July 12, 2011

இது என்ன ஊர் - சிங்கப்பூர் (2)

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தின் ஒரு சுபயோக தினத்தில் அந்த மின்னஞ்சல் எனக்கு வந்தது.

“ஜூன் மாத இறுதியில் சிங்கையில் நடக்க இருக்கும் ICMAT சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ள உங்கள் ஆய்வுக்கட்டுரை தெரிவு செய்யப்பட்டுள்ளது..”

அடப்பாவிகளா.. நான் எழுதுனதையும் ம்ம்மமமதிச்சு ஒருத்தன் செலக்ட் பண்ணி இருக்கான்னா அவன் எம்புட்டு நல்லவனா இருப்பான்? உங்க ஊரா எங்க ஊரா.. சிங்கப்பூராச்சே.. கண்டிப்பா போறோம்னு முடிவு பண்ணியாச்சு.

பொதுவாகவே பிரயாணம் என்பது தனக்குள் பல புது அனுபவங்களைப் பொதிந்து வைத்திருக்கக் கூடியது. புதிய மனிதர்களின் சந்திப்பு அகவையமாக ஒரு மனிதனுக்குள் பல மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். வெளிநாட்டுப் பயணம் நமக்கு புதியதொரு கலாச்சாரத்தையும் வாழ்வின் புது கோணங்களையும்..

அடக் கெரகமே என்னதான்டா சொல்ல வர்றன்னு கேக்குறவங்களுக்கு.. உள்ளூர்லயே நாயா சுத்துறவனுக்கு வெளிநாட்டுக்குப் பரதேசம் போக கசக்கவா போகுது.. வுடு ஜூட்.


சண்டெக் வளாகத்தில்

சிங்கை பதிவர் நண்பர்கள் பத்தி தருமி அய்யா சொல்லியிருந்தாலும், நண்பர் ரோஸ்விக் நமக்கு நல்லாத் தெரிஞ்சவர்னாலும், அப்பாவி முருன்னு ஒரு ஜீவன் அங்க இருக்குறதையே நான் மறந்து போனதாலயும்.. பெரிய அறிவாளி மாதிரி இங்க இருந்தே யுனிவர்சிடி ஹாஸ்டல்லயே ரூம் புக் பண்ணியாச்சு.

ஊருக்குப் போறதுக்கு மூணு நாள் முன்னாடிதான் தருமி மூலமா சிங்கை நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். எங்க போகலாம், எவ்ளோ செலவாகும்னு எல்லாம் கோவி அண்ணன் மெயில் பண்ணி இருந்தார். குழலியும் ஜெகதீசனும் நேர்ல வந்து பாக்குறதா சொன்னாங்க.

அன்னைக்கு சாயங்காலமே ரோஸ்விக் கிட்ட இருந்து போன். “ஏந்தலைவரே நாங்க இருக்கும்போது ஏன் வெட்டியா ரூம் புக் பண்ணினீங்க”ன்னு செல்லச் சண்டை. அப்புறம் ஏர்போர்ட்ல தானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாரு.

அவரு போன வச்ச கொஞ்ச நேரத்துல அப்பாவி முரு. போன்லயே செம மாட்டு. “ஏன்யா எங்கள உங்களுக்குத் தெரியாதா.. நாங்க எல்லாம் இருக்கோம்ல.. வந்து சேருய்யா..” பாசக்காரப் பயபுள்ளைங்க. எங்கம்மாவுக்கு இதப் பார்த்து ஒரே குஷி. வெளிநாடு போய் ஒண்ணுந்தெரியாத தம்புள்ள(?!!) என்ன பண்ணுமோன்னு பயந்துக்கிட்டு இருந்தவங்களுக்கு கொஞ்சம் நிம்மதி. ரைட்டு.. பையனப் பார்த்துக்க அங்கன ஆளிருக்குன்னு சின்னதா சந்தோசம்.


நண்பர் ரோஸ்விக்கின் அலுவலக மாடியில்

ஜூன் 26 - ஞாயிறு சாயங்காலம் மதுரைல இருந்து திருச்சிக்கு கார்ல கிளம்பியாச்சு. போற வழில போற தெரிஞ்ச பக்கிக்கு எல்லாம் போனப் போட்டு ஒரே சலம்பல். “அப்புறம் மாப்ள.. நல்லா இருக்கியா? பேசி நாளாச்சுல.. ஆமாடா... இல்ல இல்ல.. கார்ல போயிட்டுருக்கேன். இன்னைக்கு நைட்டு சிங்கப்பூர் ஃப்ளைட்டு. அட ஆமாடா.. ஒரு கான்ஃபரன்சு.. அப்படியே ஜாலியா ஊர் சுத்திட்டு வரலாம்னு..”

