மதுரையில் இருக்கும் பதிவுலக அன்பர் தருமி ஐயா அவர்களை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தேன். அருமையான மனிதர். இனிமையாகப் பழகுகிறார். என்னைப் போலவே அவரும் ஆசிரியர் என்பதால் மாணவர்கள் பற்றியும், கல்லூரி பழக்க வழக்கங்கள் பற்றியும் பேசினோம். எனக்குத் தெரியாத பல பதிவர்கள் பற்றி சொன்னார். பதிவுலகம் பற்றியும், இன்றைய அரசியல் பற்றிய தன்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். ஐயாவைப் போலவே அவருடைய துணைவியாரும் ரொம்ப நல்லவர். அருகில் இதுக்கும் மனிதர்களுக்கு ஒத்தாசை செய்து கொண்டு இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் அவருடன் உரையாடி விட்டு விடை பெற்றேன். தருமி ஐயாவைப் பற்றி எனக்கு சொல்லிய அண்ணன் வால்பையனுக்கு நன்றி. கூடிய சீக்கிரம் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பை எதிர்பாருங்கள் நண்பர்களே..
***************
சனிக்கிழமை அழகர் அட்டகாசமாக ஆற்றில் இறங்கினார். இந்த முறையும் பச்சை பட்டு தான். வழக்கம் போலவே கூட்டம் அள்ளியது. இந்த வருடம் ஸ்பீக்கர்கள் கட்டி பாட்டு போடும் மக்களை அவ்வளவாக காணவில்லை.
"ஒவ்வொரு வருஷமும் பச்சை உடுத்திதான் இறங்குறாரு.. ஆனா நமக்குத்தான் ஒண்ணும் பெரிசா நடக்க மாட்டேங்குது.. "
"கவலைப்படாத மாப்புள.. இந்த வருஷம் கண்டிப்பா அழகரு நம்ம குறையெல்லாம் தீத்துடுவாறு பாரேன்.."
ரெண்டு பேர் என் முன்னே பேசிக்கொண்டே சென்றனர். இந்த நம்பிக்கை தானே மக்களை இன்று வரை செலுத்தி கொண்டு இருக்கிறது. வைகையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் டாங்கில் கொண்டு வந்து தண்ணீர் நிரப்பினார்களாம். காலக்கொடுமை. எல்லா கேபிள் சானல்களிலும் அழகரின் தரிசனம்தான். நிறைவாக, நேரடியாகவே தரிசனம் செய்து வந்தேன்.
***************
மற்ற எல்லா ஊர்களைக் காட்டிலும் மதுரையில் தேர்தல் ஜுரம் சற்று அதிகம்தான். காரணம் உங்களுக்கேத் தெரியும். அழகிரியை இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க.வினர் வேலை செய்து வருகிறார்கள். வோட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி கேள்விப்பட்டு உள்ளேன். ஆனால் பார்த்தது இல்லை. இந்த முறை அதையும் பார்த்து விட்டேன். "கவர் வாங்கிக்கிறீங்களா.." கேஷுவலாக கேட்கிறார்கள். ஓட்டுக்கு ஐநூறு ருபாய். இதில் ரெண்டாவது ரவுண்டு வேற வருமாம். சில இடங்களில் சேலைகள் பட்டுவாடாவும் நடக்கிறது. சிட்டிங் எம்.பி மோகன் மருத்தவமனையில் உள்ளார். ரெண்டு கோடி ருபாய் வாங்கிக் கொண்டு விலகி விட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.
சனிக்கிழமை இரவு கயல்விழி அழகிரியின் பிரச்சார பேச்சைக் கேட்டேன். "அழகர் ஆத்துல இறங்குற இந்த மாசத்துல உங்களை நம்பி எங்கப்பா மதுரை தேர்தல் களத்துல இறங்கி இருக்கார். உங்களுக்கு என்ன வேணும்னாலும் செஞ்சு கொடுப்பார். அவர் மண்ணின் மைந்தர்.." நிறுத்தி நிதானமாக பேசினார். பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் என்ன முடிவு பண்ணி இருக்காங்கன்னு இன்னும் ஒரு வாரத்துல தெரிஞ்சிடும். ஆனா இந்த தேர்தல் ஒரு கெட்ட உதாரணமா மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இப்பவே மக்கள் கொடுக்கிற பணம் பத்தலைன்னு சொல்றாங்க. இப்படியே போனா, நம்ம ஜனநாயகக் கடமைய செய்றதுக்கு எவ்வளவு தருவீங்கன்னு பேரம் பேசக்கூடிய நிலை வருமோன்னு பயமா இருக்கு.
