December 9, 2009

எங்கே செல்லும் இந்தப் பாதை?

"டேய் மாப்ள.. நேத்து நடந்த மேட்டர் தெரியுமா?"

"என்னடா.."

"நம்மள ரொம்ப நாளா கட்டைய கொடுத்துக்கிட்டு இருந்தான்ல.. கரிமேடு குமாரு.. வசமா மாட்டிட்டான்.."

"எப்போடா.. எங்க வச்சு மடக்குனீங்க?"

"சாயங்காலம் நம்ம பசங்களோட டாப்ப போடலாம்னு ரயில்வே காலனி பக்கம் போயிருந்தேன்.. இப்பவெல்லாம் பிள்ளைங்கள பிரச்சினை இல்லாத ஏரியான்னு அங்கிட்டு தான் தள்ளிக்கிட்டு வராய்ங்க.. சும்மா சுத்திக்கிட்டு இருக்குறப்ப இவன் கண்ணுல சிக்கிட்டான்.. கூப்பிட்டு பேசினா ஓவரா சத்தாய்க்கிறான்.. கடுப்பாயிருச்சு.. இழுத்து வச்சு வவுத்த சேர்த்து ஒரே குத்து... அடிங்கோ@#$%.... அழுதுட்டான்.."

"அப்புறம்?"

"இருங்கடா வரேன்னு போய் ஆளைக் கூட்டியாந்தான்.. அவங்க வந்து நம்ம குரூப்ப பார்த்து பயந்து ஓடிட்டாய்ங்கள்ள..."

"அது.. அவனுக்கு வேணுண்டா.. ஏண்டா மாப்புள.. ரொம்ப நாளா இந்த வசந்தி பிள்ளைக்கு ரூட் விட்டுக்கிட்டு இருந்தியே.. என்னடா ஆச்சு?"

"அவ வேலைக்கு ஆக மாட்டாடா.."

"ஏண்டா அப்படி சொல்ற?"

"ரொம்பப் பயந்தாங்கொள்ளியா இருக்காடா.. எங்கேயும் வெளியே கூப்பிட்டா வர மாட்டேங்குறா.. ராத்திரி எஸ்.எம்.எஸ் அனுப்பக் கூட பயப்படுறா.. அவளக் கரெக்ட் பண்ணி மேட்டர் முடிகிறது எல்லாம் ரொம்பக் கஷ்டம் மச்சான்.. போன வாரம் தங்கச்சி ப்ரெண்டு ஒருத்தி வீட்டுக்கு வந்தா.. சும்மா செம கட்டை.. அடுத்து அவளைத்தான் நூல் விட்டுக்கிட்டு இருக்கேன்.. ஆமா.. அந்த மல்லிகாப் புள்ளைய முடிச்சுட்டியா?"

"அவ நம்மள எல்லாம் விடத் தெளிவு மாப்புள.. கஷ்டப்பட்டு ஒருத்தன் ரூமுக்கு கூப்பிட்டு போனனா.. @#$%^&&* அவளே லூப்ப கைல வச்சிருந்தா.. செம மாட்டு.."

"ரைட்டு.. நீ நடத்துடா மகனே.. மச்சம்டா.. நமக்குதான் சரியானதா ஒன்னு கூட மாட்ட மாட்டேங்குது.. அதுக்கெல்லாம் கொடுப்பின வேணும்.."

"பொருமிச் சாகாதீங்கடா.. நேத்து நம்ம காலேஜ் பஸ் ஏதோ அடியாமே? என்னவாவது விசேஷம் உண்டா?"

"இல்லடா.. எல்லாப் பயலும் தப்பிச்சுட்டாங்க.. ஒரு நாள் லீவு போச்சு.."

"ஆகா.. வட போச்சே.. விடுறா மாப்ள.. ஒரு நாள் இல்ல ஒரு நா.. இந்த வாத்தியா நாய்ங்க போற வேனத் தூக்குறோம்.. பத்து நாளைக்கு லீவு கன்பார்ம்.. ஹா ஹாஹா"

மேலே இருக்கும் உரையாடல் கதையோ கற்பனையோ அல்ல.. மதுரையின் முன்னணி பொறியியல் கல்லூரி ஒன்றின் பேருந்தில் மூன்று மாணவர்கள் பேசிக் கொண்டது. அவர்கள் முதல் வருடப் படிப்பில் தான் இருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டியது. சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்களே, அவர்களுக்கு கேட்கக் கூடுமே என்ற எந்த கவலையும் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். தங்கள் பொறுப்பை அறியாமல் இருப்பதென்பது வேறு.. ஆனால் தெரிந்தே தவறுகள் செய்யும் இவர்களைப் பற்றி என்ன சொல்ல? இவர்கள்தானா நாளைய இந்தியாவின் தூண்கள்? நம்மை நாமே நொந்து கொள்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை.

28 comments:

☀நான் ஆதவன்☀ said...

