May 8, 2009

வாராரு.. வாராரு.. அழகர் வாராரு..!!!



எல்லா ஊருலயும் கோவில்கள் உண்டு.. திருவிழாக்களும் வரும். ஆனா நம்ம மதுரையோட சித்திரைத் திருவிழாவ அடிச்சுக்க எதாலையும் முடியாது. கும்பகோணத்துல பனிரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம் தான் மகாமகம் வரும். அதுக்கு வர கூட்டம் எல்லாம் மதுரைல அழகர் ஆத்துல இறங்குற திருவிழாவுக்கு வர கூட்டம் முன்னாடி சும்மா. சுத்துப்பட்டுல இருக்குற அத்தனை கிராமத்து சனமும் அன்னைக்கு மதுரைல தான் இருக்கும். தீபாவளி, பொங்கலுக்கு அடுத்தபடியா மதுரைல பெரிய திருவிழா இதுதான். கிட்டத்தட்ட பத்து லட்சம் பேருக்கு குறையாம வருஷா வருஷம் வராங்களாம்.




மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் கல்யாணம். நடத்தி வைக்க அண்ணன் அழகர் வாராரு. வர வழியில அவரை கும்புடுற கள்ளர்கள் எல்லாம் கொஞ்ச நேரம் அவங்க கூட தங்கிட்டுப் போகனும்னு சொல்றாங்க. அந்த இடம்தான் அழகர் மலை. அவுங்க அன்புல நெகிழ்ந்து போற அழகர் கல்யாணத்த மறந்து அங்கேயே தங்கிடுராறு. கல்யாணம் நடக்கணுமேன்னு சிவன் தன்னோட உடம்புல இருந்து விஷ்ணுவ உருவாக்க, கல்யாணம் நல்லபடியா நடக்குது. நேரம் கழிச்சு வந்த அழகர் நான் இல்லாம எப்படி கல்யாணம் நடக்கலாம்னு கோவிச்சிக்கிட்டு போறாரு. அவரை சமாதானப்படுத்தி ஹரியும் சிவனும் ஒண்ணுன்னு மக்களுக்கு புரிய வைக்கிறதுதான் சித்திரைத் திருவிழா.




திருக்கல்யாணத்துல ஆரம்பிக்குற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து, அழகர் ஆத்துல இறங்கி, மறுபடி கோவிலுக்கு போறதோட முடியும். பூப்பல்லாக்கு என்ன, எதிர்சேவை என்ன.. எல்லாமே பார்க்க கண்கொள்ளா காட்சி. சாயங்கால நேரம் ஆனா கோயிலைச் சுத்தி இருக்குற ஏரியாக்குள்ள ஒரு பய போக முடியாது. கூட்டம் அள்ளும். அழகர் ஆத்துல இறங்குற அன்னைக்கு சொல்லவே வேணாம்..




எங்க பசங்க எல்லாருக்கும் இந்தத் திருவிழா ஒரு மீட்டிங் பாயின்ட் மாதிரி.. எங்க இருந்தாலும் கரெக்டா அன்னைக்கு எல்லாரும் ஒன்னு கூடியிருவோம். காலைல அஞ்சு மணிக்கு ரயில்வே காலனில இருக்குற எங்க வீட்டு முன்னாடி பயபுள்ளைங்க எல்லாம் ஆஜர் ஆகிடுவாங்க. அப்படியே பொடிநடையா மதுரா கோட்ஸ் பாலம் வழியா நடக்க ஆரம்பிப்போம். போற வழில எல்லாம் தண்ணீர் பந்தல் வச்சு நீர் மோர், ரசனா எல்லாம் ஊத்துவாங்க. அதுல ஆளுக்கு ரெண்டு கிளாசை அடிச்சுட்டு போய்க்கிட்டே இருப்போம். மெதுவா கதை பேசி நடந்தா ஆறு மணி போல தரைப் பாலத்துக்கு போய்டலாம். அந்தக் கூட்டத்துல இறங்கி அழகரைப் பாக்குறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா அதுலத்தானே நம்ம திறமைய காட்ட முடியும். அடிச்சு புடிச்சு உள்ள போய் சாமி பார்த்துடுவோம்ல..