***************
அழகான வார்த்தைகள்..
எந்த ஒரு மனிதனும்
தேடி தேடி அலைந்தாலும்
திரும்பவும் கிடைக்காத
ஒரே சிம்மாசனம்..
"தாயின் கருவறை.."
தாமதமா சொல்றேன்.. இருந்தாலும்.. அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..
***************
முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு ஜோக்..
ஒரு பறவை மோட்டார் சைக்கிளில் அடிபட்டு விட்டது. மயங்கிக் கிடந்த பறவையை பைக்கை ஓட்டி வந்த மனிதன் எடுத்துக் கொண்டு போய் கூண்டில் அடைத்து வைத்தான். அதற்கு பசிக்குமே என்று கொஞ்சம் ரொட்டியும் தண்ணீரும் கூட வைத்தான். மயக்கம் தெளிந்த பறவை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கத்தத் தொடங்கியது.. "அய்யய்யோ.. ஜெயிலா.. பைக்குக்காரன் செத்துட்டானா..?"
***************
நண்பர்களே.. வரும் பதிமூணாம் தேதி திருச்சியில் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணி இருக்கோம்னு உங்களுக்கு தெரியும். கண்டிப்பா வாங்க.
இடம்: கல்லணை
நேரம்: காலை பத்து மணி.
அதுக்கு முன்னாடி வர மக்கள் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இருக்குற ஹோட்டல் மேகாவுக்கு வாங்க.
தொடர்புக்கு..
மா.கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138
"அகநாழிகை" பொன். வாசுதேவன் - 99945 41010
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
75 comments:
கார சாரமான மிக்ஸிங்..!
இப்பவே மக்கள் கொடுக்கிற பணம் பத்தலைன்னு சொல்றாங்க. இப்படியே போனா, நம்ம ஜனநாயகக் கடமைய செய்றதுக்கு எவ்வளவு தருவீங்கன்னு பேரம் பேசக்கூடிய நிலை வருமோன்னு பயமா இருக்கு.//
:-(
வருத்தமா இருக்கு!!
அழகர் மற்றவரை அழ வைத்தாலும், அழகிரியை கரை ஏற்றி விடுவார் என்றே தோன்றுகிறது :)
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.
அனுஜன்யா
Super..
நண்பா,
நடத்து நண்பா நடத்து...
அப்புறம் ஒரு விஷயம்.
மேகாவுக்கு தனியாதான் வரணுமா?
"தண்ணி"யாவும் "வார"லாமா?
பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
:((
நல்லா தான் மச்சான் யோசிச்சு இருக்க
ஒருமுறையாவது அழகர் விழாவை நேர்ல பாக்கணும்...
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்...
கமலும் இருக்கிறாராமே...
களைகட்டட்டும்...
//சிட்டிங் எம்.பி மோகன் மருத்தவமனையில் உள்ளார். ரெண்டு கோடி ருபாய் வாங்கிக் கொண்டு விலகி விட்டதாக பேசிக் கொள்கிறார்கள். //
ச்சே..ச்சே..வாய்ப்பில்ல கார்த்திக்,
மிரட்டப்பட்டிருக்கலாம்.
திருச்சி பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு. ஜோக் டாப். :)))
நல்லாத்தான் யோசிக்கிறீங்க... பதிவர் சந்திப்புக்கு மலைக்கோட்டை பிள்ளையார் மறுத்துவிட்டாரா என்ன? கல்லணைக்கு மாத்திப்புட்டீகளே... வாழ்த்துகள்... சிறப்புற நடைபெற...!
