December 28, 2009

டாப் டென் டப்பா படங்கள் 2009 ..!!!

பெரிதும் எதிர்பார்ப்பைக் கிளப்பும் படங்கள் ஊத்திக் கொள்வது நமக்கு ஒண்ணும் புதுசில்லை. இந்த வருஷம் வெளியான நேரடித் தமிழ் படங்கள், கிட்டத்தட்ட 125. (உண்மையிலேயே) வெற்றி பெற்றவை எத்தனைன்னு பார்த்தா மண்டை காய்றது நிச்சயம். என்னோட பார்வையில், நல்லாயிருக்கும்னு நம்பிப் போன ரசிகர்களோட வயித்தெரிச்சல கொட்டிக்கிட்ட, 2009 இன் டாப் டென் டப்பா படங்களைத்தான் இங்கே தொகுத்து இருக்கிறேன். ரேட்டிங் எல்லாம் கொடுக்கலை. இருக்குறதிலேயே பெரிய கொடுமை எதுன்னு நீங்களே சொல்லுங்கப்பா...

படிக்காதவன்
***************

சரியாப் படிக்காத பசங்க எல்லாம் படிச்ச பிகராப் பார்த்து உஷார் பண்ணினா வாழ்க்கைல ஓகோன்னு வரலாம்னு அரிய தத்துவ முத்தை உதிர்த்த படம். வடிவேலு ஸ்டைல்ல விவேக் பண்ணின காமெடிதான் படத்துல பாக்குற மாதிரி இருந்த ஒரே விஷயம். சன் டிவி விளம்பரத்துல மட்டும் படம் நூறு நாள் ஓடுச்சு. பொல்லாதவன், யாரடி நீ மோகினின்னு நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு.. இப்போ வரக்கூடிய தெலுங்கு படங்களே ஓரளவுக்கு டீசெண்டா இருக்குறப்போ, நமக்கு இது தேவையா தனுஷ்?

நான் கடவுள்
**************

பாலா என்கிற அற்புதமான கலைஞன் சறுக்கின படம். இந்தப் படத்தை பாலாவைத் தவிர யாரும் எடுத்திருக்க முடியாது. ஆனால் படத்துக்கு இருந்த பிரமாண்டமான எதிர்பார்ப்பே படத்துக்கு மிகப் பெரிய மைனசாப் போச்சு. நல்ல நடிப்பை தெளிவில்லாத திரைக்கதை காலி பண்ணிருச்சுன்னு தான் சொல்லணும். கிளைமாக்ஸ் மகா சொதப்பல். ஆர்யா மூணு வருஷம் தாடியும் மீசையுமாதலைமறைவாத் திரிஞ்சது மட்டும்தான் மிச்சம்.

1977
*****

ரொம்ப நாளாவே தன்னோட கனவுப்படம்னு சரத் சொல்லிக்கிட்டு இருந்தாரேன்னு நம்பிப் போய் உக்கார்ந்தா.. அவ்வ்வ்வவ்.. ஏண்டா உள்ள வந்தேன்னு கூப்பிட்டு வச்சுக் குத்தின படம். சட்டை இல்லாம நமீதா கூட டான்ஸ் ஆடுன சரத்தைப் பார்த்து ஜன்னி வராத குறைதான். ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி எடுக்கலாம்னு சொல்லி டைரடக்கரு சரத் தலைல மிளகா அரச்சு இருந்தாரு...கூடவ தலையைக் கொடுத்தது நம்ம தப்புத்தான்.

மரியாதை
************

ஏய்.. நீ மட்டும்தான் டப்பா படம் கொடுப்பியா.. நாங்க மாட்டோமான்னு சரத்துக்கு போட்டியா கேப்டன் களம் இறங்கி கலக்கிய படம். வானத்தப்போல விக்ரமன்னு போனா, வெளில வந்தவங்க கண்ணுலையும் காதுலையும் ரத்த ஆறு.. ஒரே லாலலா.. இன்பமே பாட்டுக்கு மீரா ஜாஸ்மின் ஆட, கேப்டன் பாட.. புரட்சிக் கலைஞரோட மேக்கப்பை பார்த்து ஹாலிவுட் மக்கள் எல்லாம் வாவ் வாட் மேன்னு வாயப் பொளந்தவங்க பொளந்தவங்க தான்.. டைரக்ட் டிக்கெட்டு..

