அம்மா ஒருத்தி "சனியனே, தின்னு தொலை" என்று தன் குழந்தைக்கு பாசமாக உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். அதீத மேக்கப்புடன் சுற்றிக் கொண்டிருந்த பெண்கள் தங்களுக்கான வாடிக்கையாளரைத் தேடிக் கொண்டிருந்தார்கள். "எந்த ஊர் சார்.. சொல்லு சார்.." என்று குலையாத நம்பிக்கையோடு ஒவ்வொருவரின் பின்னாடியும் ஓடிக் கொண்டிருந்த பஸ் புரோக்கர்கள்.
எதையும் லட்சியம் செய்யாதவனாக அவன் ஓரமாக நின்று பாஸ்ட் புட் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வயது முப்பது - நாற்பது வரை இருக்கலாம். அவன்.. அல்லது அவர்?.. சரி, அவன் என்றே வைத்துக் கொள்வோம். மாநிறம். கொஞ்சம் குள்ளம். ஒல்லியாக இருந்தான்.தரையில் இருந்த கைப்பை அவன் ஏதோ ஒரு பாடாவதி கம்பெனியின் ரெப் என்பதை சொல்லாமல் சொல்லியது. ஒரே ஒரு ராத்திரி நம்மோடு பயணம் செய்யப் போகிறவனைப் பற்றி... இந்த விபரங்கள் போதும்.
அவன் முன்பே பதிவு செய்திருந்த சேலம் போகும் பஸ் வந்து நின்றது. ஏறினான். தன்னுடைய இருக்கை எண்ணைத் தேடி ஜன்னல் ஓரமாக அமர்ந்தான். மென்மையான காற்று முகத்தை வருடியது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பஸ்ஸில் ஏறத் தொடங்கி இருந்தார்கள். இன்னும் எத்தனை நேரம் ஆகுமோ என்ற மெல்லிய சலிப்போடு அவன் தலையைத் திருப்பியபோது.. அவளைப் பார்த்தான்.
தேவதை என்றொரு ஒற்றை வார்த்தைக்குள் அவளை அடைக்க முடியாது. அதையும் மீறிய அழகு.. (ச்சே.. இதற்கு மேல் வர்ணிக்க ஆரம்பித்தல் உடனே கார்த்திக்கு கல்யாணாம் பண்ணி வையுங்கள் என்று ஒரு கூட்டமே கிளம்பி வந்து ஓட்டும் அபாயம் இருப்பதால்.. இத்தோடு நிப்பாட்டிக்குவோம்) சோ.. அவள் ரொம்ப அழகாக இருந்தாள். கூடவே ஒரு குட்டி தேவதை. மகள்? கழுத்தில் இருந்த தாலி அதை உறுதி செய்தது. பெரியதொரு டிராவல் பேகை தூக்க முடியாமல் இழுத்து வந்து அவனுக்கு முன் இருக்கையில் வைத்தாள். அவன் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"கொஞ்சம் எந்திரிக்கிறீங்களா? அது என்னோட சீட்.."
சட்டெனக் கேட்ட குரல் அவனை மீண்டும் நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. திரும்பிப் பார்த்தால்.. திடகாத்திரமாக ஒரு மனிதன். யார் இந்த பூஜை வேளைக் கரடி? அவள் கணவனாகஇருப்பானோ?
"சார்?.."
"நீங்க உட்கார்ந்து இருக்குற ஜன்னல் சீட் என்னோட நம்பர் சார்.."
"சாரி.."
நகர்ந்து அமர்ந்தான். மற்றவன் உள்ளே சென்று சீட்டில் சாவகாசமாக சாய்ந்து கொண்டான். முன்சீட் தேவதை இன்னமும் அந்தப் பையைத் தூக்கி மேலே வைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
"எக்ஸ்க்யூஸ் மீ.. நான் ஹெல்ப் பண்றேன்.."
எழுந்து பையை சிரமப்பட்டு உள்ளே சொருகினான். அவள் பார்வையினால் நன்றி சொன்னாள். சந்தோஷமாக தன் இருக்கைக்கு மீண்டும் திரும்பியபோதுதான் கவனித்தான். பக்கத்து சீட்டில் இருந்த மற்றவன் அவனையே முறைத்துக் கொண்டிருந்தான். இவன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான். சற்று நேரத்தில் பஸ்கிளம்பியது.
எப்போது தூங்கிப் போனான் என்று தெரியவில்லை. சட்டென்று முழிப்பு வந்தது. ரேடியம் வாட்சின் முட்கள் மணி இரண்டு என்றன.
"போச்சுடா.. இனிமேல் தூக்கம் அவ்வளவுதான்" என்று மனசுக்குள் சொல்லியவனாக சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாரும் எட்டாம் ஜாமத்தில் இருந்தார்கள். அவனருகே இருந்த கரடியும் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் கைகளை நீட்டி சோம்பல் முறித்தான்.