சந்திக்க முடியாமல் போனமைக்கு , மிக்க வருந்துகிறேன்., மதுரை பதிவர் சந்திப்பில் கண்டிப்பாக சந்திப்போம், //சிட்டிங் எம்.பி மோகன் மருத்தவமனையில் உள்ளார். ரெண்டு கோடி ருபாய் வாங்கிக் கொண்டு விலகி விட்டதாக பேசிக் கொள்கிறார்கள். //
ச்சே..ச்சே..வாய்ப்பில்ல கார்த்திக்// , நானும் வழி மொழிகிறேன்.
நல்ல அலசல்
காரசாரமான கலவை
ஜோக் நல்லாயிருக்கு சிரித்தேன்
அம்மாவின் கருவை..... சான்ஸே இல்லே கலக்கல் தல
உங்க பதிவர்கள் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்
//அழகான வார்த்தைகள்..
எந்த ஒரு மனிதனும்
தேடி தேடி அலைந்தாலும்
திரும்பவும் கிடைக்காத
ஒரே சிம்மாசனம்..
"தாயின் கருவறை.."//
உண்மையிலேயே மிக அழகான வார்த்தைகள் தான் நண்பரே...
கார்த்தின்னா... உக்காந்து நல்லாதான் யோசிச்சி இருக்கீங்க!
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு. பின்னுட்டம் மட்டுமாவது இடலாம்ன்னு வந்தேன். அதற்கும் நேரமில்லாததால் கிளம்ப போகிறேன். (உங்களுக்கு மட்டும்)
ஜோக்" அருமை.
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!
உக்கார்ந்து யோசிச்சது
நல்லா இருக்குது நண்பா
ஜோக் நல்லா சிரித்தேன்
எந்த ஒரு மனிதனும் தேடி தேடி அலைந்தாலும் திரும்பவும் கிடைக்காத ஒரே சிம்மாசனம்.. "தாயின் கருவறை.."
அருமை நண்பா
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.
கூடிய சீக்கிரம் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பை எதிர்பாருங்கள் நண்பர்களே../////
அட்றா சக்கை....
/////இப்படியே போனா, நம்ம ஜனநாயகக் கடமைய செய்றதுக்கு எவ்வளவு தருவீங்கன்னு பேரம் பேசக்கூடிய நிலை வருமோன்னு பயமா இருக்கு.//////
இதே பயம் தான் எனக்கு
மதுரையில் இருக்குற எல்லா பதிவர்களும் சேர்ந்து ஒரு மாநாடு நடத்தலாம்!
//கவலைப்படாத மாப்புள.. இந்த வருஷம் கண்டிப்பா அழகரு நம்ம குறையெல்லாம் தீத்துடுவாறு பாரேன்.." //
நம்பிக்கை தானே வாழ்க்கை நண்பா
அப்புறம் ஜோக் சூப்பர்..
சரி எந்த கட்சிக்கு ஓட்டு போடபோறிங்க
எந்த ஒரு மனிதனும்
தேடி தேடி அலைந்தாலும்
திரும்பவும் கிடைக்காத
ஒரே சிம்மாசனம்..
"தாயின் கருவறை.."
நச்சென்ற வார்த்தைகள்
கலவையா கலக்கிட்டீங்க... பாண்டியன்.
::உக்கார்ந்து யோசித்தது:: சினிமாவுல்லலாம் நடந்துக் கிட்டேதான யோசிப்பாங்க... நீங்க உக்கார்த்துகிட்டே யோசிச்சீங்கலா!! நல்லாதான் யோசிச்சிருக்கீங்க.
|வோட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி கேள்விப்பட்டு உள்ளேன். ஆனால் பார்த்தது இல்லை. இந்த முறை அதையும் பார்த்து விட்டேன். "கவர் வாங்கிக்கிறீங்களா.." |
நானும் கொஞ்ச நாள் முன்னாடி பார்த்தேன் ஊர் பஞ்சாயத்து எலக்சன்ல காசு கொடுத்தாங்க.
|அழகான வார்த்தைகள்..