ஆனந்த தாண்டவம்
**********************

சுஜாதாவோட "பிரிவோம் சந்திப்போம்".. நாவல்கள் படமாக்கப்படும் போது எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவது கிடையாது என்கின்ற சினிமாத்துறையின் நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்தது.. நல்ல வேளை இந்தக் கொடுமைய பார்க்காம, படம் வரதுக்கு முன்னாடியே தல போய் சேர்ந்துட்டாரு.. கதாநாயகனோட லட்சணத்துக்கே படத்துக்கு ஆஸ்கார் அவார்டு தரணும்..

தோரணை
************

புலியைப் பார்த்து சூடு போட்டுக்கலாம்.. பூனையைப் பார்த்து? தமிழ் சினிமாவைக் காப்பாத்த ஒரு விஜய் மட்டும் போதாது, நானும் களத்தில் குதிச்சே தீருவேன்னு அடம் பிடிக்கும் விஷாலுக்கு கிடைச்ச மரண அடி. பாட்டும் வொர்க்அவுட் ஆகாததினால படம் பயங்கர ஊத்து.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கிராமத்துல இருந்து சிட்டிக்கு வர ஹீரோவை நாம பார்க்க வேண்டி இருக்குமோ? கொஞ்சமாவது திருந்துங்கப்பா..

பொக்கிஷம்
**************

தமிழ் சினிமாவை உலக சினிமா ரேஞ்சுக்கு கொண்டு போகாம விட மாட்டேண்டா டோய்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கிற சேரனோட படம். நல்ல எண்ணம் தான்.. ஆனா படம் அந்த மாதிரிஇல்லையே.. நீளம் ஜாஸ்தி + திரைக்கதை சொதப்பல். அத விட பெரிய நொம்பலம், கதாநாயகனா சேரனே நடிச்சதுதான். வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, தேசிய கீதம் போன்ற படங்களைத் தந்த இயக்குனர் சேரன் தான் எங்களுக்கு வேண்டும். நடிகர் அல்ல.. புரிந்து கொள்வீர்களா சேரன்?

ஆதவன்
**********

தசாவதாரத்துக்குப் பின் வரும் கே.எஸ்.ரவிக்குமார், அயன் வெற்றியோடு சூர்யா, ஹாரிஸ் என்று படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு. ஆனால் குருவி தந்த உதயநிதியின் படம் என்று நிரூபித்ததால்.. படம் பப்படம். தாய்வீடு காலத்து கதை.. எத்தனை நாள் தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? பாட்டு, வடிவேலு மட்டும் இல்லை.. மொத நாளே சங்கு ஊதியிருக்கும். நயன்தாராவைப் பார்த்து பல பேர் மயக்கம் போட்டு விழுந்தது தனிக்கதை.

யோகி
*******

பருத்திவீரனுக்குப் பிறகு அமீர் என்ன பண்ணப் போகிறார் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க, அவரோ கதாநாயக அவதாரம் எடுத்தார். சரி, கதை உலக சினிமா அளவுக்கு இருக்கும் போல என்று பார்த்தால்.. உலக சினிமா கதையை சுட்டு இருந்தார்கள். நான் அந்தப் படத்தைபார்த்ததே கிடையாது என்று இயக்குனரும், அமீரும் உளறியது செம காமெடி. அமீரின் இமேஜை டவுனாக்கிய படம்.

கந்தசாமி
***********

தமிழ் சினிமாவிலேயே ரொம்ப நல்லவர் விக்ரம்தான் என்பதை நிரூபித்த படம். பின்ன? அவர் நடிச்ச அந்நியன் கதையவே ஒருத்தர் அவர்கிட்ட சொல்லி.. இட் இஸ் சோ சுவீட் யூ நோ என்று விக்ரமும் மண்டையை ஆட்டி வைக்க.. இளிச்சவா புரொடியூசர் தாணு சிக்க.. ஷ்ஷ்ஷ்..யப்பா.. முடியல.. படத்தில உருப்புடியா இருந்தது தேவிஸ்ரீ பிராசத்தோட பாட்டு மட்டுமே.. ஆனா அதுக்கு விவேகா எழுதின வைர வரிகள் இருக்கே... நாலஞ்சு அவார்டு கொடுத்தாக் கூட போதாது.. இனிமேல் இப்படி படம்எடுக்காதீங்கன்னு யாராவது கந்தசாமிக்கு லெட்டர் எழுதுங்கப்பா..

