July 14, 2009

நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!!

கஷ்டப்பட்டு படிச்சு டாக்டர் பட்டம் வாங்கினது எல்லாம் அந்தக் காலம். வர்றவன் போறவன்.. கிழிஞ்சது கிழியாதது... பட்டன் வச்சது வைக்காதது.. தோலான் துருத்திக்கு எல்லாம் தேடிப் பிடிச்சு டாக்டர் பட்டம் கொடுக்குறதுதான் இப்போதைய லேட்டஸ்ட் பேஷன். சாதாரண ஆளுங்களே டாக்டர் பட்டம் வாங்கறப்போ, நம்ம நடிகர்கள்.. நாளைக்கு நம்ம நாட்டை ஆளப் போற புண்ணியாத்மாக்கள்..(அந்த நெனப்புல தாண்ணே பல பேரு ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்காய்ங்க.. ) அவங்க டாக்டர் பட்டம் வாங்க வேண்டாமா? ஒரு நடிகர் எப்படி பிரபலமாகி டாக்டர் பட்டம் வாங்கலாம்னு சொல்லத்தான் இந்த இடுகை..
-->உங்க அப்பா ஒரு இயக்குனராவோ, தயாரிப்பாளராவோ இருந்தா ரொம்ப நல்லது. அப்பத்தான் உங்களோட அத்தனை படமும் தொடர்ச்சியா ஊத்தினாலும் மறுபடியும் உங்களை வச்சு படம் எடுப்பாங்க. அப்படி இயக்குனர் அப்பா இல்லாதவங்க யாராவது ஒரு இளிச்சவாயனா பார்த்து தத்து எடுத்துக்கோங்க..
-->கதை இருக்கோ இல்லையோ.. கதாநாயகிய பார்த்து செலக்ட் பண்ணுங்க. ஏன்னா கண்டிப்பா உங்களுக்காக ஓடலைன்னாலும் படம் நாயகியோட கவர்ச்சிக்காகவாவது ஓடும்.
-->படத்துல நீங்களே ஒரு பாட்டு பாடுறது ரொம்ப அவசியம். கொத்து புரோட்டா, சால்னா, கோடு, ரோடு, பூரி, பிஸ்கோத்துன்னு எல்லாம் தமிழ் இலக்கிய வார்த்தைகளா போட்டு பாடுங்க. பாட்டுக்கு நடுவுல "இந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பது.." அப்படின்னு விளம்பரம் பண்ணனும். (விளம்பரம் முக்கியம் அமைச்சரே..)
-->நீங்க தொடர்ந்து முயற்சி பண்ணினா, கண்டிப்பா நடுவில யாராவது ஒரு நல்ல இயக்குனர் கிட்ட தெரியாத்தனமா சிக்கி, ஏதாவது ஒரு நல்ல படத்துல நடிச்சுருவீங்க. இனிமேல்தான் ரொம்ப முக்கியமான நேரம். வளர்ந்து வர இன்னொரு நடிகன் எவனையாவது செலக்ட் பண்ணி இவன்தாண்டா எனக்கு போட்டின்னு சொல்லிறனும். உங்களோட எல்லாப் படத்துலயும் அவனத் திட்டி வசனமும், பாட்டும் இருக்கணும்.
-->உங்களுக்குன்னு ஒரு ரசிகர் க்ரூப்ப செட் பண்ணிக்கோங்க. உங்களோட படம் பாடாவதியா இருந்தாலும் ரிலீஸ் ஆகுற தியேட்டர்ல எல்லாம் போய் பாட்டுக்கு ஒன்ஸ்மோர் கேக்குறது, திரைய கிழிக்கிறது.. இதுதான் இவங்க வேலையே. அப்படியே உங்களோட எதிரியோட படம் வந்தா, முதல் ரோவுல உக்கார்ந்துக்கிட்டு, இது வெளங்காது.. படம் தேறாதுன்னு எல்லாம் பரப்பணும். ரசிகர்கள் அடிச்சிக்கிட்டு சாவாய்ங்க. நீங்க ஜாலியா வேடிக்கை பார்க்கலாம்.
-->வேற யாராவது ஒரு நடிகர் வளர்ந்து வர மாதிரி தெரிஞ்சா.. இருக்கவே இருக்காரு உங்க அப்பா இயக்குனரு. அவரை விட்டு வளரும் நடிகனுக்கு ஒரு படம் எடுக்க சொல்லுங்க. நீங்களும் கெஸ்ட் ரோல் பண்ணலாம். அதுக்கு அப்புறமும் அவன் சினி பீல்டுல இருக்க முடியுமா என்ன?
-->கெட்டப் மாத்துறேன்னு எல்லாம் சிரமப்பட்டு நடிக்கக் கூடாது. ஏன்னு கேட்டா மக்களுக்கு அதுதான் பிடிச்சு இருக்குன்னு சொல்லணும். அதிகபட்சம் சுண்டு விரல் பக்கத்துல ஒரு சின்ன விரல ஒட்ட வச்சுக்கோங்க. அதுக்கே மக்கள் பின்னாடி "தீ" வச்ச மாதிரி தெறிச்சு ஓடுவாய்ங்க..
-->நாம ரொம்ப நல்லவரு, அமைதி.. அப்படின்னு எல்லாம் சீன போடணும். அதனால்.. முடிஞ்ச அளவுக்கு நிருபர்கள் கூட்டுற பிரஸ் கான்பெரன்ஸ்ல கலந்துக்காதீங்க.. அப்புறம்.. சைலன்ஸ்.. பேசிக்கிட்டு இருக்கோம்ல.. இதுதான் நடக்கும்..
-->படம் சரியா ஓட மாட்டேங்குதா.. இருக்கவே இருக்கு.. அரசியல். வருவேன்.. ஆனா வர மாட்டேன்னு சொல்லிக்கிட்டே.. இளிச்சவா ரசிகர்களை ஏமாத்துங்க. உண்ணாவிரதம், நற்பணி இயக்கம்னு எதையாவது கொளுத்திப் போட்டுகிஇடே இருந்தாப் போதும். ரசிகனும் ஆன்னு வாயப் பொளந்துக்கிட்டு உங்களுக்காக தோரணம் கட்டுறது, ஆடுறது, பாடுறது எல்லாம் செய்வான்.