எந்த ஒரு மனிதனும்
தேடி தேடி அலைந்தாலும்
திரும்பவும் கிடைக்காத
ஒரே சிம்மாசனம்..
"தாயின் கருவறை.."|
'கவித' நல்லா இருக்கே,
அருமையா எழுதியிருக்கீங்க கார்த்திகைப் பாண்டியன்.
//வைகையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் டாங்கில் கொண்டு வந்து தண்ணீர் நிரப்பினார்களாம். காலக்கொடுமை.//
என்ன கொடும பாண்டியன் இது :(((
நகைச்சுவை பட்டாசா இருந்துச்சு.... வெகுவாய் ரசித்தேன்
நல்லாத்தான் யோசிக்கிறீங்க
//டக்ளஸ்....... said...
கார சாரமான மிக்ஸிங்..!//
வாங்க டக்கு.. ஒன்லி மிக்சிங்.. நோ ஊறுகாய்..:-)
//திரட்டி.காம் said...
:-(
வருத்தமா இருக்கு!!//
ஆம்மா நண்பா.. கவலைப்பட வேண்டிய விஷயம் தான்..
//அனுஜன்யா said...
அழகர் மற்றவரை அழ வைத்தாலும், அழகிரியை கரை ஏற்றி விடுவார் என்றே தோன்றுகிறது :)
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.
அனுஜன்யா//
வாங்க கவிஞரே.. ரொம்ப நன்றி..
// vinoth gowtham said...
Super..//
thanks nanbaa
//நையாண்டி நைனா said...
நண்பா,நடத்து நண்பா நடத்து...
அப்புறம் ஒரு விஷயம்.
மேகாவுக்கு தனியாதான் வரணுமா?
"தண்ணி"யாவும் "வார"லாமா?
பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
நைனா.. தனியா வாங்க.. தண்ணியா வராதீங்க...;-)
//Suresh said...
நல்லா தான் மச்சான் யோசிச்சு இருக்க//
நன்றி மாப்பு..
//வேத்தியன் said...
ஒருமுறையாவது அழகர் விழாவை நேர்ல பாக்கணும்...பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்...
கமலும் இருக்கிறாராமே...
களைகட்டட்டும்...//
நீங்க சீக்கிரம் இந்தியாவுக்கு வாங்க நண்பா.. எல்லாம் அரேஞ் பண்ணிடலாம்
//Chill-Peer said...
ச்சே..ச்சே..வாய்ப்பில்ல கார்த்திக்,
மிரட்டப்பட்டிருக்கலாம்.//
எனக்கும் மோகனைப் பிடிக்கும் நண்பா.. ஆனால் மக்கள் இப்படித்தான் பேசுகிறார்கள்
//Kanna said...
திருச்சி பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்//
நன்றி தோழரே
//Karthik said...
நல்லா இருக்கு. ஜோக் டாப். :)))//
thanks bro..:-)
நல்லா யோசிச்சு எழுதி இருக்கீங்க , கார்த்தி .... தொடர்ந்து யோசிப்பீங்கன்னு நம்புகிறோம் :)
மதுரை பதிவர் சந்திப்பில் பார்க்கலாம், வாத்தியாரே !!!
//குடந்தைஅன்புமணி said...
நல்லாத்தான் யோசிக்கிறீங்க... பதிவர் சந்திப்புக்கு மலைக்கோட்டை பிள்ளையார் மறுத்துவிட்டாரா என்ன? கல்லணைக்கு மாத்திப்புட்டீகளே... வாழ்த்துகள்... சிறப்புற நடைபெற.!//
நிகழ்ச்சில கொஞ்சம் மாற்றம் நண்பா.. வாழ்த்துக்கு நன்றி
// தேனீ - சுந்தர் said...
சந்திக்க முடியாமல் போனமைக்கு , மிக்க வருந்துகிறேன்., மதுரை பதிவர் சந்திப்பில் கண்டிப்பாக சந்திப்போம்//
கண்டிப்பாக சந்திக்கலாம் நண்பா
//அபுஅஃப்ஸர் said...
நல்ல அலசல்
காரசாரமான கலவை//
நன்றி நண்பா
//புதியவன் said...
