July 23, 2009

சொந்த ஊரும் நம்பர் பிளேட்டுகளும்..!!!


வேலை என்னும் பெயரால்
ஏதேதோ ஊர்களில்
பெயர் தெரியா மனிதர்களின்
ஊடே - முகவரி அற்றவனாக
சுற்றித் திரிந்து இருக்கிறேன்..!!

சாலையில் நடக்கையில்
கடந்து போகும் வாகனங்களில்
எல்லாம் - நம்பர் பிளேட்டுக்களை
உற்று நோக்கி மீளும் என் கண்கள்..!!

எதிர்பாரா தருணங்களில்
சட்டென தட்டுப்படும்
என் ஊரின் பதிவெண்ணை
பார்க்கும் போதெல்லாம்....
வார்த்தைகளால் விளக்க முடியாத
உணர்வு என்னை ஆட்கொள்ள - முகம்
தெரியா அந்த ஓட்டுனர் எனக்கு
நெருக்கமானதாய் உணர்வேன்..!!

நாட்கள் பல தாண்டி
ஓடிக் களைத்தவனாக..
கூடு தேடும் பறவையாய் - என்
சொந்த ஊரில்.. நான்..!!

இப்போதும் சாலையில் என்னைக்
கடந்து போகும் வாகனம் அனைத்திலும்
ஒரே பதிவெண் - இருந்தும்
நான் மட்டும் அந்நியனாய்..!!

இப்போதெல்லாம் நான்
நம்பர் பிளேட்டுகளை
பார்ப்பதே இல்லை..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

32 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நண்பா நீங்களாவது த நா அப்பிடின்ற வாசகங்களை பாக்குறீங்க வெளிநாட்டுல இருக்குற நாங்க ?

கவிதையில் உணர்ச்சியின் வெளிப்பாடு.....

Raju said...

ம்ம்..பேனாவ ச்சீ..கீபார்ட எடுங்க நைனா..!

கிருஷ்ண மூர்த்தி S said...

/இப்போதும் சாலையில் என்னைக் கடந்து போகும் வாகனம் அனைத்திலும்ஒரே பதிவெண் - இருந்தும்நான் மட்டும் அந்நியனாய்..!!/

இதுவும் கடந்து போகும்!

எப்போது? எப்படி?
/எதிர்பாரா தருணங்களில் சட்டென தட்டுப்படும் என் ஊரின் பதிவெண்ணை பார்க்கும் போதெல்லாம்....வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வு என்னை ஆட்கொள்ள - முகம் தெரியா அந்த ஓட்டுனர் எனக்கு நெருக்கமானதாய் உணர்வேன்..!!/

இது கடந்து போனதைப்போல!!

நையாண்டி நைனா said...

/* டக்ளஸ்... said...
ம்ம்..பேனாவ ச்சீ..கீபார்ட எடுங்க நைனா..!*/

யோவ் நானென்ன ஏ.ஆர்.ரகுமானா இல்லே இவர்தான் வைர முத்தா....

இப்படி உசுபேத்தி உசுபேத்தியே... எங்க கடைய எங்களைவச்சே காலி பண்ணிட்டே.

Anbu said...

நல்லா இருக்கு அண்ணா.

நையாண்டி நைனா said...

பாஸ்..............
வண்டி நம்பர் பிலேட்டுன்னு சொல்லி வீட்டு நம்பர் பிளேட்டுகளை போட்டிருக்கீங்களே... உங்க கற்பனை, என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது...

இந்த படம் மூலமா நீங்களும் ஒரு "பின்"-நவீனத்துவவாதின்னு எங்க மர மண்டையிலே ஓங்கி குத்தி சொல்லிட்டீங்க

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.மிகப் பிடித்திருந்தது.

நாஞ்சில் நாதம் said...

:))

சொல்லரசன் said...

//எதிர்பாரா தருணங்களில்
சட்டென தட்டுப்படும்
என் ஊரின் பதிவெண்ணை
பார்க்கும் போதெல்லாம்....
வார்த்தைகளால் விளக்க முடியாத
உணர்வு என்னை ஆட்கொள்ள//

உண்மைதானுங்க.அருமையான கவிதை இதற்கு எதிர்கவுஜ விரைவில் வரும்
நையான்டி கடையில் சந்திப்போம்

நையாண்டி நைனா said...

எதிர் கவுஜை தம்பி டக்ளசு கடையில்...

வருக வருக என வரவேற்கிறது வடதேசத்து வாலிபர் வட்டம்.

ஹேமா said...

கார்த்திகைப் பாண்டியன்,ஊரின் பிரிவு,குடும்பத்தின் பிரிவை அழகாக வாகனங்களின் இலக்கத்தகட்டுக்குள் செருகிச் சொல்லியிருக்கிறீர்கள்.நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மைதான்.

ஆ.ஞானசேகரன் said...

//எதிர்பாரா தருணங்களில்
சட்டென தட்டுப்படும்
என் ஊரின் பதிவெண்ணை
பார்க்கும் போதெல்லாம்....
வார்த்தைகளால் விளக்க முடியாத
உணர்வு என்னை ஆட்கொள்ள - முகம்
தெரியா அந்த ஓட்டுனர் எனக்கு
நெருக்கமானதாய் உணர்வேன்..!!//

நல்லாயிருக்கு நண்பா

நாடோடி இலக்கியன் said...

