ஆஞ்சநேயா - அல்டிமேட் ஸ்டாரின் அசத்தல் படம். அந்தப் படம் வெளிவரும் நேரத்தில் தல கொஞ்சம் வாயை விட்டார்..."இது நான் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு போடும் அப்ளிகேஷன்.." படம் பப்படம் ஆனது. தலயின் பரம ரசிகர் ஜெய். சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார்."நான் நடிக்கும் படங்களில் வாமனன் மட்டுமே ஓடும்..மற்றதெல்லாம் ஒரு வாரம் தாண்டினாலே அதிசயம்..".இப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே.. வாமனன் எப்படி இருக்குன்னு..?
நடிகனாகும் ஆசையில் சென்னை வருகிறார் ஜெய். நண்பன் சந்தானத்துடன் தங்கி இருக்கிறார். ப்ரியாவைக் காதலிக்கிறார். லக்ஷ்மி ராய் ஒரு மாடல். அவருடைய விளம்பர ஷூட்டிங்கில் தெரியாத்தனமாக ஒரு அரசியல் கொலையை காமிரா பதிவு செய்து விடுகிறது. அந்த டேப்புக்காக லக்ஷ்மியும், அவரின் நண்பரும் கொலை செய்யப் படுகிறார்கள். கொலைப்பழி ஜெய்யின்மேல் விழுகிறது. அதிலிருந்து அவர் எப்படி தப்பினார் என்பதுதான் கதை.
விஜய் போலவே இருக்கிறார் ஜெய். அதற்காக அவரைப் போலவே நடிக்க முயற்சித்தால் எப்படி? (நடுவே ரெண்டு சீனில் விஜயை வேறு சொல்லிக் காட்டுகிறார்கள்) திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல சுற்றி வருகிறார். ஈ என இளிக்கிறார். நடிப்பில்.. சுப்ரமணியபுரத்தில் பார்த்தவரா இவர்? ப்ரியா அறிமுகம். ரெண்டு பாட்டு. அவ்வளவுதான். லக்ஷ்மி ராய் பிகினியில் அலைகிறார். அடிபட்டு செத்துப் போகிறார். தமிழ் சினிமாவின் வழக்கமான லூசு அம்மாவாக ஊர்வசி. எரிச்சல். போலிஸ் கமிஷனராக தலைவாசல் விஜய். லோக்கல் ரவுடி மாதிரி காட்டி இருக்கிறார்கள்.
படத்தின் சுவாரசியங்கள் - சந்தானமும் ரகுமானும். முதல் முறையாக கெட்ட வார்த்தை பேசாமல் காமெடியில் பின்னி எடுக்கிறார் சந்தானம். ஊர்வசியை சமையல் நிகழ்ச்சிக்காக படம் பிடிக்கும் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். ரகுமான் யார் எனத் தெரியாமலே சஸ்பென்சாக வைத்து கடைசியில் உண்மை தெரிய வரும் போது நமக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. நன்றாக நடித்து இருக்கிறார். படத்தில் வேஸ்ட் செய்யப்பட்டவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே போடலாம். டெல்லி கணேஷ், சம்பத், ரோகிணி, நீயா நானா கோபி.. திரையில் வந்து போகிறார்கள்.
யுவன் ஷங்கரின் இசையில் ஒரு தேவதை, ஏதோ செய்கிறாய் என்று இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை ஓகே தான். அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். டாப் ஆங்கிள் ஷாட்ஸ் மட்டும் நன்றாக இருக்கிறது. டப்பா கதைக்கு சொதப்பல் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அகமத். மணல் ஓவியத்தில் ஜெய் காதலை சொல்லும் காட்சியிலும், பீஹார் கூட்டத்தை பயன்படுத்தி ஜெய் வில்லன்களை அழிக்கும் காட்சியிலும் அகமதின் டச் தெரிகிறது. படத்தில் சுவாரசியமாக இருப்பது கடைசி பத்து நிமிஷம் தான். ஆனால் அங்கு வந்து சேர்வதற்குள் நமக்கு மண்டை காய்ந்து விடுகிறது.
வாமனன் - வெத்துவேட்டு
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
34 comments:
aaavvvvvvvvvvvvvvvvvv
அப்படின்னா படம் எடுத்த புரட்யூசர் இப்ப கோமணன்-ன்னு சொல்லுங்க...
//விஜய் போலவே இருக்கிறார் ஜெய். அதற்காக அவரைப் போலவே நடிக்க முயற்சித்தால் எப்படி?//
தொடர்ந்து விஜய் யுடன் நடிப்பை இணைத்து, எங்கள் தளபதியை கிண்டல் செய்யும் முயற்சியில் உங்கள் பதிவுகள் வருகின்றன.. இது முற்றிலும் கண்டிக்க பட வேண்டியது..
இனிமேலாவது, எங்கள் டாக்டருக்கு துளியும் சம்பந்தமில்லாத நடிப்பு போன்ற வார்த்தைகளுடன் அவரை சம்பந்த படுத்தி எழுத வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்..
- புதிய கீதை தந்த விஜய் ரசிகர் மன்றம், ஹைதராபாத் இல்லைஇல்லை திருப்பூர் கிளை.
****
வழக்கம் போலவே தெளிவான அலசல்..
கார்த்தி,
சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் போல ஒவ்வொரு முறையும், இந்த முறையாவது ஒரு நல்ல படத்தை பார்த்து விட முடியாதா என்ற ஏக்கத்தில் தொடர்ந்து எல்லா படங்களையும், பணம் செலவு செய்து பார்க்கிற உங்களை பாராட்டத் தோன்றுகிறது.
சரி.. போகட்டும். கல்யாணமானா திருந்திடுவீங்க.