அழகர் உடுத்தி இருக்குற பட்டு ரொம்ப முக்கியம். ஒரு பேழைல இருக்குற பல வண்ணப பட்டுல இருந்து ஒண்ணைத்தான் செலக்ட் பண்ணுவாங்க. கடந்த மூணு வருஷமா பச்சை உடுத்தித்தான் வந்திக்கிட்டு இருக்காரு. அதை வச்சுத்தான் அந்த வருஷம் ஊரு எப்படி இருக்கும்னு சொல்லுவாங்க. இன்னொரு ஆச்சரியமான விஷயம்.. திருவிழா நடக்குறது அக்னி நட்சித்திரத்துல. ஆனா அன்னைக்கு மட்டும் அவ்வளவா வெயில் இருக்காது. அத்தோட கொஞ்சம்மா மழையும் பெய்யும். இது நானே பார்த்து அனுபவிச்ச உண்மை. இன்னொன்னு.. கரெக்டா அழகர் ஆத்துல இறங்குரப்ப, கருடன் ஒண்ணு மேல பறக்கும். ஆச்சரியம்தான் இல்ல..




திருவிழா நடக்குற இடமான கோரிப்பாளயமே அன்னைக்கு ஜேஜேன்னு இருக்கும். நெறைய பேரு முடி எடுத்து நேர்த்திகடன் செலுத்துவாங்க. ஆட்டுத்தோல்ல தண்ணீரை நிரப்பி பீச்சி அடிக்கிறது இன்னும் பிரபலமான வேண்டுதல். கோபமா வார அழகரை குளுமையாக்க இதை செய்யுறதா அர்த்தம். ஆனா சமீப காலமா இந்தப் பழக்கம் கொஞ்சம் தப்பான முறையில, பெண்களைக் கிண்டல் செய்ய பயன்பட்டு வருது. அந்த ஒரு நாள் மட்டும்தான் ஆத்துல தண்ணி திறந்து விடுவாங்க. வற்றாத நதியான வைகை இன்னைக்கு வெறும் குட்டை மாதிரி இருக்கிறது வருத்தப்பட வேண்டிய விஷயம்.




ஆத்துல இறங்கின அப்புறம் அழகர் ஒவ்வொரு மண்டகப்படியா போய் தங்கி அருள்பாலிப்பார். மண்டகப்படி - ஒவ்வொரு சமூக மக்களும் அவங்கவங்களுக்காக உருவாக்குன இடம். பிரச்சினை ஏதும் இல்லாம எல்லாரும் இதன் மூலமா சாமி பார்க்க முடியும். யாரு வேணும்னாலும் தீபம் காட்டி சாமி கும்பிடலாம். சக்கரைதான் பிரசாதம். எல்லாத்தையும் வாங்கி ஒரு கட்டு கட்டிட்டு அப்படியே வெளியே வந்தோம்னா பக்கத்துல உள்ள கோயில்கள்ல புளிசாதமும், தயிர் சாதமும் குடுப்பாங்க. அங்கயும் ஒரு ரவுண்டு போயிட்டு..(இதுக்கெல்லாம் கூட்டத்துக்கு உள்ள அடிச்சு புடிச்சு போகுறதுக்கு தில் வேணும்..) வீட்டைப் பார்த்து கிளம்பலாம்.




சுத்தி இருக்கிற கடை, கண்ணில எல்லா வியாபாரமும் நடக்கும். முந்தி எல்லாம் மணி அடிச்சிக்கிட்டு ஒரு ஆள் பொம்மையோட சவ்வு மிட்டாய் வித்துக்கிட்டே வருவார். கையில வாட்சு, பல்லி எல்லாம் செஞ்சு கட்டி விடுவார். இப்போ எல்லாம் அது கண்ணுல சிக்கவே மாட்டேங்குது. ஊரும் நெறைய மாறிப்போச்சு. கேபிள்கார பய அத்தனை பேரும் பத்து நாளைக்கு அழகர் திருவிழாவைத்தான் போடுறான். அதனால நேர்ல வரதுக்கு சங்கடப் பட்டுக்கிட்டு நெறைய மக்கள் வீட்டுலையே இருந்துடுறாங்க. என்னதான் டிவில பார்த்தாலும் நேர்ல போய் பாக்குற அந்த சந்தோஷம் வருமா? நேரம் கிடைச்சா ஒரு தரம் ஊருப்பக்கம் திருவிழா பார்க்க வாங்கண்ணே.. பட்டாசு கிளப்பிட்டு அழகரோட அருளை வாங்கிட்டுப் போகலாம்..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

59 comments:

Raju said...