என்னடா.. பத்து படம் முடிஞ்சு போச்சே..ஆனா முக்கியமா ரெண்டு படத்தை காணோமேன்னு நீங்க தேடுறது புரியுது.. அதெப்படி விடுவோம்.. ஆனா பாருங்க.. அந்த ரெண்டு படமுமே, கண்டிப்பான முறையில.. ஓடாதுன்னு (ஓடக் கூடாதுன்னு) எதிர்பார்த்த படங்கள்.. சோ.. ஹியர் வி கோ..

வில்லு
********

போக்கிரி படத்துக்குப் பிறகு வந்த விஜய் - பிரபுதேவா காம்பினேசன். தொன்னூருல வந்த சோல்ஜர் ஹிந்திப் படத்தோட உல்டா. பாட்டு எதுவுமே எதிர்பார்த்த வெற்றி பெறாதது மொத அடி. லாஜிக் இல்லாத கதை, சொதப்பலான திரைக்கதை.. சிவசம்போ..

வேட்டைக்காரன்
*******************

படம் நல்லாயிருக்கு, இல்லைன்னு சொல்றத விட.. வில்லு, குருவிக்கு எவ்வளவோ பரவாயில்லை பாசு.. இதுதான் ஒரு விஜய் ரசிகரின் கமென்ட் என்றால், எந்த அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டிருப்பார் என்று நீங்களே யோசிங்க.. வெளங்கல.. நாலஞ்சு படத்தோட கலவை.. விஜய் திருந்தவே போறதில்லை.. இது பதிவுலக மக்களோட கமென்ட்.. மதுரைல ரெண்டாவது நாளேமதி தியேட்டர்ல காத்தாடுது.. வேற என்னத்த சொல்ல..

(இந்த ரெண்டு படமுமே நான் பார்க்கல.. நண்பர்கள் சொல்லக் கேட்டதுதான் மக்களே..)

இதே மாதிரி நீங்க எதிர்பார்த்து மண்டை காஞ்ச படங்கள் ஏதாவது இருந்தாக் கூட பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா..

இதையும் படிங்க.. ஜெட்லி - 2009 ஆண்டின் சிறந்த பத்து மொக்கை படங்கள்

47 comments:

♠ ராஜு ♠ said...

ஹலோ மிஸ்டர்.நடுநிலைவாதி..!

ஏகன்,ஏகன்னு ஒரு படம் வந்துச்சே..!
”செலக்டிவ்” அம்னீசியாவோ..?
:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

தம்பி.. ஏகன் வந்தது போன 2008 தீபாவளிக்குப்பா.. அதை போன வருஷப் பதிவுலையே எழுதிட்டேன் டக்கு..

♠ ராஜு ♠ said...

அட..ஆமால்ல..
மைல்டா டவுட்டு வந்துச்சு..
சரி..சரி..அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா..!

Mohan Kumar said...

நான் 2009- டாப் 10 நல்ல படங்கள், 10 பாடல்கள்- ன்னு போட்டுட்டு இருக்கேன். நீங்க இந்த மாதிரி dhool கிளப்பிட்டு இருக்கீங்க.

ஆதவன் படம் அறுவை தான். ஆனா படம் வசூல் நல்லா ஆனதா கேபிள் சங்கர் தொலை பேசும் போது சொன்னார்.

செந்தில் நாதன் said...

ஹ்ம்ம்...எல்லாம் சரியா தான் இருக்கு...

ஆனந்த தாண்டவம் --> இது மட்டும் இன்னைக்கும் கூட மனசு கேக்க மாட்டேங்குது... படம் பார்காம இருந்து இருக்கனும்... அன்னைக்கு தொலைச்ச மதுமிதாவ இன்னும் தேடிக்கிட்டு இருக்கேன்!!