கவிதையின் 'கரு' அருமை நண்பா,

அந்நிய நாட்டில் இருந்த போது இந்திய முகங்களை தேடிய ஞாபகம் வருகிறது.

*இயற்கை ராஜி* said...

எதிர்பாரா தருணங்களில் சட்டென தட்டுப்படும் என் ஊரின் பதிவெண்ணை பார்க்கும் போதெல்லாம்....வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வு என்னை ஆட்கொள்ள - முகம் தெரியா அந்த ஓட்டுனர் எனக்கு நெருக்கமானதாய் உணர்வேன்///

ithu enakkum thonum:-)

அ.மு.செய்யது said...

ம‌ஹாராஷ்டிராவில் இருப்ப‌தால் என்று தொட‌ங்கும் ந‌ம்ப‌ர் பிளேட்டுக‌ளின் ம‌த்தியில்
எங்கேனும் இருக்காதா ?? என்று நானும் அவ்வ‌ப்போது பார்த்து ஏங்குவேன்.

உண‌ர்வுக‌ளை அழ‌கா சொல்லியிருக்கீங்க‌ கார்த்திக் !!! என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்கு !!

அ.மு.செய்யது said...

நான் சொன்னது MH என்று தொட‌ங்கும் ந‌ம்ப‌ர் பிளேட்டுக‌ளுக்கு ம‌த்தியில் TN என்று தொட‌ங்கும் ந‌ம்ப‌ர் பிளேட்டுக‌ள்....மேலே விட்டு விட்டேன்.

வால்பையன் said...

TN 33 ய பார்க்கும் போது எதாவது தோணதா தல!

தினேஷ் said...

எனக்கு இன்னும் இங்க TN பாத்தா யோசிக்க வைக்கும்

குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே என் சிற்றறிவுக்கு எட்டலேண்ணே!!!

Unknown said...

நாமதான் இப்படியோனு நினச்சேன்..

எல்லோரும் அப்படிதான் இருக்காங்க..

நல்ல கவிதை..

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

உண்மை உண்மை - சுற்றம் நட்பு இவைகள் இல்லாத இடத்தில் இவர்களைத் தேடும் கண்கள் - இவர்களால் நிறைக்கப்பட்ட இடத்தில் தேடும் தேவை இல்லாது போய் விடும்.

இடுகையின் கருத்து நன்று

நல்ல நடையில் எழுதப்பட்டிருக்கிறது

டக்ளசு எதிர் இடுகை போட்டான் போல இருக்கு

ச.பிரேம்குமார் said...

நல்ல கருப்பொருள் கொண்ட கவிதை பாண்டியன். உங்க கவிதைகள் மெருகேறிக்கொண்டே இருக்கின்றன. வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

நண்பா.. சூப்பர். சென்னையில் TN69 என்ற எண்ணைப் பார்த்தாலே எனக்கு அவர்களிடம் பேசவேண்டும் என்று தோன்றும். பேசும் போதுதான் தெரியும் அவர்கள் நமது ஊராகவோ இல்லை பக்கது ஊராகவோ இருப்பார்கள். அருமையான அனுபவம்.

குடந்தை அன்புமணி said...

அருமையா இருக்கு நண்பா. ஊர்க்காரக, உறவுக்காரகவுங்கிறதையும் தாண்டி உயிரற்ற வண்டியின் எண்கூட நம் ஊர்பாசத்தை காட்டும் என்பது உண்மைதான்.

நல்ல கவிதை.

ஊர்சுற்றி said...

நல்ல உணர்ச்சிகளின் வெளிப்பாடு...

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

நல்ல கவிதை ,தொலைவில் உள்ள போதுதான் நம்ம ஊர் பாசம் அதிகமாகும்
..1

Anonymous said...

நல்ல கவிதை நண்பா. அழகாக இருக்கிறது. தொலைவில் இருக்கும் போது போது தான் ஊரின் பெருமை நமக்கு புரியும்.

ஆதவா said...

என்ன சார்...

உங்களுக்கும் அந்த பழக்கம் உண்டா??

நான் வண்டி எண்ணைப் பார்த்ததும் உற்றுநோக்குவது இரண்டு விஷயங்களுக்காக....

1. எண்களில் இரண்டு ஒரேமாதிரியான எண்கள் (Duplicate Digit)
2. எண்களில் அடுத்தடுத்த எண்கள் (Cheating Digit)

எல்லாம் ஒரு விளையாட்டுத்தான்!!! ஹி ஹி

வழிப்போக்கன் said...

கவிதை சூப்பர் அண்ணா...
கலக்குங்க....
:)))

ஆ.சுதா said...

பிடித்திருக்கின்றது பாண்டியன்.

தருமி said...

கவுஜ ,.. கவுஜ

// என்னைக் கடந்து போகும் வாகனம் அனைத்திலும்ஒரே பதிவெண் //

இல்லியே .. 58 & 59 இரு பதிவெண்ணாச்சே!

Anonymous said...

r.t.o ஆபீசில் வேலை பாக்கும் விவரம் யாருக்கும் தெரியாதா?