\\இன்னொரு ஆச்சரியமான விஷயம்.. திருவிழா நடக்குறது அக்னி நட்சித்திரத்துல. ஆனா அன்னைக்கு மட்டும் அவ்வளவா வெயில் இருக்காது. அத்தோட கொஞ்சம்மா மழையும் பெய்யும். இது நானே பார்த்து அனுபவிச்ச உண்மை. இன்னொன்னு.. கரெக்டா அழகர் ஆத்துல இறங்குரப்ப, கருடன் ஒண்ணு மேல பறக்கும். ஆச்சரியம்தான் இல்ல..\\

நானும் அணுபவிச்சுருக்கேன்..!

இதுல ஸ்பெஷலே "இன்னைக்கி சாமி எங்க இருக்கு..!"னு அடிக்கடி மக்கள் கேட்டுக்குவாங்க..!
நான் வழக்கமா "அண்ணா நகர் பால்பண்ணை" க்கிட்டதான் சாமி பாப்பேன்..!
இந்த வருசம் என்ன கலர் பட்டுனு பாப்போம்..!

ஆ.சுதா said...

ஆஹா!! ஒரு திருவிழாவ நேருல பாத்தமாதிரி இருக்கே..

சின்ன பத்திக்குள்ள அழகரின் வரலாறு சொன்ன விதம் அருமை பாண்டியன்.

எங்க ஊரிலும் சுடலைமாட சுவாமிக்கு கொடை நடக்கும் போது மழை பெய்யும், அதே போல் குலசை முத்தாரம்மன் தசராவில் 10ம் திருநாளன்றும் பழை பெய்யும். இது கொஞ்சம் வியப்பதான் இருக்குல்ல..

வினோத்குமார் said...

super article

வேத்தியன் said...

பதிவு வாசித்தேன்...

நல்ல கட்டுரை...

வாழ்த்துகள்...

ச.பிரேம்குமார் said...

பாண்டியா, திருவிழாவ நேர்ல பாத்த மாதிரியே இருந்துச்சு. படிச்சு முடிக்கிறதுக்குள்ள புல்லரிச்சு போச்சுய்யா :)

Suresh said...

அழகர பார்த்த மாதிரியே இருக்கு

ச.பிரேம்குமார் said...

எங்க அம்மாச்சி வீடு கோரிப்பாளையத்தில தான் இருக்கு. சின்ன வயசுல அங்க இருந்து திருவிழாவ பாத்தது நினைவில இருக்கு. எங்க வீட்டில குழந்தைகளுக்கு முதல் மொட்டை ஆத்துல அழகர் இறங்குற அன்றைக்கு போடுவாங்க. இந்த வருசம் எம் புள்ளைக்கு அங்க மொட்டை போட்டிருக்கனும். ஆனா செய்ய முடியாம போச்சு. அம்மா மீனாட்சி அருளால அடுத்த வருசமாவது சித்திரை திருவிழாவ பாக்க அங்க வந்துடனும்

நையாண்டி நைனா said...

Dear Friend,
I wish to attend this function.

ப்ரியமுடன் வசந்த் said...

//எங்க பசங்க எல்லாருக்கும் இந்தத் திருவிழா ஒரு மீட்டிங் பாயின்ட் மாதிரி.. எங்க இருந்தாலும் கரெக்டா அன்னைக்கு எல்லாரும் ஒன்னு கூடியிருவோம்.//

நாங்களும்தானுங்க அதுலயும் அந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பது வெகு காமடியா இருக்கும்

Raghav said...

அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை ஒரு மதுரைக்காரரா அட்டகாசமா சொல்லிருக்கீங்க..நானும் ஒரு பாட்டு போட்டுருக்கேன் முடிஞ்சா பாருங்க :)

http://kannansongs.blogspot.com/2009/05/blog-post.html

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ்....... said...
நானும் அணுபவிச்சுருக்கேன்..!
இதுல ஸ்பெஷலே "இன்னைக்கி சாமி எங்க இருக்கு..!"னு அடிக்கடி மக்கள் கேட்டுக்குவாங்க..!நான் வழக்கமா "அண்ணா நகர் பால்பண்ணை" க்கிட்டதான் சாமி பாப்பேன்..!இந்த வருசம் என்ன கலர் பட்டுனு பாப்போம்..!//

நாளைக்கு ஊருக்கு போறேன் டக்கு.. திருவிழாக்கு.. பார்க்கலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
ஆஹா!! ஒரு திருவிழாவ நேருல பாத்தமாதிரி இருக்கே..சின்ன பத்திக்குள்ள அழகரின் வரலாறு சொன்ன விதம் அருமை பாண்டியன்.//

நன்றி நண்பரே..

//எங்க ஊரிலும் சுடலைமாட சுவாமிக்கு கொடை நடக்கும் போது மழை பெய்யும், அதே போல் குலசை முத்தாரம்மன் தசராவில் 10ம் திருநாளன்றும் பழை பெய்யும். இது கொஞ்சம் வியப்பதான் இருக்குல்ல//

இப்படித்தான் ஒரு சில விஷயங்கள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதா இருக்கும் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth kumar said...
super article//

thanks brother..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said...
பதிவு வாசித்தேன்...நல்ல கட்டுரை...
வாழ்த்துகள்...//

நன்றி வேத்தியன்.. எப்போ இந்தியா வரீங்க?

கார்த்திகைப் பாண்டியன் said...

// ச.பிரேம்குமார் said...
பாண்டியா, திருவிழாவ நேர்ல பாத்த மாதிரியே இருந்துச்சு. படிச்சு முடிக்கிறதுக்குள்ள புல்லரிச்சு போச்சுய்யா :)//

நன்றி பிரேம்..

//எங்க அம்மாச்சி வீடு கோரிப்பாளையத்தில தான் இருக்கு. சின்ன வயசுல அங்க இருந்து திருவிழாவ பாத்தது நினைவில இருக்கு. எங்க வீட்டில குழந்தைகளுக்கு முதல் மொட்டை ஆத்துல அழகர் இறங்குற அன்றைக்கு போடுவாங்க. இந்த வருசம் எம் புள்ளைக்கு அங்க மொட்டை போட்டிருக்கனும். ஆனா செய்ய முடியாம போச்சு. அம்மா மீனாட்சி அருளால அடுத்த வருசமாவது சித்திரை திருவிழாவ பாக்க அங்க வந்துடனும்//

குட்டிப்பையனுக்கு என்னோட அன்பான முத்தங்கள்.. அம்மன் அருளால அடுத்த வருஷம் பையனுக்கு கண்டிப்பா நீங்க மொட்டை போடலாம் பிரேம்.. உங்க கூட நானும் இருக்கணும்னு ஆசை.. பார்க்கலாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

// Suresh said...
அழகர பார்த்த மாதிரியே இருக்கு//

நன்றி மாப்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
Dear Friend,
I wish to attend this function.//

நைனா.. நீங்கதானா? இவ்வளவு அடக்க ஒடுக்கமா நல்ல பிள்ளை மாதிரி பின்னூட்டம் போட்டு இருக்கீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

// பிரியமுடன்....வசந்த் said...
நாங்களும்தானுங்க அதுலயும் அந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பது வெகு காமடியா இருக்கும்//

இந்த வருஷமும் வந்து சேருங்க நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//Raghav said...
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை ஒரு மதுரைக்காரரா அட்டகாசமா ல்லிருக்கீங்க..நானும் ஒரு பாட்டு போட்டுருக்கேன் முடிஞ்சா பாருங்க :)//

நன்றிங்க.. உங்க பதிவை பார்த்துட்டேன்.. நல்லா இருக்கு..:-)

ச.பிரேம்குமார் said...

//உங்க கூட நானும் இருக்கணும்னு ஆசை//

எனக்கும் அந்த ஆசை இருக்கு பாண்டியா. பார்க்கலாம் :)

லோகு said...

எனக்கும் சேர்த்து வரம் வாங்கிட்டு வாங்க...

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையாச் சொல்லியிருக்கீங்க...அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...அப்படின்னு பாடிக்கிட்டு அசைபோட வைத்தமைக்கு நன்றி :)

சொல்லரசன் said...

