April 30, 2009

உழைப்பாளர் தினம் + அல்டிமேட் வாழ்த்துக்கள் + கொஞ்சமா மொக்கை..

May 1 - நாளைக்கு உழைப்பாளர் தினம். உழைக்கும் மக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இந்த நாளை கொண்டாடும் இதே வேலையில உண்மையில நமக்கு இந்த நாளை கொண்டாடுற தகுதி இருக்கான்னு யோசிக்கணும். பாக்குற வேலைக்கு கூலியா கூட இருபது ரூபா கேட்டா போலிசே துரத்தி துரத்தி அடிக்கிற நிலைமையில்தான் நம்ம நாடு இருக்கு. கொளுத்துற வெயிலில நாள் பூரா வேலை செஞ்சும் ஒரு வேளை கஞ்சி குடிக்க முடியாம கஷ்டப்படுரவங்க எத்தனை பேர்? இதெல்லாம் மாறினா அன்னைக்கு நாம இந்த நாளை இன்னும் மகிழ்ச்சியா கொண்டாடலாம்.. மாறும்னு நம்புவோம்.
***************
* படிச்சது பத்தாம் வகுப்புதான்..

* ஐந்து மொழிகளை தங்கு தடை இல்லாமல் பேசக் கூடியவர்..

* தனது வாழ்க்கையை ஒரு எளிய மெக்கானிக்காக ஆரம்பித்தவர்..

* பிற்காலத்தில் இந்தியாவின் பெருமையாக பார்முலா ரேசிங்கில் கலந்து கொண்டார்..

* சினிமாவில் நுழைந்தாலும் 4 - 5 வருடங்கள் நிலையான இடம் கிடைக்காமல் போராட்டம்..
* நடிப்புக்காக பல "filmfare" அவார்டுகளை வாங்கியவர்...

* CBSC பிரிவில் ஐந்தாம் வகுப்பில் அவர் பற்றிய ரோல் மாடல்கள் என்ற பாடம் சேர்க்கப் பட்டுள்ளது..

* மே 1 இல பிறந்து - உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் உதாரணமாக இருப்பவர்..

* கிங் ஒப் ஓபனிங் என்று தமிழ் திரையுலகில் அழைக்கப்படுபவர்..

* அசல் "தல"....
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
***************
படிச்சதில் பிடிச்சது..
ஒரு தகவலை ரொம்ப அவசரமாக நண்பர்களுக்கு பரப்ப வேண்டுமா? மூன்று வழிகள் உள்ளன..

* டெலிபோனை பயன்படுத்துங்கள்..

* தந்தி அடியுங்கள்

* உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள்..

ரொம்ப ரொம்ப அவசரமா பரப்பணுமா?... அப்போ யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு பொண்டாட்டி கிட்ட சொல்லுங்க.. போதும்..
***************
முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு புதிர்.. இதுவும் என் மாணவர்கள் எனக்கு SMS அனுப்பினது தான்.. பின்னூட்டத்துல பதில சொல்லுங்க..
நீங்க ஒரு படகுல ஏறி நதிக்கு நடுவுல போய்க்கிட்டு இருக்கீங்க.. உங்க கிட்ட ரெண்டு சிகரெட் இருக்கு..(புகை பிடித்தல் உடல் நலனுக்கு கேடானது.. ). நீங்க அதுல ஒரு சிகரட்டை பத்த வைக்கணும். உங்ககிட்ட படகுல வேற ஒண்ணுமே இல்லை.. எப்படி பத்த வைப்பீங்க? யோசிங்க மக்களே..


புதிருக்கான விடை:- ஒரு சிகரெட்டை எடுத்து தண்ணீரில் வீசி விடுங்கள்.. இப்போது படகு லைட்டாகி (லேசாகி) விடும்.. அதில் நீங்கள் இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொள்ளலாம். என்னது.. இன்னொரு பதில் வேணும்மா? வச்சுக்கோங்க.. ஒரு சிகரெட்டை மேலத் தூக்கி போட்டு காட்ச் பிடிங்க.. காட்செஸ் வின் மாட்ச்.. (catches win matches)..மாச்சாஸ்னா என்ன.. தீக்குச்சி.. இப்போ சிகரட்ட ஈசியா பத்த வைக்கலாம்.. யாரோ பல்லை கடிக்குற சத்தம் கேக்குதே.. சரி சரி.. எதுன்னாலும் பேசித் தீர்த்துக்கலாம்ப்பா..:-)

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

58 comments:

SK said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித்துக்கும் :)

புதிர் பதில் தெரியலை தோழா.

சொல்லரசன் said...

சினிமாவில் எந்தவொரு பின்பலமும் இல்லாமல் உயர்ந்த உங்க "தல" கைக்கு
வாழ்த்துகள்.

