December 3, 2009

ஓடு ஓடு ஓடு .. வரான் பாரு வேட்டைக்காரன்..!!!

விஜய் அல்லது அஜித் படம் வந்தால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ, மொபைல் நெட்வொர்க்குகளுக்கு கொண்டாட்டம்தான். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டி இவர்களின் ரசிகர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள், ஜோக்குகள் எல்லாமே அட்டகாசம். மிஸ்டர் X, மிஸ்டர் Y என்று ஆனந்த விகடனில் தனியாக ஒரு பக்கமே போடுமளவுக்கு இந்த ஜோக்குகள் பிரசித்தம். அந்த வரிசையில் சமீபத்திய ஹிட் - வேட்டைக்காரன். இங்கே நான் தொகுத்து இருக்கும் ஜோக்குகள் எதுவும் என் சொந்தக் கற்பனை அல்ல. நண்பர்கள் இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். (இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா, நான் ஒரு நடுநிலைவாதி பாருங்க.. அதுக்காக.. ஹி ஹி ஹி..)

***************

வேட்டைக்காரன் படத்தின் கதைதான் என்ன?

விஜய் ஒரு வேட்டைக்காரர். மான் வேட்டைக்காக காட்டுக்குப் போகிறார். அங்கே புலியின் குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் அனுஷ்காவைப் பார்க்கிறார். காப்பாற்ற முயலுகையில் புலி அவரைத் துரத்த ஆரம்பிக்கிறது. விஜய் தப்பிப்பதற்காக டிவிஎஸ் சாம்பில் ஏறிப் பறக்கிறார். (இங்கே தான் புலி உறுமுது பாட்டு..) புலியிடம் இருந்து தப்பிக்க வேண்டும். லெப்ட் இன்டிகேடரைப் போட்டு வண்டியை வலது பக்கம் திருப்புகிறார். புலி குழம்பிப் போய் வேறு வழியில் போய் விடுகிறது. வண்டியில் போகும்போது ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் விஜய் தலையில் விழுகிறது. (இங்கே என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாட்டு..) திடீர் என்று புலி ஷார்ட் ரூட்டில் வந்து விஜயை மடக்கி விடுகிறது. வேறு வழியின்றி விஜய் பாட ஆரம்பிக்கிறார்.(நான் அடிச்சா தாங்க மாட்ட..) கேட்கும் புலி செத்துவிழுகிறது. அனுஷ்காவைக் காப்பற்றுகிறார் விஜய். கடைசியாக இரண்டு பேரும் சேர்ந்து "கரிகாலன் காலைப் போல' என்று பாட படம் முடிகிறது. எப்பூடி?

சரி சரி.. இந்தக் கதை பிடிக்கவில்லையா? இது ஓகேவா என்று பாருங்கள்..

ஒரு நாள் காக்காவும் கொக்கும் வானத்தில் பறந்து கொண்டிருந்தன. திடீரென்று கொக்கு தடுமாறி சாக்கடையில் விழுந்து விடுகிறது. காக்க தன கையைக் கொடுத்து கொக்கைத் தூக்கி விட, கொக்கு "கறுப்பான கையாலே என்னப் புடிச்சான்" என்று பாட, ஒரே லவ்ஸ்தான்.ஆனால் கொக்கு வெள்ளையாக இருப்பதைக் காரணம் காட்டி காக்காவின் குடும்பத்தார் அவர்களின் காதலி ஏற்க மறுக்கிறார்கள். வேதனை கொண்ட கொக்கு கருப்பாவதர்காக எப்போதும் வெயிலில் ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தது. எதிர்பாராத ஒரு பொழுதில் 'வேட்டைக்காரன்" விஜய் கொக்கை சுட்டு விடுகிறார். தீராத சினம் கொண்ட காக்கா விஜயை பழி வாங்க சபதம் செய்கிறது. கடைசியில் காக்காவின் சத்தியம் பலித்ததா? படத்தைப் பாருங்கள். (நன்றி - அத்திரி)

இதுவும் பிடிக்கலையா? உண்மையான கதையை சொல்லனுமா?

சாரி.. ஒரு கதைய சொல்லி நண்பர்களோட உயிரை வாங்குற அளவுக்கு நான் கொலைகாரன் இல்லைங்க..

