September 8, 2010

எஸ்ரா புத்தக வெளியீடு (2)

எஸ்ரா புத்தக வெளியீடு (1)

உலக சினிமா பற்றிய "இருள் இனிது ஒளி இனிது" என்ற புத்தகத்தை தமிழ்நாட்டின் பரபரப்பான எழுத்தாளரான சாரு நிவேதிதா (முத்துகிருஷ்ணன் அப்படித்தான்யா சொன்னாரு..) வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். "நான் பார்ப்பதற்கு இளமையாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் என்னுடைய எழுத்தாள நண்பர்கள் என்னை வேறுமாதிரி கேட்கிறார்கள். என்ன சாரு.. ஆள் டல்லா இருக்கீங்க? நெத்தி எல்லாம் ஏறிடுச்சே.. அப்படின்னு.. ஏன்னா.. இங்க ஒரு எழுத்தாளன் நல்லா இருந்தா இன்னொருத்தனுக்கு பொறுக்காது. அப்புறம் நான் புத்தக வெளியீட்டுக்கு போறதா சொன்னவுடனே கேட்டாங்க.. இப்போ எந்தப் புத்தகத்தை கிழிக்கப் போறீங்கன்னு.. நான் எதுக்கு எல்லாப் புத்தகத்தையும் கிழிக்கணும்? என்னுடைய சக எழுத்தாளனை மதிக்காத, தவறாகப் பேசிய ஒரு புத்தகத்தைத்தான் கிழிச்சேனே தவிர ஏதும் காரண காரியத்தோடு எல்லாம் இல்ல.. ஒரு நல்ல புத்தகத்த கேரளாவுலயும், வெளிநாட்டுலையும் அப்படிக் கொண்டாடுறாங்க..ஆனா தமிழ்நாட்டுல எழுத்தாளனுக்கு மரியாதை இல்ல.. நல்ல எழுத்தாளருடைய புத்தகம் ஒரு லட்சம் காப்பி விக்க வேண்டாமா?

இப்போ இந்தக் கூட்டத்துல கூட எனக்கு ஒரு கலாச்சார அதிர்ச்சி இருக்கு.. இங்க வந்திருக்கிற மக்கள்ள ஒண்ணு ரெண்டு பேரத் தவிர எல்லாமே ஆம்பிளைங்க.. ஏன் இப்படி.. அது என்னமோ.. நான் என்ன சொன்னாலும் எது எழுதினாலும் அது பரபரப்பாகிடுது. போன வாரம் ஆனந்த விகடன்ல உடம்பு முடியாம ஆஸ்பத்திரில இருந்ததைப் பத்தியும், அங்க கேரளா முதல்வருக்குக் கொடுக்கிற ரூம்ல இருந்ததைப் பத்தியும் எழுதி இருந்தேன். உடனே சாரு அடிச்சு விடுறான் பாருன்னு ஆரம்பிச்சுட்டாங்க. இங்க தமிழ்நாட்டுலதான் முதல்வரப் பிடிச்சு தாங்குறது எல்லாம். கேரளாவுல அப்படிக் கிடையாது. எல்லாரும் சமம்தான். உண்மையில அந்த ரூம் எவ்ளோ கேவலமா இருந்ததுங்கிறது வேறவிஷயம்.

ஒரு சிலரோட பேசும்போதுதான் எனக்கு நல்லா எழுத்தாளர்கள் கூட பேசிக்கிட்டு இருக்கோம்கிற உணர்வு வரும். முன்னாடி அப்படி இருந்த ஆளுங்க.. நகுலன் மற்றும் க.நா.சு. சி.சு.செல்லப்பா கிட்ட பேசினா ஏதோ ஒரு காங்கிரஸ்காரன்கிட்ட பேசுற மாதிரியே இருக்கும்.. அந்த மாதிரி.. இன்னைக்கு எனக்கு எழுத்தாளர் ஒருத்தர் கூட பேசுரோம்கிற உணர்வு எஸ்ரா கூட பேசும்போதுதான் கிடைக்குது. அவர் ஒரு அபாரமான உழைப்பாளி. இந்தப் புத்தகத்துல இருபது படம் பத்தி சொல்லி இருக்கார். நான் சினிமாதான் மூச்சுன்னு வாழுறவன். நானே இந்தப் படங்கள்ல ஒண்ணே ஒண்ணுதான் பார்த்து இருக்கேன்னு சொன்னா.. அவர் எப்படிப்பட்ட உழைப்பாளியா இருக்கணும்? அதனால இது கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.." என்று சொல்லி விட்டு புத்தகத்தில் இருந்து பேருக்கு ரெண்டு பக்கத்தை அடையாளம் சொல்லி விட்டு உட்கார்ந்தார் சாரு. எனக்குத் தெரிந்து அவர் அந்த புத்தகத்தை வாசிக்கவில்லை என்றே தோன்றியது.