ஆத்தாடி ஆத்தா.. இவ்ளோ செஞ்ச பின்னாடி உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமலா போய்டும்..? எவனாவது ஒரு கேனப்பய யுனிவர்சிடி உங்களைக் கூப்பிட்டு குடுப்பான்.. என்சாய்....
டிஸ்கி: இந்தப் இடுகை யாரையும் குறிப்பிடுவது அல்ல.. யார் மனசையும் நோகடிக்கிரதுக்காக கிடையாது.. அப்படின்னு சொன்னா என்ன நம்பவா போறீங்க.. (பசங்க மீனாட்சி ஸ்டைலில் படிக்கவும்..) அதான்.. அதேதான்.. :-)))))
***************
அச்சு ஊடகங்களில் நம் பதிவுலகம் பரவலான கவனிப்பை பெற்று வருவது ஆரோக்கியமான விஷயம். மற்ற நண்பர்களைப் பற்றி பத்திரிக்கைகளில் வரும் போதெல்லாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அவர்களை போனில் அழைத்து வாழ்த்துவேன். இப்போது என் முறை. இந்த வார கல்கியில் என்னுடைய பதிவு பற்றியும், நண்பர்கள் நரசிம், ஆதவா, ஷீ-நிசி, முத்துவேல் பற்றிய அறிமுகம் வந்துள்ளது. நிரம்ப மகிழ்ச்சி. ஒரு சின்ன அங்கீகாரம். இதற்குத் தானே ஆசைப்படுகிறோம். கல்கிக்கு நன்றி. என்னை வாழ்த்திய நண்பர்களுக்கும் இதனை சாத்தியமாக்கிய நண்பர் "அகநாழிகை" பொன்.வாசுதேவனுக்கும் நன்றி.
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

43 comments:

குடந்தை அன்புமணி said...

இன்னமும் கோபம் தீரவே தீராது போலிருக்கு... நடக்கட்டும் நடக்கட்டும்...

