July 29, 2010

ஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை (2)..!!!

ஊறுகாயின் முதல் பகுதியை ருசிக்க இங்கே சொடுக்குங்கள்..

நான் ராகினிக்கு அனுப்பின கார்டு இந்த சிம்பான்சி கையிலையா? நம்ப முடியவில்லை இல்லை இல்லை.. எப்பிடி? நம்ம மூஞ்சி ஒரு தினுசா போறத ரசிச்சுக்கிட்டே குண்டன் பேச ஆரம்பிச்சான்.

"தம்பி, இந்தப் பையன் கிட்டத்தட்ட நாலு வருஷமா ராகினிய லவ் பண்ணிக்கிட்டு இருக்கான். அந்தப் பொண்ணோட ஏரியாதான். அப்படி இருக்குறப்ப நேத்து வந்த பய நீ... குட்டையைக் குழப்பலாமா?"

என்னது.. இந்தக் குரங்கா? ராகினிய லவ்வா.. உவ்வே.. (ஆமா.. இவர் பெரிய மன்மதக்குஞ்சு.. தூ..) மைன்ட்வாயிஸ் இப்படி சொன்னாலும் வாய் வேற மாதிரித்தான் பேசும் போல..

"இல்லண்ணே.. நான் அந்தப் புள்ளைய லவ்வெல்லாம் பண்ணல.. சும்மா விளையாட்டுக்குத்தான் கார்டு அனுப்புனேன்.."

"அடி செருப்பால.." ஒடிசல் பார்ட்டி காண்டாகி என் மேலேயே தாவிட்டான். ஏய் ஏய் இருப்பான்னு குண்டன் மேல விழுந்து காப்பாத்துனதால மீ த எஸ்கேப்பு.

"அவன்தான் லவ் பண்ணலைன்னு சொல்றானே.. அப்புறம் ஏன் இப்படி கோவப்படுற?"

"ஐயோ.. அவன் புளுகுராண்ணே.. இங்க பாருங்க. அவன் என்ன கையெழுத்து போட்டிருக்கான்னு... Yours , Only Yoursனு போட்டிருக்கான் பாருங்க.. இதுக்கு என்ன அர்த்தம்?"

"இல்லண்ணே.. அதுக்கு எனக்கு அர்த்தமே தெரியாது.. சும்மாத்தான் அப்படி எழுதுனேன்.."

குண்டன் கோபமாகி என்னைய முறைக்கிறான். ஆகா மூர்த்தி.. சிக்கிட்டியேடா..

"இந்த பாரு தம்பி.. சொல்றத சொல்லிட்டோம்.. இனியும் நீ ஒழுக்கமா இல்லன்னா அப்புறம் உங்க வீட்டுல வந்து பேசுற மாதிரி இருக்கும்.. ஆமா.. பார்த்து நடந்துக்க.. முடிஞ்ச அளவுக்கு அந்தப் புள்ள இருக்கற பக்கமே பார்க்காத .. என்ன புரிஞ்சுதா? மதுரைக்காராய்ங்களை பத்தி தெரியும்ல.." சொல்லிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினான் குண்டன்.

டேய்.. நானும் மதுரைக்காரந்தாண்டா.. கத்தலாம்தான்.. ஆனா கண்டிப்பா அடி விழும்.. சோ.. சகலத்தையும் மூடிக்கிட்டு சத்தம் போடாம வீட்டுக்கு வந்துட்டேன்.

அவனுக்கு அந்த கார்டு எப்படி கிடைச்சு இருக்கும்? ஒருவேளை போஸ்ட்மேனை கரெக்ட் பண்ணியிருப்பானோ? என்னோட ரூமுக்குள்ள வந்து கதவ சார்த்திக்கிட்டேன். ஏற்கனவே வீட்டுல ரொம்ப நல்ல பேரு... இந்த லட்சணத்துல இது வேறத் தெரிஞ்சுது.. அம்புட்டுத்தான்.

லைட்டா காய்ச்சல் வர மாதிரி இருந்தது. ச்சே ச்சே.. நான் தைரியசாலி.. இவய்ங்க எப்பவுமே இப்படித்தான் மிரட்டுவாய்ங்க.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா? இருந்தாலும் உடம்பெல்லாம் குது குதுன்னு ஆகிடிச்சு. போர்வையை இழுத்து போர்த்திட்டு படுத்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல அம்மா வந்து தொட்டுப் பாக்குறாங்க...

"என்னடா இது.. உடம்பெல்லாம் நெருப்பா கொதிக்குது? காலைல நல்லாத்தான இருந்த.."

எல்லாம் விதி. வேற என்னத்த சொல்றது? அன்னைக்கு ஸ்கூலுக்கு மட்டம். புண்பட்ட நெஞ்சை படம் பார்த்து ஆத்தலாம்னு மத்தியான ஆட்டம் "மின்சாரக் கனவு" பார்த்தேன். கருமம் அதுலயும் ஒரே பொண்ண ரெண்டு பேர் லவ் பண்றானுங்க.. இது எங்கிட்டு வெளங்க?

ராத்திரி. தூக்கம் வராம கட்டில்ல புரண்டுக்கிட்டு இருக்கேன்.

யார் அந்த ராகினி.. ராகினி.. ராகினி..

நீ எதுக்கு அவளுக்கு கார்டு போட்ட.. போட்ட.. போட்ட..

அது எப்படி அந்தக் குரங்குகிட்ட போச்சு.. போச்சு.. போச்சு..

பாட்ஷா மாதிரி காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு. வேற வழி இல்லை. நாளைக்கு ராகினிக்கிட்டயே விஷயத்த கேட்டுற வேண்டியதுதான்.

