May 1, 2009

பசங்க - திரை விமர்சனம்..!!!


இப்படிப்பட்ட ஒரு படத்தை தயாரித்ததற்காக - முதலில் சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே கதை நாயகர்களாக கொண்டு படம் எதுவும் சமீபத்தில் வந்ததாக நினைவில்லை. பொதுவாக தமிழ் சினிமாவின் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுபவர்களாக, இயல்பு நிலைக்கு மாறாக மட்டுமே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளனர். அதை உடைத்து, முதல் முறையாக குழந்தைகளின் அக உலகுக்கு வெகு நெருக்கத்தில் இருக்கும் ஒரு படமாக இருக்கிறது.."பசங்க..". படம் பார்க்கும் மக்களுக்கு மீண்டும் தங்கள் பள்ளிப் பிராயத்து நினைவுகளை கண்டிப்பாக இந்தப் படம் மீட்டு தரும்.


ஒரு டவுன் பள்ளி. அங்கே படிக்கும் மாணவர்களான ஜீவா, பக்கோடா, குட்டிமணி மூவரும் நண்பர்கள். சேட்டைக்காரர்கள். பள்ளிக்கு புதிதாக வரும் அன்புக்கரசை வாத்தியார்கள் உள்பட எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது. ஜீவாவுக்கும் அன்புக்கும் இடையே வெறுப்பும் போட்டியும் உண்டாகிறது. இது அவர்களின் குடும்பம் வரை பாதிக்கிறது. அன்பின் சித்தப்பாவும் ஜீவாவின் அக்காவும் காதலிக்கிறார்கள். அவர்களால் குடும்பங்கள் இணைகின்றன. ஆனால் ஜீவா, அன்பு இடையேயான விரோதம் குறையவில்லை. கடைசியில் இருவரும் நண்பர்கள் ஆனார்களா என்பதே கதை.


கற்றது தமிழ் படத்தில் சின்ன வயது ஜீவாவாக வரும் சிறுவன்தான் இந்தப் படத்தில் ஜீவா. கண்களில் வெறுப்பு மிளிர எல்லா காட்சிகளிலுமே நன்றாக நடித்து உள்ளான். கடைசியில் அன்புக்காக அழும் காட்சியில் நம்மையும் கண்கலங்க வைக்கிறான். அன்பாக வரும் சிறுவனும் அசத்துகிறான். ஜீவாவின் அள்ளக்கைகளாக வரும் பக்கோடாவும், குட்டிமணியும் தூள். ஏத்தி விட்டே தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளும் பக்கோடா அசத்துகிறான். எல்லாக் குழந்தைகளுமே ரொம்ப இயல்பாக நடிக்க வைத்திருப்பது இயக்குனரின் திறமை.


சரோஜா படத்தில் அறையும் குறையுமாக வந்த வேகாவா இவர்? தாவணி, சேலையில் அவ்வளவு திருத்தம். எளிய காதலனாக அறிமுகம் ஆகி இருக்கும் விமல் நம் பக்கத்து வீட்டில் அடிக்கடி பார்க்கும் முகம் போல் இருக்கிறார். பள்ளிக்கூட வாத்தியாராக, ஜீவாவின் அப்பாவாக நடித்து இருப்பவர் ரொம்பவே நன்றாக நடித்து உள்ளார். சண்டை போட்டுக் கொள்ளும் அன்பின் அப்பாவை அழைத்து பேசும் காட்சிகள் ரொம்பவே யதார்த்தம். மகனுக்காக கஷ்டப்படும் அன்பின் அப்பாவும் கச்சிதம்.