அருமையாக எழுதியிருக்கிங்க கா.பா. நேரில் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் வருகிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said...
எனக்கும் சேர்த்து வரம் வாங்கிட்டு வாங்க...//

கண்டிப்பா வேண்டிக்கிறேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//மதுரையம்பதி said...
அருமையாச் சொல்லியிருக்கீங்க... அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...அப்படின்னு பாடிக்கிட்டு அசைபோட வைத்தமைக்கு நன்றி :)//

நம்ம ஊருக்கார அண்ணனுக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
அருமையாக எழுதியிருக்கிங்க கா.பா. நேரில் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் வருகிறது.//

நாம எல்லாரும் சேர்ந்து ஒரு தடவை பார்க்கலாம் நண்பா

வினோத் கெளதம் said...

கார்த்திகை இது வரை கேள்விதான்ப்பட்டு இருக்கிறேன் நானும் நேரில் பார்க்க வேண்டும்..
ஆவலாக இருக்கிறது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said...
கார்த்திகை இது வரை கேள்விதான்ப்பட்டு இருக்கிறேன் நானும் நேரில் பார்க்க வேண்டும்..
ஆவலாக இருக்கிறது..//

கூடிய சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும்னு நம்புவோம் நண்பா

சுந்தர் said...

மதுரை போல வேறு எதாவது திருவிழா தலம், இருக்குமா என்பது சந்தேகமே ? கடந்த 10 நாட்கள் மீனாக்ஷி அம்மன் கல்யாணம், பட்டாபிசேகம், தேரோட்டம் என அமர்களப் பட்டது. இது முடிந்த வுடன் , இன்று முதல் எதிர் சேவை, ஆற்றில் இறங்குதல், தசாவதாரம், என அழகருக்கு இனி ஒரு வாரம் திரு விழா. இம்மாதிரி விழாக்கள் தான் மதுரையை இன்னும் உயிர் துடிப்போடு வைத்திருக்கிறது என நினைக்கின்றேன்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா , வருக ! வருக !

குமரை நிலாவன் said...

அருமையாக எழுதி இருக்கீங்க நண்பா .

நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்
திருவிழா நன்றாக இருக்கும் என்று
நேரில் காண வேண்டும் என்று அசையாக
இருக்கிறது

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர் பாண்டியா.. எல்லாருக்கும் சேத்து அழகர்கிட்ட வேண்டிக்கோங்க.. மதுரை மக்கள் அனைவருக்கும் அழகிரி மன்னிக்கனும் அழகர் அருள் கிடைக்கட்டும்.

பீர் | Peer said...

அருமை.

ஸ்கூல் படிக்கிறப்ப நாங்களும் இப்படித்தான். அழகர் ஆத்துல இறங்குற அன்னிக்கி, ஜீவாநகர்ல இருந்து நண்பர்கள் எல்லாம் சேர்ந்து தரைப்பாலம் வரை போவோம், சந்தேகமில்லாம வழில மோர்/சர்பத் குடிச்சுக்கிட்டேதான். நல்ல ஒரு அனுபவம் அது, மறக்கமுடியாதது.

Prabhu said...

நீங்க சொன்ன வரலாறு தப்பு, வாத்தியாரே. அது நம் மக்களோட தப்பான எண்ணம். ரெண்டயும் தப்பா முடிச்சு போட்டுட்டாங்க. 300 வருஷம் முன்னாடி திருக்கல்யாணம் மாசிலயும், அழகர் சித்திரையிலயும் நடந்தது. தனித்தனி திருவிழாக்கள். திருமலை நாயக்கர்தான்."இதி திருவிழா இப்புடு நடக்கேலோ விவசாயம், அறுவடை பாதிக்குதுலு. ஆகவேலு, இதி திருவிழா மக்கள் வெட்டியா இருக்கிற நேரமுலோ சித்திரையில வச்சிரலாம்லு" அப்பிடின்னு ஆர்டர் போட்டார்.

சிவக்குமரன் said...

படத்தை கொஞ்சம் பெரிசா போடுங்க.
நல்லா எழுதி இருக்கீங்க.
ஒரு தடவை நேர்ல பார்க்கனும்.

ஆதவா said...

