April 20, 2009

எனக்குப் பிடித்த ஆசிரியர்கள்...!!!!

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு..

பொருள்: "எண்" என்று சொல்லப்படுவதும், "எழுத்து" என்று கூறப்படுவதும் என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் கண் என்பார்கள்.
எழுத்தறிவித்தவன் இறைவன் - இப்படி ஒரு சொலவடை உண்டு. சொல்லி கொடுக்குற ஆசிரியர கடவுளுக்கு சமமா சொல்ற மக்கள் நாம. கடவுள் எப்பவும் மனுஷன் கூட இருக்க முடியாதுன்னுதான் அம்மாவக் கொடுத்தான். ஆனா இன்னைக்கு இருக்கிற சூழ்நிலைல அம்மாவ விட பசங்க கூட அதிகமா நேரம் செலவிடுறது ஆசிரியர்கள்தான். மூணு வயசுல பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சா இருபது வயசுல கல்லூரி முடிக்கிற வரைக்கும்.. ஒரு பையனோட / பொண்ணோட நல்வாழ்வைத் தீர்மானிக்குரதுல ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கு. வெறுமனே பாடத்தை மட்டும் சொல்லித் தராம, ஒழுக்கத்தையும் வாழ்கைல போராடுற குணத்தையும், நம்பிக்கையையும் ஆசிரியர்கள்தான் சொல்லித்தரணும். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் பற்றிய இந்த தொடர்பதிவை என்னை எழுத சொல்லிய நண்பர் லோகுவுக்கு நன்றி. அவருடைய பதிவை படிக்க இங்க க்ளிக்குங்க..
நான் படிச்சது மதுரை ஜெய்ஹிந்துபுரத்துல இருக்குற செவேந்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளி. அந்தப் பள்ளி ஆரம்பிச்சப்போ போய் சேர்ந்த கொஞ்ச பேர்ல நானும் ஒருத்தன். கடைசியா பனிரெண்டாம் வகுப்பு முடிக்கிற வரை ஒரே ஸ்கூல் தான். ஆரம்ப காலத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச ஆசிரியர்கள்னா.. ப்ரின்சிபாலா இருந்த சுந்தர் சிங் சார், அவங்களோட மனைவிதான் என்னோட தமிழ் டீச்சர் (பேர் ஞாபகம் இல்லை).. மாட் மிஸ்(இவங்க ஒரு ஆங்கிலோ இந்தியன்.. ஆனா அருமையா தமிழ் பேசுவாங்க...) ரொம்ப சின்ன வயசுங்கரதால இவங்களைப் பத்தின வேற எந்த விஷயமும் ஞாபகம் இல்லை.
என்னுடைய பள்ளி வாழ்க்கைல நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ரெண்டு பேர்.
குருராஜ் சார்: ரெண்டாவதுல இருந்து +2 வரை எனக்கு பாடம் எடுத்தார். கடவுள் மேல ரொம்ப பக்தி உள்ளவர். எப்பவும் மாரல் கிளாஸ் எடுத்தாருன்னா எல்லாருமே அவ்வளவு விரும்பி கேப்போம். சின்ன சின்ன கதைகள் சொல்லி, பாட்டெல்லாம் பாடி போர் அடிக்காம நடத்துவார். ஒரு தடவை ஸ்கூல்ல இருந்து ஒரு மேடத்தை சஸ்பெண்டு பண்ணிட்டாங்க. யாருக்கும் தெரியாம ஒரு நாலஞ்சு பசங்க போய் அவங்களை பார்த்துட்டு வந்தோம். இதை யாரோ பிரின்சிகிட்ட போட்டுக் கொடுக்க, எங்க மேல விசாரணை வச்சாங்க. அப்போ கடைசி வரை கூட இருந்து, கார்த்தி அப்படி தப்பெல்லாம் பண்ண மாட்டான்னு வாதாடி எனக்காக சார் ரொம்ப கஷ்டப்பட்டதை மறக்கவே முடியாது. பள்ளிக்கூடம் முடிஞ்சா கடைசி நாள் அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கினேன். நீ ரொம்ப நல்லா வருவடான்னு அழுதுகிட்டே என்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டாரு. அந்த நிமிஷம் எனக்குள்ள இன்னும் அப்படியே இருக்கு.
மாரியம்மாள் மிஸ்: இவங்க என்னோட ஆறாம் வகுப்புல வந்து சேர்ந்தாங்க. வந்த புதுசுல யாருக்கும் இவங்களை பிடிக்காது. ரொம்ப கண்டிப்பானவங்க. ஆனா போகப் போக பசங்க அவங்க நல்ல மனச புரிஞ்சிக்கிட்டோம். பிசிக்ஸ் தான் அவங்களுடைய முக்கிய பாடம்னாலும் மத்த பாடத்துல யார் போய்க் கேட்டாலும் சொல்லிக் கொடுப்பாங்க. இவங்க கிளாஸ்லதான் நான் அதிகமா சேட்டை பண்ணி மாட்டி இருக்கேன். மத்த ஆசிரியர்களுக்கும் உதவி பண்றதுல மொத ஆளா இருப்பாங்க. நாம நல்லா இருந்தா பத்தாது, நம்மள சுத்தி இருக்கவங்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்னு எனக்கு சொல்லிக் கொடுத்தவங்க இவங்கதான்.
கல்லூரியில நிறைய ஆசிரியர்கள் பழகினாலும் அவ்வளவா யாரும் என்னை ரொம்ப பாதிச்சது கிடையாது. இந்தப் பதிவுல பிடிக்காத ஆசிரியர்கள் பத்தியும் எழுத சொல்லி இருந்தாரு நண்பர் லோகு. அன்னைக்கு அந்த நேரத்துல யாராவது ஒரு ஆசிரியர் மேல கோபம் வந்தது உண்டு. ஆனா இன்னைக்கு பொறுமையா யோசிச்சு பார்த்தா, எல்லாமே நம்ம நல்லதுக்குத்தானே.. யாருமே நாம கெட்டுப் போகணும்னு சொல்லலியேன்னு தான் தோணுது. உண்மைல நாமதான் ஆசிரியர்கள் மனச நோக அடிச்சிருக்கோம்.. அதனால் யாரையும் பிடிக்காதவங்கன்னு எழுத மனசு வரல..
ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறது இளைஞர்கள்னு சொன்னா.. அவங்கள நல்ல மனிதர்களா ஆக்குறது ஆசிரியர்கள்தான். இது ஒரு வேலை கிடையாது.. சேவை. இன்னைக்கு நெறைய பேரு வேலை கிடைக்காம விளையாட்டா இந்த ப்ரோபாசனுக்கு வராங்க. அப்படி இல்லாம இதை மனமுவந்து செஞ்சாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். நான் ஒரு ஆசிரியரா இருக்குறதுல பெருமைப்படுறேன். நான் படிக்கும்போது என்னோட ஆசிரியர் என்கூட எப்படி சகஜமா பழகனும்னு ஆசைப்பட்டேனோ, அப்படித்தான் நான் இன்னைக்கு இருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மாணவர்கள் யாரவது அவங்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் பத்தி சொல்லும்போது, அதுல என்னோட பேரும் இருந்தா, எனக்கு கிடச்ச மிகப்பெரிய விருது அதுதான்..!!!
இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்க விரும்புவது...
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

