July 9, 2009

மிருகவதை (உயிரோடை போட்டிக்காக)...!!!

"இன்னும் எவ்வளவு நேரம் இப்படி சும்மாவே இருக்கப் போறீங்க.. எதுவும் பண்ணுற ஐடியாவே இல்லையா?"

அவன் அவளைப் பார்த்தான். அழகாக இருந்தாள். எளிமையான அலங்காரம். நாசூக்காக உடை உடுத்தி இருந்தாள். எதற்காக இந்தத் தொழிலுக்கு வந்திருப்பாள்? யோசித்தான். தன்னைப் பற்றி அவளிடம் சொன்னால் என்ன என்று தோன்றியது.
"இன்னைக்கு என்னோட ஆறாவது திருமண நாள்.."

"சரி..?"

"ஆனா.. அவ என்கூட இல்ல.."

"ஏன்? எங்க இருக்காங்க..?"

"செத்துப்போயிட்டா..."
"ஐயயோ...எப்படி..?"
***************
முதல் முதலாக பெண் பார்க்க போன போது..
"ஏங்க..உண்மையா சொல்லுங்க.. என்னை உங்களுக்கு நிஜமாவே பிடிச்சிருக்கா?"

"ஏன் அப்படி கேக்குறீங்க.."
"நீங்க அழகு.. அழகுன்னாலும் அப்படி ஒரு அழகு.. தேவதை மாதிரி.. நானோ கருப்பு.. அப்புறம் வேலை... என்ன மாதிரி மூணு மடங்கு சம்பளம் வாங்குறீங்க.. என்னைக் கல்யாணம் பண்ணிக்க எப்படி ஒத்துக்கிட்டீங்க?"

"ஐயோ.. எனக்கு அழகுல எல்லாம் நம்பிக்கை இல்லீங்க..மனசுதான் முக்கியம்..எங்க அப்பா,அம்மாவுக்கு உங்களை பிடிச்சு இருக்கு.. எந்த கெட்ட பழக்கமும் இல்லை..போதாதா..?"
***************
அவன் நண்பர்கள் வேற மாதிரி சொன்னார்கள்.
"டேய்.. அவ எல்லா விதத்துலயும் உன்ன விட ஒசத்தி.. இருந்தும் உன்ன கட்டிக்க சம்மதிக்கிறான்னா..? மொதல்லேயே அவள உன்னோட பிடிக்குள்ள வச்சுக்கோ.. இல்லன்னா அவ கால சுத்துற நாயா மாறிடுவ..".
முதலிரவு. பல கனவுகளோடு உள்ளே வந்தாள். பூ மலர்வதை போல மென்மையான உறவாக இருக்கும் என எண்ணி இருந்தாள். ஆனால் அவன் அவளை கசக்கி நுகர்ந்தான். ஆண்மையை நிலைநாட்டி விட்டதாக எண்ணிக் கொண்டான். அவள் நொறுங்கிப் போனாள்.
***************
அவள் அவனுக்காக தன்னையே மாற்றிக் கொண்டாள். நண்பர்கள் யாருடனும் பேசக் கூடாது... சரி. அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது.. சரி. ஒரு கட்டத்தில் வேலையையும் விட சொன்னான். செய்தாள். இருந்தும் அவளால் அவனை திருப்தி செய்ய முடியவில்லை. கடைசியாக அவளுடைய உறவினர் ஒருவரோடு அவளை தொடர்பு படுத்தி அசிங்கப்படுத்தினான். அழுது புலம்பினாள். நம்ப மறுத்தான். ஒரு மழை நாளின் இரவில் தூக்கு போட்டு செத்துப்போனாள்.
***************
அவன் அழுது கொண்டிருந்தான்.
"நானே அவளைக் கொன்னுட்டேன்.. பொத்தி பொத்தி வைக்குறதா நெனச்சு.. கடைசி வரை அவளைப் புரிஞ்சுக்கவே இல்லை.." தலையில் அடித்துக் கொண்டான்.
அவள் அவனை ஆதரவாக தோளில் சாய்த்துக் கொண்டாள். "அழாதீங்க.. என்னைக்கு உங்க தப்பை உணர்ந்துட்டீங்களோ.. அப்பவே எல்லாம் சரியாப் போச்சு.. உங்களுக்கு வேண்டியது ஒரு நல்ல துணைதான்.. நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க..எல்லாம் சரி ஆகிடும்.."
அவன் அவளை மெதுவாக அணைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தான். பசி கொண்ட மலைப்பாம்பாய் அவள் மீது பரவினான். அவள் அவனை அள்ளி அணைத்துக் கொண்டாள். உடலெங்கும் முத்தமிட்டவாறே அவள் முகத்தை நெருங்கினான். அவள் கண்கள் செருகிக் கிடந்தாள். கிட்டத்தில் பார்த்த போது.. அந்தக் கண்கள்.. அவள் முகம் இறந்து போனவளின் முகம் போலவே தோன்றியது.
"என்ன தைரியம் இருந்தால் என்னை தனியே தவிக்க விட்டு செத்துப் போவாய்...? இந்தக் கழுத்தை அப்படியே நெறித்தால் என்ன..?"
மெதுவாக அவள் கழுத்தைப் பற்றினான். முதலில் அவள் அதை கவனிக்க வில்லை. பிடி இறுகத் தொடங்கியதும் தான் சுதாரித்துக் கொண்டாள். அவனை உதற முற்பட்டாள். முடியவில்லை. மூச்சு முட்டத் துவங்கியது. பலம அனைத்தையும் திரட்டி அவனைத் தள்ளி விட்டாள். தூரப் போய் விழுந்தான்.
"ச்சே,, மனுஷனா நீ..? ஏன் இப்படி செஞ்சே.."
"மன்னிச்சிடும்மா.. நான் என்ன பண்ணினேன்னு எனக்கே தெரியல..ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்ன மன்னிச்சிடு.."
"உனக்கு வேண்டியது ஒரு நல்ல துணை இல்ல.. நல்ல டாக்டர். உன்னோட காம்ப்ளக்ஸ் எந்தப் பொண்ணு கூடவும் உன்னை ஒழுங்கா வாழ விடாது. தயவு செஞ்சு இன்னொரு பொண்ணு வாழ்க்கைய நாசம் பண்ணிடாத..".
உடையை சரி பண்ணிக்கொண்டு கதவைத் திறந்து வெளியேறினாள். அவன் மீண்டும் தனியனாக அழுது கொண்டு இருந்தான்.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

