தான் வைத்து வகுப்படுக்கனுமோ! ஆலயம் என்றால் எது பள்ளிவாசலா அல்லது சிலை வழிபாடுள்ள கோவிலா, சர்ச் என்றால் நீங்கள் பிறப்பால் மட்டுமல்ல, இப்பவும் கிறிஸ்தவர் தான்!
நன்னெறி மட்டுமே மதங்கள் சொல்லிக்கொடுத்தால் யாராவது எதாவது சொல்வாங்களா, எங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்குமா, சும்மா மதத்தை குறை சொல்ல!
//இது எப்படி இருக்கு என்றால் தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரிடம் , தான் வளர்ந்து முடித்ததும் புரியாமல் ஏற்படும் ஒரு சின்ன பிரச்னையால் , பெற்றோர்களே மோசம் என முடிவெடுப்பது போல..//
மத்தத்தை பெற்றோருக்கு சமமாக பாவிக்கீறிர்கள், உங்களுக்கே காமெடியா தெரியல!
என் பெற்றோர்கள் என்னை கேட்டா பெத்தார்கள், நான் அனுமதி வழங்கியதை போல் அவர்களுக்கு தோன்றுவதையெல்லாம் என் மீது திணிக்க!, அவர்களுக்கு இருப்பது போல் எனக்கும் சிந்தனை இருக்கிறது, நானாக தெரிந்து கொள்ள வேண்டும், சரியையும், தவறையும்!
மதம் ஏணியாக பயன்படுதா!?
நான் ஒரு டைப்பான ஆசாமி, எதாவது சொல்லிடக்கூடாதுன்னு ஸ்மைலியோட இந்த கருத்துக்கு பதில் நிறுத்திகிறேன்!
:))
அன்பான நண்பர் திரு பயணங்களும் எண்ணங்களும்,
நீங்கள் கவனிக்க வேண்டியது - உங்களை போன்ற கிருத்துவர்களை பற்றி இங்கே பேசப்படவே இல்லை. பேசவும் அவசியம் இல்லை. உங்களை போன்ற பலரை நான் அறிவேன். ஆதலால் உங்களை மட்டும் என்ன, மதத்தை மாற்றி இந்துமதத்தை தூற்றசொல்லி அதில் ஆத்த்மார்த்த சுகம் காணாத யாராயிருந்தாலும் அவர்களுக்கும் இந்த பதிவிற்கும் சம்மந்தமே இல்லை. ஒரு படி மேலே போய், இயேசு கிறுத்துவையே மிக்க மரியாதையுடன் நினைக்கும் இந்து சமுதாயம், எதனால் இயேசுவின் வழி வந்த பலரை நினைத்து மனம் வருந்துகிறார்கள் என்று நீங்கள் சற்று யோசிக்க வேண்டும்! . ஏனென்றால் அத்தகயவரின் எண்ணங்களும் ஈடுபாடுகளும் இந்து சமுதாயத்தின் சரித்திர வழி வந்த எண்ண கோர்வைகளையும், காலாச்சார மரபுகளையும், எண்ண ஓட்டங்களையும் அடியோடு வெறுத்தொதுக்கி, எந்த விதத்திலும் மேன்மையில்லாத ஒரு இரத்த கரை படிந்த மற்றொரு அந்நிய வழிமுறை ஒன்றை எங்கள் மேல் பரவவிட செய்வதால்! Super imposing a mythical, medevial, retrogade and an imperialistic political ideology, cloaked as religion by claiming that such a one is more superior that the one Hindus follow is a nothing but an exhibition of absolute arrogancy and deluded superiority!
இயேசு கிருத்துவையும் அண்ணல் அம்பேத்க்காரையும் இங்கே சற்று நினைக்க வேண்டியிருக்கிறது. கிருத்துவர்கள் இயேசுவை ஹைஜாக் செய்தது அவர்களின் சுயநலத்திற்காக. அதாவது கிருத்துவ மதம் என்பதே, இயேசு வாழ்ந்ததாக சொல்லப்பட்ட சில காலங்கள் கழிந்தவுடன் கதை கேட்ட சில நல்ல மனிதர்கள் பின்னிய ஒரு வலைதான்! நல்ல விடயங்கள் சிலவையை சொல்ல அவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஐகான் இயேசு என்ற புனித பிம்பம்! அதில் தவறில்லை! ஆனால் அதுவே மெல்லே மெல்ல வளர்ந்து, வளர்க்கப்பட்டு, ஆள் மற்றும் நாடு பிடிக்கும் கொள்கையாக மலர்ந்து விட்டது! அதே போல புரையோடிக்கிடந்த ஜாதி அடக்குமுறைகளை கருத்தால் எதிர்த்து, இந்து மதத்திற்கு எதிராக ஒரு ஆழ்ந்த கருத்தியல் தர்கத்தை முன்வைத்தார் அம்பேத்கர்!
அவரும் தன்னை யாரையும் துதிக்ககூடாது என்பதில் மிக்க கவனமாக செயல்பட்டார்! ஆனால் இன்றோ அம்பேத்காரும் ஏறக்குறைய ஒரு கடவுள். அந்த மதத்தை இப்பொழுது வளர்ப்பதோ, மாயாவதி, திருமா போன்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள்! இயேசு கிருத்துவரால் அபகரிக்கப்பட்டது போல, அம்பேத்காரை வீணர்கள்
அபகரித்து கொண்டனர்! நல்ல வேலை அம்பேத்க்கார் நம் கண்முன்னே வாழ்ந்ததால் அவருக்கு கோவில் இல்லை! இல்லையேல், அதுவும் நடந்திருக்கும்!
பழைய நண்பர் திரு மணிகண்டன் சொல்லுவது போல இந்த விட பிரச்சாரத்தை கண்டு கோளாமல் நாமும் மூடிக்கொண்டு அல்லது சிரித்து விட்டு போகலாம். ஆனால் பாருங்கள், மதவாதிகள், குறிப்பாக ஆபிரகாமிய மதவாதிகளுக்கு சவுக்கெடுக்கவில்லை என்றால் ஆண்டவன் நம்மை செய்ய சொல்லுகிறான் என்ற நினைப்புடன் இன்னமும் ஜரூராக செய்ய ஆரம்பித்து விடுவார்கள்! ஒரு வால்டேரும், ஒரு தாமஸ் பைனும், ஒரு மார்க்கு ட்வைனும் ஒரு இங்கர்சாலும் இதை புரிந்து கொண்டு செயல்பட்டதினால், இன்று இந்த கிருத்துவ மத வெறியர்களின் கொட்ட்டம் ஏறத்தாழ எல்லா கிருத்துவ நாடுகளிலும் ஒடுக்கப்பட்டுவிட்டது! ஆதலால் இந்தியா சீனா போன்ற நாடுகளில் இவர்கள் தங்கள் சேவையை செய்ய புறப்பட்டு விட்டார்கள்!
இங்கே சவுக்கெடுத்த பெரியாரும் அவர்தம் சீடர்களும் சவுக்கை இந்து மதத்தின் மேல் மட்டுமே அடிக்கத்தகுந்ததாக ஆக்கிவிட்டப்படியால், இவர்களும்
பெரியாரின் தாடிக்கு பின்னால் மறைந்து கொண்டு, பெரியார் மதங்கள் வேண்டாம் என்று சொன்னைதை இந்து மதம் மட்டும் வேண்டாம் என்று திரித்து விட்டமையால், இங்கே கேள்வி கேட்ட்க, மறுத்து பேச இந்துக்களின் பிரதிநிதகள் மட்டுமே வரவேண்டியதாகி விட்டது! அதாவது கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், அதை வணகுபவன் முட்டாள் என்று சொன்ன ஒருவரின் சீடர்கள் ஏறக்குறைய எல்லோரும், இந்து மதம் அல்லாத மற்ற மத தீவிரவாதிகளுடன், வெறியர்களுடன் கை கோர்த்துக்கொண்டு மத சார்பு பாட்டு பாடுவது சராசிரி இந்து மக்கள் அனைவரின் பார்வையிலும் விழுந்து விட்டது! திராவிட கழக
கண்மணிகள் இஸ்லாமிய கூட்டங்களில் போய் பல் இளிப்பதும், கழக தலைவர்களும் கண்மணிகளும், ஜோராக கிருத்துவ அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து கிருத்துமஸ் கேக்கு வெட்டி கொண்டாடுவதும் இங்கே மதச்சார்பின்மை என்பதும், செக்குலரிசம் என்பதும், மைனாரிட்டி உரிமை என்பதும், இந்துமதத்தை ஒழித்து கட்டுவது மட்டுமே என்று நிறுவப்பட்டு விட்டது! இந்து கோவிலுக்கு போய் கடவுளை வணங்கினால் அது தேவை இல்லாத வேலை, பிற்போக்கு, மடத்தனம், அதே ஆவி எழுப்பி, நாடகம் போட்டு, கத்து கத்தென்று கத்தி சீக்காளிகளை குணப்படுத்துவதாக வித்தை காட்டுவது முற்போக்கு! தீபாவளி பிற்போக்கு ரமலான், கிருத்துமஸ் முற்போக்கு போன்ற அருமையான பகுத்தறிவு சிந்தனைகளில் தமிழகம் திளைப்பதால், இந்த ஒரு பக்க போலி மதச்சார்பின்மையை தட்டி கேட்க்கும் ஒரே அமைப்புகள் இந்து அம்மைப்புகள் மட்டுமே என்று ஆகிவிட்டது! அவர்கள் கையில் இந்து மக்களை அனுப்பிவிட்ட, அனுப்புகின்ற செம்மையான செயலை செய்கின்றனர் நம்ம ஊரு போலி பகுத்தறிவுகள்!
இப்பதிவி சிறுபிள்ளைதனம் என சொல்லும் பொழுது உங்களுக்குள் ஒரு மேட்டிமைத்தனம் வெளியே எட்டிப்பார்ப்பதை உங்களால் உணர முடிகிறதா!?.//
இது என் பார்வை வால்..
அதற்கான காரணங்களையும் விளக்கமாக சொல்லியுள்ளேன்..
மதத்தில் குறையில்லை அதிகம்.. அதை உப்யோகப்படுத்தும் மனிதர்களிடமே.. இதுக்கு எந்த மதவாதிகளும் விலக்கல்ல..
இதை செஒல்வது மேட்டிமைத்தனம் என்பது உங்கள் பார்வை என்றால் எனக்கொன்றும் ஆட்சேபனையில்லை..:)
மத்தத்தை பெற்றோருக்கு சமமாக பாவிக்கீறிர்கள், உங்களுக்கே காமெடியா தெரியல!
என் பெற்றோர்கள் என்னை கேட்டா பெத்தார்கள், நான் அனுமதி வழங்கியதை போல் அவர்களுக்கு தோன்றுவதையெல்லாம் என் மீது திணிக்க!, அவர்களுக்கு இருப்பது போல் எனக்கும் சிந்தனை இருக்கிறது, நானாக தெரிந்து கொள்ள வேண்டும், சரியையும், தவறையும்!//
இதிலென்ன காமெடி?
