வெயில் மங்கிய ஒரு மாலை வேளையில்...
காலை தழுவும் அலைகளை ரசித்தவாறே..
நினைவுகளின் பாதையில் கை கோர்த்தவர்களாய்..
நீயும் நானும் நடந்து கொண்டிருந்தோம்..!!
ஏதோ நினைவு வந்தவளாய்
நீ சட்டெனக் கேட்டாய்..
"நான் யார் உனக்கு..?"
என்னவென்று சொல்ல முடியாத
மௌனத்தில் நான் உறைந்து போனேன்..!!
உன் கண்கள் பார்த்து சொன்னேன்..
"அன்பால் என்னை ஆட்கொண்ட
ராட்சசி நீ..!!
அன்பைப் பொழியும் தாயாய்..
கண்டிப்பில் தகப்பனாய்..
சுக துக்கங்களை சேர்ந்து
பகிரும் தோழியாய்..
நீ என் எல்லாமுமாக இருக்கிறாய்..
உன்னோடு இருக்கும் பொழுதுகளில்
மட்டுமே நான் என்னை
நானாக உணருகிறேன்..!!"
வழிந்து ஓடிய உன் கண்ணீரில்
நிரம்பி இருந்தன கருணையும்,
என் அன்பும் மற்றும் நம் நட்பும்..!!
பின்பு நான் உன்னைக் கேட்டேன்..
"எனக்காக இத்தனை செய்தாய்..
உனக்காக நான் என்ன
செய்யப் போகிறேன்..?"
இறுக்கி என் கைகளை பிடித்து..
என் தோள்களில் சாய்ந்து
கொண்டு நீ சொன்னாய்..
"என் கூடவே இரு..
சாகும்வரை.. நண்பனாக இரு..!!!"
******************
நண்பர்களே.. பணிமாற்றத்தின் காரணமாக என்னால் அடிக்கடி பதிவுகளை பார்க்க வர முடியவில்லை.. எனினும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எப்படியாவது வந்து நண்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டு விடுகிறேன்.. இன்னும் சில தினங்களில் எனக்கென ஒரு மடிக்கணினி வாங்க முயன்று வருகிறேன்.. அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே..
***************
மதுரையில் அடாது மழை பெய்த போதும் விடாது அருமையாக நடந்தது பதிவர் சந்திப்பு.. விபரங்களுக்கு நண்பர்கள் தருமி, தேவன்மாயம், அன்பு, பாலகுமார் ஆகியோருடைய பதிவுகளை பாருங்கள்.. கலந்து கொண்ட அனைவருக்கும், வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் நன்றி..
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
47 comments:
//வெயில் மங்கிய ஒரு மாலை வேளையில்...
காலை தழுவும் அலைகளை ரசித்தவாறே..
நினைவுகளின் பாதையில் கை கோர்த்தவர்களாய்..
நீயும் நானும் நடந்து கொண்டிருந்தோம்..!!//
அழகு -:)
ஹா ஹா மச்சான் சிறப்பு
//இறுக்கி என் கைகளை பிடித்து.. என் தோள்கம்ளில் சாய்ந்து கொண்டு நீ சொன்னாய்.."என் கூடவே இரு.. சாகும்வரை.. நண்பனாக இரு..!!!"//
மச்சான் நீ தான் டா நண்பன் :-)
மதுரையில் சந்திப்பு சிறப்பாய் நடைபெற்றது .. :-) வாழ்த்துகள்
//அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே..//
ரொம்ப கஷ்டம்தான் :(
இருந்தாலும் பரவாயில்லை.... அப்பாடா .. :)
kavitha..kavitha...!
anne enakkum solli thaanga anne..!
கவிதை உங்களுக்கு நன்றாக வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
அட நம்ம பக்கத்து ஊர் காரரா நீங்க.
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க..
பணி மாற்றமா என்னாச்சுங்க..
புது மடிக் கணினிக்கு வாழ்த்துக்கள்!
பதிவர் சந்திப்புக்கும் வாழ்த்துக்கள்!
மதுரை எப்படி இருக்குங்க??
அண்ணா கவிதை கலக்கல்...
//அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே..//
சீக்கிரம் மடிக்கணிணி வாங்குங்கள் அண்ணா
அட!! கவிதை நல்லா வந்திருக்கே.
அழகான வரிகளில் நட்பை வரைகின்றது கவிதை.
பதிவர் சந்திப்பை எல்லா பதிவுகளிளும் பார்த்து படித்து சந்தோசம் கொண்டேன்.
நன்றி.
நெஞ்சார
எழுதப்படும்
வார்த்தைகள்
கவிதைக்கோலம்
பூண்டுள்ளது!!