***************

அவசர அறிவிப்பு:

மக்கள் அனைவரும் உடனடியாக "2012 ருத்ரம்" என்னும் படத்தை பார்க்கும்படி கேட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஏன் என்றால்..
....
....
....
....
வேட்டைக்காரன் படம் ரிலீஸ் ஆனால் என்ன நடக்கும் என்பதை வெள்ளைக்காரங்க படமாஎடுத்திருக்காங்க..

***************

"வேட்டைக்காரன் படம் பார்க்க போற எல்லோருக்கும் ரெண்டு பஞ்சு தராங்கலாமே? காதுல வைக்கிரதுக்கா? பின்னணி இசை அவ்வளவு கொடூரமாவா இருக்கு?"

"அதுக்கு இல்லன்னே.. அந்தப் பஞ்சு ரெண்டும் படம் பார்த்து முடிக்கிறப்ப ஆளத் தூக்கி விடுவாங்கல்ல.. அப்ப மூக்குல வைக்கிறதுக்கு.."(நன்றி -நையாண்டி நைனா )

***************

வேட்டைக்காரன் பாட்டின் லேட்டஸ்ட் ரீமிக்ஸ்:


போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரைலர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்தா முழுசா வீடு போய் சேர மாட்ட..

***************

ஹட்ச் - இப்போ.. வோடபோன்

மெட்ராஸ் - இப்போ.. சென்னை

பாம்பே - இப்போ.. மும்பை

கல்கத்தா - இப்போ கொல்கத்தா

சர்தார் - இப்போ.. விஜய்..

இப்போதைக்கு அவ்வளவுதான்.. கூடிய விரைவில் "சாட்டைக்காரன் - முன் பின் எந்த நவீனத்துவமும் இல்லாத ஒரு விமர்சனத்தில்" மீட் பண்ணுவோம்..:-)))

44 comments:

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

எப்படி அழைப்பது எனக் குழம்பி கடைசியில் இதுவே சரி என அழைக்கிறேன்

நல்லாருக்கு நீ பண்ற அழும்பு

ம்ம்ம் - பாவம் விஜய்

நல்வாழ்த்துக்ள் கா.பா

கணேஷ் said...

:-(

பிரபாகர் said...

சன் டிவி விளம்பரமே கிறுகிறுக்க வெக்குது, இன்னும் தியேட்டர்ல வேறயா?

நல்லா கலாய்ச்சிருக்கீங்க...

பிரபாகர்.

அபுஅஃப்ஸர் said...

எப்பா முடியலே!!!

கபிலன் said...

"வேட்டைக்காரன் படம் ரிலீஸ் ஆனால் என்ன நடக்கும் என்பதை வெள்ளைக்காரங்க படமாஎடுத்திருக்காங்க.."

: ) முடியல...

அருமை!

வானம்பாடிகள் said...

அசராம இந்த போடு போடுறாய்ங்கப்பா:)). தாங்கல சாமிகளா!

அத்திரி said...

சகா கார்க்கி மேடைக்கு வரவும்......மதுரைக்கே ஆட்டோ அனுப்பலாமா

அகல்விளக்கு said...

அதகளம் பண்றீங்க போங்க....

Anbu said...

me the first.

Anbu said...

உண்மையான கதையை நான் சொல்றேன்..

படத்தில் விஜய் ஒரு ஆட்டோக்காரன்..அவங்க ஊர்ல தண்ணீர் பிரச்சினை..உடனே கலெக்டரை அணுகுகிறார் விஜய்..இருப்பினும் பயன் இல்லை..உடனே மக்களின் உதவியுடன் கட்சி ஆரம்பிக்கிறார்..அவர் வெற்றி பெறுகிறாரா..இல்லை அவங்க ஊருக்கு தண்ணி வந்துச்சா அப்படின்னு படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்..

குமரை நிலாவன் said...

இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா, நான் ஒரு நடுநிலைவாதி பாருங்க.. அதுக்காக.. ஹி ஹி ஹி..)

நடத்துங்க நடத்துங்க

MAHA said...

:-)))

டம்பி மேவீ said...

neenga eppudiyum vettaikaran first day first show parkka thane poringa.......

டம்பி மேவீ said...

ada pavame

டம்பி மேவீ said...

"Your comment has been saved and will be visible after blog owner approval."


intha blog oda owner yaaruppaa????

google ah illati karthigai pandian ah???

(google la blogger service free thane???)

ஈரோடு கதிர் said...

ரெண்டு நாளா மிரட்டுறாங்கப்ப

Karthik said...

ரைட்டு.. நடத்துங்க!! :) :)

☼ வெயிலான் said...

