January 7, 2009

அவனும் அவளும்...(4)!!!

அன்று அவளுடைய பிறந்த நாள். முதல் வாழ்த்து அவனுடையதுதான். காலையில் இருவரும் கோவிலுக்கு சென்றார்கள். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்து பிரகாரத்தில் அமர்ந்தார்கள். அவன் அவளிடம் கேட்டான்.
"என்ன வேண்டிக்கிட்டீங்க சாமிக்கிட்ட..?"
"எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லனுமா.. முடியாது.. போடா.."
"அட.. என்கிட்டே சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறியாம்.. சும்மா சொல்லும்மா.."
"எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்... "
"வேற?"
"இந்த வருஷம் மாதிரியே ஒவ்வொரு வருஷமும் எனக்கு வர முதல் வாழ்த்து உன்னோடதா தான் இருக்கணும்..அது வேண்டிக்கிட்டேன்"
"அடேங்கப்பா.. அப்புறம்?"
"நான் என்ன கதையா சொல்றேன்? நல்லா உம் கொட்டி கேட்குற..?"
"சரி.. மேல சொல்லுடிம்மா.. "
"கடைசியா.. நீ நல்லா இருக்கணும்டா.. எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா.. கடைசி வரைக்கும் நீயும் நானும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.. அவ்ளோதான்.."அவள் குரல் தழுதழுத்து விட்டது.
"அம்மாடி.. என்னம்மா இது.. கண்டிப்பா இருப்போம்மா.. சரியா.." அவன் அவளை தேற்றினான்.
"சரி.. சரி.. நீ என்ன வேண்டிக்கிட்ட.. சொல்லு.."
"வேண்டாம்டிமா.."
"எனக்கு ஒரு நியாயம்.. உனக்கு ஒண்ணா? சொல்லு..."
"அது.. நான் அப்புறமா சொல்றேனே..."
"ச்சுப்.. சொல்லுன்னா சொல்லணும்.. இல்லனா நான் கோபக்காரி ஆகிடுவேன்.. சொல்லு"
"நான் கடவுள வேண்டிக்கிட்டதேல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். சாகுற வரைக்கும் நாம இப்படியே இருக்கணும். என்னைக்காவது சாவு வந்தா.. எனக்கு முன்னாடி நீ செத்து போய்டணும். என்னால உன்னோட நினைவுகளை மட்டும் வச்சிகிட்டு வாழ்ந்திட முடியும். ஆனா.. உனக்கு முன்னாடி நான் போய்ட்டா.. அத உன்னால தாங்க முடியாதுடி.. நீ என்மேல அந்த அளவுக்கு பாசம் வச்சிருக்கேன்னு எனக்கு தெரியும்டிமா..." சொல்லி முடித்தபோது அவன் கண்களில் கண்ணீர் திரண்டு இருந்தது.

அவளால் எதுவும் பேச முடியவில்லை. வாயடைத்து போய் இருந்தாள். சிறிது நேரத்திற்கு பின் அவனை கட்டி கொண்டாள். அவளுடைய அழுகை வெகு நேரத்திற்கு பின் தான் ஓய்ந்தது.
அன்று அவன் அவளை பல இடங்களுக்கு கூட்டிப் போனான். அன்றிரவு அவன் அவள் மடியில் நிம்மதியாக தூங்கினாள்.
இது நடந்த நான்கு நாட்களுக்கு பிறகு, அவள் ஒரு பேருந்து விபத்தில் செத்துப்போனாள்.அவன் பைத்தியம் போல் ஆனான். தற்கொலைக்கு முயன்று அவன் நண்பர்களால் காப்பாற்றப்பட்டான். இன்றும் அவள் நினைவுகளில் நடைபிணமாக வாழ்ந்து வருகிறான்.
(இது என் நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்)
lum

5 comments:

கூட்ஸ் வண்டி said...

நெஞ்சைத் தொட்டது சாமியோவ்....

கார்த்திகைப் பாண்டியன் said...

தங்கள் வருகைக்கு நன்றி தோழரே..

நையாண்டி நைனா said...

ஆகா... அருமையாக எழுதி உள்ளீர்கள்.
நீண்ட காலமாக எழுதி வந்திருக்கிறீர்கள். தங்கள் பதிவை நான் இப்போதான் காண்கிறேன்.

இப்போதாவது கண்டேனே.

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி தோழரே.. நான் கடந்த மூன்று மாதங்களாக தான் எழுதி வருகிறேன்.. இரண்டு நாட்களுக்கு முன் தான் என்னுடைய வலைமனையை தமிழ்வெளியில் இணைத்துள்ளேன். அதனனல் தான் உங்களை போன்றவர்களை வந்தடைய முடிந்தது...

ச.பிரேம்குமார் said...

உண்மை சம்பவமா? மிகவும் வேதனைக்குரியது :(