எனக்கு இந்த விஷயங்கள் எதுவுமே தெரியாது... உங்க பதிவிலதான் தெரிஞ்சது.

நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அழகர் ஆத்துல இறங்கராரு!!! அம்புட்டுத்தேன்..

அடுத்தமுறை நான் நிச்சயம் வருகிறேன்... எனக்கும் இந்த மாதிரி திருவிழாவையெல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்துவருகிறது.. (மதுரைக்கு வந்தா பிரச்சனையே இல்லை போல....)

திருவிழா முடிஞ்சி, அனுபவப் பகிர்வைப் போடணும்னு எதிர்பார்க்கிறேன்....

அன்புடன்
ஆதவா

Rajeswari said...

சே..என்ன கொடுமை இது.நானே ஊருக்கு போக முடியலியேனு வருத்தத்துல இருக்கேன்..(அவ்வளவு ஆணி) நீங்க வேற ஆசைய கிளப்புரீங்க..சரி நீங்களாவது என்ஜாய் பண்ணிட்டு வாங்க.. பதிவர் சந்திப்பும் நல்லா நடத்திட்டு வாங்க...எங்க ஊர கேட்டேனு சொல்லுங்க..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு

மங்கை said...

விழாவைப் போன்றே பதிவும் அழகு... உணர்வோட எழுதியிருக்கீங்க... நேர்ல சொல்ற மாதிரி இருக்கு

தீப்பெட்டி said...

ரொம்ப பிரமாதம் கார்த்தி...
நானும் ரொம்ப கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா நீங்க சொன்னது அழகரோட நானும் வந்த மாதிரி இருந்தது.

ஆமா வைகைக்கு ஏன் இன்னைக்கு இந்த நிலமை?
நம்ம தலைமுறையினருக்கு வைகை மேல ஏன் கொஞ்சம் கூட அக்கறை இல்லாம போச்சு...
நான் மதுரையில் வைகையை கடக்கும் போதெல்லாம் மதுரை மக்களோட பொறுப்பற்ற தனமும் மதுரை இளைஞர்களின் கையாலாகாதனமும் என் முகத்தில் அறைகிறது.

மன்னிக்கவும் கூறியதில் தவறிருந்தால்.

நீங்கள் பல இளைஞர்களை சந்திக்கும் நிலையில் (விரிவுரையாளராக) இருப்பதால் உங்கள் பதிவில் இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.

நன்றி.

Prabhu said...

என்ன கொரும சார் இது! நான் புது போஸ்டிங் போட்டா அப்டேட் ஆகல, பதிவ டைப் பண்ணவே கஷ்டப் பட்டுட்டேன், எடிட்டும் சரியா வேல செய்யாம தப்பும் தவறுமா ஒரு பதிவு. ஐயகோ! வைகைக்கரைத் தமிழை அணை போட்டு த்டுத்துவிட்டார்களே! இந்த ப்ளாக்கரே இப்படித்தான்! எப்படி சரி செய்யுறது.

ஒய்?...ஒய்?....ஒய்?

ஓஓஓஒய்ய்ய்ய்....மீஈஈஈஈஈஈ?

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

அருமை அருமை - பதிவு அருமை

மலரும் நினைவுகள் - பள்ளிப்பருவம் துள்ளித் திரிந்து அழகரைக் கண்ட காட்சிகளை நினைவு படுத்தி விட்டீர்கள் - நன்றி

இப்பொழுதும் மதுரை தான் - நீண்ட பிரிவினிற்குப் பிறகு - நேற்று அழகரைக் கண் குளிரக் கண்டேன்

மகிழ்ந்தேன்

நல்வாழ்த்துகள்

பதிவர் சந்திப்பு வெற்றி பெற நல்வாழ்த்துகள்

Anonymous said...

அட அப்படியே விவரிச்சிட்டியேப்பா அழகர் திருவிழாவ.....

நல்ல கட்டுரை நண்பா!

பட்டாம்பூச்சி said...

விழாவை நேர்ல பாக்க முடியாத குறைய தீர்த்து வச்சிட்டீங்க :)

இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டிருந்திருக்கலாமே.

கார்த்திகைப் பாண்டியன் said...