படத்தின் முதல் பாதி முழுக்க பசங்களின் அட்டகாசம் தான். ஒரே மாதிரி பிரச்சினைகளாக வந்து கொண்டிருக்கும் வேளையில் படத்தை சுவாரசியம் ஆக்குவது வேகா - விமலின் காதல் காட்சிகள். போனில் இருவரும் ஒருச்வரை ஒருவர் கலாய்த்துக் கொள்வது கலக்கல். ஓட்டப் போட்டியில் பையனுடன் கூடவே குடும்பமும் ஓடுவது சின்ன கவிதை. சைக்கிள் இல்லாமல் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் மகன் ஏங்க, அவனுக்காகவே அப்பா முதல் முறையாக வாழ்க்கையை பற்றி யோசிக்க ஆரம்பிப்பது அருமை. பெற்றோரின் பிரச்சினைகள் எந்த அளவுக்கு குழந்தைகளை பாதிக்கும் என்பதை யதார்த்தமாக சொல்லி உள்ளார்கள்.


ஜேம்ஸ் வசந்தன் இசையில் டாக்டர். பாலமுரளி கிருஸ்ணா பாடி இருக்கும் அன்பு உண்டாக்கும் வீடு பாடலும் அதை படமாக்கி இருக்கும் விதமும் அருமை. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாருமே புதுமுகங்கள்தான். நிறைவாக செய்து இருக்கிறார்கள். எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு நல்ல படத்தை தந்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் பாண்டிராஜ். படத்தின் பலவீனம் முதல் பாதியின் வேகமும் படத்தின் நீளமும். இருந்தாலும் இந்த மாதிரி படங்களை ஊக்குவிக்கும்போது சின்ன சின்ன குறைகளைத் தவிர்த்து விடலாம். வாழ்க்கையின் இயல்பான பக்கங்களுக்கு வெகு அருகே இருக்கும் ஒரு படத்தை தந்தமைக்கு இயக்குனருக்கும் நன்றி.


பசங்க - பட்டயக் கிளப்புராய்ங்க..


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

65 comments:

குமரை நிலாவன் said...

நான்தான் முதல்ல

KADUVETTI said...

ஓட்டும் கிடயாது! கருத்தும் கிடயாது! :))

குமரை நிலாவன் said...

நில்லுங்க படிச்சிட்டு வரேன்

Rajeswari said...

அப்போ படம் பார்க்கலாம்னு சொல்லுங்க..

Rajeswari said...

விமர்சனம் அருமை..படம் பார்க்க போறேன்..

குமரை நிலாவன் said...

நீங்க ஒரு படத்தை நல்ல படம்னு
விமர்சனம் பண்ணா அது நல்ல படமாத்தான் இருக்கும்

திரைவிமர்சனத்தில் உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல நண்பா

Muruganandan M.K. said...

"எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு நல்ல படத்தை தந்து இருக்கிறார்" என்கிறீர்கள். கட்டாயம் விரைவில் பார்ப்பேன்.

Raju said...

அப்ப படத்தை Download பண்ணீரலாம்ன்றீங்க..!
என்ன இப்பல்லாம் கேபிளாருக்கு போட்டியா இறங்கீட்டீங்க..!

KADUVETTI said...

அப்ப படத்தை Download பண்ணீரலாம்ன்றீங்க..!
என்ன இப்பல்லாம் கேபிளாருக்கு போட்டியா இறங்கீட்டீங்க..!

லோகு said...

//குமரை நிலாவன் said...
நீங்க ஒரு படத்தை நல்ல படம்னு
விமர்சனம் பண்ணா அது நல்ல படமாத்தான் இருக்கும்

திரைவிமர்சனத்தில் உங்கள அடிச்சிக்க //

வழிமொழிகிறேன் ...

பிராட்வே பையன் said...

//ஓட்டப் போட்டியில் பையனுடன் கூடவே குடும்பமும் ஓடுவது சின்ன கவிதை. //

பிரிச்சு மேஞ்சுறிக்கீங்க!!!!

உங்க அளவுக்கு இல்லங்க நம்ம விமர்சனம்...

அத்திரி said...

இந்த வாத்தியாருக்கு படம் பாக்க எப்படித்தான் டைம் கிடைக்குதோ

ஆ.சுதா said...

|நிறைவாக செய்து இருக்கிறார்கள். எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு நல்ல படத்தை தந்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் பாண்டிராஜ்.|

இதற்காகவே பாராட்டலாம்.

விமர்சனம் அருமையா இருக்கு, கார்த்திகைப் பாண்டியன்.
படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டிவிட்டீக...

