December 9, 2011

ஒஸ்தி - திரைப்பார்வை

ஹிந்தியில் ஒரே அடிதடி வன்முறைப் படங்களாக வந்து கொண்டிருந்த நேரத்தில் வெளியானது தபாங். அலட்டிக் கொள்ளாமல் சாகசங்கள் செய்யும் கோமாளி போலிஸ்காரராக சல்மான் பின்னியெடுக்க படமும் பட்டையைக் கிளப்பியது. ஆனால் தபாங் ஓடியதற்கு முக்கிய காரணம் - எப்போதாவதுதான் ஹிந்தியில் இதுமாதிரி படம் வரும். ஆனால் தமிழில் வெளிவரும் மூன்றில் நான்கு படங்கள் இந்த மாஸ் மசாலா வகையறா என்பதால் தமிழில் இந்தப்படத்தை மறுவுருவாக்கம் செய்தால் நன்றாக இருக்காது என நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்யாக்கி ஒஸ்தியை நன்றாகவே தந்திருக்கிறார்கள் சிம்புவும் தரணியும்.கெட்டவர்களிடம் திருடி ஏழைகளுக்கு உதவும் ரவுடி போலிஸ் சிம்பு. தன் தாயின் மீது பிரியம் கொண்டிருந்தாலும் அவருடைய இரண்டாவது கணவரையும் தம்பியையும் போட்டியாகக் கருதி வெறுப்பவர். தேர்தலில் மக்களுக்குப் பணம் கொடுத்து ஜெயிக்க ஆசைப்படும் அராஜக அரசியல்வாதி சோனு சூத். இருவருக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் சிம்பு எப்படி ஜெயிக்கிறார் என்பதே ஒஸ்தி.

நான் கண்ணாடி மாதிரிலே என்று வசனம் பேசியபடி படம் முழுமைக்கும் கூலர்ஸ் போட்டுத் திரியும் சிம்பு. அலட்டலான உடல்மொழியில் அப்படியே சல்மானைக் கொண்டு வர முயன்று ஜெயித்தும் இருக்கிறார். செமையாக டான்ஸ் ஆடுகிறார் (வானம் படத்தில் அனுஷ்காவின் தொடைகளைப் பிடித்து ஆடிய சிம்பு இந்தப்படத்தில் இரண்டு ஜீப்களை நிறுத்தி அந்தரத்தில் ஆடியிருப்பது முன்னேற்றம்). பறந்து பறந்து அடிக்கிறார். பைக் ஜீப் என்று வித்தை காட்டுகிறார். இறந்து போன அம்மாவைப் பார்த்துத் துடிக்கையிலும் மருத்துவமனையில் இருக்கும் அப்பாவிடம் பேசும் காட்சியிலும் நன்றாக நடிக்கிறார். இப்படி படம் பூராவுமே சிம்பு நிறையக்கிறார்”. திருநெல்வேலி ஸ்லாங் சிம்புவுக்கு அருமையாகப் பொருந்துகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் சிம்பு பேசும்போது குறளரசன் ஞாபகம் வந்து தொலைக்கிறது. கதாநாயகி நல்லா நடிச்சாத்தான் ஆச்சுன்னு யாரு சொன்னா. ச்சும்மா வந்து நின்னே மனதை அள்ளுகிறார் ரிச்சா. மனுஷனாப் பொறந்துதுக்கு அவர் இடுப்புக்கு கொலுசாப் பொறந்திருக்கலாம் எனத் தியேட்டருக்குள் பெருமூச்சு விட்ட பலருள் அடியேனும் ஒருவன்.அடுத்ததாக சந்தானம். முதல் பாதியில் சிம்புவுக்கு முட்டுக் கொடுக்கும் இன்னொரு நாயகன். நெடுவாலி பாட்டில் சிம்புவைப் போலவே ஆடிக் கலாய்க்கிறார். யாரு இவன்.. கோவா பட பிரேம்ஜி மாதிரியே இருக்கான். அவர் பேசும் ஒரு வரி வசனங்கள் எல்லாமே நச். வில்லனாக சோனு சூத். உப்புக்கு சப்பாணி. சிம்புவிடம் அடிவாங்கச் சாக ஒரு வில்லன் வேண்டும் என்பதற்காக படத்தில் இருக்கிறார். கிளைமாக்சில் சிம்புவின் சிக்ஸ் பேக்கை காட்ட வேண்டும் என நினைத்தவர்கள் இவரை சட்டை போடச் சொல்லி இருந்தால் சிம்பு கொஞ்சம் எடுபட்டிருப்பார். ஜித்தன் ரமேஷ் சிம்புவின் தம்பியாக நிறைவாக நடித்து இருக்கிறார். போக படத்தில் நாசர், ரேவதி, சரண்யா மோகன், மயில்சாமி, தம்பி ராமையா எனப் பெரிய பட்டாளமே உண்டு.