50 comments:

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ... முழுவதும் படிக்க நேரம் இல்லை(பணிக்கு செல்வதால்) பின் வந்து கருத்துரை சொல்கின்றேன்....

லோகு said...

/கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மாணவர்கள் யாரவது அவங்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் பத்தி சொல்லும்போது, அதுல என்னோட பேரும் இருந்தா, எனக்கு கிடச்ச மிகப்பெரிய விருது அதுதான்..!!!//

கண்டிப்பாக நடக்கும்..


மிக அருமையாக எழுதி விட்டீர்கள்.. மிக்க நன்றி..அடுத்தவர்களுடைய பதிவுகளையும் ஆவலோடு எத்ரிபார்க்கிறேன்..

இரா.சிவக்குமரன் said...

ஆசிரியர்கள பத்தி நினைவு கூர்ந்ததற்கு நன்றி, எனக்கும் என்னோட பள்ளி கால ஆசிரியர்களை ரொம்ப பிடிக்கும்.

நாஞ்சில் பிரதாப் said...

திரும்ப என்னை ஸ்கூலுக்கே கூட்டிட்டீ போயிட்டீங்களே...பாண்டியன்....
நல்ல கொசுவத்தி சுருள் பதிவு...கலக்குங்க

"அகநாழிகை" said...

கார்த்தி,
வழக்கமான உங்கள் நடையில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பலருக்கு ஆசிரியர்கள் தான் முதல் ரோல் மாடலாக இருந்திருப்பார்கள். எனது இரண்டாம் வகுப்பு ஆசிரியை ‘கிரேஸ் பத்மினி‘ பெயரில் எனக்கு இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. திருமணமே செய்து கொள்ளாத அவர் இன்றும் இருக்கிறார். அவ்வளவு அழகாக இருந்த அவர் ஏன் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது புரியாத புதிர். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்..