’டொன்’ லீ said...

பரவாயில்லை இதில் நான் கடவுளை தவிர எந்த ஒரு படத்தையும் பார்க்காமல் நான் தப்பிவிட்டேனே....

Anonymous said...

நல்ல தொகுப்பு. வேட்டைக்காரன் ரொம்ப சுமார் தான். என்ன கேட்டா இந்த படத்துக்கு குருவி எவ்வளவோ பரவாயில்லை. இது அவ்வுளவு மோசம்.

பேநா மூடி said...

//♠ ராஜு ♠ said...

ஹலோ மிஸ்டர்.நடுநிலைவாதி..!

ஏகன்,ஏகன்னு ஒரு படம் வந்துச்சே..!
”செலக்டிவ்” அம்னீசியாவோ..?
:-)
//

சார் அது வந்தது 2008 - ல..

சங்கர் said...

வேட்டைக்காரன், வில்லு வரிசைல நான் கடவுளா???

சரி விடுங்க இது உங்க ரசனை

தமிழ் வெங்கட் said...

பாஸ் நீங்க ஒரு படத்துல நடிக்கலாமே..!

வானம்பாடிகள் said...

பேசும்படம் ஆனந்தனுக்கு பேர் சொல்ல வந்தவிங்களா நீங்க. இம்புட்டு வெவரமா சினிமா மேட்டரு சொல்றீங்க. :)). நான் படமே பார்க்கறதில்லை:))

சென்ஷி said...

படிக்காதவன், நான் கடவுள், ஆதவன், கந்தசாமி, வில்லு மாத்திரம்தான் பார்த்திருக்கேன்.

மரியாதை பார்த்து அஞ்சாவது நிமிசம் கண்ணுல ரத்தக்கண்ணீர் வந்துடும்ன்னு பயந்து தெறிக்க வச்சுடுச்சு. :(

பொக்கிஷம் மாத்திரம் பார்க்க வேண்டிய லிஸ்ட்ல வச்சிருக்கேன். என்னதான் மோசம்ன்னு சொன்னாலும் நாங்க பாத்துட்டுத்தான் மொக்கைன்னு சொல்லுவோம்

நல்ல தொகுப்பு :)

கார்க்கி said...

:)))

Sivaji Sankar said...

Good :)

Sangkavi said...

வேட்டைக்காரன் 2009ன் டாப் 10ல இருக்கா.........

டம்பி மேவீ said...

கார்த்தி, சிவா மனசுல சக்தி என்கிற அற்புத காவியத்தை பற்றி சொல்லாமல் விட்டுடிங்களே .....

கார்த்திகைப் பாண்டியன் said...

@ Mohan Kumar

ஆமாங்க.. ஆதவன் நல்லா கலெக்ஷன்தான்.. ஆனா படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லைல..

@ செந்தில் நாதன்

why blood? same blood..

@ ’டொன்’ லீ

வெவரமான ஆளுங்க நீங்க

@ கடையம் ஆனந்த்

அது.. ஆனா இத அத்திரிகிட்ட சொல்லாதீங்க தல.. மனுஷன் ஏற்கனவே அரண்டு போயிருக்காரு..

@ பேநா மூடி

thanks pa..

கார்த்திகைப் பாண்டியன் said...

@ சங்கர்

ஏன்ப்பா.. நான் எப்பவாவது அப்படி சொன்னேனா? இது எல்லாமே நான் ரொம்ப எதிர்பார்த்த படங்கள்.. குறிப்பா நான் கடவுள் என்னை ரொம்பவே ஏமாத்திருச்சு.. பாலாவோட தரத்துக்கு அந்தப் படம் கம்மின்னு தான் சொல்றேன்

@ தமிழ் வெங்கட்

நீங்க திட்டுரதுக்கா தல.. உங்க திட்டம் பலிக்காது..:-))

@ வானம்பாடிகள்

நன்றி பாலா சார்.. நாங்க சும்மா சின்னப் பசங்கப்பா..