Prabhu said...

நீங்களும் கேபிள் மாதிரி கெளம்பிட்டீங்க போலயே....
ஆனா இந்த வட்டம், யூ த பர்ஸ்ட்.

எம்.எம்.அப்துல்லா said...

படம் பார்க்கும் போது எனக்குத் தோன்றியதை அப்படியே எழுதி இருக்கின்றீர்கள்.நேர்மையான விமர்சனம்.

:)

பீர் | Peer said...

:)

sarathy said...

ஆ.வி யில் வரும் திரைவிமர்சனம் போல மிக அழகான விமர்சனம்...

ஒரு படத்தையும் விடுறதில்ல போல...

"பசங்க"ள விடுங்க..
உங்ககிட்ட படிக்கிற பசங்க பாடு????

Subash said...

நல்லா சொல்லிருக்கீங்க
பாத்துடுவோம்

வினோத் கெளதம் said...

கார்த்தி வழக்கம் போல் அருமையான நடையில் விமர்சனம்
வேறு என்ன அதான் எல்லோரும் சொல்லி விட்டார்கள்.
படம் பாக்கனுமே..

வால்பையன் said...

சொல்லிடிங்கல்ல பார்த்துருவோம்!

வழிப்போக்கன் said...

நான் முன்னமே நினைத்தேன்.. நம்மளப்போல சுட்டித்தனமான படமாஇருக்கும்ன்னு...
:)))

ஜெட்லி... said...

கார்த்திகை பாண்டியன் உங்கள் விமர்சனத்துக்கு என் விமர்சனம் ஒரு துரும்பு
மாதிரி.......எனக்கும் படம் பிடித்து இருந்தது சில காட்சிகள் தவிர.

செந்தில்குமார் said...

விமர்சனம் அருமை.. விரைவில் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது !

சொல்லரசன் said...

பசங்களோடு பசங்க படம் பார்க்க காலை 9 மணிக்கே திரைஅரங்கத்திற்கு
சென்று மதியமே விமர்சனபதிவு போட்ட உங்கள் கடமை உணர்ச்சிக்கு முதலில்ஒரு சல்யூட்.
அருமையான விமர்சனம் கா.பா வாழ்த்துகள்

நசரேயன் said...

கண்டிப்பா பார்க்கிறேன்

வேத்தியன் said...

படம் இன்னும் பாக்கலை...

பாத்துட்டு விமர்சனம் வாசிக்கிறேனே...

:-)

ச.பிரேம்குமார் said...

//அதை உடைத்து, முதல் முறையாக குழந்தைகளின் அக உலகுக்கு வெகு நெருக்கத்தில் இருக்கும் ஒரு படமாக இருக்கிறது.."பசங்க..". //

அடடே! படக்குழுவினருக்கு வாழ்த்துகள்

தருமி said...

முழுசா படிக்கலை...அங்கங்க மேஞ்சுட்டு கடைசியில ஜேம்ஸ் வசந்தன்பற்றி மட்டும் படித்தேன். (முழுசா படிச்சா கதை தெரிஞ்சிருமேன்னுதான் படிக்கலை)

ஆனா நல்ல படம்னு சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டாச்சு. மகிழ்ச்சி.பெரீஈஈஈஈஈஈஈய சில நடிகர்கள் படங்களை விட இதுபோன்ற் படங்கள் வெல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தீப்பெட்டி said...

ரொம்ப தெளிவான விமர்சனம் பாஸ்...

Download சுரேஷ் said...

One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers.

She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.

ஆதவா said...

அப்ப ரொம்ப அருமையாக இருக்கும்னு சொல்றிங்க.... பார்ப்போம்!!!!!

விமர்சனம் ரொம்ப அருமையா இருக்குங்க..

Prabu M said...