//sundar said...
மதுரை போல வேறு எதாவது திருவிழா தலம், இருக்குமா என்பது சந்தேகமே ? கடந்த 10 நாட்கள் மீனாக்ஷி அம்மன் கல்யாணம், பட்டாபிசேகம், தேரோட்டம் என அமர்களப் பட்டது. இது முடிந்த வுடன் , இன்று முதல் எதிர் சேவை, ஆற்றில் இறங்குதல், தசாவதாரம், என அழகருக்கு இனி ஒரு வாரம் திரு விழா. இம்மாதிரி விழாக்கள் தான் மதுரையை இன்னும் உயிர் துடிப்போடு வைத்திருக்கிறது என நினைக்கின்றேன்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா , வருக ! வருக !//

வாங்க சுந்தர்.. திருவிழா எல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணினீங்களா? உங்களை பார்க்க முடியாம போனதுதான் வருத்தம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said...
அருமையாக எழுதி இருக்கீங்க நண்பா .நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் திருவிழா நன்றாக இருக்கும் என்று நேரில் காண வேண்டும் என்று அசையாக இருக்கிறது//

கவலைப் படாதீங்க நண்பா.. எப்பயாவது நீங்க ஊருப்பக்கம் வரும்போது தூள் கிளப்பலாம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//" உழவன் " " Uzhavan " said...
சூப்பர் பாண்டியா.. எல்லாருக்கும் சேத்து அழகர்கிட்ட வேண்டிக்கோங்க.. மதுரை மக்கள் அனைவருக்கும் அழகிரி மன்னிக்கனும் அழகர் அருள் கிடைக்கட்டும்.//

அழகரின் அருள் எல்லோருக்கும் வேண்டும் என வேண்டிக் கொண்டேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//Chill-Peer said...
அருமை.ஸ்கூல் படிக்கிறப்ப நாங்களும் இப்படித்தான். அழகர் ஆத்துல இறங்குற அன்னிக்கி, ஜீவாநகர்ல இருந்து நண்பர்கள் எல்லாம் சேர்ந்து தரைப்பாலம் வரை போவோம், சந்தேகமில்லாம வழில மோர்/சர்பத் குடிச்சுக்கிட்டேதான். நல்ல ஒரு அனுபவம் அது, மறக்கமுடியாதது.//

யாபகம் வருதேவா..நடக்கட்டும் நடக்கட்டும்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said...
நீங்க சொன்ன வரலாறு தப்பு, வாத்தியாரே. அது நம் மக்களோட தப்பான எண்ணம். ரெண்டயும் தப்பா முடிச்சு போட்டுட்டாங்க. 300 வருஷம் முன்னாடி திருக்கல்யாணம் மாசிலயும், அழகர் சித்திரையிலயும் நடந்தது. தனித்தனி திருவிழாக்கள். திருமலை நாயக்கர்தான்."இதி திருவிழா இப்புடு நடக்கேலோ விவசாயம், அறுவடை பாதிக்குதுலு. ஆகவேலு, இதி திருவிழா மக்கள் வெட்டியா இருக்கிற நேரமுலோ சித்திரையில வச்சிரலாம்லு" அப்பிடின்னு ஆர்டர் போட்டார்.//

நானும் படிச்சேன் பப்பு.. ஆராய வேண்டிய விஷயம்.. என்ன விவகாரம்னு புரில்ல

கார்த்திகைப் பாண்டியன் said...

//இரா.சிவக்குமரன் said...
படத்தை கொஞ்சம் பெரிசா போடுங்க.
நல்லா எழுதி இருக்கீங்க.
ஒரு தடவை நேர்ல பார்க்கனும்.//

கண்டிப்பா பார்க்கலாம் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
அடுத்தமுறை நான் நிச்சயம் வருகிறேன்... எனக்கும் இந்த மாதிரி திருவிழாவையெல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்துவருகிறது.. (மதுரைக்கு வந்தா பிரச்சனையே இல்லை போல....) //

கண்டிப்பாக போகலாம் ஆதவா.. நல்லா இருக்கும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Rajeswari said...
சே..என்ன கொடுமை இது.நானே ஊருக்கு போக முடியலியேனு வருத்தத்துல இருக்கேன்..(அவ்வளவு ஆணி) நீங்க வேற ஆசைய கிளப்புரீங்க..சரி நீங்களாவது என்ஜாய் பண்ணிட்டு வாங்க.. பதிவர் சந்திப்பும் நல்லா நடத்திட்டு வாங்க...எங்க ஊர கேட்டேனு சொல்லுங்க..//