படத்தின் பாடல்கள் எல்லாமே செம குத்து. ஒரே மாதிரியாக இசையமைக்கும் தமனிடம் கூடத் தன்னால் நல்ல பாடல்கள் வாங்க முடியும் எனக் காட்டி விட்டார் சிம்பு. பாடல்களைப் படமாக்கிய விதத்திலும் அசத்தி விட்டார்கள். குறிப்பாக நெடுவாலியும் க்யூட் பொண்டாட்டியும். வசனம் எழுதிய புண்ணியவான் யார் என்று தெரியவில்லை. தபாங்கிலிருந்து விலகி தமிழுக்கு பொருந்தும்படியாக நீட்டாக எழுதி இருக்கிறார். நிறைய டபுள் மீனிங்கும் உண்டு. அலம்பல் சாதாரணமாகவே சிம்புவிடம் ஜாஸ்தி என்பது அவர் பேசும் வசனங்களுக்கு இன்னும் அதிகமாகப் பொருந்துகிறது. உங்கள் கடமை உணர்வைப் பார்த்து காவல்துறை வியக்கிறது. எப்போதும் போல ஒளிப்பதிவாளர் கோபிநாத் தரணியின் ஆள் என்பதை நிரூபித்து இருக்கிறார்.ஹிந்திப் படத்திலிருந்து சண்டைக் காட்சிகள் தவிர்த்து வேறு எதையும் பெரிய அளவில் மாற்றாமல் அப்படியே படமாக்கி இருக்கிறார் தரணி. குருவிக்கு முன்புவரை மாஸ் கதநாயாகர்களின் டார்லிங்காக இருந்தவர். சின்னதொரு சறுக்கலுக்குப் பிறகு இந்தப்படத்தில் விட்டதைப் பிடித்திருக்கிறார். லாஜிக், இது எப்படி வந்தது, ஒரு குண்டு கூட சிம்பு மீது படாதா எனக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் ஒதுங்கிப் போங்கள். இது உங்களுக்கான படமல்ல. இரண்டு மணி நேரம் ஆட்டம் பாட்டம் சண்டை எனக் கொண்டாட நினைக்கும் மக்களுக்கான படம் - ஒஸ்தி. ஒரு அழகான மசாலா எண்டெர்டெயினராகப் படத்தை எடுத்திருக்கும் தரணிக்கு வாழ்த்துகள்.

12 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே.... விமர்சனம் நல்லா போட்டிருகிங்க.....
இருந்தாலும் ஏதாவது ஸ்பெஷல் இருக்க வேணாமா?

M.Shanmugan said...

கியூட்பெண்டாட்டி சிம்புதானே எழுதினார். ஏலவே டபாங்க் பார்ததால் ஏனோ பெருசா கவரவில்லை.ஆனா குருவியில் இருந்து மீழ கடுமையாக உழைத்திருக்கிறார் தரணி. பார்க்கலாம் ரக படம்தான்.

ராம்ஜி_யாஹூ said...

ஒஸ்தி படம் குறித்த நான் வாசித்த பத்து விமர்சனப் பதிவுகளில் ஒன்பதில் , மல்லிகா ஷெராவத் நடனம் பற்றி எழுதவே இல்லை.
அதிஷா மட்டுமே குறிப்பிட்டு உள்ளார்.

பல ஊர்களில் மல்லிகா ஷெராவத் பாடல் காட்சி கட் செய்து விட்டார்களா.

பிற ஊர்களில் ஒரு வாரம் கழித்து பாடல் காட்சியைப் படத்தில் இணைப்பார்களோ

Rathnavel said...

நல்ல விமர்சனம்.

sweet said...

பதிவுலகின் முக்கிய பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்

நானும் படம் பார்த்தேன். மசாலா படம். நல்லா பொழுது போச்சு. உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.

ஆனால் தனுஷ் & ரஜினி ரசிகர்களான அட்ரா சக்க சிபி, அதிஷா, என்வழி வினோ அவர்களது கொலை வெறியை பதிவாக போட்டுள்ளனர்.

பார்க்கலாம். கேபிள் சங்கரோட வசூல் ரிப்போர்ட் என்ன சொல்லுது என்று

அத்திரி said...

ஒரு எலக்கியவாதி இந்த மாதிரி மசாலா பட விமர்சனம் ....... லாமா>>>>>>> இந்த அநியாயத்தை யாரும் கேட்க மாட்டிங்களா??????????//

அத்திரி said...

//மனுஷனாப் பொறந்துதுக்கு அவர் இடுப்புக்கு கொலுசாப் பொறந்திருக்கலாம் எனத் தியேட்டருக்குள் பெருமூச்சு விட்ட பலருள் அடியேனும் ஒருவன்.//

இப்படி நீங்க நெனைச்சது உங்க ஆளுக்கு தெரியுமா வாத்தி??????????????????????

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரகாஷ்..
எல்லாத்தையும் நாம சொல்லிட்டா மக்கள் படம் பார்க்க வேணாமா தலைவரே?

சண்முகம்
அதுதாங்க. படம் பாக்குற மாதிரி இருக்குனுதான் சொல்லி இருக்கேன்

ராம்ஜி
தலைவரே.. தப்பு பண்ணிட்டேனோ? மல்லிகா பாட்டும் நல்லாத்தேன் இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

ரத்னவேல்
நன்றி சார்.

ஸ்வீட்
//ஆனால் தனுஷ் & ரஜினி ரசிகர்களான அட்ரா சக்க சிபி, அதிஷா, என்வழி வினோ அவர்களது கொலை வெறியை பதிவாக போட்டுள்ளனர். //

:-)))

அத்திரி
அண்ணே.. பேசி தீர்த்துக்குவோம்

Selvam Muniyandi said...

you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.
please check and give ur comments
http://alanselvam.blogspot.com/

Poornima said...

Tirunelveli slang not at all suits for simbu..... He speaks worst... When you see "Saami" movie u feel the real difference. And Heroine Not at all acting... Mokkkai movie

sethu said...

sir ungaluku manasatchiye illaya..
intha padam nalla irukka sir..
in my whole life 1st time i was slept in theatre...