கடற்கரை.... மாலைநேரம்... அழகான இரு நட்பு... ஆரம்பம் அசத்தல்
நட்பு என்பது முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் பிரபஞ்சம் போன்றது. அதன் ஆரம்ப எல்லைகள் யாவிலும் நின்று விளிம்புகளைப் புரிந்து கொள்பவர்களே நன்கு நீடித்திருக்க முடியும்.
பெண்களின் நட்பு விரிசலைடந்த பாறை போன்றது.. எப்பொழுது வேண்டுமானாலும் பாறை விரிந்து உடைந்து விழலாம்..
கவிதை எளிமையாக இருந்தது.....
நேரம் கிடைக்கும் பொழுது வாருங்கள்.. இணையம், வலை போன்றவைகளெல்லாம் நம் வாழ்வின் ஒரு சிறு பகுதிதான்... அதுவே நமக்குத் தடைக்கற்களாக இருந்துவிடவும் கூடாது...
//என் கூடவே இரு..
சாகும்வரை.. நண்பனாக இரு.//
அருமையான வார்த்தைகள்.
நண்பா, காதலின் முதல் படியில் இருக்கின்ற மாதுரி உங்கள் கவிதை இருக்கு,... நல்லாவே வந்திருக்கு தொடரலாம்... என் ஆச்சு பணிமாற்றம்?... எதுவாயினும் நல்லவையாக இருக்க வாழ்த்துக்கள்....
அனுபவ கவிதை, உங்கள் நட்பு தொடரவாழ்த்துகள்.
//அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே..//
நாங்கள் பொறுத்துகொள்கிறோம்,ஆனால் நீங்கள் இல்லாமல் நையான்டியைதான்
எங்களால் பொறுத்துகொள்ளமுடியவில்லை.
//நட்பு என்பது முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் பிரபஞ்சம் போன்றது. அதன் ஆரம்ப எல்லைகள் யாவிலும் நின்று விளிம்புகளைப் புரிந்து கொள்பவர்களே நன்கு நீடித்திருக்க முடியும்.//
///பெண்களின் நட்பு விரிசலைடந்த பாறை போன்றது.. எப்பொழுது வேண்டுமானாலும் பாறை விரிந்து உடைந்து விழலாம்..///
---வழிமொழிகிறேன்.
ஒரு பெண்ணோட நட்புக்கு என்ன பெயர் வைச்சாலும் இறுதியில் அபாயம் தான்.
கவிதைக்கு வாழ்த்துகள்.
காதல், நட்பு - இதோட பயங்கரமான மறுபக்கத்தை பத்தி யாராச்சும் ஒரு பதிவு போடுங்கலேன்பா... எல்லோருமே உருகுறீங்களே...!
ரசித்தேன்
காதலுக்கும் நட்பிற்குமான வித்தியாசத்தை உங்கள் கவிதையில் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்...
//வழிந்து ஓடிய உன் கண்ணீரில்
நிரம்பி இருந்தன கருணையும்,
என் அன்பும் மற்றும் நம் நட்பும்..!!
//
நெகிழ்வான வரிகள் கார்த்திகைப் பாண்டியன்...
கார்த்தி,
நன்றாக உள்ளது.
புதிய பணிக்கு வாழ்த்துக்கள்.
எனக்கும் தேர்வுகள் காரணமாக ஒரு மாதம் செயல்பாடு குறைவாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நீயும் நானும் ஒரே பாதையில் தான் நண்பா பயணிக்கிறோம்.
//"சாகும்வரை நண்பனாயிரு..!!!"//
கட்டாயமாக..
கண்டிப்பாக...
இறுக்கி என் கைகளை பிடித்து..
என் தோள்களில் சாய்ந்து
கொண்டு நீ சொன்னாய்..
"என் கூடவே இரு..
சாகும்வரை.. நண்பனாக இரு..!!!"//
ரசித்தேன்...
மதுரை பதிவர் சந்திப்பு
சத்தியமாய்
சாத்தியமானது
உங்களால் மட்டுமே.,
நன்றி , நண்பரே.,
//Suresh said...
ஹா ஹா மச்சான் சிறப்பு
//இறுக்கி என் கைகளை பிடித்து.. என் தோள்கம்ளில் சாய்ந்து கொண்டு நீ சொன்னாய்.."என் கூடவே இரு.. சாகும்வரை.. நண்பனாக இரு..!!!"//
மச்சான் நீ தான் டா நண்பன் :-) //
அய்யா சக்கரை, பேராசிரியர் கேர்ள் பிரண்டை சொல்லி இருக்காருப்பா , நம்மள இல்ல.
/*"என் கூடவே இரு..
சாகும்வரை.. நண்பனாக இரு..!!!"*/
பின்னே இப்படி மொக்கை போடுற ஆள கட்டிக்கிட்டு கடைசி வர சந்தோசமா இருக்க முடியுமா?
\\"என் கூடவே இரு..