உடம்பை முறுக்கியபோது அவனுக்கேத் தெரியாமல் கால்கள் முன் இருக்கைக்குக் கீழே போயின. மெத்தென எதன் மீதோ இடித்த மாதிரி இருந்தது. சடாரென்று கால்களை உள் இழுத்துக் கொண்டான். அந்த தேவதையின் கால்களோ? அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. லேசாக சூடாவது போல இருந்தது.
யாரும் தன்னை கவனிக்க வில்லையே என்பதை உறுதி செய்து கொள்வது போல சுற்றிப் பார்த்தான். மெதுவாக, அறியாமல் கால்களை விடுகிறவன் போல முன்னே நீட்டினான். சற்று நேரத்தில் அவனால் ஸ்பரிசத்தை உணர முடிந்தது. மெல்லிய சதைப்பகுதியின் மீது அவன் கால்கள் உரசிக் கொண்டிருந்தன.
அவள் பாட்டுக்கு எழுந்து குய்யோ முய்யோ என்று கத்தி விட்டால்? அவனுக்கு பயமாக இருந்தது. இருந்தும் கால்களை எடுக்க மனம் வரவில்லை. மெதுவாக கால்களைக் கொண்டு உரசத் தொடங்கினான்.
அவன் பயந்தாற்போல அவள் எந்தக் கூப்பாடும் போடவில்லை. அசந்து தூங்குகிறாளோ? இல்லை அவளுக்கும் இது பிடித்து இருக்கிறதோ? கேள்விகள் அவனுக்குள் சுழன்று அடித்தன. தைரியம் பெற்றவனாக அந்த உடலின் மீது தன் கால்களைப் படர விட்டான். போதை.. மயக்கம்..
அவனுக்கு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. தெரியாமல் தவற விடுவதைப் போல தன்னுடைய வாட்சை தவற விட்டான். வெளியே குனிந்து அதை எடுக்க முயல்பவன் போல முன்னாடி இருக்கையை பார்த்தபோது.. அவனுக்கு சுரீர் என்று மின்னல் தாக்கியது.
அந்தப் பெண் தன்னுடைய இரு கால்களையும் நன்றாக மடக்கி வைத்து இருக்கைகளுக்குள் அடங்கியவளாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அப்படியானால் கீழே இருந்தது?
மெதுவாகக் குனிந்து பார்த்தான். இத்தனை நேரம் எந்த எதிர்ப்பும் வராததன் அர்த்தம் புரிந்து போனது. அங்கே அந்தப் பெண் குழந்தை படுத்துக் கிடந்தது. அவனுக்கு குப்பென்று வேர்த்து விட்டது. இத்தனை நேரம் அந்தப் பத்து வயது பெண் குழந்தையிடம் தான்..? அவன் முகம் இருண்டு போனது. கண்களை மூடியவனாக படுத்துக் கொண்டான்.
பதினைந்து நிமிடங்கள் போயிருக்கும். கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தான். எதுவும் தெரியாமல் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உடம்பு இன்னும் தணலாக தகித்துக் கொண்டிருந்தது. ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக, மெதுவாக.. தன் கால்களை முன் இருக்கைக்குள் நுழைத்தான்.
பஸ் சேலம் பேருந்து நிலையத்துக்கும் நுழைந்த போது விடிந்து இருந்தது.
"விலகிக்கிறீங்களா.. நான் எறங்கணும்.."
பக்கத்து இருக்கை கரடியின் குரல் கேட்டு கண் முழித்தான். விலகினான். அந்த ஆள் பின் கதவு வழியாக இறங்கிப் போனான். முன் சீட் பெண் மேலே இருந்த தன்னுடைய பையோடு போராடிக் கொண்டிருந்தாள். அப்படி ஆனால்.. அவன் இவளுடைய கணவன் இல்லையா?
"இருங்க, நான் எடுத்து தரேன்.."
அந்த டிராவல் பேகையும் தன்னுடைய பையையும் எடுத்துக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினான். குழந்தையை கூட்டிக் கொண்டு அந்தப் பெண்ணும் இறங்கினாள்.
"புஜ்ஜிமா.. அங்கிளுக்கு தாங்க்ஸ் சொல்லு.."
"தாங்கயூ அங்கிள்.." அந்தக் குழந்தை வெள்ளந்தியாக சிரித்தப்படி சொன்னது.
"ஒரு நிமிஷம்.. இந்தப் பையைப் பிடிங்க.."
அவளிடம் பையைக் கொடுத்து விட்டு ஓடினான். அருகில் இருந்த கடையில் இருந்து இரண்டு சாக்லேட்டுகளை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான். குழந்தையிடம் நீட்டினான். அது தன் அம்மாவின் முகத்தை பார்த்தது.
"பரவாயில்ல.. வாங்கிக்கோ.."
அது சந்தோஷமாக வாங்கிக் கொண்டது. குனிந்து குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.
"நான் வர்றேங்க.."
திரும்பி நடக்கத் தொடங்கினான்.