உண்மையிலேயே மிக அழகான வார்த்தைகள் தான் நண்பரே...//
நன்றி புதியவன்..
//Anbu said...
:((//
ஏன் அன்பு சோகம்?
//கவின் said...
கார்த்தின்னா... உக்காந்து நல்லாதான் யோசிச்சி இருக்கீங்க!
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!//
நன்றி கவின்.. உங்க கமலும் வாராருப்பா..
//ராம்.CM said...
நல்ல பதிவு. பின்னுட்டம் மட்டுமாவது இடலாம்ன்னு வந்தேன். அதற்கும் நேரமில்லாததால் கிளம்ப போகிறேன். (உங்களுக்கு மட்டும்)
ஜோக்" அருமை.//
நன்றி ராம்.. வேலை எல்லாம் முடிச்சுட்டு பொறுமையா வாங்க..
//pappu said...
கூடிய சீக்கிரம் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பை எதிர்பாருங்கள் நண்பர்களே../////
அட்றா சக்கை....//
இந்த மாசக் கடைசில இருக்கலாம் பப்பு
//குமரை நிலாவன் said...
உக்கார்ந்து யோசிச்சது
நல்லா இருக்குது நண்பா //
நன்றி தலைவா
//வால்பையன் said...
மதுரையில் இருக்குற எல்லா பதிவர்களும் சேர்ந்து ஒரு மாநாடு நடத்தலாம்!//
கண்டிப்பா அண்ணே.. நீங்க தான் தலைமை.. சொல்லிப்புட்டேன்..:-)
//அத்திரி said...
நம்பிக்கை தானே வாழ்க்கை நண்பா
அப்புறம் ஜோக் சூப்பர்..
சரி எந்த கட்சிக்கு ஓட்டு போடபோறிங்க//
நன்றி நண்பா.. இந்த தடவை ஒட்டு போடலை..:-(
//பிரியமுடன்.......வசந்த் said...
எந்த ஒரு மனிதனும்
தேடி தேடி அலைந்தாலும்
திரும்பவும் கிடைக்காத
ஒரே சிம்மாசனம்..
"தாயின் கருவறை.."
நச்சென்ற வார்த்தைகள்//
நன்றி வசந்த்
//ஆ.முத்துராமலிங்கம் said...
கலவையா கலக்கிட்டீங்க... பாண்டியன்.//
தாங்க்ஸ் தோஸ்து..
//.." கேஷுவலாக கேட்கிறார்கள். ஓட்டுக்கு ஐநூறு ருபாய்//
காசு வாங்கியாச்சா?? :)
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.
//ச.பிரேம்குமார் said...
என்ன கொடும பாண்டியன் இது :(((//
எல்லாம் நம்ம நேரம் பிரேம்.. கொஞ்ச நாள் கழிச்சு அங்க அழகர் இறங்க இடமே இல்லாம வீடு கட்டினாலும் ஆச்சரியம் இல்ல..
//நசரேயன் said...
நல்லாத்தான் யோசிக்கிறீங்க//
நன்றி நண்பா
//பாலகுமார் said...
நல்லா யோசிச்சு எழுதி இருக்கீங்க , கார்த்தி .... தொடர்ந்து யோசிப்பீங்கன்னு நம்புகிறோம் :)
மதுரை பதிவர் சந்திப்பில் பார்க்கலாம், வாத்தியாரே !!!//
உங்களைப் பற்றி தருமி ஐயா சொன்னார் நண்பரே.. கூடியா சீக்கிரம் சந்திப்போம்..
//உழவன் " " Uzhavan " said...
காசு வாங்கியாச்சா?? :)
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.//
1500 நண்பா.. வீட்டுல கவரால வச்சு போட்டுட்டு போய்ட்டாங்க..
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். ஆமா கார்த்திக் சார் நாளைக்கு ஜனநாயக கடமை ஆற்றவில்லையா?
நல்ல கலவையான பதிவு..பதிவர் சந்திப்பு கரிகாலனின் கல்லணையிலா...ஜமாய்...