சாகும்வரை.. நண்பனாக இரு..!!!\\
மிக(ச்)சிறப்பா சொல்லியிருக்கீங்க
மொத்த கவிதையும் அழகு.
pathivar santhippu vara mudiyaama ponaduku romba varutha paduren. varenu solitu varala, sorry. anda mazhayala cold, wheezing jasti aayiduchu. vetla veliya vidala.
வெயில் மங்கிய ஒரு மாலை வேளையில்... காலை தழுவும் அலைகளை ரசித்தவாறே.. நினைவுகளின் பாதையில் கை கோர்த்தவர்களாய்..நீயும் நானும் நடந்து கொண்டிருந்தோம்..!!
ஆரம்பமே அழகு
அன்பால் என்னை ஆட்கொண்ட ராட்சசி நீ..!! அன்பைப் பொழியும் தாயாய்.. கண்டிப்பில் தகப்பனாய்.. சுக துக்கங்களை சேர்ந்து பகிரும் தோழியாய்.. நீ என் எல்லாமுமாக இருக்கிறாய்.
அருமையான வரிகள்
எனக்காக இத்தனை செய்தாய்..உனக்காக நான் என்ன செய்யப் போகிறேன்..?"
இறுக்கி என் கைகளை பிடித்து.. என் தோள்களில் சாய்ந்து கொண்டு நீ சொன்னாய்.."என் கூடவே இரு.. சாகும்வரை.. நண்பனாக இரு..!!!"
அதானே நட்பை விட சிறந்தது எது???
ரசித்தேன் முதல் முதலாய் உங்கள் கவிதையை ....
கவிதை ரொம்ப நல்லாருக்கு நண்பா... மதுரைக்கே மாறியாச்சா? வாழ்த்துகள்!
" நண்பா... கொஞ்சம் நம்மளோட கவிஜ படிக்க வாயேன்."
கவிதை நல்லாயிருக்கு கார்த்தி..
நட்பு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத ஒரே உறவு....எளிமையாய் ஆனால் ஆழமாய் சொல்லியிருக்கிறீர்கள்....இதன் பரிமாணமே ஒரு அலாதி தான்...உண்மையாய் ஆராதிப்பவர் மட்டுமே இதன் ஆழம் அறிவர்.. வாழ்த்துக்கள் உங்கள் உள்ளம் தொட்ட நட்புக்கள் எல்லாம் வாழ.....
அழகான வரிகள்...ரசிக்கும் விதத்தில்....திரும்ப திரும்ப படிக்க வைக்க நினைக்கும் உணர்வுபூர்வ வார்த்தை அலங்காரம். அசத்தல் பாண்டியன்.
மனைவி, காதலி யாராக இருந்தாலும் நட்பு என்ற வார்த்தை ஒன்றுதான் நீண்டநாட்கள் இறுதிவரை வரக்கூடியது, காதலியையும், கணவன்/மனைவியையும் உறவுகளாஈ மீறி நட்பு என்பதில்தான் ஆழம் இருக்கு, அதை எளிமையான கவிதையில் தெளிவிபடுத்திருக்குரீர்கள்
வாழ்த்துக்கள்
நான் இன்னைக்கு தான் ஊருக்கு வந்தேன்!
நீங்க பதிவு போடலையா?
அழகான கவிதை. ரசித்தேன்
எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க! அடுத்த பிறந்தநாளை மனைவியுடன் கொண்டாட இறைவன் ஆசீர்வதிப்பாராக!
இது நல்லா இருக்கு அத எல்லாரும் சொல்லி இருப்பாக...
நான் வந்தது உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம்னு:-)
நண்பா நைனா.. நம்ம கானா பானா யாரையோ மெரினா பீச்சுக்கு தள்ளிட்டு வந்திருக்காருனு நினைக்கிறேன். அதான் அந்த பொண்ணு "நான் யார் உனக்கு..?" னு கேட்டிருக்கு. இதெல்லாம் ஏன்னு கேக்குறது இல்லையா??
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பனே..
கவிதை அருமை நண்பா
//"சாகும்வரை நண்பனாயிரு..!!!"//
கட்டாயமாக..
கண்டிப்பாக...
கவிதை அழகு.
கவிதை நன்றாக உள்ளது...
:)))
அற்புதமான வரிகள் கார்த்திகைப் பாண்டியன்!
மிகவும் ரசித்தேன் உங்களது கவிதையை...
அன்பின் கா.பா
நல்லாருக்கு - கவுஜ
சாகும்வரை நண்பனாக இரு - இது உதட்டின் நுனியிலிருந்து வரும் வரியல்ல - இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் வரிகள் - நன்று நன்று
மடிக்கணினி வாங்க நல்வாழ்த்துகள்
சந்திப்பினை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு பாராட்டுகள்
Post a Comment