அசைவம் உன்ணும் பெற்றோர் அது நல்லது என்று எண்ணியே குழந்தைக்கு தரலாம்..
அதை தவறு என குழந்தை எண்ணுவது அவன் விருப்பம்..
ஆக நல்லதை செய்வதை திணித்தல் என்று எடுப்பது தான் மிகப்பெரிய காமெடியாக எனக்கு படுது வால்...
ஊலகத்தில் எதெல்லாம் பெஸ்ட் என யாராலும் சொல்ல முடியாதே.. எல்ல்லாமே மாறும்..
எனக்கு சிறந்தது என தெரிவதைத்தான் நான் என் குழந்தைக்கு சொல்லித்தர இயலும்.. அது உங்களுக்கு காமெடியாக தெரிவது பற்றி நான் ஏன் ஐயா கவலைப்படணும்?..
சிரிங்களேன் சத்தமாக..:).
ஆலயம் செல்வது நிம்மதி , ஆறுதல், சேவை செய்ய ஒரு வழி என சொல்லித்தருவது சிந்தனை தடைபடும் விஷயமா.. புது தகவல்..:)))))))
நன்னெறி மட்டுமே மதங்கள் சொல்லிக்கொடுத்தால் யாராவது எதாவது சொல்வாங்களா, எங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்குமா, சும்மா மதத்தை குறை சொல்ல!//
நன்னெறிகளே இல்லையென்று சொல்ல முடியுமா?..
நான் மதம்கூறும் நன்னெறிகளை பார்க்கிறேன்.. அதே சமயம் பல்லாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட மூடப்பழக்கவழக்கங்களுக்காகவும் வருந்துகிறேன்..
ஆனால் அதற்காக ஒட்டுமொத்த மதமும் அழிவுக்கு இட்டு செல்வது என்ற முடிவு , மூட்டைப்பூச்சிக்காக வீட்டைக்கொழுத்துவதே...
என் பெற்றோர்கள் என்னை கேட்டா பெத்தார்கள், நான் அனுமதி வழங்கியதை போல் அவர்களுக்கு தோன்றுவதையெல்லாம் என் மீது திணிக்க!//
சரி உங்க குழந்தை வந்து
" அப்பா எல்லாரும் தீபாவளி , கிறுஸ்மஸ் , ரம்ஜான் கொண்டாடுறாங்களே நாம ஏன் கொண்டாடலை" னு கேட்டா ,
உடனே நாத்திகத்தை திணிப்பீர்களா இல்லை குழந்தை போக்கில் எல்லாத்துக்கும் அனுமதிப்பீர்களா..?
அனேகமாக பெற்றோர் தம் குழந்தை ஒரு நல்ல மனிதனாக உருவாக தன்னையும் தன் சுற்றத்தாரையும் நல்வழிப்படுத்திய மதத்தை அறிமுகப்படுத்துவதில் என்ன திணிப்பு இருக்க முடியும்?..
இது திணிப்பு என்றால் , குழந்தைக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொன்றுமே திணிப்புதான்...
என்ன சொல்ல இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியம் தான்!//
இதன் உள்குத்து என்ன வால்..
வெளிப்படையான பதிலை எதிர்ப்பார்க்கிறேன்..
நான் இருக்கும் இடம் என்ன?.. எனக்கான ஆதரவுகள் என்னென்ன..?
நான் தனியாளாய்த்தான் இப்பதில்களை கூறுகின்றேன்..
அதற்கான ஒட்டுமொத்த விமர்சனங்களும் எனக்கு மட்டுமே...
தயவுசெய்து இது போன்ற சொல்லாடல்கள் வேண்டாமே...
இயேசு கிருத்துவரால் அபகரிக்கப்பட்டது போல, அம்பேத்காரை வீணர்கள்
அபகரித்து கொண்டனர்!//
நண்பர் நோ ,
புரிதலுக்கு நன்றி.. அதே சமயம் , நீங்கள் ஏன் வீணார்களை மட்டும் காண்கின்றீர்கள் என்பதுதான் என் கேள்வி..
அதே இயேசு, அம்பேத்கரின் கொள்கைக்காக தன் உடல் வருத்தி சேவை செய்பவர்கள் எத்தனை பேர்.?
இன்று இந்த கிருத்துவ மத வெறியர்களின் கொட்ட்டம் ஏறத்தாழ எல்லா கிருத்துவ நாடுகளிலும் ஒடுக்கப்பட்டுவிட்டது! ஆதலால் இந்தியா சீனா போன்ற நாடுகளில் இவர்கள் தங்கள் சேவையை செய்ய புறப்பட்டு விட்டார்கள்!//
:)) நல்ல கற்பனைங்க.
//இங்கே சவுக்கெடுத்த பெரியாரும் அவர்தம் சீடர்களும் சவுக்கை இந்து மதத்தின் மேல் மட்டுமே அடிக்கத்தகுந்ததாக ஆக்கிவிட்டப்படியால், //
ஏன் இந்த பாரபட்சம் னு சொல்வீங்களா?..
திராவிட கழக
கண்மணிகள் இஸ்லாமிய கூட்டங்களில் போய் பல் இளிப்பதும், கழக தலைவர்களும் கண்மணிகளும், ஜோராக கிருத்துவ அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து கிருத்துமஸ் கேக்கு வெட்டி கொண்டாடுவதும் இங்கே மதச்சார்பின்மை என்பதும், செக்குலரிசம் என்பதும், மைனாரிட்டி உரிமை என்பதும், இந்துமதத்தை ஒழித்து கட்டுவது மட்டுமே என்று நிறுவப்பட்டு விட்டது! இந்து கோவிலுக்கு போய் கடவுளை வணங்கினால் அது தேவை இல்லாத வேலை, பிற்போக்கு, மடத்தனம், அதே ஆவி எழுப்பி, நாடகம் போட்டு, கத்து கத்தென்று கத்தி சீக்காளிகளை குணப்படுத்துவதாக வித்தை காட்டுவது முற்போக்கு! தீபாவளி பிற்போக்கு ரமலான், கிருத்துமஸ் முற்போக்கு போன்ற அருமையான பகுத்தறிவு சிந்தனைகளில் தமிழகம் திளைப்பதால், //
இதை வாசித்தாலே தெரியலையா இது முழுக்க முழுக்க அரசியல் ஓட்டு வியாபாரம் என்று.?
பதினெட்டு வருடங்கள் கிருத்துவ பள்ளி மற்றும் கல்லூரிகள் படித்ததால் அவர்களுடைய பழக்க வழக்கங்களை நிறைய அருகே இருந்து கவனிக்கும் வாய்ப்பு இருந்ததாலும் இங்கே கிருத்துவமதத்தை மட்டுமே முன்னிறுத்தி நான் பேசி இருக்கிறேன்//
நண்பரே 18 வருடங்கள் ஒரு கிறுஸ்துவ இடத்தில் இருக்க முடிந்ததே?..
இந்த 18 வருடத்தில் உங்களை மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தியிருந்தால் , தொந்தரவு செய்திருந்தால் நீங்கள் தொடர்ந்திருப்பீர்களோ?..
ஆனால் ஒரு படம் பார்க்க சென்ற இடத்தில் ஒருவர் சொன்னபோது மட்டும் ஏன் இத்தனை துவேஷம் வந்தது?..உடனடியாக.?
ஆக இதுதான் நான் சொன்ன ஏணி...
இந்த ஒரு பக்க போலி மதச்சார்பின்மையை தட்டி கேட்க்கும் ஒரே அமைப்புகள் இந்து அம்மைப்புகள் மட்டுமே என்று ஆகிவிட்டது! அவர்கள் கையில் இந்து மக்களை அனுப்பிவிட்ட, அனுப்புகின்ற செம்மையான செயலை செய்கின்றனர் நம்ம ஊரு போலி பகுத்தறிவுகள்!//
ஆஹா.. நன்கு புரிந்தது...இது அரசியல்..
ஆனால் நான் பேசுவது அரசியல் அல்ல நண்பரே... பொதுவாக மதம் , அதனில் உள்ள நல்லவை மட்டுமே....
//நல்லதை செய்வதை திணித்தல் என்று எடுப்பது தான் மிகப்பெரிய காமெடியாக எனக்கு படுது வால்...//
பெற்றோருக்கு நல்லது எனப்படுவது எனக்கும் அப்படியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை!
இன்றும் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கிறிஸ்டியானிடி உங்களுக்கு திணிக்கபட்டது தான், நான் ஆத்திகனுமல்ல என சொல்ல துணிந்தது அதன் பிறகு ஏற்பட்ட உங்களது சிந்தனையினால்.
//எனக்கு சிறந்தது என தெரிவதைத்தான் நான் என் குழந்தைக்கு சொல்லித்தர இயலும்.. அது உங்களுக்கு காமெடியாக தெரிவது பற்றி நான் ஏன் ஐயா கவலைப்படணும்?..
சிரிங்களேன் சத்தமாக..:).//
எனக்கு எப்படி தெரியுதுன்னு நீங்க கவலைப்பட வேணாம், நல்லதை சொல்லிதருகிறேன் என்ற பெயரில் உங்கள் குழந்தைகளின் சிந்தனைதிறனை மழுங்கடிக்கீறிர்ர்களே அதற்காக கவலைப்படுங்கள்!
முடிந்தால் சிரியுங்கள் சத்தமாக!
///ஆலயம் செல்வது நிம்மதி , ஆறுதல், சேவை செய்ய ஒரு வழி என சொல்லித்தருவது சிந்தனை தடைபடும் விஷயமா.. புது தகவல்..:))))))) //
உங்களுக்கு இது புது தகவல்! :)
நிம்மதி ஆலயத்தில் கிடைக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிருபிக்கபட்ட உண்மையா!?
எதுக்கு ஆறுதல்!?
சேவை செய்ய ஆலயம் ஏன் போகனும், அங்க தான் ஏழைகள் இருக்காங்களா என்ன!?
//ஒட்டுமொத்த மதமும் அழிவுக்கு இட்டு செல்வது என்ற முடிவு , மூட்டைப்பூச்சிக்காக வீட்டைக்கொழுத்துவதே... //
மதம் நிச்சயம் அழிவுபாதைக்கு தான் இட்டுச்செல்லும்!
நாலஞ்சு நன்னெறி வச்சிகிட்டு ஊரை ஏமாத்தினது போதும், உலகத்துலயே காசு கொடுக்காம கிடைக்கிறது நன்னெறி என்ற அட்வைஸ் மட்டும் தான், அதுக்கு மதமே தேவையில்லை!
மதத்தால் என்ன நன்மை என்று பட்டியலிடுங்கள் ப்ளீஸ்!
பெற்றோருக்கு நல்லது எனப்படுவது எனக்கும் அப்படியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை!
இன்றும் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கிறிஸ்டியானிடி உங்களுக்கு திணிக்கபட்டது தான், நான் ஆத்திகனுமல்ல என சொல்ல துணிந்தது அதன் பிறகு ஏற்பட்ட உங்களது சிந்தனையினால்.//
பார்வையில் வேறுபடுகிறோம்..
திணித்தல் என்றால் வாந்தியாக வெளியே வரும்..
