மதுரையின் ரொம்பப் புகழ்பெற்ற தமுக்கம் மைதானத்தின் முன்பாக யாருக்குமே தெரியாமல் ஓரமாக இருந்த அந்த டீக்கடையின் வாசலில் அவர்கள் ஆறு பேரும் குழுமி இருந்தார்கள். அனைவருமே 22 வயத்தைத் தாண்டாத இளைஞர்கள். நாளைய உலகை ஆளத் துடித்துக் கொண்டிருப்பவர்கள். அதாவது.. இன்றைக்கு வெட்டி ஆபிசராக இருப்பவர்கள்.
கூட்டத்தில் நடுநாயகமாக இருப்பவன்தான் அவுங்களோட பாஸ். (ஏன்யா இது என்ன கொள்ளைக் கூட்டமா?) ஓகே ஓகே தலைவன்னு வச்சுக்குவோம். கார்த்தின்னு பேரு. அவன் ஏன் தலைவனா இருக்கான்னா.. மிச்ச பயபுள்ளைகளுக்கு எதுனாச்சும் வாங்கிக் கொடுக்குறதுக்கு காசு அவன்கிட்ட மட்டும்தான் உண்டு. அப்பன் சம்பாதிச்ச காசை கரைக்கிரதை விட புள்ளைகளுக்கு வேற ஏதும் முக்கியமான வேலை கிடையாதுன்னு ரொம்பத் தீவிரமா நம்புறவன்.
"இன்னும் எத்தனை நாளைக்குடா இப்படியே இருக்குறது? எல்லாப்பயலும் நம்மளப் பார்த்து வாயப் பொளக்கணும். அந்த மாதிரி கூடிய சீக்கிரம் ஏதாவது செய்யணும்டா மாப்ள.."சொல்லிய பாலு சிகரட்டை கீழே போட்டு நசுக்கினான்.
“ம்ம்.. ஆமாடா.. வீட்டுல இருக்குறய்வங்க நொச்சு தாங்க முடியல..” - உமர்.
இதே கருத்தை மீதியிருந்த மணி, கண்ணன், ஸ்டீபன் (பார்த்துக்கோங்கப்பா.. மத நல்லிணக்கம்) ஆகியோரும் சொல்ல என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தார்கள். சட்டென மண்டைக்கு மேலே பல்பு எரிய பாலுதான் அந்த ஐடியாவைச் சொன்னான்.
“நாம ஏண்டா ஒரு பாப் ஆல்பம் போடக் கூடாது?”
“நாம எப்புடிடா ஆல்பம் போடுறது? நமக்கு என்ன தெரியும்?” கண்ணன் குழம்பியவனாகக் கேட்டான்.
“அது ஒரு மேட்டரே இல்ல மச்சி. இன்னைக்கு ஃபேஷனே ஆல்பம் போடுறதுதான். இப்போ பாரு... நம்ம ஸ்டீபனுக்கு அருமையா கவிதை எழுத வரும். அவன் நமக்காகப் பாட்டு எழுதட்டும். என்னடா ஓகேவா?”
ஸ்டீபன் லைட்டாக வானில் மிதந்து கொண்டிருந்தான். பாக்யாவில் கொடுத்து இருந்த ஒரு போட்டோவைப் பார்த்து “ஏ பெண்ணே நீயே ஒரு கட்டை உன் கண்களோ என் மனதை எரிக்கும் கொள்ளிக்கட்டை”ன்னு எழுதின ஒரு கவிதைக்கு 75 ரூபா சன்மானம் வந்த நாள் முதலாவே தன்னை தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்தப்போற கவிஞன்னு நம்பிக்கிட்டு இருக்குறவன்.
“செஞ்சுடலாம் மாப்ள. இது ஒரு மேட்டரா..”