27 comments:

அத்திரி said...

mee tha first

அத்திரி said...

ஓகே போலாம் ரைட்..........

Anbu said...

நல்லா இருக்கு அண்ணா..

வால்பையன் said...

சிறுகதைக்கு ”ப்ளாஷ்பேக்” ஆவாது, அவன் வாயாலேயே அனைத்தையும் சொல்வதே சால சிறந்தது!

பீர் | Peer said...

:)

பீர் | Peer said...

மழை நாள் இரவுகள் அத்தனை கொடுமையானதா, கார்த்திக்?

மேவி... said...

தல ....

நல்ல இருக்கு .....

ஜெட்லி... said...

நல்லா இருக்கு ஜி...

அப்துல்மாலிக் said...

கதை சொல்லப்பட்ட விதம் அருமை

வெற்றிப்பெர வாழ்த்துக்கள்

சொல்லரசன் said...

நாலுவரி கவிதைக்கு ஒருபக்க கதை என்றுதானே வாசு சொன்னார்,இது என்ன நாலுபக்க கதையா இருக்குது,வெற்றி பெற வாழ்த்துகள்.

நசரேயன் said...

நல்ல கதை..

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு வாழ்த்துகள் நண்பா

sakthi said...

அவனுக்காக தன்னையே மாற்றிக் கொண்டாள். நண்பர்கள் யாருடனும் பேசக் கூடாது... சரி. அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது.. சரி. ஒரு கட்டத்தில் வேலையையும் விட சொன்னான். செய்தாள். இருந்தும் அவளால் அவனை திருப்தி செய்ய முடியவில்லை.

மனிதர்களை தான் திருப்திபடுத்த முடியும் மிருகங்களை அல்ல...

நல்ல கதை சார்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

நல்லாருக்கு கார்த்தி. வெற்றிபெற வாழ்த்துகள்.

நையாண்டி நைனா said...

நண்பா... அந்த "ஊமை" வீடு எங்கே இருக்கு?

நையாண்டி நைனா said...

பாசு, உங்க தலைப்புலே போட்டிருக்கீங்களே.... அதெல்லாம் எங்களை நெனச்சிதானே....

உங்களோட இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....

வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா.

Rajeswari said...

கொஞ்சம் கொஞ்சம் திண்டுக்கல் சாரதி வாடை அடிக்குது..

நல்லா வந்திருக்கு

சுந்தர் said...

நல்லா இருக்கு.

"உழவன்" "Uzhavan" said...

அவன் என்ன செமியா? லூசுப்பய.. நல்ல வேளை ஒரு வியாபாரி சாகல. :-) வாழ்த்துக்கள்.

Anonymous said...

:(all the best pandia:(

Karthik said...

வாழ்த்துக்கள்ங்ணா!!! :))

சம்பத் said...

கதை ரொம்ப நல்லாயிருக்குங்க...As usual my wishes always for your innovative thinking....

சதங்கா (Sathanga) said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் !

தேவன் மாயம் said...

கதை போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்!!!

Vidhoosh said...

:)- வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஹேமா said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

நல்ல கதை..

ஆனா இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்னு தோணுது..