அதை உணவாக போதுமானளவு கொடுத்தால் அது ஜீரணிக்கப்படும்...
உங்கள் கூற்றுபடி கிறிஸ்டியானிட்டி திணிக்கப்பட்டதால் குறையொன்றும் இல்லையே வால்...அதிலுள்ள நல்ல பல விஷயங்களை கற்க முடிந்ததே...
இப்பவும் கடவுளுக்கும் மதத்துக்கும் (நூல்களுக்கும் ) சம்பந்தம் இருக்கணும்னு நான் சொல்லலை...
மத நூல்களை ஒரு நல்வாழ்க்கை கர்ரு தரும் நூலாக ஏன் எடுக்கக்கூடாது..?
ஒருவேளை நான் முழு நாத்திகனானாலுமே ஆலயமோ, மசூதியோ, கோவிலோ செல்வதில் தவறிருப்பதாக எண்ணமாட்டேன்.,.,.
அதே போல் குரான், கீதை படிப்பதையும்...
என் கண்ணோட்டத்தில் இவையெல்லாமே அடிப்படையில் சேவை செய்யும் அல்லது சேவை சொல்லித்தரும் நல்ல இடங்களே.. சக மனிதனை சுதந்திரமாக , தொந்தரவின்றி வாழவிட கற்றுத்தரும் பாடசாலைகளே...
நான் நாத்திகன் என்றாலுமே இதை என் குழந்தைகளுக்கு தருவேன்...
ஏன் பள்ளிக்கு அனுப்புகின்றீர்கள்?.?..
ஏன் அவர்களை நம்புகின்றீர்கள்..? எதன் அடிப்படையில்?..
வரலாற்றை திணிக்க மாட்டார்களா?.. அறிவியலை?...இல்லை அவை மாறாமல் இருக்க போகிறதா?..
அதன்பின்பு மாணவனது சிந்தனை மாறாமலே இருந்தும் விடுகிறதா?..
ஆக அடிப்படையையே பெற்றோரும் ஆசிரியரும் சொல்லிதருகிறார்கள்.. அதன்பின்பு சிந்தனையால் அவரவர் கற்றுக்கொள்ளலாம்...
எனக்கு எப்படி தெரியுதுன்னு நீங்க கவலைப்பட வேணாம், //
அதே தான் இங்கும் வால்...
//நல்லதை சொல்லிதருகிறேன் என்ற பெயரில் உங்கள் குழந்தைகளின் சிந்தனைதிறனை மழுங்கடிக்கீறிர்ர்களே அதற்காக கவலைப்படுங்கள்!
முடிந்தால் சிரியுங்கள் சத்தமாக!//
சரி நீங்கள் சொல்லித்தருவதெல்லாம் நல்லது மட்டுமே என எங்கேயாவது சான்றிதழ் வாங்கி வைத்துள்ளீர்களா வால்?..
//உங்க குழந்தை வந்து
" அப்பா எல்லாரும் தீபாவளி , கிறுஸ்மஸ் , ரம்ஜான் கொண்டாடுறாங்களே நாம ஏன் கொண்டாடலை" னு கேட்டா , //
யாராவது கருமாதி கொண்டாடினா என்ன பதில் நீங்க சொல்விங்களோ அதையே தான் நானும் சொல்வேன்!
நிம்மதி ஆலயத்தில் கிடைக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிருபிக்கபட்ட உண்மையா!?//
என் அப்பாவை எனக்கு அம்மா சொல்லித்தான் தெரியும் வால்.. அறிவியல் பூர்வமாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை..
எதுக்கு ஆறுதல்!?//
எதுக்கு மகிழ்ச்சி?..
சேவை செய்ய ஆலயம் ஏன் போகனும், அங்க தான் ஏழைகள் இருக்காங்களா என்ன!?//
பள்ளிக்கு ஏன் அனுப்பணும் குழந்தைகளை..அங்குமட்டும்தான் படிக்க முடியுமா?...ஏன் வீட்டிலேயே சொல்ல்லித்தர முடியாதா?.. சொல்லித்தருபவரும் உண்டுதானே?...ஆனாஅல்லும் ஏன் அனுப்புறோம்..?
//அனேகமாக பெற்றோர் தம் குழந்தை ஒரு நல்ல மனிதனாக உருவாக தன்னையும் தன் சுற்றத்தாரையும் நல்வழிப்படுத்திய மதத்தை அறிமுகப்படுத்துவதில் என்ன திணிப்பு இருக்க முடியும்?..
இது திணிப்பு என்றால் , குழந்தைக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொன்றுமே திணிப்புதான்...//
எது திணிப்பு!?
1.
இருப்பதை எல்லாம் சொல்லிவிட்டு, எதில் எது சிறந்ததாக படுகிறதோ அதை எடுத்துக்கொள்!
2.
உலகம் ஆண்டவராலே படைக்கப்பட்டது, அவரை வணங்கவில்லை என்றால் நரகத்தில் வறுத்தெடுப்பார்கள்.
எதாவது வித்தியாசம் தெரிஞ்ச நீங்க சாந்தி, இல்லைனா மகாத்மா காந்தி!
யாராவது கருமாதி கொண்டாடினா என்ன பதில் நீங்க சொல்விங்களோ அதையே தான் நானும் சொல்வேன்!//
மிக அருமையான பதில்... ஆக குழந்தையிடம் திணிக்கிறீர்கள் உங்கள் கோபத்தை என எடுத்துக்கொள்ளவா?...:)
மதம் நிச்சயம் அழிவுபாதைக்கு தான் இட்டுச்செல்லும்!//
இது உங்கள் பார்வை.. ஆனால் ஆணித்தரமாக மறுக்கிறேன்.. ஏனெனில் நான் பார்த்து வளர்ந்தவர்கள் அப்படி.. அவர்கள் மதத்தால் நிம்மதியாகவே தங்கள் வாழ்நாளை மிக உபயோகமாக கழித்துள்ளனர்...
//என்ன சொல்ல இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியம் தான்!//
இதன் உள்குத்து என்ன வால்..//
உங்களுடயது வெளிப்படையான பதில் தான்! ஆனால் அதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தது நியாபகம் வந்து விட்டது!.
நாலஞ்சு நன்னெறி வச்சிகிட்டு ஊரை ஏமாத்தினது போதும், உலகத்துலயே காசு கொடுக்காம கிடைக்கிறது நன்னெறி என்ற அட்வைஸ் மட்டும் தான், அதுக்கு மதமே தேவையில்லை!
மதத்தால் என்ன நன்மை என்று பட்டியலிடுங்கள் ப்ளீஸ்!//
இலவசமா விளம்பரம் தரவேண்டி வெச்சுட்டீங்களே என் பதிவுக்கு..:))
இதோ
மதமும் மனித உறவுகளும்..3 பாகம்
http://punnagaithesam.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
//நண்பரே 18 வருடங்கள் ஒரு கிறுஸ்துவ இடத்தில் இருக்க முடிந்ததே?..
இந்த 18 வருடத்தில் உங்களை மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தியிருந்தால் , தொந்தரவு செய்திருந்தால் நீங்கள் தொடர்ந்திருப்பீர்களோ?..
ஆனால் ஒரு படம் பார்க்க சென்ற இடத்தில் ஒருவர் சொன்னபோது மட்டும் ஏன் இத்தனை துவேஷம் வந்தது?..உடனடியாக.?
ஆக இதுதான் நான் சொன்ன ஏணி... //
18 வருசம் பொறுத்துகிட்டு இருந்தில, இப்ப மட்டும் எங்கிருந்து பொத்துகிட்டு வருதுன்னு சிம்பிளா கேட்டிருக்கலாம்!
ரொம்ப நேரமா ஏணியை தேடுறிங்களே, உங்க வீட்டு ஏணி காணோமா!?
//நான் பேசுவது அரசியல் அல்ல நண்பரே... பொதுவாக மதம் , அதனில் உள்ள நல்லவை மட்டுமே.... //
மறைமுகமாக அரசியலில் நல்லதே இல்லை என்ற கருத்தை முன்வைக்கிறீர்கள் சாந்தி!
மதம், அரசியல் இல்லை என்ற கருத்தை முன் வைத்தால் உங்களுக்கு பொருள் முதவாதத்தை பற்றி அரிச்சுவடியிலிருந்து பாடம் எடுக்கனும்!
சிம்பிளா சொல்றேன்!
கடவுள்=தலைவன்
மதம்=கட்சி
பக்தர்கள்=தொண்டர்கள்
நீங்க பேசுறதும் அரசியல் தான்னு இப்ப புரியுதா!?
உங்களுடயது வெளிப்படையான பதில் தான்! //
நன்றி
ஆனால் அதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தது நியாபகம் வந்து விட்டது!.//
எனக்கு சுத்தமா புரியலை வால்..
ஏன் இதற்குமுன்பு ஓரினசேர்க்கை பற்றி கூட மிக ஆரோக்கியமான கருத்துகள் பகிர்ந்தோமே.?.
-----------
சரி என் பக்கம் எனக்கேதும் விகர்ப்பமில்லை என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....
கருத்துகளுக்கே முன்னுரிமை..எப்போதும்..
//திணித்தல் என்றால் வாந்தியாக வெளியே வரும்..
அதை உணவாக போதுமானளவு கொடுத்தால் அது ஜீரணிக்கப்படும்...//
ப்ளீஸ், உதாரணம் சொல்லும்பொழுது கொஞ்சம் புரிஞ்சிகிட்டு சொல்லுங்க!
திணித்தல் வாந்தியை தரும்கிறது உங்களுக்கு இருக்கலாம்!
போதுமானளவு உணவை போலவே விசத்தையும் ஊட்டி விட்டு, நான் திணிக்கவில்லை, ஊட்டிவிடுகிறேன் என்கிறீர்கள், உங்களுக்கு சரியென்று பட்டவை உங்கள் குழந்தைகளுக்கும் பட்டே ஆகவேண்டும் என்ற ஈகோ சிந்தனையை மறைக்கிறது!
உங்கள் மனசாட்சியை கேளுங்கள்
சொல்லிகொடுக்கப்பட்டதால் நீங்கள் கற்றது அதிகமா!?
அனுபவத்தால் நீங்கள் கற்றது அதிகமா!?
மேக் யுவர் ஓன் சாய்ஸ்!
//நீங்கள் சொல்லித்தருவதெல்லாம் நல்லது மட்டுமே என எங்கேயாவது சான்றிதழ் வாங்கி வைத்துள்ளீர்களா வால்?.. //
நீங்களாகவே பகுத்தறிந்து பாருங்கள் என்றும், கருத்திற்கான எதிர்வாதத்தையும் தான் முன்வைக்கிறேன்!
மதத்தில் நல்லவைகளே இல்லை என்று நான் சொல்லாத போது, நான் சொல்பவை மட்டுமே சரி என்று நான் வாதிடுவதாக உருவகப்படுத்துவது சரியல்ல!
விவாதங்கள் தெளிவுறவே அன்றி உறுதி செய்ய அல்ல!
மறைமுகமாக அரசியலில் நல்லதே இல்லை என்ற கருத்தை முன்வைக்கிறீர்கள் சாந்தி!
