
நம் நிழல் மட்டுமாவது
நம்மோடு வருகிறதா
என அடிக்கடி
பரிசோதிக்கும் அவஸ்தைகளோ
புன்னகையை ஏந்தியபடி
எதிர்ப்படும் மனிதர்களுக்கான
முகமூடியைத் தேடி அணிந்திடவோ
சாவி கொடுக்கப்பட்ட எந்திரமாய்
அலுவலகங்களின் ஊடாக
அலைந்து திரிவதோ
நம் செயல்களை
யாரேனும் கண்டு கொள்வார்களோ
என பயம் கொள்வதோ
இருட்டில்
அவசியப்படுவதில்லை
மாறாக
காற்றின் வாசம் நுகர்ந்தவாறே
மாடியில் படுத்தபடி
நண்பர்களோடு கதை பேசித் திரியவும்
கண்ணுக்கு புலப்படா
கற்பனைத் தோழமையின்
தோள் சாய்ந்து அழுதிடவும்
தூக்கமில்லா பின்னிரவு பயணங்களில்
பக்கத்து இருக்கைகளில் துயிலும்
குழந்தைகளின் அழகைப் பார்த்து ரசித்திடவும்
வேதனைகள் ஏதுமில்லாமல்
தூக்கத்தில் ஆழ்ந்து போகவும்
முன் பின் பார்த்தறியா பெண்களை
கனவில் புணர்ந்து திளைக்கவும்
கண்கள் மூடி
இல்லாத கடவுளோடு
சண்டைகள் போடவும்
எந்த பயமுமற்று
நான்
நானாக இருப்பதற்கும்
இருட்டு
எல்லாவற்றுக்கும்
சவுகரியமாக இருக்கிறது
என்பதாலேயே
இருட்டை எனக்குப் பிடித்திருக்கிறது..!!
இருட்டை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..!!!
31 comments:
:-)) nice..
//எந்த பயமுமற்று
நான்
நானாக இருப்பதற்கும்
இருட்டு
எல்லாவற்றுக்கும்
சவுகரியமாக இருக்கிறது
என்பதாலேயே//
மிகவும் ரசித்தேன் நண்பா.
ஸ்விட்ச் போட்டாசு..லைட் எரிய வாழ்த்துக்கள்/
:-)
//எதிர்ப்படும் மனிதர்களுக்கான
முகமூடியைத் தேடி அணிந்திடவோ//
’முகமூடி’ உவமை மொத்த கவிதைக்குமே பொருந்தும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள், கார்த்தி !
//இருட்டை எனக்குப் பிடித்திருக்கிறது..!!
இருட்டை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..!!!//
ரெண்டு தடவை எதுக்கு? :-))))))))
நல்ல கவிதை.வெற்றி பெற வாழ்த்துகள்.
நண்பா அபாரம். பரிசு பெற வாழ்த்துக்கள்.
/*♠ ராஜு ♠ said...
ஸ்விட்ச் போட்டாசு..லைட் எரிய வாழ்த்துக்கள்/
:-)*/
இது உரையாடலுக்கு போட்ட சுவிச்சாம், ஆவ்வ்வவ்வ்வ்
//இருட்டில்
அவசியப்படுவதில்லை//
ம்ம்ம்....கவிதை நன்றாக வந்திருக்கிறது...வாழ்த்துக்கள்...
கவிதை வெகு அருமை
//முன் பின் பார்த்தறியா //
அதெப்படி.... கார்த்தி
நல்லா இருக்கு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வெகு அழகான கவிதை.
வெகு நேர்த்தியான கவிதை கார்த்தி. வெற்றி பெற வாழ்த்துகள்.
எத்தனை திருட்டுத்தனமான ஆசைகள்... :))
வெற்றிபெற என் வாழ்த்துக்கள்
--வித்யா
//காற்றின் வாசம் நுகர்ந்தவாறே
மாடியில் படுத்தபடி
நண்பர்களோடு கதை பேசித் திரியவும்//
//இருட்டை எனக்குப் பிடித்திருக்கிறது..!!
இருட்டை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..!!!//
உண்மைதான்,கல்யாணம் ஆனாலும், இரவினில் நண்பன் மடியில் படுத்து கதைகள் பேசும் சுகம் எதிலும் வராது. கவிதையை ரொம்ப ரசித்தேன் நண்பா.
ஆம்..வாழைக்கையும்,இயற்கையும் நமக்கான பாடங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது.கவிதை அருமை !!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பாராட்டாமல் என்ன செய்ய சொல்றீங்க?
இக்கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது..!!
இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..!!!
வாழ்த்துக்கள்
வெற்றி பெற வாழ்த்துக்கள்
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//காற்றின் வாசம் நுகர்ந்தவாறே
மாடியில் படுத்தபடி
நண்பர்களோடு கதை பேசித் திரியவும்/
ஓஓஓஓஓஒகே
கவிதையின் கரு அருமை கார்த்திக்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
நைனாவும் மேவீயும் பாத்திட்டு இருக்காங்க எதிர்க்கவிதை போட !
ரொம்ப பிடிச்சுருக்கு கார்த்த்கேய பாண்டியன்...!
வெற்றி பெற வாழ்த்துக்கள்
Nice :-)
வாழ்த்துக்கள் நண்பா..
அன்பின் கா.பா
நல்ல சிந்தனை - கற்பனை அருமை - கவிதை அழகு.
இருட்டினைப் பிடிப்பதற்கு இத்தனை காரணங்களா - இன்னும் இருக்கிறதா ...
நன்று நன்று நண்பா
நல்வாழ்த்துகள்
கவிதை மனசுக்கு எதையும் மறைக்கத் தெஇயாது போல.. வெளிச்சம் போட்டு காட்டிடுச்சே..அழகா..
எந்த பயமுமற்று
நான்
நானாக இருப்பதற்கும்
very nice
advance wishes to win
sumar..
unmayillaya enathu manamarntha vallthukkal anbu nanbara ungalathu muyarchi vetri adaya vallthukkal
by palavaisundaR
நல்லாயிருக்குங்க.. வாழ்த்துகள்
//தூக்கமில்லா பின்னிரவு பயணங்களில்
பக்கத்து இருக்கைகளில் துயிலும்
குழந்தைகளின் அழகைப் பார்த்து ரசித்திடவும்//
அருமை கார்த்திகைப் பாண்டியன்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
Post a Comment