தலைப்பிலேயே நகைச்சுவை இருக்கும் போலயே கார்த்தி.....

shabi said...

சூப்பர்....... வேட்டை ஆரம்பமாச்சுடோய்ய்ய்ய்ய்ய்ய்்்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

pappu said...

நான் ஒரு நடுநிலைவாதி பாருங்க.. ////

அதை அசல் வரும் போது முடிவு செய்வோம் :)

ஸ்ரீ said...

ஏன் இந்தக் கொலை வெறி?

ஹாலிவுட் பாலா said...

போட்டுத் தாக்குங்க..!!! :)

ஸ்ரீராம். said...

பதினொரு ஓட்டுகள் விழுந்தும் ஒரு கமெண்ட் கூட வராததன் மர்மம் என்ன?

(Mis)Chief Editor said...

ரொம்பவே ஓவர்!
விஜய் பாவம்பா!

-பருப்பு ஆசிரியர்

பட்டிக்காட்டான்.. said...

Your comment has been saved and will be visible after blog owner approval.

கொசுத்தொல்ல தாங்க முடியலைங்களா..??!!

பட்டிக்காட்டான்.. said...

கா.பா. முடியலைங்க..

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் நல்லாயிருக்குங்க உங்க கலாய்ப்பு....

rajan RADHAMANALAN said...

நட்ட நடு நெலம !

தமிழரசி said...

ஆசிரியர் செய்த அட்டகாசம் இந்த தலைப்பில் உங்களையும் இந்த பதிவையும் என் அடுத்த பதிவில் போடறேன் இருங்க பாண்டியன்....

அன்னைக்கு சிரித்ததே இன்னும் வாயும் வயிரும் வலி மீண்டும் இன்னைக்கு...வேணாம்பா முடியலை....

mayil said...

சிரிச்சுட்டே இருக்கேன் :)))))))))))))))))))))))

SenthilMohan K Appaji said...

இந்தப் பதிவிலிருந்து சிலவற்றினை, http://padithurai.blogspot.com/2009/12/blog-post_02.html-இல் பின்னூட்டம் இடுவதற்காக நான் உபயோகப்படுத்தியுள்ளேன். உங்கள் பதிவின் முகவரியினையும் கொடுத்துள்ளேன். நன்றி.

நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹ...தனியா உக்காந்து சிரிக்க வச்சட்டீகளே தல... முடியல...

பிரியமுடன்...வசந்த் said...

கா.பா இப்போ போ.போ

:)))

கனவுகள் said...

ஏனுங்க ஒருத்தன் மாட்டினா
அவன இப்படியா போட்டு
கலாயபீங்க....

மாயாவி said...

எப்படி.......எப்படி!!?? ஏன்??
என்னவோ நடத்துங்க, நடத்துங்க.

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com said...

நடத்துங்க நடத்துங்க

சொல்லரசன் said...

// (இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா, நான் ஒரு நடுநிலைவாதி பாருங்க.. அதுக்காக.. ஹி ஹி ஹி..)//

இந்த ஜோக் சூப்பருங்கோ!!!!!!!!!!!!

RAMYA said...

படம் பார்க்கலாம்ன்னு இருந்தேன் இப்போ அந்த ஆசை புட்டுகிச்சு:)

RAMYA said...

//வேட்டைக்காரன் படம் ரிலீஸ் ஆனால் என்ன நடக்கும் என்பதை வெள்ளைக்காரங்க படமாஎடுத்திருக்காங்க..
//

இது அக்மார்க் அலம்பல் பிளஸ் லொள்ளு :)

RAMYA said...

//
நான் ஒரு நடுநிலைவாதி பாருங்க..
//

நம்பிட்டோம்லே:))

கார்க்கி said...

//அத்திரி said...
சகா கார்க்கி மேடைக்கு வரவு//

சகா, விடுங்க விடுங்க. அசல் வராமலா போயிடும்..

Rajesh Ramraj said...

Idhula nalla Research Pannu.... velekennai....

" உழவன் " " Uzhavan " said...

//வேட்டைக்காரன் படம் ரிலீஸ் ஆனால் என்ன நடக்கும் என்பதை வெள்ளைக்காரங்க படமாஎடுத்திருக்காங்க..//
 
எப்படியெல்லாம் யோசிக்குறாங்க.. முடியலடா சாமி :-)))))

தருமி said...

"அசல்" பதிவு !!