(மொக்க ஜாஸ்தியா இருக்குன்னு கோவிக்காதீங்க மக்களே.. அடுத்த பகுதில முடிச்சிடுறேன்.. அப்புறம்.. அங்கங்கே கலர்ல இருக்குறது எல்லாம் நம்ம மைன்ட் வாய்ஸ்னு ஞாபகம் வச்சுக்கொங்கப்பா..)

13 comments:

எல் கே said...

mudiyalaya ..

கார்த்திகைப் பாண்டியன் said...

//tamildigitalcinema said...
உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil///

போய்ப் பாக்குறேங்க..

// LK said...
mudiyalaya ..//

ப்ளீஸ் ப்ளீஸ்.. இன்னும் ஒரே ஒரு பாகம்.. சரியா..:-)))

ஆதவா said...

தலைப்பு ஊறுகா.... இன்னும் அது சம்பந்தமா எதுவுமே வரலையே, அதுக்குள்ள கதைவேற முடிக்கப் போறீங்களா..
என்னைக் கேட்டா, இந்த ரெண்டு பாகத்தையும் ஒண்ணாவே போட்டிருக்கலாம்,.

அடுத்த பாகம் எதிர்நோக்கி..

ஆதவா

மேவி... said...

அப்ப பா ஆளல் ல்ல்லோஓ ஓஓஒ டோஒப்க ... டுஸ்ஹுக்குகோஒ டிஸ்ஹிகோஓஓஓஓஓஒ

(முடியல )

கௌதம் வாசுதேவ் மேனன் படம் பார்த்த மாதிரி இருக்கு

sathishsangkavi.blogspot.com said...

வாத்தியாரே...

இன்னும் எதிர்பார்க்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said...
தலைப்பு ஊறுகா.... இன்னும் அது சம்பந்தமா எதுவுமே வரலையே, அதுக்குள்ள கதைவேற முடிக்கப் போறீங்களா..என்னைக் கேட்டா, இந்த ரெண்டு பாகத்தையும் ஒண்ணாவே போட்டிருக்கலாம்,.//

தலைப்புல ஒரு ட்விஸ்ட் இருக்கு தல.. சட்டுனு சொல்லிடக் கூடாதுல..

//டம்பி மேவீ said...
அப்ப பா ஆளல் ல்ல்லோஓ ஓஓஒ டோஒப்க ... டுஸ்ஹுக்குகோஒ டிஸ்ஹிகோஓஓஓஓஓஒ //

யெஸ்.. சக்செஸ்..:-))

// Sangkavi said...
வாத்தியாரே... இன்னும் எதிர்பார்க்கிறேன்..//

வந்துக்கிட்டே இருக்கு தலைவரே

மதுரை சரவணன் said...

கதை உண்மையா தான் இருக்கும் போல இருக்கிறது... தொடரும் முன் ..இது உண்மை கதை என்று டைட்டிலுடன் ஆரம்பிக்கவும். அசத்துங்க... ஆர்வமுடன் உண்மைக்காக... இது இருக்கட்டும் வேற்றுக்கிரக கவிஞன் சந்திப்பு எப்போது..?

தேவன் மாயம் said...

இதோ படிச்சிட்டு வருகிறேன்!!

சி.பி.செந்தில்குமார் said...

உங்க பிளாக் ல முத கமெண்ட்டே விளம்பரமா இருக்கு?இந்த சுவற்றில் நோட்டீஸ் ஒட்டாதீர்னு போடனும் போல

கார்த்திகைப் பாண்டியன் said...

// மதுரை சரவணன் said...
கதை உண்மையா தான் இருக்கும் போல இருக்கிறது... தொடரும் முன் ..இது உண்மை கதை என்று டைட்டிலுடன் ஆரம்பிக்கவும். அசத்துங்க... ஆர்வமுடன் உண்மைக்காக... இது இருக்கட்டும் வேற்றுக்கிரக கவிஞன் சந்திப்பு எப்போது..?//

சொன்னேன்ல நண்பா.. கொஞ்சம் உண்மை.. நிரைய புனைவு.. கவிஞர் ஆகஸ்ட் மூணாவது வாரம் வரார்

//தேவன் மாயம் said...
இதோ படிச்சிட்டு வருகிறேன்!!//

:-))))

//சி.பி.செந்தில்குமார் said...
உங்க பிளாக் ல முத கமெண்ட்டே விளம்பரமா இருக்கு?இந்த சுவற்றில் நோட்டீஸ் ஒட்டாதீர்னு போடனும் போல//

இருந்துட்டுப் போகட்டுமே.. வாழ்க்கையே ஒரு விளம்பரம்தான நண்பா..:-)))

சுவாமிநாதன் said...

ஊறுகா !!! கதாநாயகன் அறிமுகம் தான் முடிந்து இருக்கிறது அதற்குள்ள கதை முடியப் (ஊறுகா)போகிறது ...

நசரேயன் said...

வாத்தியார் ஏதும் உசார் பண்ணிட்டாரா ?

கார்த்திகைப் பாண்டியன் said...

//சுவாமிநாதன் said...
ஊறுகா !!! கதாநாயகன் அறிமுகம் தான் முடிந்து இருக்கிறது அதற்குள்ள கதை முடியப் (ஊறுகா)போகிறது ...//

அதுதானே சூது :-)))

//நசரேயன் said...
வாத்தியார் ஏதும் உசார் பண்ணிட்டாரா ?//

ஐயோடா.. நான் நல்லவன் தல..