/"கவலைப்படாத மாப்புள.. இந்த வருஷம் கண்டிப்பா அழகரு நம்ம குறையெல்லாம் தீத்துடுவாறு பாரேன்.."/
சரியாத்தான் கேட்டீங்களா? அழகிரின்னு சொல்லி இருக்கப் போறாங்க
///வைகையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் டாங்கில் கொண்டு வந்து தண்ணீர் நிரப்பினார்களாம்.///
அது இந்த வருடம் இல்லை. இந்த வருடம் வைகை அனையில் இருந்து தான் தண்ணீர் வந்தது.
எப்ப மதுரையில் பதிவர் சந்திப்பு சீக்கிரம் சொல்லுங்க...
கவிதையும் நகைச்சுவையும் மிகவும் நன்றாக இருந்தன.
நண்பா... மிகவும் மன்னிக்கவும்... என்னால் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை... இதை டைப்பும் பொழுது ஓரளவுக்கு சரியாகத்தான் இருக்கிறேன். ஆனால் ஐந்து மணிநேரப் பயணத்தில் உங்களிடம் பார்த்து பேச நேரமிருக்காது என்பதால் வரவில்லை!!!!
புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகீறேன்.
அன்னையர் தின கவிதையும், ஜோக்கும் சூப்பரப்பு...திருச்சி பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் நண்பா...
Kavidai arumai.. kidacha kaasu la enakku konjam thalluradhu!! :P
Seekiramaa Madurai la pathivar santhippu erpaadu seiyunga nanbare...
munkootiye sollidum patchathil kandippaaga kalandhugolla migavum aavludun kaathirukkiren...
Prabu M
http://vasagarthevai.blogspot.com
cuteprabu20@gmail.com
//விஷ்ணு. said...
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். ஆமா கார்த்திக் சார் நாளைக்கு ஜனநாயக கடமை ஆற்றவில்லையா?//
நன்றி நண்பா.. இந்த தடவை எனக்கு ஓட்டு இல்லப்பா..
// Rajeswari said...
நல்ல கலவையான பதிவு..பதிவர் சந்திப்பு கரிகாலனின் கல்லணையிலா...ஜமாய்...//
நன்றி தோழி..
//பாலா... said...
சரியாத்தான் கேட்டீங்களா? அழகிரின்னு சொல்லி இருக்கப் போறாங்க//
யாருன்னா என்ன.. மக்களுக்கு நல்லது பண்ணினா சரி நண்பா
//KRICONS said...
அது இந்த வருடம் இல்லை. இந்த வருடம் வைகை அனையில் இருந்து தான் தண்ணீர் வந்தது.எப்ப மதுரையில் பதிவர் சந்திப்பு சீக்கிரம் சொல்லுங்க...//
மே 24.. ஞாயிற்றுக்கிழமை மதுரையில் சந்திப்பு நண்பரே
//பாலராஜன்கீதா said...
கவிதையும் நகைச்சுவையும் மிகவும் நன்றாக இருந்தன.//
நன்றிங்க..
//ஆதவா said...
புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகீறேன்.//
பரவா இல்லை ஆதவா.. உடம்பை பார்த்துக்கோங்க
// சம்பத் said...
அன்னையர் தின கவிதையும், ஜோக்கும் சூப்பரப்பு...திருச்சி பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் நண்பா...//
வாங்க வாங்க.. என்னப்பா.. ரொம்ப நாளா ஆளவே காணோம்? வாழ்த்துக்கு நன்றி..
//Karthik Lollu said...
Kavidai arumai.. kidacha kaasu la enakku konjam thalluradhu!! :P//
asukku pusukku.. ithukku aasaiyap paaru..:-)
//பிரபு . எம் said...
Seekiramaa Madurai la pathivar santhippu erpaadu seiyunga nanbare...
munkootiye sollidum patchathil kandippaaga kalandhugolla migavum aavludun kaathirukkiren...//
கண்டிப்பா நண்பா.. உங்களுக்கு தனிமடல் அனுப்புறேன்
மிகவும் நன்றாக இருந்தன :)
பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பட்டாம்பூச்சிக்கு நன்றி..:-)
Post a Comment