:(

இதெல்லாம் வயசு கோளாறு. படிப்பு முடியும் போது சரியாகிடும்...

பொன்.பாரதிராஜா said...

நம்ம படிக்கிறப்ப இந்த மாதிரியெல்லாம் இல்லையே மாப்பு?
சரி விடு...வயசாயிடுச்சு இல்ல?

ஈரோடு கதிர் said...

//இந்த வாத்தியா நாய்ங்க போற வேனத் தூக்குறோம்..//

கார்த்தி ........ பத்திரம்

கலையரசன் said...

அதுங்க சொன்துல ஒன்னு கூட நடந்திருக்காது!

நாம நிழலை ___________
இப்ப இருக்கறதுங்கோ காத்தையே ________
எல்லாம் வாயாலையே வாழுதுங்க!!

டம்பி மேவீ said...

இதை எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது கார்த்தி..... ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த மாதிரியான சீர்கேடுகள் எதோ ஒரு உருவில் நடந்து கொண்டே இருக்கும் ..... முப்பது வருடங்கள் முன்னாடி மஞ்சள் புத்தகங்களாய் இருந்தது கால மாற்றத்தில் இப்படி வந்து இருக்கு

டம்பி மேவீ said...

படிப்பில் மாணவர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தி தரும் வரை இதை எல்லாம் தடுக்க முடியாது

ஸ்ரீ said...

//இதெல்லாம் வயசு கோளாறு. படிப்பு முடியும் போது சரியாகிடும்...//

சரிதான்.

வானம்பாடிகள் said...

அட பன்னாடப் பயலுவளா! கலையரசன் சொன்னாமாதிரி வாயால வாழுதுங்க (சாவுதுங்க)

jackiesekar said...

கார்த்தி வாத்தி வேனை தூக்க போறாங்களாம் .. ஜாக்கிரதை...

எப்படி எல்லாம் யோசிக்கறானுங்க பாருங்க..

பாலகுமார் said...

அனைத்தும் பொய்யாகத்தான் இருக்கும், இருந்தாலும் பொதுஇடத்தில் பெருமை பீற்றிக்கொள்வது போல் உரக்கக் கத்துவது தான் உறுத்துகிறது.

வால்பையன் said...

இந்த தலைப்பு!

கமாக்கதைகள்(இடம் மாறிய கால்)3/69 எனக்கொள்க!

rajan RADHAMANALAN said...

முந்தாநாளு பஸ்சுல எனக்கு பின்னாடி நின்னு பெருமூச்சு உட்டது நீங்க தானா !

pappu said...

//இந்த வாத்தியா நாய்ங்க போற வேனத் தூக்குறோம்..//

வாத்தியாரே, பி கேர் ஃபுல்.

/இதெல்லாம் வயசு கோளாறு. படிப்பு முடியும் போது சரியாகிடும்...//

எக்ஸாக்ட்லி!

" உழவன் " " Uzhavan " said...

செம ஜாலிப் பார்ட்டிங்க போல :-)
அவங்க உங்க ஸ்டூடண்ட் இல்லையா தல? :-)

க.பாலாசி said...

//இந்த வாத்தியா நாய்ங்க போற வேனத் தூக்குறோம்//

பசங்க ரொம்ப மாறிட்டாங்க தலைவா...நான்லாம் அந்த காலத்துல (!!!) படிக்கும்போது எவ்வளவு நல்லப்பிள்ளையா இருந்தேன் தெரியுமா?????

நடந்ததை பதிவாக்கிய விதம் நன்றாக இருக்கிறது.

Karthik said...

ஊப்ஸ்.. நான் ஏதோ அஞ்சாதே ஸ்டைல்ல கதைனு நினைச்சு படிச்சிட்டு இருந்தேன். :((

அதே மாதிரி ஒரு ஜெனரேஷனே இப்படிதான்னு முடிவு பண்ணாதீங்க. :)

சொல்லரசன் said...

//கலையரசன் said...
அதுங்க சொன்துல ஒன்னு கூட நடந்திருக்காது! //

இதுதான் உண்மை கார்த்தி, என்ன இரண்டு வருடம் இந்த மாதிரிபேசுவனுங்க.

நசரேயன் said...

வேற என்ன சொல்ல வயசு கோளாறுதான்

அ.மு.செய்யது said...

இதுல எந்த அளவுக்கு உண்மை இருக்கும்னு தெரியல.இருந்தாலும் இப்படி பேசிக்கிறதுக்குல இவய்ங்களுக்கு அப்படி ஒரு கிளுகிளுப்பு.

( ஆமா மொபைல்ல உரையாடல ரெகார்ட் பண்ணிட்டீங்களோ ?!?! )

பட்டிக்காட்டான்.. said...

ஒன்னு ரண்டு எப்பவும் இப்படித்தான் இருக்கும், விடுங்க..

ஆமா நீங்க பைக்லதானே காலேஜ் போறீங்க..??

பிரபு . எம் said...

ரொம்ப அக்கறையான பதிவு கார்த்தி...