கல்கியில் வந்ததற்கு வாழ்த்துகள்.
அதுசரி என்மேல் ஏதும் கோபமா...வலைப்பக்கமே காணமே...அதான் கேட்டேன்.

சித்து said...

வாழ்த்துக்கள் தோழரே.

இந்த 50 அடி உயர கட் அவுட் வச்சி பீர் அபிஷேகம் பால் அபிஷேகம் பண்றதா உட்டுடீங்கலே??

நையாண்டி நைனா said...

வாழ்த்துக்கள்.
டாக்டர். கார்த்திகை பாண்டியன் அவர்களே..

Raju said...

:)

\\டாக்டர். கார்த்திகை பாண்டியன் அவர்களே\\

அதுக்கான முயற்சி நடந்துக்கிட்டு இருக்கு நைனா..!

லோகு said...

இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்.. சூப்பர்.. கலக்குங்க..
******

கல்கியால் பாராட்ட பட்டதற்கு வாழ்த்துக்கள்..

தீப்பெட்டி said...

கல்கியில் வந்ததற்கு வாழ்த்துகள்

வினோத் கெளதம் said...

கார்த்தி வாழ்த்துக்கள் கல்கியில் வந்ததற்கு..

அகநாழிகை said...

டாக்டர் பட்டம் விரைவில் கார்த்திக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

சொல்லரசன் said...

//இந்தப் இடுகை யாரையும் குறிப்பிடுவது அல்ல.. யார் மனசையும் நோகடிக்கிரதுக்காக கிடையாது.. அப்படின்னு சொன்னா என்ன நம்பவா போறீங்க.. //

சொல்றதயெல்லாம் சொல்லிட்டு இதுவேறயா?

கல்கியில் வந்ததற்கு வாழ்த்துகள்.

முரளிகண்ணன் said...

கல்கியில் வந்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான பதிவு
நிகழ்கால சமூகக் கொடுமைகளை அழகாகவும் நகைச்சுவையுணர்வுடனும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்....

டாக்டர் பட்டத்தை இனியும் இதைவிட கேவலப்படுத்த முடியாது...

என்பதே நிகழ்கால மறுக்க முடியாத உண்மை..

ஹேமா said...

என்னமோ இவ்ளோ கோவமா இருக்கீங்க.ஏங்க அவங்க "டாகடர்" பட்டம் வாங்கிறதில இப்பிடிப் பொறாமை உங்களுக்கு.அதுக்கு அவங்க எவ்ளோ காக்கா பிடிச்சு,கொடி பிடிச்சு,
உண்ணாவிரதம் எல்லாம் இருந்து கஸ்டப்படுறாங்க.பாருங்க....இப்போ அவங்களைப் பத்தி எழுதியே நீங்க பெரிய ஆளாயிட்டீங்க.அவங்க அப்பிடி இல்லாட்டி நீங்க இப்பிடி ஆவீங்களா...!

வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்.

மஞ்சள் ஜட்டி said...

எதோ வெற்றி குரங்கை குச்சியால குத்துற மாதிரி இருக்கு??

இராகவன் நைஜிரியா said...

கல்கியில் தாங்கள் பாராட்டப் பட்டதற்கு வாழ்த்துக்கள் பல..

நானும் ஒரு பல்கலைக் கழகம் ஆரம்பித்து அதில் தங்களுக்கு ஒரு டாக்டர் பட்டம் வழங்க ஆவலாக இருக்கின்றேன். எப்போ சினிமாவில் நடிக்க போறீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும்.

சுந்தர் said...

சரி, விடுங்க அல்டிமட்டு அசீத்துக்கும் டாக்டர் பட்டம் கொடுத்துடுவோம்.

Prabu M said...