உண்மையான தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

படகு ஒட்டியிடம் நிச்சயமாக தீப்பெட்டி இருக்கும்(எல்லாம் அனுபவம்தான்)

குடந்தைஅன்புமணி said...

அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித்துக்கு!
புதிர்?

வேந்தன் said...

மேதின வாழ்த்துக்கள் :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//SK said...
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித்துக்கும் :) புதிர் பதில் தெரியலை தோழா.//

நன்றி நண்பா.. புதிருக்கு விடை நாளைக்கு சொல்றேன்..

ஆ.முத்துராமலிங்கம் said...

எல்லோருக்கும் நானும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி நாளை எனக்கு விடுப்புக் கிடையாது ஆதலால்
நான் கொண்டாட இயலாது.

தலைய பத்தி பத்து வார்த்த... பத்தையும் முத்தா சொல்லிட்டீங்க.
தல பத்தாப்புதான் (பத்தாம் வகுப்பு)
படித்திருக்காரா... இப்பதாங்க எனக்கு தெரியுது. அஜித்துக்கும் பிறந்த நாள் வாழத்து சொல்லிக்குவோம்.

|ரொம்ப ரொம்ப அவசரமா பரப்பணுமா?... அப்போ யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு பொண்டாட்டி கிட்ட சொல்லுங்க.. போதும்.. |

.. ம்.. ம், உங்களுக்கும் பொண்டாட்டி வரட்டும் அப்ப இப்படி எழுதுங்க!!! அப்ப என்ன நடக்குதுன்னு பாருங்க... ஹி... ஹி.. நினைசாலே சிரிப்பு வருது.

அய்யைய்யோ புதிர் போட்டுடீங்களே..
நான் ஒடிரேன்பா.

கலக்கல்..
கார்த்திகைப் பாண்டியன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
சினிமாவில் எந்தவொரு பின்பலமும் இல்லாமல் உயர்ந்த உங்க "தல"
வாழ்த்துகள்.உண்மையான தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.படகு ஒட்டியிடம் நிச்சயமாக தீப்பெட்டி இருக்கும்(எல்லாம் அனுபவம்தான்)//

வாழ்த்துக்கு நன்றி நண்பா.. ஆனா உங்க விடை தப்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

// குடந்தைஅன்புமணி said...
அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித்துக்கு!
புதிர்?//

ஹி ஹி.. அதுக்கு மொக்கையான பதில்கள் இருக்கு நண்பா.. அது நாளைக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேந்தன் said...
மேதின வாழ்த்துக்கள் :)//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
.. ம்.. ம், உங்களுக்கும் பொண்டாட்டி வரட்டும் அப்ப இப்படி எழுதுங்க!!! அப்ப என்ன நடக்குதுன்னு பாருங்க... ஹி... ஹி.. நினைசாலே சிரிப்பு வருது.//

உங்க வாக்கு பலிச்சு சீக்கிரமே வந்தா சரிண்ணே.. ஹி ஹி ஹி.. நாங்க அதையும் வாழ்ந்து பாத்துருவோம்ல..

புதியவன் said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...

Chill-Peer said...

//அசல் "தல".... அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. //

தலக்கி இன்னைக்கா பொறந்த நாளு... வாழ்த்துக்கள்.

//(புகை பிடித்தல் உடல் நலனுக்கு கேடானது.. ). //

அசத்துங்க கார்த்திக்...

//.... எப்படி பத்த வைப்பீங்க?//

பத்தவச்சு பழக்கமில்லைங்கோ...

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said...
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...//


வாழ்த்துக்கு நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Chill-Peer said...
அசத்துங்க கார்த்திக்...//

நன்றி நண்பா..

அபுஅஃப்ஸர் said...

மனைவி மேலே அவ்வளவு என்னாங்க....... ரசிச்சேன்

அல்டிமே ஸ்டாருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் சொல்றது கிடையாது நண்பா.. கல்யாணம் ஆனா மக்கள்தான் சொல்றாங்க.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

vinoth gowtham said...

கார்த்தி

எல்லாம் சூப்பர்..ஜோக் நச்..

நான் தலைய பத்தி ஒரு பத்து ஸ்கூப்ஸ் எழுதி வச்சி இருக்கேன்..நாளைக்கு மறக்காம நாம கடைக்கு வந்தது பாருங்க..

மே தின நல்வாழ்த்துக்கள்..

குமரை நிலாவன் said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித்துக்கும் :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
கார்த்தி எல்லாம் சூப்பர்..ஜோக் நச்..
நான் தலைய பத்தி ஒரு பத்து ஸ்கூப்ஸ் எழுதி வச்சி இருக்கேன்..நாளைக்கு மறக்காம நாம கடைக்கு வந்தது பாருங்க..
மே தின நல்வாழ்த்துக்கள்..//

நன்றி வினோத்.. நான் உங்க பதிவுகள் எதையும் மிஸ் பண்ண மாட்டேன்.. நாளைக்கு கண்டிப்பா பாத்துடுறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித்துக்கும் :)//

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.. நன்றி நண்பா..