மதம், அரசியல் இல்லை என்ற கருத்தை முன் வைத்தால் உங்களுக்கு பொருள் முதவாதத்தை பற்றி அரிச்சுவடியிலிருந்து பாடம் எடுக்கனும்!
சிம்பிளா சொல்றேன்!
கடவுள்=தலைவன்
மதம்=கட்சி
பக்தர்கள்=தொண்டர்கள்
நீங்க பேசுறதும் அரசியல் தான்னு இப்ப புரியுதா!?//
Poli in Greek is for many, Tics are blood sucking insects :)
மதத்தில் எப்படி நல்லது அதிகமாகவும் கெட்டது குறைவாகவும் காண்கிறேனோ அதற்க்கு எதிராக அரசியலில் நல்லது குறைவாகவும் கெட்டது அதிகமாகவும் காண்கிறேன்..
கடவுள்=தலைவன்
மதம்=கட்சி
பக்தர்கள்=தொண்டர்கள்
உங்க உதாரணம் படி பார்த்தாலும் இங்கு பல தலைவனில்லை, பல கட்சியில்லை, பல தொண்டர்கள் இல்லை.. நான் சொல்வது மதம் என்ற ஒன்று மட்டுமே.. கிறுஸ்துவ, இந்து, இஸ்லாமிய மதமல்லவே ( தனி கட்சியல்லவே ) .
ஆக இதுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை...
-------------------
இருப்பினும் உரையாடலில் உங்க கேள்வி மூலம் கற்கும்படி பலவிதமான பார்வைகள் சந்தேகங்கள் தருவது நன்று வால்..நன்றியும்.
விவாதங்கள் தெளிவுறவே அன்றி உறுதி செய்ய அல்ல!//
மிக சரி..& ஏற்புடையதும்..
சொல்லிகொடுக்கப்பட்டதால் நீங்கள் கற்றது அதிகமா!?
அனுபவத்தால் நீங்கள் கற்றது அதிகமா!?
மேக் யுவர் ஓன் சாய்ஸ்!//
எதற்குமே அடிப்படை என்று ஒன்று வேணுமா இல்லையா?..
சொல்லிக்கொடுப்பவரும் அனுபவித்த்தை சொல்லித்தரலாம்.. அதேபோல அனுபவமும் சொல்லிட்த்தான் கொடுக்கின்றன..
எப்படி?..
அடுத்தவருக்கு நேரும் அனுபவம் நமக்கு சொல்லித்தான் தருகின்றது நாம் அனுபவிக்காமலேயே..
ஆக எல்லாவற்றையுமே அனுபவித்துத்தான் கற்கணும்னா ஆயுசு போதாது..
தொலைக்காட்சியோ, செய்தித்தாள்களோ ஏன் பதிவுகளும் கருத்தாடல்களும் சொல்லித்தான் தருகின்றன...தவிர்க்க முடியுதா?..
இன்று நாம் ஏற்பது நாளை பொய் என ஆகலாமே...
போதுமானளவு உணவை போலவே விசத்தையும் ஊட்டி விட்டு, நான் திணிக்கவில்லை, ஊட்டிவிடுகிறேன் என்கிறீர்கள், உங்களுக்கு சரியென்று பட்டவை உங்கள் குழந்தைகளுக்கும் பட்டே ஆகவேண்டும் என்ற ஈகோ சிந்தனையை மறைக்கிறது!//
பால் குடித்தால் நல்லதுன்னு சொன்னாங்க குடுத்தோம்..
அதிகமா கொடுத்தால் கெட்டதுன்னாங்க குறைத்தோம்..
அதே போல் முட்டையும்.. ஈப்படி ஏகத்துக்கும்..
ஆனால் ஒருபோதும் விஷத்தை விஷமென தெரிந்து கொடுப்பதில்லை...
அதான் சொன்னேனே நான் நாத்திகன் என்ராலுமே ஆலயம் கூட்டி செல்வேன்.. ஏனென்றால் என் தேவை அங்கே கிடைக்கின்றது...
சரி என் தேவைக்கான ( அன்பு, சேவை, சமாதானம் ,ஆறுதல் , மகிழ்ச்சி , பகிர்தல், உதவிகள் , சம உரிமை ) மாற்று இடம் நாத்திகரான நீங்கள் சொல்லுங்களேன்... நானும் அங்கே வருகிறேன்...
//என் அப்பாவை எனக்கு அம்மா சொல்லித்தான் தெரியும் வால்.. அறிவியல் பூர்வமாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை.. //
அம்மா சொல்லாட்டியும் அறிவியலால் கண்டுபிடிக்க முடியும் தெரியுமா!?
அறிவியல் என்ன பொழுதுபோகாத மூடர்களின் விளையாட்டுன்னு நினைச்சிங்களா!?
//பள்ளிக்கு ஏன் அனுப்பணும் குழந்தைகளை..அங்குமட்டும்தான் படிக்க முடியுமா?...ஏன் வீட்டிலேயே சொல்ல்லித்தர முடியாதா?.. சொல்லித்தருபவரும் உண்டுதானே?...ஆனாஅல்லும் ஏன் அனுப்புறோம்..? //
இந்திய பாடதிட்டத்தை எதிர்ப்பவன் என்ற முறையில் பள்ளி என்பதே தேவையற்ற ஒன்று தான்!, கொழுப்பெடுத்த முதலாளிகள் ஆரம்பித்து வைத்ததால், அவர்கள் கொழுப்பை கரைக்க பள்ளி இன்னும் கொஞ்சநாள் தேவை!
18 வருசம் பொறுத்துகிட்டு இருந்தில, இப்ப மட்டும் எங்கிருந்து பொத்துகிட்டு வருதுன்னு சிம்பிளா கேட்டிருக்கலாம்!//
நம்பள்கி வரதில்லே அப்டிலாம்..:)
//ரொம்ப நேரமா ஏணியை தேடுறிங்களே, உங்க வீட்டு ஏணி காணோமா!?//
:)))))
ஆமாங்க தேடுங்க கண்டடைவீர்கள்..:)
யாராவது கருமாதி கொண்டாடினா என்ன பதில் நீங்க சொல்விங்களோ அதையே தான் நானும் சொல்வேன்!//
மிக அருமையான பதில்... ஆக குழந்தையிடம் திணிக்கிறீர்கள் உங்கள் கோபத்தை என எடுத்துக்கொள்ளவா?...:) //
இனிமே மேல் வரவே மாட்டார்கள் என்பவர்களுக்கு வெட்டியா சடங்கு பன்றாங்கல்ல, அதே போல் தான் இந்த மத நிகழ்வுகளும்னு சொல்லுவேன்!
இதில் எங்கிருந்து கோவம் வந்தது!
//மதம் நிச்சயம் அழிவுபாதைக்கு தான் இட்டுச்செல்லும்!//
இது உங்கள் பார்வை.. ஆனால் ஆணித்தரமாக மறுக்கிறேன்.. ஏனெனில் நான் பார்த்து வளர்ந்தவர்கள் அப்படி.. அவர்கள் மதத்தால் நிம்மதியாகவே தங்கள் வாழ்நாளை மிக உபயோகமாக கழித்துள்ளனர்...//
உபயோகமாக!? :)
//கடவுள்=தலைவன்
மதம்=கட்சி
பக்தர்கள்=தொண்டர்கள்
உங்க உதாரணம் படி பார்த்தாலும் இங்கு பல தலைவனில்லை, பல கட்சியில்லை, பல தொண்டர்கள் இல்லை.. நான் சொல்வது மதம் என்ற ஒன்று மட்டுமே.. கிறுஸ்துவ, இந்து, இஸ்லாமிய மதமல்லவே ( தனி கட்சியல்லவே ) .
ஆக இதுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை.//
உள்குத்து பிரிவுகள் எல்லாம் மறந்துட்டிங்க போல!
திராவிட கட்சிகளை விட அதிக பிரிவுகள் கிறிஸ்துவத்தில் உண்டு!
மதத்தலைவன் இங்கே கட்சி பிரதிநிதியாக செயல்படுகிறான், சந்தேகமில்லாமல் மதம் என்பதும் அரசியல் தான்!
அம்மா சொல்லாட்டியும் அறிவியலால் கண்டுபிடிக்க முடியும் தெரியுமா!?
அறிவியல் என்ன பொழுதுபோகாத மூடர்களின் விளையாட்டுன்னு நினைச்சிங்களா!?//
நிச்சயம் இல்லை.. ஆனால் ஒவ்வொரு முறை உண்ணும்போது இதில் புரோட்டீன் எவ்வளவு கார்ப்ஹைடிரேட், ஃபேட், இரும்புச்சத்து எவ்வளாவுன்னு கணக்கிட்டு உண்ண வைக்குமளவுக்கு அறிவியலோடு வாழ்வதில்லை...
கோவிலுக்கு சென்றால் ஆறுதல் என்று எப்படி நிரூபிக்க ?..
வேணுமின்னா சில ச்டாடிஸ்டிக்ஸ் கூகுளில் தேடிப்போட முடியும் என்னால்...
ஆனால் இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்..
ஏன் சினிமாவுக்கோ, கடற்கரைக்கோ , திருவிழாக்களுக்கோ செல்கிறோம்?.. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை எந்த அளவுகோல் கொண்டு அளப்பது?..
//இருப்பினும் உரையாடலில் உங்க கேள்வி மூலம் கற்கும்படி பலவிதமான பார்வைகள் சந்தேகங்கள் தருவது நன்று வால்..நன்றியும். //
இப்படி உசுபேத்தி உசுபேத்தி தான் ரனகளமா திரியிறேன்! :)
//இன்று நாம் ஏற்பது நாளை பொய் என ஆகலாமே...//
மிகச்சரி
நான் சொல்வது அந்த பொய்யை பொய் என்று ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் பற்றி!
மதத்தை விட மனிதம் முக்கியம் என்பது பற்றி!
//சரி என் தேவைக்கான ( அன்பு, சேவை, சமாதானம் ,ஆறுதல் , மகிழ்ச்சி , பகிர்தல், உதவிகள் , சம உரிமை ) மாற்று இடம் நாத்திகரான நீங்கள் சொல்லுங்களேன்... நானும் அங்கே வருகிறேன்... //
மனிதம் என்று வந்து விட்டால் அனைவரும் நம் உறவினர்கள் தான், அனைவரிடமும் நட்பு பாராட்டுங்கள்!
இருக்கும் இடத்திலேயே
அன்பு, சேவை, சமாதானம் ,ஆறுதல் , மகிழ்ச்சி , பகிர்தல், உதவிகள் , சம உரிமை அனைத்தும் கிடைக்கும்!
பகுத்தறிவுவாதி என்பதை விட கொஞ்சம் சிறுசா இருக்குன்னு நாத்திகன்னு சொன்னாங்க, இப்ப நாத்திகமதம்னு சொல்லிட்டாங்க, நீங்க அவுங்களுக்கு தனிக்கோவில் இருக்கான்னு கேக்குற மாதிரி இருக்கு!
:)
உள்குத்து பிரிவுகள் எல்லாம் மறந்துட்டிங்க போல!