“அது.. அப்புறம் நம்ம உமர் அருமையா கிடார் வாசிப்பான். யூஸ் பண்ணிப்போம். மணி ஃப்ளுட்ட பார்த்துப்பான். நானும் கண்ணனும் பாடலாம். அப்புறம்.. நம்ம கார்த்திதான் ப்ரொடியூசர். சரியாப் போச்சா?”
ஆக இப்படியாகத்தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த பாப் ஆல்பம் ரெக்கார்டிங்கான விதை தூவப்பட்டது. மிகச்சரியாக ஒரு வாரத்துக்குப் பிறகு சினிப்பிரியா தியேட்டரின் முன்பாக இருந்த ரெக்கார்டிங் தியேட்டரின் வாசலில் நிலாவுக்கு ராக்கெட் ஏறப் போகும் ரேஞ்சுக்கு முனைப்போடு அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
"நில்லுங்கடா நல்ல காரியம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பூஜையைப் போட்டுருவோம்.."
வீட்டிலிருந்து தூக்கிக் கொண்டு வந்திருந்த ஓஞ்சு போன பூசணிக்காயைத் தொம்மென தரையில் போட்டு உடைத்தான் கார்த்தி. தாக்குங்கள் என்று கத்தாத குறையாக அனைவரும் திமுதிமுவென தியேட்டருக்குள் பாய்ந்தார்கள். அவர்களைப் பார்த்த உரிமையாளருக்கு பக்கென்று இருந்தது.
"என்ன தம்பி.. வாசல்ல பூஜை எல்லாம்? ஏதாவது கோயில் கும்பாபிஷேக கலெக்ஷனா?"
"ஊய்.. யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னீங்க. நாங்க தான் நாளைக்கு இசை உலகையே ஆளப்போற M.M.B குழு. புரியுதா?" (மதுரை மேட் பாய்சாமாம்.. கருமம்..)
"ரெக்கார்டிங் பண்ண வந்தவங்களா நீங்க.. கிழிஞ்சது.. சரி சரி.. வாங்க.."
அவருக்குப் பார்த்துவுடனேயே தெரிந்து கொண்டார் இது அல்லக்கை கூட்டம்னு. அதனாலென்ன காசு வந்தா சரி. நாய் வித்த காசு குரைக்கவா போகுது?
"போங்கப்பா.. போய் அந்த ரூம்புக்குள்ள எல்லாம் போய் அவங்கவங்க இடத்துல நில்லுங்க.."
ஒவ்வொருத்தரும் ஜம்மென்று காதில் ஹெட்போனையும் மாட்டிக்கொண்டு நின்றபிறகுதான் அடுத்த பிரச்சினை ஆரம்பமானது.
"ஏண்டா.. என்ன பாட்டுடா பாடுறது?"
நாசாமப் போச்சுன்னு தலைல கை வச்சு உக்கார்ந்துட்டார் ஓனர். "இனிமே தான் பாட்டே முடிவு பண்ணனுமா?"
"ஏண்டா ஸ்டீபா.. டக்குன்னு ஒரு பாட்ட சொல்லேண்டா.."
"ஏய்.. பாட்டுன்னா என்ன சும்மாவா? வான்னா ஒடனே வந்துருமா.. அது ஒரு பீல்டா.. அது எப்படின்னா.."
"டேய் மூடுறா.. சட்டுபட்டுன்னு ஏதாவது பாடுங்கடா.."
"தம்பி.. ஒரு மணி நேரத்துக்கு ரெண்டாயிரம் ரூபா வாடகை.. இருக்குல்ல.."
"ச்சே.. நடு நடுவுல இந்த ஆளு வேற.. அண்ணே கொஞ்சம் யோசிக்க விடுங்க அண்ணே.. கலைண்ணே.. அருவி மாதிரி பொங்கிட்டு வரும்போது தடுக்காதீங்க..”
குசுகுசுவென தங்களுக்குள் பேசி கடைசியாக அந்த முடிவுக்கு வந்தார்கள். "மடை திறந்து ஆடும் இளங்குயில்.. இந்தப் பாட்டே பாடிரலாம்டா.."
"இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா.. பாடித் தொலைங்க.." ஓனர் மனசுக்குள் கருவியபடியே இருந்தார். அவர்கள் பாட ஆரம்பித்து இருந்தார்கள்.
"மடை திறந்து தாவும் நதியலை நான்..
மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான்...
இசைக்கலைஞன் என் தனதன தனன
தனதன தனன தனன.."
"கருமம்.. இந்தப்பாட்டும் முழுசா தெரியாதா" என்று மனசுக்குள் ஓனர் திட்டிக் கொண்டிருந்த வேளையில் பாலு அந்த வினோதமான காரியத்தை செய்தான். வேகமாக மைக்குக்கு அருகில் வந்தவன் தன் கையைக்கொண்டு போய் தொடையிடுக்கில் வைத்துக்கொண்டு ஏதேதோ இங்கிலிஷில் பேத்த ஆரம்பித்தான். ஓனர் பதறிப்போனார்.
"ஏய் ஏய் தம்பி.. என்னய்யா பண்ற.."
"அண்ணே.. இது ராப்புண்ணே.."
"அதெல்லாம் சரிப்பா.. அதுக்கு எதுக்கு கையக் கொண்டு போய் குஞ்சாமணில வச்சுக்கிட்டு ஏதோ வயித்துக்கடுப்பு வந்தவன் மாதிரி அவதிப்படுற?”
“அய்யய்ய.. அப்படி இல்லண்ணே.. நான் எம் டிவில பார்த்திருக்கேன்.. எமினம்னு ஒருத்தரு.. அவரு இப்படித்தான் பாடுவார்.. ராப்புன்னா இப்படித்தான் பாடணும்ணே..”
“என்ன எழவோ செஞ்சு தொலைங்கடா..”
நல்லபடியாக ரெக்கார்டிங் முடிந்தது.
“ஆக மாப்ள.. ஒரு பாட்டு முடிச்சுட்டோம். அடுத்தது என்னைக்கு?”
“அது என்னைக்கு வேணும்னாலும் இருக்கலாம். மொதல்ல இன்னைக்கு பாடுனதுக்கு ரெண்டாயிரம் ரூபாய எடுங்கப்பா..” ஓனர் - சிவபூஜைக் கரடி. கார்த்தி தன் பைக்குள் கை விட்டு காசை எடுத்தான். 1500 இருந்தது.
“இம்புட்டுத்தாண்டா இருக்கு..”
எல்லாப்பயலும் கையில் கிடைத்த காசை போட்டு பார்த்தபோதும் ரெண்டாயிரத்துக்கு நூறு குறைந்தது.
“அஜ்ஜஸ் பண்ணுண்ணே.. அடுத்த ரெக்கார்டிங்குக்கு வெயிட்டா கவனிப்போம்..” மண்டை காய்ந்து போனவராக ஓனர் அதை வாங்கிக் கொண்டு உள்ளே போனார்.
“இப்போ வீட்டுக்கு எப்படிடா போறது.. கைல பத்து காசு கூட இல்லையே..”
“வேற எப்படி.. நடராஜா சர்வீஸ்தான்..”
புலம்பிக்கொண்டே கலைந்து போனவர்களில் உமரும் கண்ணனும் அண்ணா நகர் ஆர்ச்சுக்கு அருகே இந்தக் கதைசொல்லியை சந்தித்து தாங்கள் பாடல் பதிந்த கதையைச் சொல்கிறார்கள். அவனும் வெகு சுவாரசியமாகக் கேட்பதைப் போல நடிக்க வேண்டியதாகிறது.
“அடப்பாவிகளா.. கலை மேல இருக்குற ஆர்வத்துல இப்படியா பஸ்ஸுக்குக் கூட காசு இல்லாம நடந்து வருவீங்க? பரவாயில்லடா.. நல்லா வருவீங்க..”