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

அடேங்கப்பா.. கொஞ்ச நாளா காணாமப் போன நம்ம நசரேயன் அண்ணன் திரும்பி வந்துட்டாரு.. வாழ்த்துக்கு நன்றிண்ணே..

சொல்லரசன் said...

//நான் சொல்றது கிடையாது நண்பா.. கல்யாணம் ஆனா மக்கள்தான் சொல்றாங்க..//

யாருங்க அந்த தைரியசாலி?

அத்திரி said...

தகவல் மேட்டர் சூப்பர் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
யாருங்க அந்த தைரியசாலி?//

ச்சே ச்சே.. நான் உங்களைப்போய் சொல்வேனா நண்பா.. பாருங்க.. ஆதாரத்துக்கு கீழையே நண்பர் அத்திரி ஆமாம் சாமி போட்டிருக்காரு..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
தகவல் மேட்டர் சூப்பர் நண்பா//

நீங்க பேசல நண்பா.. உங்க அனுபவம் பேசுது..

தீப்பெட்டி said...

///நீங்க ஒரு படகுல ஏறி நதிக்கு நடுவுல போய்க்கிட்டு இருக்கீங்க.. உங்க கிட்ட ரெண்டு சிகரெட் இருக்கு..(புகை பிடித்தல் உடல் நலனுக்கு கேடானது)..///

புகைபிடித்தல் உடல் நலனுக்கு கேடானது அப்படீன்னு எச்சரிக்கை வாக்கியம் வர்றதால ஒரு சிகரெட்ட அவர் வாயில் வைத்து புகைச்சுகிட்டெ வர்றாரு.. அந்த சிகரெட் காலியாகுரதுக்குள்ள அந்த நெருப்பை வைத்து அடுத்த ஒரு சிகரெட்டை பத்த வைப்பார்...
சரியா?.....

அப்புறம்....

உழைப்பாளர் தின வாழ்த்துகள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் நண்பா.. ஆனா உங்க விடை தப்பு..

Anonymous said...

'தல' அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தீப்பெட்டி said...

//உங்க விடை தப்பு..//
அப்போ சரியான விடைய நான் நாளைக்கு சொல்லுறேன்(-;

வேத்தியன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தல...

ஆதவா said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் கார்த்திகைப்பாண்டியன்.

தல பத்து அருமையான குத்து!!! அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

புதிர் அவிழ்க்கும் அளவுக்கு நமக்குத் திறமையில்லை.. அப்பறமா வந்து விடை தெரிஞ்சுக்கறேன்!!!!

Suresh said...

உழைப்பாளர் திண வாழ்துக்கள் ;) தல வாழ்த்துகளும் மச்சான் பார்டி தான்

Anonymous said...

thalaikku vaazthukkal !

thala pathina pathivu super boss !

where did u get the information that he had been included as a role model in CBSC syllabus?

-thala fans

pappu said...

தல மேட்டரா? வினோத்தும் நிறைய போட்டிருக்காரு.

Anonymous said...

ஒரு சிகரெட்டு கிட்ட இன்னொரு சிகரெட்ட பற்றி பத்த வைக்கலாம்.........
அப்புறம்தான் எது வேணும் எண்டாலும் பத்திக்குமே...........

பிரேம்குமார் said...

//CBSC பிரிவில் ஐந்தாம் வகுப்பில் அவர் பற்றிய ரோல் மாடல்கள் என்ற பாடம் சேர்க்கப் பட்டுள்ளது//

இதெல்லாம் எப்போ நடந்தது?? புதிருக்கு விடைய யாராவது சீக்கிரம் சொல்லுங்கப்பா.... மண்டை காயுது

டக்ளஸ்....... said...

வாங்க ஸார்...
எனக்கு கொஞ்சம் ஆணி அதிகமா இருக்கறதால நம்ம "தல" யப் பத்தி பதிவு போட முடியல..!
தல க்கி "உதித்த நாள் வாழ்த்துக்கள்" பா..?

என்னாது புதிரா?
நான் படிக்கவே இல்லையே...!

லோகு said...

வழக்கம் போல அசத்தல்..

வழிப்போக்கன் said...

அண்ணா...
நான் கொண்டாட முடியாது...(ஐ ஆம் அ ஸ்டூடண்ட்)அதனால கொண்டாடுகிற உங்கள மாதிரி அண்ணாக்களுக்கு உழைப்பாழர் தின(அதென்ன மே தினன்னு ஆங்கிலத்துல சொல்லிகிட்டு) வாழ்த்துகள்...