கதை பற்றிய தகவல்கள் அதிகம் கசிந்துவிடாமல் ரொம்ப நேர்த்தியா விமர்சிச்சிருக்கீங்க..
"தருமி" அவர்கள் சொல்லியிருப்பது போல நிச்சியம் இந்த மாதிரி படங்கள் வெற்றியடைவது மகிழ்ச்சி தருகிறது..... இதுபோன்ற முயற்சிகளில் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் விடுவோம் என்கிற நிலையின் மூலம் இம்மாதிரி படைப்புகளின் வெற்றிக்கு விமர்சனம் செய்வோரும் தங்கள் பங்களிப்பைத் தரலாம் என்று உணர்த்தியிருப்பது ஆரோக்கியமானதொரு உதாரணம்!! வாழ்த்துக்கள்!!

ஆடிப்பாவை said...

படம் நன்றாக இருந்தது..பள்ளிக்கால் நினைவுகளையும் சிறுவயது வாழ்க்கையையும் எண்ணிப்பார்க்க வைத்தது.படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் ஆசிரியரின் பாத்திரமாக இருந்தது.

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன்
KADUVETTI
Rajeswari..
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் //

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்களே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்....... said...
அப்ப படத்தை Download பண்ணீரலாம்ன்றீங்க..!
என்ன இப்பல்லாம் கேபிளாருக்கு போட்டியா இறங்கீட்டீங்க..!//

நல்ல படம்ப்பா... தியேட்டர்ல பாருங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு..
hassan..
அத்திரி..
ஆ. முத்துராமலிங்கம்.. //

ரொம்ப நன்றி மக்கா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Pappu
chill - peer..
sarathy..
எம். எம். அப்துல்லா..//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Subash..
Vinoth gowtham..
வால்பையன்
வழிப்போக்கன்..//

நன்றி நண்பர்களே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெட்லி
செந்தில்குமார்
சொல்லரசன்
நசரேயன்..//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்களே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன்
பிரேம்குமார்
தீப்பெட்டி//


ரொம்ப நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
முழுசா படிக்கலை...அங்கங்க மேஞ்சுட்டு கடைசியில ஜேம்ஸ் வசந்தன்பற்றி மட்டும் படித்தேன். (முழுசா படிச்சா கதை தெரிஞ்சிருமேன்னுதான் படிக்கலை)
ஆனா நல்ல படம்னு சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டாச்சு.மகிழ்ச்சி.பெரீஈஈஈஈஈஈஈய சில நடிகர்கள் படங்களை விட இதுபோன்ற் படங்கள் வெல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.//

ரொம்ப நன்றி ஐயா.. நல்ல படங்கள் கண்டிப்பா ஜெயிக்கும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// Kanchi Suresh said...
One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers. She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.//

our prayers are with her brother.. may the god almighty help her to recover soon..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா
பிரபு . எம்
ஆடிப்பாவை..//


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்களே..

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாருக்கும் ஒண்ணா பதில் சொல்லிட்டேன்னு சங்கடம் வேண்டாம் தோழர்களே.. என் தோழியின் திருமணத்திற்கு போகும் அவசரம்.. அத்தோடு கல்லூரியிலும் கொஞ்சம் வேலை.. மூன்று நாளைக்கு பிறகு உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என் தோழிக்கு கிடைத்தால் சந்தோஷம் கொள்வேன்..:-)

சொல்லரசன் said...

உங்கள் தோழிக்கு என்னுடைய வாழ்த்துகள்.

Anonymous said...

விமர்சனம் அருமை..

Anonymous said...

உங்கள் தோழிக்கு என்னுடைய வாழ்த்துகள்.

உமா said...

படம் பார்க்கத்தூண்டிய அழகான விமர்சனம்.

மேவி... said...

app parkkaalamnnu sollunga

அகநாழிகை said...

நல்ல விமர்சனம். இன்று (3.5.09) படம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

மிக்க அன்புடன்,
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

Sanjai Gandhi said...

பார்க்கலாம் போல இருக்கே. இன்றே முயற்சிக்கிறேன். நன்றி.

Dhavappudhalvan said...

ஹல்லோ கா.பா, படத்த பார்க்க ஆவலை தூண்டி விட்டுட்டிங்க, உங்க விமர்சனம் மூலமா.