வெறிக்க வெறிக்க பார்த்துக்கிட்டே இருந்த டாக்ஸி டிரைவர் கொஞ்ச நேரம் கழிச்சு என்னைக் கேட்டேபுட்டாரு.

“தம்பி மொதத் தடவையா வெளிநாடு போறீங்களோ..”

“ஹி ஹி.. ஆமாண்ணே”

“தெரியுது..”

திருச்சி விமான நிலையம். டைகர் ஏர்வேஸில் புக் செய்திருந்தேன். வெறும் ஹேண்ட் லக்கேஜ் மட்டும்தான். ஏழு கிலோ தான் கொண்டு போக முடியும்னு சொல்லிட்டாங்க. நான் கொண்டு போன பேக் பத்து கிலோ இருந்துச்சு. அப்புறம் பெரிய வருத்தத்தோட கொஞ்சம் டிரஸ், படிக்க வச்சிருந்த விஷ்ணுபுரம் எல்லாத்தையும் எடுத்து வீட்டுல கொடுத்து விட்டுட்டு மக்களுக்கு ஒரு பெரிய டாட்டா காட்டிட்டு உள்ள போயாச்சு.

கஸ்டம்ஸ் செக்கிங் முடிச்சு ஃபிளைட்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். நண்பர்கள் சொன்னதெல்லாம் ஞாபகம் வருது. “மாப்ள.. மொத தடவை ஃபிளைட்டு.. லட்டு லட்டா பொண்ணுங்க ஏர் ஹோஸ்டசா வருவாளுங்க. வேணும்கிற மட்டும் சரக்கு எல்லாம் கிடைக்கும். ஹ்ம்ம்.. உனக்கும் அதுக்கும் ஆகவே ஆகாது. சொல்லி என்ன பிரயோசனம்.. உனக்குப் போயி இதெல்லாம் நடக்குது பாரு.. என்னமோ தொலை.. என்சாய் பண்ணிட்டு வாடா..”

லைட்டா வாயத் தொடச்சுக்கிட்டு பஸ்ல ஏறி எக்கச்சக்கமான கனவுகளோட ஃபிளைட்டுக்குப் போறேன். அங்கே ஸ்டெப்சுக்குப் பக்கத்துல நாலு மஞ்ச மாக்கானுங்க வெளிர்மஞ்சள் சட்டை போட்டுக்கிட்டு ”வெல்கம் ஆன் போர்ட் டூ டைகர் ஏர்வேஸ் சார்”னு சொன்னப்பவே எனக்கு மண்டைக்குள்ள மணி அடிச்சது.

(பிரயாணிப்போம்..)

17 comments:

முரளிகுமார் பத்மநாபன் said...

போலாம் ரைட்..:-)

இராஜராஜேஸ்வரி said...

“ஜூன் மாத இறுதியில் சிங்கையில் நடக்க இருக்கும் ICMAT சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ள உங்கள் ஆய்வுக்கட்டுரை தெரிவு செய்யப்பட்டுள்ளது..”///

வாழ்த்துக்கள்.

kugan said...

Congrats!!
Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்

Rathnavel said...

நல்ல பதிவு.

மோகன் குமார் said...

Very intersting narration.

Thalaippaae kalakkal. Pl. continue.

கோவி.கண்ணன் said...

கலக்கல். நகைச்சுவை துள்ளுது தம்பி.

:)

அகல்விளக்கு said...

கலக்கல் பயணம்... :-)

வினோத் கெளதம் said...

Super :)

அமுதா கிருஷ்ணா said...

அருமையான வாய்ப்பு.கலக்குங்கள்..

நா.மணிவண்ணன் said...

Ha ha super.....

காவேரிகணேஷ் said...

அப்பு, கலக்கலா இருக்குப்பு..

ரோஸ்விக் said...

வரலாம் வரலாம்.... ரைட் ரைட்... வரலாம் வரலாம்... :-)

ரோஸ்விக் said...

நல்ல விளக்கமா எழுதி இருக்கீங்க நண்பா... தொடரட்டும்...

நேசமித்ரன் said...

ஒண்ணு பாக்கெட்டுக்குள்ள கைவிட்டுக்கிட்டு போஸ் குடுக்குறது இல்லாட்டி அந்தரத்துல மெதக்குறது

நான் எழுத்து நடையைச் சொன்னேன்
:)))

நீங்க கலக்குங்க தலைவரே !

குமரை நிலாவன் said...

ரைட் ரைட்

முனைவர்.இரா.குணசீலன் said...

அன்பு நண்பா தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html

நன்றி

கோவை நேரம் said...

நகைச்சுவை தளும்புகிறது...அதுவும் அந்த டிரைவர் ...ஹி ஹி ஹி ...