//நையாண்டி நைனா said...
அப்படின்னா படம் எடுத்த புரட்யூசர் இப்ப கோமணன்-ன்னு சொல்லுங்க...//
தயாரிப்பாளர் தெளிவா தன் பணத்தை சம்பாதிச்சிருப்பாரு நைனா,
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
\\ஆஞ்சநேயா - அல்டிமேட் ஸ்டாரின் அசத்தல் படம்.\\\
சொல்லவே இல்ல..இது எப்ப ஆச்சு..!
படம் இப்படியா...
விமர்சனங்களுக்கு நன்றி. அப்ப விரைவில் கலைஞர் டீ.வியில் வெள்ளிப்பரிசாக வாமனன் காத்திருக்கிறது என்று சொல்லுங்கள்.
/////ஜெய் : "நான் நடிக்கும் படங்களில் வாமனன் மட்டுமே ஓடும்..மற்றதெல்லாம் ஒரு வாரம் தாண்டினாலே அதிசயம்..".////
வாமனனுக்கே இந்த நிலைமைனா ஜெய் யோட மற்ற படங்களின் கதி???? :)
பத்திக்கு பத்தி இடைவெளி அதிகமாக இருக்கு அதை சர் செய்யுங்கள் நண்பா? நான் விமர்சனம் படிக்கவில்லை எப்படியும் படம் நான் பார்க்கபோவதில்லை அதுதான்...ஹிஹிஹிஹி
:)
நல்ல விமர்சனம்..................
படம் விமரிசனம் என்றாலே கா.பா தான்!!
இப்ப பாக்கலாம்ன்னு சொல்லுறீங்களா பாக்க கூடாதுன்னு சொல்லுறீங்களா???
:)))
நீயா நானா கோபி.. திரையில் வந்து போகிறார்கள். //
அப்படியா???
வெள்ளிகிழமையான படம் பார்த்து விமர்சனம் போடுவதில் ஏதாவது ரகசியம் இருக்கிறதா?
வெள்ளிகிழமையான படம் பார்த்து விமர்சனம் போடுவதில் ஏதாவது ரகசியம் இருக்கிறதா?
தயவு செய்து இந்திரவிழா படத்தின் திரைவிமர்சனம் எழுதவும்....
// வாமனன் - வெத்துவேட்டு //
அப்படீன்றீங்களா ???
ஓக்கே !!!!!!
நல்லவேளை இன்னிக்கு போகலாம் இருந்தேன். உங்க நல்ல மனசுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லைன்னா!! :)
//விஜய் போலவே இருக்கிறார் ஜெய். அதற்காக அவரைப் போலவே நடிக்க முயற்சித்தால் எப்படி?
OMG!
இந்திய தொலைகாட்சிகளில் முதன்முறையாக எப்போது?
அப்ப வாமனன் தயாரிப்பாளருக்கு கோமணம்னு சொல்றீங்க :0)))
//
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
//
ஏன் ரெண்டும் செய்யப்படாதா?? நான் ரெண்டும் செஞ்சிட்டேனே :0)))
//
விஜய் போலவே இருக்கிறார் ஜெய். அதற்காக அவரைப் போலவே நடிக்க முயற்சித்தால் எப்படி?//
ஜெய் விஜய் மாதிரி நடிக்க முயற்சிக்கிறார்னு சொல்றீங்களா இல்ல விஜய் நடிக்க முயற்சிக்கிறார், ஜெய்யும் நடிக்க முயற்சிக்கிறார்னு சொல்றீங்களா?? :0)))
(ஆமா, விஜய் நடிச்சி நீங்க எப்ப பார்த்தீங்க?? நானும் நெம்ப நாளா தேடிப்பார்க்கிறேன்...அப்பிடி ஒரு சீனு கூட பார்த்ததில்லியே)
இந்த படத்த தான அடுத்த வாரம் பாக்கலாம்-னு இருந்தேன்..
நல்ல வேள உங்க விமர்சனத்த படிச்சேன் :)
அப்படிங்களா...
அனைத்துக் குப்பைப் படங்களையும் முதல் நாள் பார்த்து விட்டு, "மக்களே இதைப் போய் பார்த்து விடாதீர்கள்" என்று எச்சரித்து பல கோடி தமிழ் மக்களைக் காப்பாற்றும் கார்த்திக் வாழ்க, வளர்க.
அப்போ படம் நல்லதா கூடாதா...பாக்கலாமா இல்லையா ?
//லக்ஷ்மியும், அவரின் நண்பரும் கொலை செய்யப் படுகிறார்கள்//
என்னது லக்ஷ்மிராய் செத்துப்போறாங்களா? பின்னே எப்படி படம் நல்லாருக்கும்? :-)
வாமணன்.... ஊத்திகிச்சி அதானே மாப்ள....
ஜெய் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! :)
எல்லா படத்தையும் பாத்து நாங்கல்லாம் மதுரக்காரைங்கடா என்பதை நிருபிக்கிறீர்கள்.நானும் மதுரை தாம்ன்னே..........
//வாமனன் - வெத்துவேட்டு//
நச்சுனு சொல்லிட்டீங்க.. பாஸ்..
//டப்பா கதைக்கு சொதப்பல் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அகமத். மணல் ஓவியத்தில் ஜெய் காதலை சொல்லும் காட்சியிலும், பீஹார் கூட்டத்தை பயன்படுத்தி ஜெய் வில்லன்களை அழிக்கும் காட்சியிலும் அகமதின் டச் தெரிகிறது.//
அஹ்மது டச் எங்க தெரியுது..??? Enemy of the State ஓட அட்டர் காபிமாரில்ல தெரியுது
It is a direct copy of the Hollywood movie "Enemy of the State". Still Enemy of the State is 100% better.
Post a Comment