திராவிட கட்சிகளை விட அதிக பிரிவுகள் கிறிஸ்துவத்தில் உண்டு!
மதத்தலைவன் இங்கே கட்சி பிரதிநிதியாக செயல்படுகிறான், சந்தேகமில்லாமல் மதம் என்பதும் அரசியல் தான்!///
அது அவரவர் பார்வை..
மதம் சிலருக்கு தொழில்.. சிலருக்கு அரசியல், சிலருக்கு பொழுதுபோக்கு.. இவர்கள்தான் நீங்கள் மேலே சொன்ன கட்சி பாகுபாடுடையவர்கள்..
--
ஆனால் பலருக்கு வாழ்வின் நம்பிக்கை..இவர்களுக்கு எல்லா மதமும் கடவுளும் ஒன்றே...இவற்றிலுள்ள நல்லவை மட்டுமே எடுத்துக்கொள்வர்...
அந்த சிலருக்காக பலரை ஏன் பழிக்கணும்?..
//இதன் (மதங்களின்) அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?//
ரொம்பவே யோசிக்கிறேன். இதுவரை பதில் கிடைக்கவில்லை.......
//சினிமாவுக்கோ, கடற்கரைக்கோ , திருவிழாக்களுக்கோ செல்கிறோம்?.. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை எந்த அளவுகோல் கொண்டு அளப்பது?.. //
சுயபரிசோதனையாக செய்து பாருங்கள்!
ஒரு இந்து மசூதிக்கு சென்றால் அவனுக்கு மனநிம்மதி கிடைக்குமா!?
ஒரு கிற்ஸ்தவனோ, முஸ்லீமோ கோவிலுக்கு சென்றால் மனநிம்மதி கிடைக்குமா!?
மனநிம்மதி கோவிலில் இருக்கா இல்லை உங்கள் மனதில் இருக்கா!?
//பலருக்கு வாழ்வின் நம்பிக்கை..இவர்களுக்கு எல்லா மதமும் கடவுளும் ஒன்றே...இவற்றிலுள்ள நல்லவை மட்டுமே எடுத்துக்கொள்வர்...
அந்த சிலருக்காக பலரை ஏன் பழிக்கணும்?..//
கிணற்றில் இருக்கும் தவளைக்கு அந்த கிணறு தான் உலகம், சொல்லலாம் வெளியே ஒரு உலகம் இருக்குன்னு, சிந்திக்க மாட்டேன்னு சொல்றவங்களை பழிக்க ஒன்னுமில்லை, அப்படி என்னத்த தான் அந்த கிணற்றில் கண்டீர்கள் என்று அறியவே விவாதம்!
மனிதம் என்று வந்து விட்டால் அனைவரும் நம் உறவினர்கள் தான், அனைவரிடமும் நட்பு பாராட்டுங்கள்!
இருக்கும் இடத்திலேயே
அன்பு, சேவை, சமாதானம் ,ஆறுதல் , மகிழ்ச்சி , பகிர்தல், உதவிகள் , சம உரிமை அனைத்தும் கிடைக்கும்!//
காமெடி பண்ணாதீங்க...:)
தனிமனித குரலுக்கான மதிப்பு உண்டா ?..
செய்து பார்த்து தோல்வி கண்டவர்கள் நாங்கள்...:).. அன்பு செலுத்தினால் வம்புதான் வரும் ..
எல்லாம் அதனதன் வேவ்லெந்த், ஃப்ரீக்வென்ஸி வேணும் வால்.. இதற்கு மதம் என்ற குழுமம் பயன்பட்டால் தப்பில்லை...இங்கு வம்பு ஏதும் வருவதில்லை..
ஏன் கடவுள் மேல் உள்ள பயமாக இருக்கக்கூடும்..
இருந்துவிட்டு போகட்டுமே... பயத்தால் நல்ல விஷயம் நடக்குன்னா நடக்கட்டுமே...
மதத்தில் நல்லவைகளே இல்லை என்று நான் சொல்லாத போது, நான் சொல்பவை மட்டுமே சரி என்று நான் வாதிடுவதாக உருவகப்படுத்துவது சரியல்ல!
மதம் நிச்சயம் அழிவுபாதைக்கு தான் இட்டுச்செல்லும்//
இரண்டுக்கும் முரணாக தோன்றுதே வால்..
//செய்து பார்த்து தோல்வி கண்டவர்கள் நாங்கள்...:).. அன்பு செலுத்தினால் வம்புதான் வரும் ..//
என்ன திரும்ப கிடைக்கும்னு எதிர்பார்த்துகிட்டு பண்ணா வம்பு மட்டுமல்ல, கம்பு கூட வரும்!
என் சாதிக்காரன், என் மதத்துகாரன் எனும் பொழுது இல்லாத எதிர்பார்ப்பு இங்கே தனிமனித குரலாக ஒலிக்கிறது!
தனியா பதிவே போடலாம் போலயே!
மிகச்சரி
நான் சொல்வது அந்த பொய்யை பொய் என்று ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் பற்றி!
மதத்தை விட மனிதம் முக்கியம் என்பது பற்றி!//
மாற்றுக்கருத்தே இல்லை... மனிதம் முக்கியம்.. அந்த மனிதத்தை தக்க வைப்பதில் மதத்துக்கு மிகப்பெரிய பங்கு இருந்தே வருது என்பதுதான் என் வாதம்...
//பயத்தால் நல்ல விஷயம் நடக்குன்னா நடக்கட்டுமே...//
உலகின் சமநிலையை முதலில் உணருங்கள்!, நீங்கள் வாங்கவில்லை என்றால் கடைக்காரன் ரொட்டியை குப்பையில் போடுவதில்லை, அதை வேறு ஒருவருக்கு விற்பான்!, நல்லது என்பது வரையறை, நம்மை சுற்றியுள்ள சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், அடுத்தவர்ஃஐ தொந்தரவு செய்யாமல் இருப்பதும் சமூகத்திற்கு செய்யும் நன்மை தான்!
இந்திய பாடதிட்டத்தை எதிர்ப்பவன் என்ற முறையில் பள்ளி என்பதே தேவையற்ற ஒன்று தான்!, கொழுப்பெடுத்த முதலாளிகள் ஆரம்பித்து வைத்ததால், அவர்கள் கொழுப்பை கரைக்க பள்ளி இன்னும் கொஞ்சநாள் தேவை!//
:) சரி
மதத்தில் நல்லவைகளே இல்லை என்று நான் சொல்லாத போது, நான் சொல்பவை மட்டுமே சரி என்று நான் வாதிடுவதாக உருவகப்படுத்துவது சரியல்ல!
மதம் நிச்சயம் அழிவுபாதைக்கு தான் இட்டுச்செல்லும்//
இரண்டுக்கும் முரணாக தோன்றுதே வால்..//
மதத்தில் உள்ள நல்லவை விசத்தில் உள்ள இனிப்பு சுவை!, அந்த இனிப்பு சுவைக்காக விசத்தை எடுத்துக்கனுமா
நான் சொல்லும் போதே இந்த கேள்வியை கேட்பிங்கன்னு நினைச்சேன்!
இனிமே மேல் வரவே மாட்டார்கள் என்பவர்களுக்கு வெட்டியா சடங்கு பன்றாங்கல்ல, அதே போல் தான் இந்த மத நிகழ்வுகளும்னு சொல்லுவேன்!
இதில் எங்கிருந்து கோவம் வந்தது!//
:)
இப்பதிலை தெளிவா முதல்லே சொல்லிருந்தா " கருமாதி" என்ற வார்த்தையை வைட்த்து கோபமென தீர்மானித்திருக்க மாட்டேன்,..
//மனிதத்தை தக்க வைப்பதில் மதத்துக்கு மிகப்பெரிய பங்கு இருந்தே வருது என்பதுதான் என் வாதம்..//
மதமும் அரசியலும் ஒன்று என்ற கோணத்தில் சிந்தியுங்கள்!
இந்திய மட்டும் அல்ல உலகில் உள்ள அனைத்து அரசியல் சட்டங்களும் மனிதனின் நலனுக்காக அவனால் உருவாக்கப்பட்டது தான், அவைகள் தேவையென்றால் அனைவரின்
(பெரும்பான்மை)ஒப்புதலின் பேரில் மாற்றம் செய்ய முடிகிறது!
எங்கே பைபிளில் ஒரு வசனத்தையோ, குரானில் ஒரு வசனத்தையோ மாற்றி அமையுங்களேன்!.
இனிக்குது பார் என்று விசத்தை கொடுக்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள் மதவாதிகள், சிந்திக்க தெரிந்த நாமும் அதற்கு துணைபோகலாமா!?
யாராவது வண்டியை கொஞ்சம் டேக் ஓவர் பண்ணிகிறிங்களா, உணவகத்தில் லஞ்ச் ஆரம்பிக்கபோவுது, நான் மாலை வரை பிஸியா இருப்பேன்!
மீண்டும் உரையாடலாம்!
சுயபரிசோதனையாக செய்து பாருங்கள்!
ஒரு இந்து மசூதிக்கு சென்றால் அவனுக்கு மனநிம்மதி கிடைக்குமா!?
ஒரு கிற்ஸ்தவனோ, முஸ்லீமோ கோவிலுக்கு சென்றால் மனநிம்மதி கிடைக்குமா!?
மனநிம்மதி கோவிலில் இருக்கா இல்லை உங்கள் மனதில் இருக்கா!?//
ஒரு இந்து மசூதிக்கு சென்றால் அவனுக்கு மனநிம்மதி கண்டிப்பாக கிடைக்கும்...அவன் மனநிம்ம்மதி மட்டுமே வேண்டி செல்வானாயின்..
குற்றம் கண்டுபிடிக்கும் எண்ணத்தில் செல்வானாயின் இருக்கும் நிம்மதியையும் தொலைப்பான்...
ஆலயமோ, கோவிலோ, மசூதியோ ஒரு அமைதியை தரக்கூடிய இடமாகத்தான் ( ஐகான் ) இதுவரை விளங்குது...
//ஆலயமோ, கோவிலோ, மசூதியோ ஒரு அமைதியை தரக்கூடிய இடமாகத்தான் ( ஐகான் ) இதுவரை விளங்குது.//
அவைகள் அமைதி தரக்கூடிய இடமாக உங்கள் மனம் நம்புது!
விளங்குது என்றால் பாரபட்சமின்றி அனைவருக்கும் தரனும், எனக்கு தரலைன்னா அது ஓரவஞ்சனை பன்னுதுன்னு தானே அர்த்தம்!
திரும்பவும் சொல்லுங்க, அமைதி மனதில் இருக்கா, ஆலயத்தில் இருக்கா!?
எது திணிப்பு!?
1.
இருப்பதை எல்லாம் சொல்லிவிட்டு, எதில் எது சிறந்ததாக படுகிறதோ அதை எடுத்துக்கொள்!
2.
உலகம் ஆண்டவராலே படைக்கப்பட்டது, அவரை வணங்கவில்லை என்றால் நரகத்தில் வறுத்தெடுப்பார்கள்.