நான் எல்லா பின்னூட்டத்தயும் படிச்சேன்..எல்லாருக்கும் நீங்க "உங்க விடை தப்பு"ன்னு சொல்லி இருக்கதால நான் சொன்னா மட்டும் என்ன சரின்னா சொல்லப்போரீங்க???(எப்பிடி நம்ம எஸ்கேப்பு???)..

Karthik said...

'தல'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said...
'தல' அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//


வாழ்த்துக்கள் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

// தீப்பெட்டி said...
//உங்க விடை தப்பு..//
அப்போ சரியான விடைய நான் நாளைக்கு சொல்லுறேன்(-;//

கஷ்டப்படாதீங்க.. நானே சொல்லிடுறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தல.//

வாங்க நண்பா.. உங்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் கார்த்திகைப்பாண்டியன்.தல பத்து அருமையான குத்து!!! அவருக்கும் என் வாழ்த்துக்கள்.புதிர் அவிழ்க்கும் அளவுக்கு நமக்குத் திறமையில்லை.. அப்பறமா வந்து விடை தெரிஞ்சுக்கறேன்!!!!//

நன்றி நண்பா.. விடைய சீக்கிரம் போட்டுடுறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said...
உழைப்பாளர் திண வாழ்துக்கள் ;) தல வாழ்த்துகளும் மச்சான் பார்டி தான்//

வாழ்த்துக்கள் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
thalaikku vaazthukkal !thala pathina pathivu super boss !where did u get the information that he had been included as a role model in CBSC syllabus?-thala fans//

thanks for the visit guys.. i get these info from my students and SMS from friends..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said...
தல மேட்டரா? வினோத்தும் நிறைய போட்டிருக்காரு.//

பார்த்துட்டேன்.. அசத்தல்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
ஒரு சிகரெட்டு கிட்ட இன்னொரு சிகரெட்ட பற்றி பத்த வைக்கலாம்.........
அப்புறம்தான் எது வேணும் எண்டாலும் பத்திக்குமே...........//

இது கூட நல்லா இருக்கே..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said...
இதெல்லாம் எப்போ நடந்தது?? புதிருக்கு விடைய யாராவது சீக்கிரம் சொல்லுங்கப்பா.... மண்டை காயுது//

மண்டை காயுற அளவுக்கு போக வேண்டாம் பிரேம்.. இது மொக்கை புதிர்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்....... said...
வாங்க ஸார்...எனக்கு கொஞ்சம் ஆணி அதிகமா இருக்கறதால நம்ம "தல" யப் பத்தி பதிவு போட முடியல..!தல க்கி "உதித்த நாள் வாழ்த்துக்கள்" பா..?என்னாது புதிரா?
நான் படிக்கவே இல்லையே...!//

வாழ்த்துக்கள் டக்கு.. என்னாது கண்ணு தெரியலையா? நல்ல வாத்து டாக்டரா பாருப்பா..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said...
வழக்கம் போல அசத்தல்..//

thanks boss..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வழிப்போக்கன் said...
அண்ணா...நான் கொண்டாட முடியாது...(ஐ ஆம் அ ஸ்டூடண்ட்)அதனால கொண்டாடுகிற உங்கள மாதிரி அண்ணாக்களுக்கு உழைப்பாழர் தின(அதென்ன மே தினன்னு ஆங்கிலத்துல சொல்லிகிட்டு) வாழ்த்துகள்...//

பிரவீன்.. உங்க தமிழ் பற்றை பாராட்டுகிறேன்.. வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik said...
'தல'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! :)//

நன்றி நண்பா..

தீப்பெட்டி said...

நல்லா போட்டீங்க புதிரு...

இதெல்லாம் ஒரு பதிலா புதிருக்கு உம்மையெல்லாம்...

" உழவன் " " Uzhavan " said...

நண்பா.. கொஞ்சமா மொக்கைனு சொல்லிட்டு, இப்படி போட்டுத் தள்ளிருக்கீங்க.. அஜித்துக்கு அடுத்த படமாவது சக்ஸஸ் ஆக வாழ்த்துக்கள் :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said...
நல்லா போட்டீங்க புதிரு...
இதெல்லாம் ஒரு பதிலா புதிருக்கு உம்மையெல்லாம்...//

ஹி ஹி ஹி.. பொறுத்தருள்க

கார்த்திகைப் பாண்டியன் said...

// " உழவன் " " Uzhavan " said...
நண்பா.. கொஞ்சமா மொக்கைனு சொல்லிட்டு, இப்படி போட்டுத் தள்ளிருக்கீங்க.. அஜித்துக்கு அடுத்த படமாவது சக்ஸஸ் ஆக வாழ்த்துக்கள் :-)//

அசலை நம்புகிறோம்.. பார்க்கலாம்