“அகநாழிகை“
பொன். வாசுதேவன்

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

//மிகப்பெரிய விருது அதுதான்..!!!//

அது கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said..
வணக்கம் ... முழுவதும் படிக்க நேரம் இல்லை(பணிக்கு செல்வதால்) பின் வந்து கருத்துரை சொல்கின்றேன்....//

பரவா இல்லை நண்பா.. பொறுமையா வந்து படிங்க.. பணிக்கு போற அவசரத்திலும் நமக்கு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said..
கண்டிப்பாக நடக்கும்..
மிக அருமையாக எழுதி விட்டீர்கள்.. மிக்க நன்றி..அடுத்தவர்களுடைய பதிவுகளையும் ஆவலோடு எத்ரிபார்க்கிறேன்..//

நன்றி நண்பா.. உங்கள் வாக்கு பலிக்கட்டும்

கார்த்திகைப் பாண்டியன் said...

//இரா. சிவக்குமரன் said..
ஆசிரியர்கள பத்தி நினைவு கூர்ந்ததற்கு நன்றி, எனக்கும் என்னோட பள்ளி கால ஆசிரியர்களை ரொம்ப பிடிக்கும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா

கார்த்திகைப் பாண்டியன் said...

//நாஞ்சில் பிரதாப் said..
திரும்ப என்னை ஸ்கூலுக்கே கூட்டிட்டீ போயிட்டீங்களே... பாண்டியன்.... நல்ல கொசுவத்தி சுருள் பதிவு...கலக்குங்க//

ஆகா.. உங்களுக்கு பழைய ஞாபகங்களை மீது எடுக்கிறதா நம்ம பதிவு.. கேக்கவே சந்தோஷமா இருக்கு.. முடிஞ்சா நீங்க கூட எழுதுங்களேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை.. //

நீங்க சொல்றது உண்மை நண்பா.. நம்ம விவரம் தெரிய ஆரம்பிக்குரப்போ, நம்மளை பெரிதும் பாதிப்பது ஆசிரியர்கள்தான்.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராமலக்ஷ்மி said..
அது கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். வாழ்த்துக்கள்.//

நன்றி மேடம்

Anonymous said...

உங்களால் உங்கள் ஆசிரியர்கு பெருமை!
நல்ல பதிவு!

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவின்..

அத்திரி said...

//கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மாணவர்கள் யாரவது அவங்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் பத்தி சொல்லும்போது, அதுல என்னோட பேரும் இருந்தா, எனக்கு கிடச்ச மிகப்பெரிய விருது அதுதான்..!!!//


விருது கிடைக்க வாழ்த்துக்கள் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி ..//
வாங்க நண்பா.. ரொம்ப நன்றி..

vinoth gowtham said...

கார்த்தி அருமை.
உங்கள் ஆசிரியர்கள் இந்த பதிவை படித்தார்கள் என்றால் ரொம்ப சந்தோஷ படுவார்கள்.
நீங்களும் கண்டிப்பாக உங்கள் மாணவர்கள் பேர் சொல்லும்ப்படி வருவிர்கள்.
வாழ்த்துக்கள்.

ஆ.முத்துராமலிங்கம் said...

கார்த்தகைபாண்டியன் பின்னிட்டீங்க...
வாத்தியாரை பற்றி உங்கள் எழுத்து நல்ல மரியாதையா உண்மையா இருக்கு.
//மூணு வயசுல பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சா இருபது வயசுல கல்லூரி முடிக்கிற வரைக்கும்.. ஒரு பையனோட / பொண்ணோட நல்வாழ்வைத் தீர்மானிக்குரதுல ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கு.//

உண்மை. அடுத்தவரியில் ஆசிரியருக்கு அட்வைஸ் மிகச் சரி.

//அன்னைக்கு அந்த நேரத்துல யாராவது ஒரு ஆசிரியர் மேல கோபம் வந்தது உண்டு. ஆனா இன்னைக்கு பொறுமையா யோசிச்சு பார்த்தா, எல்லாமே நம்ம நல்லதுக்குத்தானே.. யாருமே நாம கெட்டுப் போகணும்னு சொல்லலியேன்னு தான் தோணுது.//

அனுபவிச்சி சொல்லியிருக்கீங்க.
நல்ல பதிவு.