“ஆமாம்ணே.. நீ அடுத்த பதிவுக்குக் கண்டிப்பா வரணும் சரியா?” சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினார்கள். (ஆகா.. என்னா ஒரு வில்லத்தனம்? ) நடந்தவர்களில் ஒருவன் திரும்பி வந்து மெதுவாக கதைசொல்லியிடம் கேட்டான்.
“அண்ணே.. காலைல இருந்து ஒண்ணுமே சாப்பிடல.. பசிக்குது.. ஒரு டீ சொல்றியா?”

19 comments:
கதையா .. அனுபவமா? ரெண்டும் போட்டு இருக்கீங்களே!!!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
எனக்குக்கூட பானையில கடம் வாசிக்கத் தெரியும்.
என்னையும் சேத்துக்கங்கண்ணே
கதை சொல்லிக்கு மட்டும் டபுள் ஆக்டிங்கா, சொல்லவேயில்ல :)
:-)))))))))))))
//அவனும் வெகு சுவாரசியமாகக் கேட்பதைப் போல நடிக்க வேண்டியதாகிறது.//
-- நீங்கள் சுவாரசியமாய் கேட்காவிட்டாலும், எங்களை ரசனையுடன் படிக்க வைத்திருக்கின்றீர்கள்...
//தாக்குங்கள் என்று கத்தாத குறையாக அனைவரும் திமுதிமுவென தியேட்டருக்குள் பாய்ந்தார்கள்//
-- ஹா.. ஹா.. ரசித்து சிரித்தேன்..
கார்த்தி...எப்பிடி இருக்கீங்க சுகம்தானே.இப்பத்தான் கவனிச்சேன் நட்சத்திர நாயகன் உங்களை.
வாழ்த்துகளும் பாராட்டுக்களும் !
very good and interesting...
கார்த்தி!
கலக்குங்க கார்த்தி!
நண்பா உடுக்குறி எழுத்தாளரா ஆகிட்டீங்க. கலக்குங்க.
அன்பின் கார்த்தி - இரு பாத்திரங்கள் - பாஸ் மற்றும் கதை சொல்லி - ஏற்ற பாத்திரம் தான். கலக்குக. அட்டாக்..... சொல்றதுக்குள்ள பசங்க பாஞ்சுட்டானுங்களா ? மத நல்லிணக்கம் - ராப் - மதுரை மேட் பாய்ஸ் - சூப்பரா இருக்கு. காசு வச்சிருக்கவன் தலைவன் ....... தொடர்க - வாழ்க வளமுடன்.
// “ஏ பெண்ணே நீயே ஒரு கட்டை உன் கண்களோ என் மனதை எரிக்கும் கொள்ளிக்கட்டை”//
ஹாஹாஹா செம கவித.....
தலைவரே உண்மைய சொல்லணும் இது நீங்க எழுதி போட்ட கவித தானே...
சிறப்பான எழுத்து நடை.....நடத்துங்க
//கார்த்திதான் ப்ரொடியூசர்//
இது மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது கா.பா. அடுத்த படம் ஆரம்பிச்சுடலாமா ?
நட்சத்திர வாழ்த்துக்கள் பாஸ்:))))))))))))))))
காசு வச்சுருக்கவன் தலைவன்... தல நம்மளையும் கவனிங்க....
//அண்ணா நகர் ஆர்ச்சுக்கு// இது எங்கன இருக்கு...?
:-)
@TBCD
தலைவரே.. கே கே நகர் ஆர்ச்சு.. அதுதான் அண்ணா நகரா மாறிப்போச்சு.. புனைவுல இதெல்லாம் சாத்தியம் தானே..:-)))
"Neenga entha kathaila ena character enaku therinchu pochu sir...!"
தோழரே,நானும் அந்த டீக்கடை நின்று கவனித்திருக்கிறேன் ,என்ன கொடுமைனா பெரும்பாலும் பள்ளி மாணவர்கள்தான்
Post a Comment