நன்றி தோழி.. அடுத்த முறை கண்டிப்பா நீங்களும் திருவிழா பார்க்க வாங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//SUREஷ் said...
ஓட்டுப் போட்டாச்சு//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//மங்கை said...
விழாவைப் போன்றே பதிவும் அழகு... உணர்வோட எழுதியிருக்கீங்க... நேர்ல சொல்ற மாதிரி இருக்கு//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி..

கார்த்திகைப் பாண்டியன் said...

// தீப்பெட்டி said...
ரொம்ப பிரமாதம் கார்த்தி...
நானும் ரொம்ப கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா நீங்க சொன்னது அழகரோட நானும் வந்த மாதிரி இருந்தது. ஆமா வைகைக்கு ஏன் இன்னைக்கு இந்த நிலமை? நம்ம தலைமுறையினருக்கு வைகை மேல ஏன் கொஞ்சம் கூட அக்கறை இல்லாம போச்சு...நான் மதுரையில் வைகையை கடக்கும் போதெல்லாம் மதுரை மக்களோட பொறுப்பற்ற தனமும் மதுரை இளைஞர்களின் கையாலாகாதனமும் என் முகத்தில் அறைகிறது. //

உண்மைதான் நண்பா.. ஆனால் இதில் அரசியல் தலையீடுகள் தான் மிகப்பெரிய பிரச்சினை.. மக்களுக்கு வாழ இடம் போதாத நிலையில் அவர்களும் தப்பு செய்கிறார்கள்.. நீங்கள் சொல்வதுபோல இளைஞர்கள் ஏதாவது செய்தால் மட்டுமே வைகை தப்பி பிழைக்கும்

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழ்நெஞ்சம் said... //

படிக்கிறேன் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said...
என்ன கொரும சார் இது! நான் புது போஸ்டிங் போட்டா அப்டேட் ஆகல, பதிவ டைப் பண்ணவே கஷ்டப் பட்டுட்டேன், எடிட்டும் சரியா வேல செய்யாம தப்பும் தவறுமா ஒரு பதிவு. ஐயகோ! வைகைக்கரைத் தமிழை அணை போட்டு த்டுத்துவிட்டார்களே! இந்த ப்ளாக்கரே இப்படித்தான்! எப்படி சரி செய்யுறது.
ஒய்?...ஒய்?....ஒய்?
ஓஓஓஒய்ய்ய்ய்....மீஈஈஈஈஈஈ?//

புலம்பல்ஸ் ஆப் இந்தியா? அட.. பதிவுலகுல இதெல்லாம் சகஜமப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//cheena (சீனா) said...
அன்பின் கா.பா
அருமை அருமை - பதிவு அருமை
மலரும் நினைவுகள் - பள்ளிப்பருவம் துள்ளித் திரிந்து அழகரைக் கண்ட காட்சிகளை நினைவு படுத்தி விட்டீர்கள் - நன்றி
இப்பொழுதும் மதுரை தான் - நீண்ட பிரிவினிற்குப் பிறகு - நேற்று அழகரைக் கண் குளிரக் கண்டேன்
மகிழ்ந்தேன் நல்வாழ்த்துகள்
பதிவர் சந்திப்பு வெற்றி பெற நல்வாழ்த்துகள்//

ரொம்ப நன்றி ஐயா.. கூடிய சீக்கிரம் உங்களை நம்ம ஊருல சந்திக்க முடியும்னு நம்புறேன்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஷீ-நிசி said...
அட அப்படியே விவரிச்சிட்டியேப்பா அழகர் திருவிழாவ.....
நல்ல கட்டுரை நண்பா!//

நன்றி ஷீ.. அப்பப்போ வந்து போப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பட்டாம்பூச்சி said...
விழாவை நேர்ல பாக்க முடியாத குறைய தீர்த்து வச்சிட்டீங்க :)
இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டிருந்திருக்கலாமே.//

எனக்கும் படம் போடனும்னு ஆசைதான் நண்பா.. ஆனா எப்படின்னுதான் தெரியல