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
கார்த்தி அருமை.உங்கள் ஆசிரியர்கள் இந்த பதிவை படித்தார்கள் என்றால் ரொம்ப சந்தோஷபடுவார்கள். நீங்களும் கண்டிப்பாக உங்கள் மாணவர்கள் பேர் சொல்லும்ப்படி வருவிர்கள்.வாழ்த்துக்கள்.//

ரொம்ப நன்றி நண்பா.. நீங்கள் சொல்வது நடக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. முத்துராமலிங்கம் said..
கார்த்தகைபாண்டியன் பின்னிட்டீங்க...
வாத்தியாரை பற்றி உங்கள் எழுத்து நல்ல மரியாதையா
அனுபவிச்சி சொல்லியிருக்கீங்க.
நல்ல பதிவு. //

இன்னைக்கு நானும் ஒரு ஆசிரியர் என்பதில் பெருமை நண்பா.. மாணவன்ன மட்டும் இல்லாம ரெண்டு கொனத்துளையும் யோசிச்சு எழுதினேன்.. வாழ்த்துக்கு நன்றிப்பா..

MayVee said...

touchings of india va irukke...

oru teacheroda manasu innoru teacherkku thaane theriyum....

MayVee said...

nalla padivu karthikgai pandian

MayVee said...

naan ellam last bench students.. rowdys.... padikkatha pasanga... athanal teacher kku naanga ellam terror thaan

Suresh said...

//கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மாணவர்கள் யாரவது அவங்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் பத்தி சொல்லும்போது, அதுல என்னோட பேரும் இருந்தா, எனக்கு கிடச்ச மிகப்பெரிய விருது அதுதான்..!!!//

மச்சான் 100 ருபாய் கூடுத்தால் நான் சொல்லுறேன் கார்த்தி இஸ் பெஸ்ட்

சரி ஜோக்ஸ் அபார்ட் ...

உன் மாணாக்கர்கள் இந்த பதிவை படித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் இப்படி ஒரு நல்லாசிரியர் கிடைத்தற்க்கு

வாழ்த்துகள் மச்சான் நீ பெரிய ஆளாய் வருவடா நம்பிக்கை இருக்கு

இந்த பதிவை ஒரு அறிவுப்பையனுக்கு எழுத வாய்பு கொடுத்த முட்டாள் பையன் லோகுவுக்கு நன்றிகள் கோடி

மச்சான் நீ சொன்ன மாதிரியே சொல்லிட்டேன் வரட்டா ;) அப்புறம் அந்த கல்லமுட்டாய் ஞாபகம் இருக்கட்டும்

ஹேமா said...

பாண்டியன்,உங்களை உயர்த்திவிட்டவர்களை-வளர்த்துவிட்டவர்களை நீங்கள் மனதில் நிறுத்தியிருக்கும் வரை உங்கள் வாழ்வில் வெற்றிதான்.வாழ்த்துக்கள்.

நீங்களும் மாணவர்கள் மத்தியில் ஒருநாள் விருதாய் இருப்பீர்கள்.
அதற்கு உங்கள் எழுத்துக்களே சாட்சி.

பிரேம்குமார் said...

//கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மாணவர்கள் யாரவது அவங்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் பத்தி சொல்லும்போது, அதுல என்னோட பேரும் இருந்தா, எனக்கு கிடச்ச மிகப்பெரிய விருது அதுதான்..!!!
//

இதத்தான் பின்னூட்டமா எழுதனும்னு நினைச்சேன். நீங்களே எழுதிட்டீங்க.

சீக்கிரமே இந்த விருது உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மாணவர்கள் யாரவது அவங்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் பத்தி சொல்லும்போது, அதுல என்னோட பேரும் இருந்தா, எனக்கு கிடச்ச மிகப்பெரிய விருது அதுதான்..!!!//

வாவ்வ்வ்வ்... நல்ல எதிர்ப்பாப்புதான். உங்கள் கடமையை செய்யுங்கள் நண்பா... பலன் கண்டிப்பா! கண்டிப்பா கிடைக்கும்.... நன்றாக எழிய நடையில் எழுதியுள்ளீர்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//Mayvee said..
touchings of india va irukke...
oru teacheroda manasu innoru teacherkku thaane theriyum.... nalla padivu karthikgai pandiannaan ellam last bench students.. rowdys.... padikkatha pasanga... athanal teacher kku naanga ellam terror thaan//