எதாவது வித்தியாசம் தெரிஞ்ச நீங்க சாந்தி, இல்லைனா மகாத்மா காந்தி! //
ஒழுங்கா சாப்பிடு இல்லேன்னா பூச்சாண்டிகிட்ட பிடிச்சு கொடுப்பேன் மாதிரி பயமறுத்தாத தாய்மார்கள் எத்தனை பேர் ?..
ஆனால் வளர்ந்த பின்பு அவன் பூச்சாண்டிக்காக உண்கிறானா இல்லை விபரம் தெரிந்து உண்கிறானா ?..
உணவு ஒன்றேதான்..
தாயின் நோக்கம் நன்றேதான்..
வளர்ந்தபின் தாயின் பொய்கள் செல்லுபடியாகுமா?..
இன்றும் என்னை என் பெற்றோரா ஆலயம் செல்ல சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்?... /பயமுறுத்துகின்றனர்..
நானே என் குழந்தைக்கு கடவுளை காட்டி பயம்காட்டிய நாட்களுண்டு.. ஏன் சேட்டை அதிகமாகும்போது...
உடனே குழந்தை கடவுளுக்கு பயந்து கட்டுப்படுகிறார்.. மனிதனுக்கு பயமில்லாத குழந்தை கடவுளுக்கு பயப்பட செய்து வளர்ப்பது நன்னெறிகளை புகுத்த ஒரு வழி அவ்வளவே... வளர்ந்த பின் செல்லுபடியாகாது என்பதும் நம் அனைவருக்கும் தெரியும்...
நாங்க ஆலயம் செல்லும்போதெல்லாம் எங்க நாய்க்குட்டி கூட பின்னால் வரும்.. ஆலய வாசலில் உட்கார்ந்திருக்கும்..
அதற்காக திணிக்கிறோம் என அர்த்தமா?..
நாங்க செய்வதை குழந்தைகள் செய்கின்றது.. பார்த்து வளருது..
அவைகள் அமைதி தரக்கூடிய இடமாக உங்கள் மனம் நம்புது!
விளங்குது என்றால் பாரபட்சமின்றி அனைவருக்கும் தரனும், எனக்கு தரலைன்னா அது ஓரவஞ்சனை பன்னுதுன்னு தானே அர்த்தம்!//
:)) சிலருக்கு டாஸ்மாக் தான் அமைதி தருதாம் ஆனா எனக்கில்லையே என்பது போல் சொன்னா எப்படிங்க..?
திரும்பவும் சொல்லுங்க, அமைதி மனதில் இருக்கா, ஆலயத்தில் இருக்கா!?//
ஒரு குடும்பத்தில் சோகம் நடக்குது மன அமைதியின்ற்ரி தவிக்கின்றனர் குடும்பத்தினர்..
மருத்துவர் சொல்கிறார் கொஞ்ச நாள் சுற்ருலா சென்று வாருங்கள் என்று..
அவர்கள் மன அமைதி , மனதிலா அல்லது சுற்றுலா செல்லும் இடங்களிலா?...
மதத்தில் உள்ள நல்லவை விசத்தில் உள்ள இனிப்பு சுவை!, அந்த இனிப்பு சுவைக்காக விசத்தை எடுத்துக்கனுமா//
பாலும் பாலில் மிதக்கும் ஏடும் ( தூசி) கலந்ததே மதம் எம் பார்வையில்..
ஏட்டோடு குடித்தார்கள்.. இன்றும் குடிக்கிறார்கள்..
ஏட்டை விலக்கியும் குடிக்கலாம்..
அந்த தூசிகள் அதிகமானால் ஆபத்தை விளைவிக்கலாம் என்பதும் உண்மை..
அவற்றைத்தான் எளிதாக விலக்கணுமே தவிர பாலை அல்ல...
தூசி- மூடப்பழக்கம்.
எங்கே பைபிளில் ஒரு வசனத்தையோ, குரானில் ஒரு வசனத்தையோ மாற்றி அமையுங்களேன்!.//
குரான் பற்றி தெரியவில்லை..
ஆனால் பைபிள் படியெல்லாம் நடக்க முடியாது என்ப்பது தெரிந்தே பேப்பல் ( போப் ) விதிகள் அவ்வ்வப்போது மாற்றம் கொண்டு வருவதுண்டு...
உதாரனமாய் ஆலயத்தில் பெண்களின் ( கன்னியாஸ்திரிகள் )பங்கு, கருச்சிதைவு இப்படி...
யாராவது வண்டியை கொஞ்சம் டேக் ஓவர் பண்ணிகிறிங்களா, உணவகத்தில் லஞ்ச் ஆரம்பிக்கபோவுது, நான் மாலை வரை பிஸியா இருப்பேன்!
மீண்டும் உரையாடலாம்! //
நல்லது சென்று வாருங்கள்...
தொழிலுக்கே முதன்மை...
ஆரோக்கியமான கேள்வி பதிலுக்கும், நேரத்துக்கும் நன்றி வால்...
மதம் என்பது அன்பை போதிக்கவும். அறநெறி, ஒழுக்கத்தையும் கடைபிடிப்பதற்கு மனிதனால் ஏற்படுத்தபட்ட நம்பிக்கை.
இந்த மத த்தில் இருந்தால் நரகம், அந்த மத த்தில் இருந்தால் சொர்க்கம் என்று சொல்வதெல்லாம் அவர்களின் அறியாமையே
சில ’ஆமாம்’களும் சில ‘இல்லை’களும் :
//ஒரு கிற்ஸ்தவனோ, முஸ்லீமோ கோவிலுக்கு சென்றால் மனநிம்மதி கிடைக்குமா!?// - இல்லை. (கிடைக்காது)
//ஒரு இந்து மசூதிக்கு சென்றால் அவனுக்கு மனநிம்மதி கிடைக்குமா!?// -ஆமாம். ( ஒரு இந்துவிற்கு இது கிடைக்கும் வாய்ப்பு உண்டு)
//மனிதத்தை தக்க வைப்பதில் மதத்துக்கு மிகப்பெரிய பங்கு இருந்தே வருது என்பதுதான் என் வாதம்..// - (நிச்சயமாக) இல்லை. என் மதத்துக்காரன என்ற ’மனிதம்’ வரலாம்.
//வளர்ந்தபின் தாயின் பொய்கள் செல்லுபடியாகுமா?..// -- ஆமாம். (அதுவும் நிச்சயமாக மதத்தைப் பற்றிய ‘தாய்வழி’ வரும் போதனைகள் காலமெல்லாம் 99% மக்களிடம் இருந்து வருகிறது.மாறுவதுமில்லை; வளர்வதுமில்லை என்பது தான் பெரிய சோகம்!
//நண்பரே 18 வருடங்கள் ஒரு கிறுஸ்துவ இடத்தில் இருக்க முடிந்ததே?..// ஆமாம். (வயது அப்படி? அ8 வயது வரை என்ன சிந்தனை வந்திருக்கும்?)
//ஒரு படம் பார்க்க சென்ற இடத்தில் ஒருவர் சொன்னபோது மட்டும் ஏன் இத்தனை துவேஷம் வந்தது?..உடனடியாக.// ஆமாம். (கார்த்தி ’வய்சுக்கு வந்திட்டார்’. ஆனால் அவர் இன்னமும் soft ஆக இருந்திருக்கிறார். பத்து நிமிஷத்தில் walk out செஞ்சிருக்கணும்!)
//பலருக்கு வாழ்வின் நம்பிக்கை..//ஆமாம். நிச்சயமாக...
//இவர்களுக்கு எல்லா மதமும் கடவுளும் ஒன்றே.....// இல்லை. (இப்படி கிறித்துவத்திலோ,இஸ்லாமிலோ முழு நம்பிக்கையோடு இருப்பவர் ஓரிருவரை எனக்குக் காண்பிக்க முடியுமா? no chance ...!
//மனநிம்மதி கோவிலில் இருக்கு// - ஆமாம்.
//நல்லவை 90% சொல்லப்பட்டிருக்கு.. பயமுறுத்தல் 10% க்கும் குறைவே..// -- இல்லை. (Fear is the beginning of wisdom!!!!!! ஏனிப்படி விவிலியத்தில் சொல்லியிருக்கு?)
//வாரந்தோறும் ஆலயத்தில் குழந்தைகளுக்கு நன்னெறி வகுப்பெடுக்கிறேன் .. //
நன்னெறி கட்டாயமா சொல்லித் தரணும். ஆனால் ஆலயத்தில் சொல்லித் தரும்போது ஒரு பிரச்சனை; பதில் சொல்லுங்கள்.
ஆலயத்தில் நன்னெறி சொல்லித் தருவதில்லை. ஞானபாடம் - catechism - சொல்லித் தருவீங்க; இல்லையா? அப்போ முதலில் ‘பத்துக் கட்டளைகள்’ சொல்லித் தருவீங்க; அதில் முதல் கட்டளை என்ன? (நான் மட்டும்தான் சாமி; மற்றதெல்லாம் ---!)
வளரும் குழந்தையின் மனதில் பயிரப்படும் ‘முதல் விஷ வித்து’ இது என்று நினைக்கிறேன். காலமெல்லாம் இது எந்த கிறித்துவன்னுக்கும் மாறுவதுமில்லை. இல்லையா?
இந்த மத த்தில் இருந்தால் நரகம், அந்த மத த்தில் இருந்தால் சொர்க்கம் என்று சொல்வதெல்லாம் அவர்களின் அறியாமையே
//
இதுதான் சில இடங்களில் சட்டம்.இல்லையென்று சொல்லச்சொல்லுங்கள்.
//நல்லவை 90% சொல்லப்பட்டிருக்கு.. பயமுறுத்தல் 10% க்கும் குறைவே..// -- இல்லை. (!!!!!! ஏனிப்படி விவிலியத்தில் சொல்லியிருக்கு?)//
பகுத்தறிவாளர் பார்வையில் இது தவறே..
.Fear of the lord is the beginning of wisdom
நாம் பகுத்தறிய முடியா மக்களுக்கு கடவுளுக்கு பயப்படுதலே தப்பு செய்யாமலிருக்க காரணமாகும்..
தவறுகள் குறையத்தானே சட்டம் போட்டோம்?.. சட்டம் என்ற ஒன்றுக்கு பயப்படுதல் போலவே கடவுளையும் காட்டி பயப்படுத்தி நல்வழிப்படுத்துதல்..
பயத்தால் நல்வழி செல்வோர் தானே அனேகர்...?. பகுத்தறிய இயலாதவர்..?
அந்த பயம் இருக்கட்டுமே.. ஏதோ ஒரு சக்தி நம்மை கண்காணிக்கிறது என்ற பயம்...பகுத்தறிய நேரமற்றவனுக்கு..
சட்டம் ஒருவனை எப்போதும் கண்காணிப்பதில்லையே... ஆனால் கடவுள் பார்க்கிறார் என தவறு செய்யாமலிருப்போர் எத்தனை பேர்..?
அதுமட்டுமே?..
"மக்கள் சேவை மகேசன் சேவை..
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுங்கள்.."
என சக மனிதனுக்கு சேவை செய்யத்தானே கடவுள் என்று இருக்குதொ இல்லையோ ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்க முடியும்?..