வாழ்த்துக்கள் நண்பா...
ரொம்ப சந்தோஷம்.....
கமலஹாசனுக்கு அந்த யுனிவர்சிடி டாக்டர் பட்டம் கொடுத்தப்போ (வைரமுத்து போன்றவர்கள் வசூல்ராஜா படத்தின் வெற்றிவிழாவில் கமலுக்கு ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கலாம் என்று பரிந்துரைத்ததைத் தொடர்ந்து கொடுக்கப் பட்டது!) ஓகே தானே!! என்று சொல்லிக்கொள்ள முடிந்தது.... ஆனால் அடுத்த வருடமே இங்கே கலாய்க்கப் பட்டிருக்கும் இந்தக் கலையுலக மாமேதை (!) க்கும் அதே பல்கலைக் கழகம் அதே பட்டத்தைக் கொடுத்தபோதுதான் வெட்ட வெளிச்சமானது இதுவும் இன்னுமொரு வியாபாரம் என்று.....

பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் எம்.பி.பி.எஸ்.... பி.ஹெச்.டி என்று படித்து வாங்கும் பட்டத்துக்குத் தயவுசெய்து வேறு பெயர் கொடுக்கவும்....!!

ஜெட்லி... said...

இப்படி ஒரு தாக்குதலா...?
பாவம் டாக்டர் விஜய்.

Anonymous said...

/// பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் எம்.பி.பி.எஸ்.... பி.ஹெச்.டி என்று படித்து வாங்கும் பட்டத்துக்குத் தயவுசெய்து வேறு பெயர் கொடுக்கவும்....!! ///

அதிலும் வருமானம் வந்தா கண்டிப்பா மாத்துவாங்க (தமிழ் படத்துக்கு பேர் வவைப்பதுபோல)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சரிதான் ,வேற மேட்டர் எதுவும் கிடைக்கலையா ? ஏன் இப்படி ?

அத்திரி said...

ஏன் இந்த கொலை வெறி......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...........

RVRPhoto said...

ஆட்டோ அனுப்ப போறனுகள் கவனமா இருங்கோ.

பீர் | Peer said...

கல்கிக்கு வாழ்த்துக்கள், கார்த்திக்!!!

சிவக்குமரன் said...

:)

வால்பையன் said...

//வேற யாராவது ஒரு நடிகர் வளர்ந்து வர மாதிரி தெரிஞ்சா.. இருக்கவே இருக்காரு உங்க அப்பா இயக்குனரு. அவரை விட்டு வளரும் நடிகனுக்கு ஒரு படம் எடுக்க சொல்லுங்க. நீங்களும் கெஸ்ட் ரோல் பண்ணலாம். அதுக்கு அப்புறமும் அவன் சினி பீல்டுல இருக்க முடியுமா என்ன?//


இது தான் ஹைலைட்!
அர்ச்சனை எதுவும் நடந்ததா!?

வால்பையன் said...

கல்கிக்கு வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

நண்பா எதிர் பதிவு போட்டு பழக்கமில்ல

போட வச்சுடாதீங்க.....

ஏன் விஜய விட வேற பல விஷயங்கள் இருக்கு....


விட்ருங்க தலைவா பாவம் அவரு......

தருமி said...

கல்கிக்கு வாழ்த்துக்கள்.

//இன்னொரு நடிகன் எவனையாவது செலக்ட் பண்ணி இவன்தாண்டா எனக்கு போட்டின்னு சொல்லிறனும். // இதுல "உங்க ஆளுக்கும்" பங்கு இருக்குல்ல ..?

அப்துல்மாலிக் said...

உண்மைய அப்பட்டமா சொல்லிருக்கீங்க பதிவுலக டாக்டர்..

முழுதும் ரசித்தேன்

கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்

கும்மாச்சி said...

நீங்க யாரை சொல்லுரிங்கன்னு முலை சப்புற குழந்தைக்குக்கோட தெரியுங்கன்னா, ஆனா உண்ணா விரதுத்திலே பிரியாணி வுட்டின்டீங்கலே.

சம்பத் said...

ரொம்ப நாளுக்கப்புறம் டாக்டரை வம்புக்கு இழுத்திருக்கீங்க போல....ம்ம்ம்...நடக்கட்டும்...
கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்..

நசரேயன் said...

இதுக்குதான் நான் கதாநாயகனா நடிக்கிறதே இல்லை

Suresh said...

Valthukkal Machan parthen romba santhosam :-) pathiva vida diski sema kalakal ha ha ha

Suresh said...

கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்

nila said...