நன்றி நண்பா.. நான் என் பள்ளியிலும் கல்லூரியிலும் கடைசி பெஞ்ச்தான்.. செய்யாத சேட்டை கிடையாது.. அதற்காக படிக்க மாட்டார்கள் என்றோ மற்றவர்களை மதிக்க மாட்டார்கள் என்றோ இருக்கிறதா என்ன? எல்லாம் நம்ம மனசுதான் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said..
வாழ்த்துகள் மச்சான் நீ பெரிய ஆளாய் வருவடா நம்பிக்கை இருக்கு
இந்த பதிவை ஒரு அறிவுப் பையனுக்கு எழுத வாய்பு கொடுத்த முட்டாள் பையன் லோகுவுக்கு நன்றிகள் கோடி//

உரிமையோடு தொழில் தட்டிக் கொடுக்கும் நண்பன் இருக்கும்போது என்ன கவலை நண்பா.. நன்றி நன்றி நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said..
பாண்டியன்,உங்களை உயர்த்திவிட்டவர்களை-வளர்த்து விட்டவர்களை நீங்கள் மனதில் நிறுத்தியிருக்கும் வரை உங்கள் வாழ்வில் வெற்றிதான். வாழ்த்துக்கள்.//

நாம் வாழ்வில் முன்னேறக் காரணம் ஆனவர்களை எப்படி மறக்க முடியும் தோழி.. உங்கள் வாழ்த்துக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
இதத்தான் பின்னூட்டமா எழுதனும்னு நினைச்சேன். நீங்களே எழுதிட்டீங்க.சீக்கிரமே இந்த விருது உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள்//

நாம ஒண்ணா யோசிக்கிறது ஒன்னும் புதுசு கிடையாதே நண்பா.. நம்ம ரெண்டு பேர் ப்ரோபெயிலும் என்ன எழுதி இருக்கோம்னு பாருங்க.. நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said.. வாவ்வ்வ்வ்... நல்ல எதிர்ப்பாப்புதான். உங்கள் கடமையை செய்யுங்கள் நண்பா... பலன் கண்டிப்பா! கண்டிப்பா கிடைக்கும்.... நன்றாக எழிய நடையில் எழுதியுள்ளீர்கள்...//

நன்றி தோழா.. என்னுடைய ஆசை என்னுடைய மாணவர்களின் மனதில் ஒரு நல்ல மனிதன் என்று இடம்பெறுவதுதான்.. அது நடக்கும் என்றே நம்புகிறேன்..

வேத்தியன் said...

கார்த்தி...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க...
சூப்பர்...

வேத்தியன் said...

பிடிக்காத ஆசிரியர்கள் எழுதாமல் விட்டதற்கு கூறிய காரணமும் கூறிய விதமும் அழகு...

வேத்தியன் said...

நல்ல உணர்வுபூர்வமாத் தான் இருக்கு...
கலக்கல்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன்..
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.
சூப்பர்...பிடிக்காத ஆசிரியர்கள் எழுதாமல் விட்டதற்கு கூறிய காரணமும் கூறிய விதமும் அழகு..//

ரொம்ப நன்றி நண்பா.. உள்ளதைத்தானே எழுதி இருக்கேன்.. எல்லாம் நம்ம நன்மைக்குத்தானே சொல்றாங்க..

டக்ளஸ்....... said...

\\இதை யாரோ பிரின்சிகிட்ட போட்டுக் கொடுக்க, எங்க மேல விசாரணை வச்சாங்க. அப்போ கடைசி வரை கூட இருந்து, கார்த்தி அப்படி தப்பெல்லாம் பண்ண மாட்டான்னு வாதாடி எனக்காக சார் ரொம்ப கஷ்டப்பட்டதை மறக்கவே முடியாது.\\

நீங்க அப்பவே அப்டியா தல...?
காருண்யா மேட்டரும் தெரியும்..!

\\கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மாணவர்கள் யாரவது அவங்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் பத்தி சொல்லும்போது, அதுல என்னோட பேரும் இருந்தா, எனக்கு கிடச்ச மிகப்பெரிய விருது அதுதான்..!!!\\

இதுதான்டா "பேராசிரியர்" டச்சு.

Anbu said...

அண்ணா தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி..
படித்து விட்டு வருகிறேன்

Anbu said...

நல்லா இருக்கு அண்ணா..

Anonymous said...

கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மாணவர்கள் யாரவது அவங்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் பத்தி சொல்லும்போது, அதுல என்னோட பேரும் இருந்தா, எனக்கு கிடச்ச மிகப்பெரிய விருது அதுதான்..!!!//
//

விருது கிடைக்க வாழ்த்துக்கள் நண்பா

Anonymous said...