@ சென்ஷி

நன்றி தல

கார்த்திகைப் பாண்டியன் said...

@ கார்க்கி

ரைட்டு சகா (நன்றி - நர்சிம்)

@ Sivaji Sankar

நன்றிங்க

@ Sangkavi

அப்படி நடந்தா ஒலகம் அழிஞ்சுடும் நண்பா

@ டம்பி மேவீ

தலைவா.. லிஸ்டுல பத்து படம்தான் சொல்ல முடியும்

ஹேமா said...

கார்த்தி ஏதாச்சும் நல்ல படம்ன்னு இருந்தா அதையும் அடுத்த பதிவா சொல்லுங்கப்பா.நல்ல படம் பாத்து ரொம்ப நாளாச்சு.

இதில கடவுள்,
பொக்கிஷம்தான் நான் பாத்தது.

Ameer Hasshan said...

இன்பமே பாட்டுக்கு மீரா ஜாஸ்மின் ஆட, கேப்டன் பாட.. புரட்சிக் கலைஞரோட மேக்கப்பை பார்த்து ஹாலிவுட் மக்கள் எல்லாம் வாவ் வாட் எ மேன்னு வாயப் பொளந்தவங்க பொளந்தவங்க தான்.. டைரக்ட் டிக்கெட்டு..

Ha ha ha ha ha ha

nice post really i like it

LOSHAN said...

")
ஆகா.. வாழ்க..
இவற்றுள் பொக்கிஷம்,தோரணை,மரியாதை தவிர மற்ற எல்லாம் பார்த்து வெந்து போன எனக்கு அவார்ட் எதுவும் கிடையாதா?

ஸ்ரீ said...

:-))))

VISA said...

Agree:)

கானா பிரபா said...

;-)))) கொன்னுட்டீங்க, உங்களைச் சொல்லல பாசு அந்த டாப் டென்னை சொன்னேன்

வழிப்போக்கன் said...

"ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..."
என்ன அண்ணா எப்படி போகுது வலைப்பூ???
நிறைய நாற்களுக்கு பிறகு என்ரி குடுக்கிறேன்....
நல்லா பின்னி பிடலெடுதிருக்கீங்க..

வாழ்த்துகள்....

சுவாசிகா said...

சூப்பர் compilation

விவிசி !

எதற்கும் கொஞ்ச நாள் தலைமறைவாக இருக்கவும்...வீட்டிற்கு ஆட்டோ வரும் வாய்ப்பு அதிகம்..

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல வேளை நண்பரே, நீங்கள் சொன்ன எந்த படத்தையும் நான் பார்க்கவில்லை.......

சிறு குறிப்பாக விமர்சித்தது ரசிக்கும்படி இருந்தது

அன்புடன்
ஆரூரன்

செல்வேந்திரன் said...

:)

ஜெட்லி said...

வணக்கம் அண்ணே...

ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்......

படிக்காதவன் படம் என்னை பொருத்த வரை நல்ல டைம் பாஸ்
படம்....தனுஷ் மற்றும் சுராஜிடம் இருந்து இதற்க்கு மேல் நாம்
எதையும் எதிர்ப்பார்க்க முடியாது.....

நான் கடவுள் கூட ஒரு நல்ல முயற்சி..அது தோல்வி
படமானாலும் கூட பல பேர் மனதை பாதித்த படம்....

நான் கூட 1977 படத்தை பாத்தேன் இதை வேற வெளியிலே
சொல்லுனுமா என்று விட்டு விட்டேன் அண்ணே.....

ஆதவா said...

ஹாஹாஹா நல்லா சிரிக்க வெச்சிருக்கிங்க பாஸ். எனிவே,, ஹாப்பி நியூ இயர்.

cheena (சீனா) said...

டப்பா படங்கள்லே டாப் டென்னா - எப்பா கார்த்தி - நல்லாவே இருக்கு - நான் ஒண்ணு கூட பாக்கல

நல்வாழ்த்துகள் கார்த்தி

கார்த்திகைப் பாண்டியன் said...

@ ஹேமா

அடுத்த நல்ல படங்கள் பத்தின பதிவு வந்துக்கிட்டே இருக்கு தோழி..