உங்கள் தோழியின் திருமண வாழ்வு சிறக்கட்டும். நலமுடன் வளமும் பெற்று குடும்பம் செழிக்கட்டும். உங்களின் நட்பு என்றும் நிலைக்கட்டும்.
அன்பான வாழ்த்துக்களுடன்,
தவப்புதல்வன்.

"உழவன்" "Uzhavan" said...

//பசங்களோடு பசங்க படம் பார்க்க காலை 9 மணிக்கே திரைஅரங்கத்திற்கு
சென்று மதியமே விமர்சனபதிவு போட்ட உங்கள் கடமை உணர்ச்சிக்கு முதலில்ஒரு சல்யூட்.//

விமர்சனப் பதிவு போடனும்னே முத ஆளா படம் பாக்க போவீங்களோ?? பேனா பேப்பரோட படம் பார்க்க போற முத ஆளு நீருதான்யா :-)
இப்ப எப்படி நடுநிலைமையா நல்லா விமர்சனம் பண்ணுறீங்களோ அப்படியே எப்பவும் பண்ணணும். சன் டிவி டாப் 10 மாதிரி ஆகிறக்கூடாது :-)

KADUVETTI said...

hh

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன்
மகா.. //

வாழ்த்துக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//உமா..
Mayvee..
அகநாழிகை.. //

நல்ல படம்.. நம்பிப் பார்க்கலாம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Dhavappudhalvan said...
ஹல்லோ கா.பா, படத்த பார்க்க ஆவலை தூண்டி விட்டுட்டிங்க, உங்க விமர்சனம் மூலமா.உங்கள் தோழியின் திருமண வாழ்வு சிறக்கட்டும். நலமுடன் வளமும் பெற்று குடும்பம் செழிக்கட்டும். உங்களின் நட்பு என்றும் நிலைக்கட்டும். //

ரொம்ப நன்றி நண்பா.. உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்
அன்பான வாழ்த்துக்களுடன்,
தவப்புதல்வன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said... பார்க்கலாம் போல இருக்கே. இன்றே முயற்சிக்கிறேன். நன்றி.//

எதுக்கு நண்பா நன்றி எல்லாம்.. படத்த பார்த்து என்ஜாய் பண்ணுங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//உழவன் " " Uzhavan " said...
விமர்சனப் பதிவு போடனும்னே முத ஆளா படம் பாக்க போவீங்களோ?? பேனா பேப்பரோட படம் பார்க்க போற முத ஆளு நீருதான்யா :-)
இப்ப எப்படி நடுநிலைமையா நல்லா விமர்சனம் பண்ணுறீங்களோ அப்படியே எப்பவும் பண்ணணும். சன் டிவி டாப் 10 மாதிரி ஆகிறக்கூடாது :-)//

கண்டிப்பா உங்க நம்பிக்கைய காப்பாத்துவேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//Kaduvetti..//

thanks boss..

Karthik lollu said...

Yaar pasanga sir?? :D

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாம் நம்ம பயபுள்ளைங்க தான்பா..

உமா said...

சாதாரணமாக சினிமா பார்க்காத நாங்கள் உங்கள் விமர்சனம் பார்த்தே படத்திற்குச் சென்றோம். என் மகனுடன். அவனும் 5 முடித்து ஆறாவது செல்கிறான். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை அவனும் அன்புவின் வகுப்பரையில் ஒருவனாகவே ஆகிவிட்டான். அன்பு rank வாங்கும் போது கைத்தட்டுவதும். அவனை வகுப்பு லீடராக்க இவனும் கைத்தூக்குவதுமாக ஒரே உற்சாகம் தான். அவன் குதூகலத்தைக்கண்டே நானும் மகிழ்ந்தேன். [அபியும் நானும் படத்திற்குப் பிறகு இதுதான் நாங்கள் பார்க்கும் இரண்டாவதுப்படம்] நல்ல படம் பார்த்த திருப்தி. சுவரஸ்யமான விமர்சனத்திற்கு நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப சந்தோஷம் தோழி..

RaveePandian said...

Nice Movie but you guys missed about the small boy Buji character.