உங்களை போய் யாரும் பிடிக்காது என்று சொல்வார்களா நண்பா? கண்டிப்பா மாணவர்களின் நெஞ்சத்தில் உங்களுக்கென்று ஒரு இடம் இருக்கும். காலம் விரைவில் அதற்கு பதில் அளிக்கும்.

Anonymous said...

ஆசிரியர் ஆக வேண்டும் என்று விரும்பினேன். நடக்கவில்லை. இருப்பினும் விரும்பிய துறையில் இருப்பதால் திருப்தி என்ற போதும் ஆசிரியர் பணி எனக்கு ரொம்ப பிடிக்கும்.


என்னுடைய ஆசிரியர்கள் எல்லோரும் நண்பர்களை போலவே பழகி வந்தனர். உங்களுடைய எழுத்துக்களை பார்க்கும் போது நீங்களும் அதே போல் தான் என்று தெரிகிறது. தொடருங்கள் உங்கள் பணியை நண்பா.

ஆசிரியர்-மாணவர் உலகம் தனி. நண்பா உங்களை நினைக்கையில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said..
நீங்க அப்பவே அப்டியா தல...?
காருண்யா மேட்டரும் தெரியும்..!//

மாணவ பருவம்னா கொஞ்சம் அப்படி இப்படித்தானே நண்பா.. காருன்யா சீக்ரடேல்லாம் வெளில சொல்லாதீங்க.. அதை நானே எழுதலாம்னு இருக்கேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said..
அண்ணா தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி..
படித்து விட்டு வருகிறேன்//

வாங்க அன்பு...சீக்கிரம் எழுதுங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said..
உங்களை போய் யாரும் பிடிக்காது என்று சொல்வார்களா நண்பா? கண்டிப்பா மாணவர்களின் நெஞ்சத்தில் உங்களுக்கென்று ஒரு இடம் இருக்கும். காலம் விரைவில் அதற்கு பதில் அளிக்கும்.//

அன்புக்கும் நம்பிக்கைக்கும் ரொம்ப நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said..
ஆசிரியர் ஆக வேண்டும் என்று விரும்பினேன். நடக்கவில்லை. இருப்பினும் விரும்பிய துறையில் இருப்பதால் திருப்தி என்ற போதும் ஆசிரியர் பணி எனக்கு ரொம்ப பிடிக்கும்.//

உங்களுக்கு ஆசிரியர் ஆகும் எண்ணம் இருந்ததா? ரொம்ப சந்தோஷம் நண்பா.. நீங்கள் சொல்வதுபோல் செய்யும் தொழிலை விரும்பி செய்கிறீர்களே.. அதுவே சிறந்தது..

//ஆசிரியர்-மாணவர் உலகம் தனி. நண்பா உங்களை நினைக்கையில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.//

நான் இந்த வேலைக்கு விரும்பி வந்ததற்கு காரணமே எப்போதும் மாணவர்களுடன் இருக்கலாம் என்பதுதான் நண்பா.. ஆனால் வந்தபின்தான் இதன் பொறுப்பும் முக்கியத்துவமும் புரிந்தது.. இன்று ரொம்ப சந்தோஷமாகவே இருக்கிறேன்.. மாணவர்கள் என் நண்பர்கள்.. இதுதான் என் வாழ்க்கை என்று மகிழ்ச்சியாக உள்ளேன் நண்பா..

ஆதவா said...

ஆசிரியரைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமையானவை. நான் படிக்கும் பொழுது எந்த ஆசிரியரையும் குறைத்து மதிப்பிட்டதில்லை. கிண்டல் செய்வதோடு சரி!! நம் வளர்ச்சிக்கு மறைமுகமான காரணமாக இருந்து ஒவ்வொரு மனதிலிருந்தும் அவர்கள் மறைந்துவிடுவது வேதனை!!!!

:)

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்கள் சொல்வது நியாயம்தான் நண்பா.. நம் வாழ்வின் ஏணிப்படிகளாய் இருக்கும் ஆசிரியர்களை மக்கள் மறந்து விடுகிறார்கள்.. இந்த நிலை மாறி அவர்களை எப்போது நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றுதான் இந்தப் பதிவு..

Kumaresh said...

Super a ezhudhi irukeenga sir..Kandiappa engaloda sirandha aasiriyargal pattiyal la neenga eppodhum irupeenga!

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றி குமரேசா..