@ Ameer Hasshan

thanks boss

@ LOSHAN

அப்போ எல்லாத்தையும் பார்த்த எனக்கு? வேணும்னா நீங்க எனக்கு கொடுங்க.. நான் உங்களுக்குத் தரேன் நண்பா

@ ஸ்ரீ

புரியுது.. ரைட்டு..

@ VISA

thanks..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

@ கானா பிரபா

வருகைக்கு நன்றி நண்பா

@ வழிப்போக்கன்

வேலை ஜாஸ்தியோ? வெல்கம் பேக் பிரவீன்..

@ சுவாசிகா

ரொம்ப நன்றிங்க

@ ஆரூரன் விசுவநாதன்

நன்றி தலைவரே

கார்த்திகைப் பாண்டியன் said...

@ செல்வேந்திரன்

சிரிப்பானுக்கு நன்றி நண்பா

@ ஜெட்லி

அதேதான் நண்பா.. பீலிங்க்ஸ்..

@ ஆதவா

என்னய்யா ஆச்சு உங்களுக்கு? போனையும் காணோம்.. வலைப்பூவையும் காணோம்? ஏன் இப்படி? தொடர்பில் இருங்க நண்பா

@ cheena (சீனா)

நன்றி ஐயா

பாலகுமார் said...

நானும் படித்தேன் எனபதற்கு அடையாளமாக :)

SanjaiGandhi™ said...

மத்ததெல்லாம் நல்ல படமா? என்ன வாத்யாரே இதெல்லாம்? :))

கார்த்திகைப் பாண்டியன் said...

@ பாலகுமார்

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாலா..

@ SanjaiGandhi

அப்படி இல்லண்ணே.. இதெல்லாம்.. நல்லா இருக்கும்னு நான் எதிர்பார்த்து ஏமாந்த படங்கள் தாண்ணே..

வால்பையன் said...

நான் கடவுள் டப்பா படமா தெரியலையே!

Anonymous said...

லாட‌ம்னு ஒரு லூசுத்த‌ன‌மான‌ ப‌ட‌ம் வ‌ந்துச்சு... அத‌ லிஸ்ட்ல‌ விட்டுட்டீங்க‌ளே!

அ.மு.செய்யது said...

//ரேட்டிங் எல்லாம் கொடுக்கலை//


ரேட்டிங் எல்லாம் கொடுக்கலைன்னு வேட்டைக்காரனை "ஆன் தி வின்னர்" இஸ் ரேஞ்சுக்கு கடைசியில சொன்னதன் சூட்சுமம் என்னவோ ?

வினோத்கெளதம் said...

Ok Ok..;)

ச.பிரேம்குமார் said...

இதுல ‘கந்தசாமி’ய மட்டும் தான் காசு கொடுத்து பார்த்து ’நொந்தசாமி’ ஆனேன். மத்த படம் எதுவும் பாக்கல... எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப் :-)

பிரியமுடன்...வசந்த் said...

நல்ல வேட்டை...!

:))))

கார்த்திகைப் பாண்டியன் said...

@ வால்பையன்

ரொம்பவே எதிர்பார்த்து ஏமாந்த படம் தல..

@ MAHA

தெய்வமே.. அப்பிடி எல்லாத்தையும் எழுதினா நம்ம டப்பா டான்ஸ் ஆடிடும்

@ A.m.Seiyathu

சுப்.. அது கம்பெனி சீக்ரட்..

@ வினோத்கெளதம் said...

நானும் ஓகே..:-)))

@ ச.பிரேம்குமார்

நீங்களாவது தப்பிச்சீங்களே.. சந்தோசம் பிரேம்..

@ பிரியமுடன்...வசந்த்

திட்டிக்கிட்டே சிரிக்காதப்பா..:-)))

Rajesh Ramraj said...

// பாஸ் நீங்க ஒரு படத்துல நடிக்கலாமே..!//

Yeavan pakkarathu.... ;)

Rajesh Ramraj said...

//ஆமாங்க.. ஆதவன் நல்லா கலெக்ஷன்தான்.. ஆனா படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லைல..//


yarru yeathir partha alavuku???