ஆலயத்தில் நன்னெறி சொல்லித் தருவதில்லை. ஞானபாடம் - catechism - சொல்லித் தருவீங்க; இல்லையா? அப்போ முதலில் ‘பத்துக் கட்டளைகள்’ சொல்லித் தருவீங்க; அதில் முதல் கட்டளை என்ன? (நான் மட்டும்தான் சாமி; மற்றதெல்லாம் ---!)
வளரும் குழந்தையின் மனதில் பயிரப்படும் ‘முதல் விஷ வித்து’ இது என்று நினைக்கிறேன். காலமெல்லாம் இது எந்த கிறித்துவன்னுக்கும் மாறுவதுமில்லை. இல்லையா?//
இதுபோல் வேத வசனங்கள் பல எனக்கும் ஏற்பில்லாதது..
கிறித்துவத்திலோ,இஸ்லாமிலோ முழு நம்பிக்கையோடு இருப்பவர் ஓரிருவரை எனக்குக் காண்பிக்க முடியுமா? no chance ...!//
நான் இல்லையா?..:)
எனக்கு கடவுள் னு ஒருத்தர் இருப்பாராயின் அவர் ஒன்றே..
என் கணவர் இந்து...
அவர் என் குழந்தைகளை இந்துக்கோவிலுக்கு அழைத்து சென்று நன்னெறிகளை கற்றுத்தந்தாலும் மகிழ்வேன்.. அல்லது மசூதிக்கு அழைத்து சென்றாலும்..
( இப்ப கூட என் இந்து தோழி என் சின்னமகனை இந்து கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்)
இப்படி நான் பலரை பார்த்துள்ளேன்...
//வளர்ந்தபின் தாயின் பொய்கள் செல்லுபடியாகுமா?..// -- ஆமாம். (அதுவும் நிச்சயமாக மதத்தைப் பற்றிய ‘தாய்வழி’ வரும் போதனைகள் காலமெல்லாம் 99% மக்களிடம் இருந்து வருகிறது.மாறுவதுமில்லை; வளர்வதுமில்லை என்பது தான் பெரிய சோகம்! //
என் மகன் பெரியவனுக்கு இதே போல் தான் சொல்லி வளர்த்தேன்.. இன்றும் ஆலயம் வருவார்.. ஆனால் கடவுள் இல்லை அம்மா என என்னிடம் வாதாடுவார்..
நான் தடுப்பதில்லை... திணிப்பதில்லை..
அவருக்கு நன்றாக தெரியும் நான் ஆலயம் அழைத்து செல்வது இயேசுவைப்பற்றி ( அவர் சேவையை , மனிதனாய் பட்ட துன்பங்களை )படிக்க மட்டுமல்ல என்றும் , ஆலயத்தினரின் சேவைகளை நேரில் கேட்கவும் காணவுமே எனவும்..
ஆனால் சின்னவருக்கு கடவுள் பயம் அதிகமாகவே உள்ளது எனக்கு உதவியாய் இருக்கு.. ( சேட்டை குறைக்க )
//இதன் (மதங்களின்) அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?//
ரொம்பவே யோசிக்கிறேன். இதுவரை பதில் கிடைக்கவில்லை.......//
சட்டம் போட்டதின் அடிப்படைக்காரணமே ..
ஆமாம். (வயது அப்படி? அ8 வயது வரை என்ன சிந்தனை வந்திருக்கும்?)//
என் மகன் 12 வயதிலேயே கடவுள் இல்லை என வாதிடுகிறார்...
நாம் மட்டும் வளர்க்கவில்லை.. சூழலும் , நட்புகளும் பள்Kளியும் வளர்க்கின்றது குழந்தைகளை...
என்னதான் திணித்தாலும் , சிந்தனையை யாராலும் தடுக்க முடியாதே...
என் குழந்தைகள் படிக்கும் பள்ளி சீக்கியர்கள் நடத்தும் பள்ளி..
அங்கே ரிலிஜியஸ் ஸ்டடீஸ் என்ற வகுப்பு உண்டு..
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..
பல்வேறு மதம் பற்றி படித்து புரிந்தே மனிதன் ஒரு முடிவுக்கு வரணும்..
எல்லா மதத்திலும் என்ன சொல்லப்பட்டிருக்கு பொதுவாக.. எவையெல்லாம் மனித வாழ்க்கைக்கு நன்மை பயப்பவை?..
எவையெல்லாம் மூடப்பழக்கமாக நீக்கப்படவேண்டியவை என தெளிவு பெறணும்...
சீக்கியர்கள் குணமும் பரவலாக நன்றாகவே உள்ளது..
நான் ஆராய்ந்ததில் சில மதங்கள் மக்களின் குணநலன்களில் பிரதிபலிப்பது உண்மையே..
தாய்லாந்து மக்கள் புத்த மதத்தினர்..
முடிந்தவரை புத்தரின் போதனைகளை கடைபிடிப்பதால் மிக மென்மையானவர்கள்.. கோபப்பட தெரியாதவர்கள்...
மதம் என்பது அன்பை போதிக்கவும். அறநெறி, ஒழுக்கத்தையும் கடைபிடிப்பதற்கு மனிதனால் ஏற்படுத்தபட்ட நம்பிக்கை.
இந்த மத த்தில் இருந்தால் நரகம், அந்த மத த்தில் இருந்தால் சொர்க்கம் என்று சொல்வதெல்லாம் அவர்களின் அறியாமையே//
மிக சரி..
//முடிந்தவரை புத்தரின் போதனைகளை கடைபிடிப்பதால் மிக மென்மையானவர்கள்.. கோபப்பட தெரியாதவர்கள்... //
அதாவது புத்தர் சண்டை போடலை; அதனால் அவரைக் கடைபிடிப்பவர்கள் மென்மையானவர்கள் என்று சொல்கிறீர்களோ?!
சரி .. சரி ..
//பல்வேறு மதம் பற்றி படித்து புரிந்தே மனிதன் ஒரு முடிவுக்கு வரணும்..//
இப்படிதான் ஆரம்பித்தேன் ... என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு முடிவுக்குத்தானே வர முடியும். (நீங்க ரொம்ப exceptional மாதிரி தெரியுது!)
//பல்வேறு மதம் பற்றி படித்து புரிந்தே மனிதன் ஒரு முடிவுக்கு வரணும்..//
இப்படிதான் ஆரம்பித்தேன் ... என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு முடிவுக்குத்தானே வர முடியும். (நீங்க ரொம்ப exceptional மாதிரி தெரியுது!)//
:)
கடவுள் இல்லை என ஒரே வரியில் சொல்லிவிட்டு போகலாம் தருமி சார்..
ஆனால் மதம் ஒரு ஆச்சர்யம் மனித வாழ்வில்..
அது இத்தனை ஆண்டுகள் இத்தனை அறிவியல் வளர்ச்சியிலும் தன்னை நிலையிறுத்திருக்குன்னா ம்மிகவே ஆச்சர்யம்..
அதில் நல்லவை , மனித வாழ்வுக்கு தேவையானவை நிறைய இருக்கு என்றுதான் அர்த்தம்..
என்ன ,இன்னும் நெறிபடுத்தவேண்டியவை அப்பப்ப கால மாற்றத்துக்கேற்ப நடைபெறணும்..
உண்மைதான்...
மொத்தமாக கிருஸ்துவத்தை தாக்குவது கேவலமாக உள்ளது.
அனைவரும் ஒன்றை மட்டும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள், கிருஸ்துவம் வரமால் இருந்தால், இப்படி ____ என்று கமண்ட் போடும் அனனவரும் ஒன்றும் தெரியாமல் இருக்க வேண்டும்...அதாவது ஒன்றும் தெரியாமல் காட்டுவாசிகளாக இருந்திருப்பீர்கள்.
உண்மையை மறுக்காதீர்கள், உங்கள் அனைவரும் நாகரீகம், கல்வி கற்று கொடுத்தத்தது கிருத்துவதான்.
//உண்மையை மறுக்காதீர்கள், உங்கள் அனைவரும் நாகரீகம், கல்வி கற்று கொடுத்தத்தது கிருத்துவதான். //
கிறித்துவத்துக்கு முன்னாடி எல்லாரும், அவுத்துபோட்டும், முட்டாளாகவும் திரிஞ்சாங்கலா குரங்கு!?
அன்பான தோழி திருமதி பயணங்கள்,
// நான் தடுப்பதில்லை... திணிப்பதில்லை..// //அவர் என் குழந்தைகளை இந்துக்கோவிலுக்கு அழைத்து சென்று நன்னெறிகளை கற்றுத்தந்தாலும் மகிழ்வேன்.. அல்லது மசூதிக்கு அழைத்து சென்றாலும்..//
கண்டிப்பாக நிச்சயமாக உங்களுக்காக இந்த பதிவில்லை என்று நினைக்கிறேன். If this is the Christianity that you profess to practice then where is the question of conflict with the Christians like you?? The rant against the politicised followers of a prophet becomes shrill only when such ilk tries to invade, denigrate, degrade, and destroy existing belief's. If that is not your intention, one is welcome to expound Jesus or for that matter anyother prophet or a puppet.
I hasten to add that if a Christian like you can say clearly that my worshipping place can also include the existing Icon's and Idols, along with that of Jesus at the main altar, and even go the extent of saying all such beleifs and Icons exists yet Jesus is the one that is ultimate, then that Christian is also truely a one that does not denigrate others. Hinduism, Budhism, Jainism and Sikhism all take the same recourse.They co-opt, therby making the population more amorphous where rivers of thoughts can easily flow through with minimum opposition. When thoughts flow like such, fundamentallism gets diluted. When fundamentallism gets diluted, you look more towards newer ideas. The more newer ideas seep in, intolerance based on gods, prophets and religions never find a scope to emerge.
Unfortunately Abrahamic religions do not co-opt. They seek the status of exclusiveness. This they expect right from the start and in the end all other alternatives are allowed only in the form of history, meaning, they are to be references of a bygone dark age and nothing more. Such is the memory of pre-Islamic and pre-Christian religions in the areas of their origin and firm spread, they are used as historical examples of how things were bad before the chosen arrival of their faith and prophets. However, European Christian countries, owing to renaisaance and freethought have started celebrating their Greek and Roman intellectual roots for quite some time now.
Having such a change of thought process the mainstrean Churches, atleast in Europe seem to have lost touch in implementing their outdated and retrogade agenda's. Hence to regain the touch and to exercise their now de-fanged religious fundamentallism, countries like India and China are now their laboratories.
முன்னர் சொல்லியதை போல உங்களுக்கு மற்ற மதங்களின் மேல் காழ்ப்புணர்ச்சி இல்லாததால் மற்ற மதங்களை ஏன் மதிக்கவேண்டும் என்ற அறிவுரைகளை தேவை இல்லை என்று சொல்லி முடித்துக்கொள்கிறேன்
// //உண்மையை மறுக்காதீர்கள், உங்கள் அனைவரும் நாகரீகம், கல்வி கற்று கொடுத்தத்தது கிருத்துவதான்//.