அந்த டாக்டர் பட்டம் வாங்குறதுக்காக நானெல்லாம் மண்டைய உடைச்சுகிட்டு ரிசர்ச் பண்ணி என்னத்துக்காவுது...??? அஞ்சு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சு ராத்திரி பகலா லேப்ல உழைச்சு வாங்குற பட்டத்த இவங்க எல்லாம் பத்து பிளோப் படம் குடுத்து வங்கிடுறாங்க... அப்புடியே நாங்க டாக்டர் பட்டம் வாங்கினாலும் அத கல்யாண பத்திரிக்கைல கூட போட முடியாது... இன்னும் நெறைய படிச்சு கிழிச்சாதான் பெருமைய பேருக்கு முன்னாடி பட்டம் போட முடியும்... இப்படி எங்க நிலைமை இருக்க.. நீங்க வேற இந்தமாதிரி ஊருக்கே டிப்ஸ் குடுக்குறீங்களா??? நாடு தாங்காது சாமி...
பின் குறிப்பு: இருந்தாலும் உங்க முயற்சிய பாராட்டுறேன்.. ஏதோ என் வயித்தெரிச்சல கொட்டுறதுக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சுதே

Mohan said...

கலக்கல்! வாழ்த்துக்கள் கல்கியில் வந்ததற்கு!

*இயற்கை ராஜி* said...

Ph.D க்கு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கும் போது இப்பிடி ஒரு பதிவை எழுதி வயித்தெரிச்சலை கொட்டிக்கிறீங்களே தோழா:-(

*இயற்கை ராஜி* said...

கல்கியில் வந்ததற்கு வாழ்த்துகள்.

nila said...

ஹா ஹா ஹா.. இதோ என் சார்பில் இன்னொருத்தர்

"உழவன்" "Uzhavan" said...

கல்கிக்கு.. இல்ல இல்ல உங்களுக்கு வாழ்த்துக்கள்! கல்கிக்கு நன்றி :-)

வழிப்போக்கன் said...

தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்...

http://jspraveen.blogspot.com/2009/07/blog-post.html

ஊர்சுற்றி said...

முதலில் வாழ்த்துக்கள்.

அப்புறம்,

டாக்டர். விஜய் னு நேரடியாவே சொல்லியிருக்கலாம். டிஸ்கி எல்லாம் தேவையே இல்லை. :)

என்.கே.அஷோக்பரன் said...

அட இது பரவாயில்லை - எங்கள் தேசத்திலே அப்பட்டமான ரௌடி அரசியல் வாதி ஒருத்தர்(ன்) இருக்கிறார்(ன்). அவர் அமைச்சர் வேற - அவர் மீது இல்லாத குற்றச்சாட்டுக்களேயில்லை குறிப்பாக நேரடியாக வீடியோவிலேயே குறிப்பிட்ட ஊடக நிறுவனமொன்றை மிகக் கெட்ட வார்த்தைகளால் திட்டியது முதல் அந்தப் பட்டியல் நீயம் அதிகமானது. அவருக்கு டாக்டர் பட்டம் வேற. இதுல முக்கிய விஷயம் என்ன தெரியுமா? பாராளுமன்றத்தில் ஒரு முறை இவரை டாக்டர் என்று சொல்லாமல் சபாநாயகர் அழைக்க - இவர் எழுந்து நான் சும்மா அவர் இல்லை டாக்டர் அவர் என்று சொன்னது தானட வேடிக்கை.

எங்கடா கோகுது இந்த உலகம்.

பி.கு. அந்த அவர் யார் என்று சொல்லாமைக்கு வருந்துகிறேன். இது வேற தேசமாக இருந்தால் சொல்லியிருப்பேன் - நானிருப்பதுவோ இலங்கை - ஒருவேளை நான் இதச் சொல்ல என்னைத்தேடி வெள்ளை வேன் வந்துட்டிது என்றால்???

ஆ.ஞானசேகரன் said...

சுட்டியை சுட்டுங்கள்
வாங்க விளையாடலாம்.. விருது கொடுக்கின்றோம்..(ஊக்கப்படுத்தும் வலைப்பதிவு விருது)