உண்மைதான்... இதுக்கெல்லாம் "அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி மாமா மச்சான் சகல பங்காளி ஏன் ஃப்ரெண்டு கூட உதவமாட்டான்...." அப்டீன்னு தோணிச்சு.... பட் ப்ராக்டிகலி நாட் பாஸிபிள்..

இது ஒண்ணும் கலாச்சார சீரழிவு இல்ல.... இது ஒரு மாஸ் சைக்காலஜி டிஸார்டர்..... சர்வைவல் அஃப் தி ஃபிட்னஸ்தான் இனிமே...

நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது ரொம்ப சரி.. இதில் எதுவுமே உண்மை கிடையாது ஆனால் இவனுங்கள பத்தி ஒண்ணும் இல்ல... பக்கத்து ஸீட்டுல நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க கார்த்தி.. ஓர் அம்மாஞ்சி சோடா பாட்டில் போட்டு இவனுங்க டயலாக்கை உத்த்த்த்து கவனிச்சிட்டு இருந்திருப்பான்... வீணாப்போனவன் அவன் மனசுல அம்பி வந்தானோ இல்ல அந்நியன் அவதரித்தானோ தெரியல.....

நாடோடி இலக்கியன் said...

//இதெல்லாம் வயசு கோளாறு. படிப்பு முடியும் போது சரியாகிடும்...//

அதேதான்,சும்மா வாயாலேயே ஆம்லேட் போட்டிருப்பாய்ங்க.

வயதின் ஓட்டத்தில் இப்படி பொதுவில் பேசியதிற்கு வருத்தப்படுவார்கள்.

kavya said...

//இது ஒரு மாஸ் சைக்காலஜி டிஸார்டர்.//
முற்றிலும் உண்மை !!

பிரபு . எம் said...

//படிப்பில் மாணவர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தி தரும் வரை இதை எல்லாம் தடுக்க முடியாது//

கரெக்ட் தான்... ஆனா இதுங்களுக்கு சுவாரசியம் எதுல இருக்குதுன்னு கவனிச்சீங்களா.. :))

ஜஸ்ட் சொன்னேன்... உங்களோட உட்கருத்து புரிஞ்சது... "நம்மவர்" படம் இந்த விஷயத்தை டீல் செய்திருந்த விதம் ப்ராக்டிக்கலி குட்... (ஆனா படம் ஓடலைனு நினைக்கிறேன்)

சீட் கிடைக்க எவ்வளவு கஷ்டமாக இருக்கும் இஞ்சினியரிங் காலேஜ் ஸீட்டுக்குக் கூட‌ ஒரு price tag இருக்கிறது..... முன்னாள் காவாளிகள் எல்லாம் "கல்வித் தந்தை"களாகி இருக்கும் இந்தக் காலத்தில் இதையெல்லாம் யோசித்து மாற்றங்கள் செய்து மாணவர்களை அணுகுவதற்கு capacity யும் கிடையாது தகுதியும் கிடையாது.... ஆசிரியர்கள் மனது வைத்தால் முடியும்... ஆனா அவுங்கள நினைச்சா பாவமா இருக்கு..... (வேன்ல வெச்சு தூக்கப் போறானுங்களாமே!!)

குமரை நிலாவன் said...

ஆமா நீங்க பைக்லதானே காலேஜ் போறீங்க..??

ruby said...

kaavya சொன்ன மாதிரி சரி தான்..
பசங்க குரூப் ல இருக்கும் போது என்ன பேசுறது நு தெரியாது.
அதுவும் பொண்ணுங்க பக்கதுல இருந்த போதும் தல கால் புரியாது..

ச.பிரேம்குமார் said...

எல்லோரும் சொல்ற மாதிரி வயசு கோளாறு தான். ஆனா பொது இடத்துல கூச்சமின்றி இதை பேசுவது தான் கொஞ்சம் சங்கடமாக இருக்கு. இப்போவெல்லாம் Facebookல கூட மக்கள் இப்படி ஆயிடுச்சு, அப்படி ஆயிடுச்சு சொல்லிக்கிறாங்கன்னு ஒரு இளம் பதிவரே சொல்லி வேதனைப்பட்டாரு! என்னத்த சொல்றது?

ஊர்சுற்றி said...

//ஆனால் தெரிந்தே தவறுகள் செய்யும் இவர்களைப் பற்றி என்ன சொல்ல? இவர்கள்தானா நாளைய இந்தியாவின் தூண்கள்?//

:((((

//
கலையரசன் said...
அதுங்க சொன்துல ஒன்னு கூட நடந்திருக்காது! //
இதுவும் கவனிக்க வேண்டியது.
சில அரைவேக்காடுகள் இந்த மாதிரி பேசுவது, தன்னை ஒரு 'பெரிய இவன்' என்று காட்டிக் கொடுக்கும் என ஒரு நினைப்புடன் திரிகிறார்கள். இப்படியும் இருக்கலாம்.