பயணங்களும் எண்ணங்களும் எவ்வளவுதான் நல்லபடியாக இருந்தாலும் குரங்குகள் சில குடைச்சல் கொடுத்து கொண்டுதான் இருக்கும். கண்டபடி காழ்ப்புணர்ச்சிகளை கக்கும், மற்ற மதங்களை பார்த்து காறித்துப்பும்! கொடுத்த காசுக்கும் அடித்த பிரைன் வாஷிர்க்கும் நடக்காத நாடகங்களை நான் பார்த்தேன் நீ பார்க்கவேண்டாமா எண்டு நாக்குகளை நாலாக்கி நாலாயிரம் பேர் கேட்குமாறு கத்தும்! மொத்தத்தில், தட்டி வைக்க தக்க முறை இல்லையென்றால் தலை கால் புரியாமல் தாண்டவமாடும். விட்டால் நம் தலை முழுதும் தட்டி பார்த்து தன்னின் இல்லாத தலைவர்களிடம் தலை வணங்க நம் தலையில் கனம் உள்ளதா என்றறிந்து இல்லையென்றால், இருப்பதை கொட்டிவிட்டு நான் கொடுப்பதை உள்ளே அடைத்துக்கொள் , வணங்க உனக்கு அப்பொழுது வரும் தகுதியென பொய்கள் பலவைகளை பொறுமையுடன் பகிரும்!!
காழ்ப்புணர்ச்சியால் உளறிக்கொண்டிருக்கும் இந்த குரங்கை டார்வின் பார்த்திருந்தால், சத்தியமாக சொல்லியிருக்கமாட்டன், நீ மனிதர்களின் முன்னோடி என்று! சத்தியமாக சொல்லியிருப்பான் நீ உந்தனது கடவுளின் முன்னோடி என்று - இரண்டுமே தேவையில்லாத விடயங்கள் அன்றோ!!!
பிரியமுடன் ரமேஷ் & அனாமிகா துவாரகன் சரியாப் புரிஞ்சு வைச்சிருக்காங்க.
நமக்கு கடவுளே அலர்ஜி அதிலும் இவனுக சொல்ற கடவுள் ரொம்ப பயம் காட்டுவாரு. அந்த க்ரூப் எப்போதும் எதிர்மறையா சொல்லி பயமுறுத்தி பைபிளில் இருந்து உதாரணம் சொல்லி ... அதையெல்லாம் பிட் நோட்டீசா அடிச்சுக் கொடுத்து நம்மளை ஒரு வழி பண்ணிடுவாய்ங்க. அடுத்து அவய்ங்க உங்க கையில சிக்குனா அபிராமி தியேட்டர் பின்னாடி ஏதாவது மூத்திர சந்து இருந்தா கூட்டிட்டு வாங்க. நம்ம அவனுகளுக்கு கடவுளை காட்டுவோம். :-))
அன்பான தோழி திருமதி பயணங்கள்,
கண்டிப்பாக நிச்சயமாக உங்களுக்காக இந்த பதிவில்லை என்று நினைக்கிறேன். If this is the Christianity that you profess to practice then where is the question of conflict with the Christians like you?? The rant against the politicised followers of a prophet becomes shrill only when such ilk tries to invade, denigrate, degrade, and destroy existing belief's. If that is not your intention, one is welcome to expound Jesus or for that matter anyother prophet or a puppet. //
நல்ல பல தகவலகள்..
நன்றி நோ..
உண்மைதான்...
மொத்தமாக கிருஸ்துவத்தை தாக்குவது கேவலமாக உள்ளது.
அனைவரும் ஒன்றை மட்டும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள், கிருஸ்துவம் வரமால் இருந்தால், இப்படி ____ என்று கமண்ட் போடும் அனனவரும் ஒன்றும் தெரியாமல் இருக்க வேண்டும்...அதாவது ஒன்றும் தெரியாமல் காட்டுவாசிகளாக இருந்திருப்பீர்கள்.
உண்மையை மறுக்காதீர்கள், உங்கள் அனைவரும் நாகரீகம், கல்வி கற்று கொடுத்தத்தது கிருத்துவதான்.//
என் வேலைதான் சிறந்தது என எதையும் சொல்ல முடியாதல்லவா?..
உழவன் , துப்புறவு தொழிலாளி இல்லையென்றால்.?
அதே போல் தான் எல்லா மதமும்..
கிறுஸ்தவ மதத்தின் பங்கும் உண்டு என வேணுமானால் சொல்லலாம்... அது மட்டுமே என சொல்லாமல்...
ஆபிரகாமிய மதங்களைப் *பின்பற்றும்* - நோட் மை பாயிண்ட் சும்மா அடையாளப்படுத்தப்படும் இல்லை - யாருக்கும் மற்ற மதங்களையும் கடவுள்களையும் சாத்தான்களாகப் பார்க்க மட்டுமே தெரியும். சக மத சகிப்புத் தன்மை இந்துக்கள் என்று அழைக்கப்படுபவர்களிடமே இருக்கிறது. ஏனென்றால் இந்து என்பது மதமே இல்லை.
அந்த சகிப்புத் தன்மையும் பெருமளவில் இப்போது குறைந்து வருகின்றது.
நல்ல பதிவு காபா..
என்னுடைய மத நம்பிக்கை பற்றி தானே உங்களுக்கு தெரியுமே ..
எனக்கென்று அடையாளமுமில்லை, நம்பிக்கையுமில்லை
இன்னும் நிறைய இருக்கு தல ...போன் பண்ணி சொல்லுறேன்
நான் இந்த விஷயத்தை பற்றி ஒரு தொடர் எழுதலாம்ன்னு இருந்தேன் ..பிறகு நமக்கெதுக்கு இந்த புரட்சி பரோட்டான்னு விட்டுட்டேன் ..
(இந்த மாதிரி கல்வி முறை குறித்து உங்களிடம் நான் சொன்ன "இனி ஒரு விதி செய்வோம்" தொடரையும் வேண்டாம்ன்னு விட்டுட்டேன் )
//பைபிள், டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென் ஹர் போன்ற பழைய படங்கள் ஏதோ போடப்போகிறார்கள் போல.. சர்ச்சில் போடுவதால் கண்டிப்பாக அந்த படங்களில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்.//
நம்மள மாதிரியே வெகுபேர் ஏமாந்துருக்காங்கப்பா!!
ஆனாலும் சிக்கலான விஷயத்தைப் பற்றி அருமையான பதிவு. இந்த காருண்யா கும்பல் திருந்தும் என்கிறீர்களா?
நல்ல இடுகைங்க தலைவரே... தங்களின் கருத்துடன் உடன்படுகிறேன்.
நான் பயின்றதும் ஒரு கிருத்துவ கல்லூரியில்தானென்றாலும் அங்கே அவர்கள் மதம் சார்ந்த சடங்குகளை முக்கியமான நாட்களில் மட்டும் நடத்துவார்களேயொழிய அதில் கலந்துகொள்ளவோ அவர்களின் மத உணர்வை மாணவர்கள் மீது திணித்ததோ இல்லை.
பெரும்பாலும் இதுபோன்று நிகழ்வுகள் உட்கிராமங்களில், குறிப்பாக கொஞ்சம் பொருளாதார அளவில் பின்தங்கிய மற்றும் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஜகஜோராக நடந்துகொண்டுதானிருக்கிறது. இது சரி தவறு என்பதைத்தாண்டி இதையும் ஒரு வியாபாரமாகத்தான் பார்க்கமுடிகிறது.
கிறிஸ்த்தவர்கள் எல்லோருமே கிறிஸ்த்து சொன்னதை முழுதுமாக படிக்கவுமில்லை விளங்கிக் கொள்ளவும் இல்லை, உதாரணத்திற்கு தாமஸ் அல்லது லாரான்ஸ் என்கின்ற கிறிஸ்த்தவ பெயரை உடைய ஒருவரை அவரது பெயரை வைத்து அவர் ஒரு கிறிஸ்த்தவர் என்பதை தீர்மானிக்க கூடாது, அந்த பெயரில் உள்ள ஒருவர் கொலை கொள்ளை திருடு ஏன் தீவிரவாதத்தில் கள்ளகடத்தலில் கூட ஈடுபடலாம், கிறிஸ்த்துவை முழுமையாக புரிந்துகொண்டவர்கள் கிறிஸ்த்துவர்கள் அல்லாமல் வேறு பல உபயங்களை கூறி மக்களை திசை திருப்புபவர்கள் கிஸ்த்துவர்கள் கிடையாது. பரம்பரை பரம்பரையாக கிறிஸ்த்தவர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் பலரும் கூட கிறிஸ்த்து சொன்ன உபதேசங்களை பெயருக்காக படித்துவிட்டு தங்களும் கிறிஸ்த்தவர்கள் என்று கூறிக்கொள்வதினாலேயே அவர்கள் கிறிஸ்த்தவர்களாகி விடுவதில்லை, கிறிஸ்த்து சொன்னவைகளை கடைபிடிப்பதும் அவற்றின் படி நடக்க முயற்சி செய்வதற்கே வாழ்நாள் காலம் முடிந்துவிடும். அதனால் தான் காந்தி சொன்னார், 'நான் கிறிஸ்த்தவர்களை விட அதிக கிறிஸ்த்தவன்' என்று. கிறிஸ்த்தவம் குறிப்பிடும் சிலரது அறியாமையினால் இவ்வாறெல்லாம் விமரிசிக்கபடுகிறது என்பதை அறிகின்றபோது மனம் மிகவும் வேதனையடைகிறது.
யாரோ ஒரு சிலரை பார்த்துவிட்டு ஒட்டு மொத்த கிரிஸ்த்தவர்களையும் தவறாக நீங்கள் சித்தரித்திருப்பது உங்களது அறியாமையை காண்பிக்கிறது, பள்ளிக்கூடத்திலோ கல்லூரியிலோ பாடம் கற்ப்பிக்கின்ற உபாத்தியாயர்களில் எத்தனை சதவிகிதம் பேர் சரியான மற்றும் மாணவர்களுக்கு விளங்கும் வகையில் கற்ப்பிக்கின்றனர்? எல்லோருமே படித்து விட்டு தான் கற்ப்பிப்பதற்க்கு வருகின்றனர் என்றாலும், சிலருக்கு உத்தியோகம் என்பது கடவுள் மாதிரி, சிலருக்கு வேறு வழியில்லாமல் உபாத்தியாயர் வேலைக்கு வந்தவர்கள், சிலர் தான் படித்த காலத்திலேயே எல்லாவற்றையும் 'பிட்' அடித்து வெற்றி பெற்று ஏதோ கிடைத்த வேளையில் மாரடிக்கின்றவர்கள், இவர்களைப்போலத்தான் இன்றைக்கு கிரிஸ்த்துவ போதகர்களாகி போதிக்க கிளம்பி இருக்கின்ற பலரின் நிலையம் என்பதால் ஒட்டு மொத்த உபாத்தியாயர்களையும் எப்படி குறை சொல்லக்கூடாது என்று சொல்லிக்கொள்கின்றீர்களோ அதே போன்று நீங்கள் பார்த்தவற்றிளிருந்து கிரிஸ்த்துவர்களையும் போதகர்களையும் குதர்க்கம் பேசாதீர்கள்.
Post a Comment