வெளிநாட்டு எழுத்தாளர்கள் பற்றிய "செகாவின் மீது பனி பெய்கிறது" என்கிற புத்தகத்தை வெளியிட்டு பேரா.அருணன் சிறப்புரை ஆற்றினார். "உலகின் மிக முக்கியமான எழுத்து ஆளுமைகளைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. எங்கோ இருக்கும் அந்நிய எழுத்தாளன் ஒருவனை நம் நாட்டின் கலாச்சாரத்துக்கு ஏற்ப ஒப்புமைப்படுத்திப் பார்க்க எஸ்.ரமாகிருஷ்ணனால் முடிகிறது என்பதே ஆச்சரியம்தான். எழுத்துக்களை வன்மையாய்ப் படைக்கும் ஆற்றல் பெற்றக் கைகள் டால்ஸ்டாயின் கைகள் என்று இந்தப் புத்தகத்தில் சில வரிகள் வருகின்றன. அது உங்களுக்கும் பொருந்தும்.

நிறைய விஷயங்களை அழகாக சொல்லி இருப்பதற்கு வாழ்த்துகள். முடிக்கும் முன்பாக, உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். நீங்கள் நல்லவர். வளர்ந்து விட்ட எழுத்தாளர். புதிதாக வருபவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அதை மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் திருத்திக் கொள்வார்கள். அதுதான் நீங்கள் வளரும் எழுத்தாளர்களுக்கு செய்யும் முக்கியமான உதவியாக இருக்கும்.." காவல்கோட்டம் பற்றியும் வெங்கடேசன் பற்றியும் எஸ்ரா சொல்லிய கருத்துகளின் மீதான தன வருத்தத்தைப் பதிவு செய்து அமர்ந்தார் அருணன்.

சிறுகதைகளின் தொகுப்பான "அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது" என்கிற புத்தகத்தை பிரபஞ்சன் வெளிட்டு ஆற்றிய சிறப்புரை: "இங்கே இருக்கும் எல்லாரையும் விட நான் சிறப்பாக உடை அணிந்திருப்பதாக முத்துகிருஷ்ணன் கிண்டல் செய்தார். (பிரபஞ்சன் ஆழமான ஊதாப்பூ நிறத்தில் பளபளவென ஒரு சட்டை போட்டிருந்தார்) நான் இதைத் தெரிந்தேதான் செய்கிறேன். எனக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை நான் வெளிக்காட்டிக் கொள்வதும் கிடையாது, உடையணிவதில் சமரசம் செய்து கொள்வதும் கிடையாது. ஏனென்றால் இன்று நானொருவன் தற்கொலை செய்து கொண்டால் என்னைப் பார்த்து நூறு பேர் தற்கொலை செய்து கொள்வார்கள். நன்றாக எழுத வருபவர்களை கையைப் படித்து அழைத்து வரும் கடமை எனக்கு இருக்கிறது.தமிழ் எழுத்தாளனுக்கு இதுதான் கதி என்று சொன்னால் யாருக்காவது எழுத ஆசை வருமா?

எழுத்தாளன் என்பவன் எப்போதும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என க,நா.சு சொல்லுவார். தினமும் இரண்டு மணி நேரமாவது எழுத்துக்கென செலவிட வேண்டும். சரி.. தினமும் எழுதுவதென்பது இயலாது. அப்படியானால் என்ன செய்யலாம்? ஆங்கில கதாசிரியர்களின் நாவல்களை மொழிபெயர்க்கலாமே.. எப்படியும் எழுத்தோடு தொடர்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதேபோல ஒரு நல்ல எழுத்தாளனுக்கு வாசிப்பும் ரொம்ப முக்கியம். வாசிக்க வில்லையென்றால் நீ முடிந்து போவாய். அதனால்தான் நான் யாரையுமே வாசிக்க மாட்டேன் என்று சொன்ன மனிதர் ஒருவருக்கு 1972இலேயே சரக்கு தீர்ந்து போனது. திரும்பிப் பார்க்கும்போது யாரும் இல்லை. எல்லாரும் முன்னே சென்றுவிட்டார்கள்.

இந்த சிறுகதை தொகுப்பில் இருக்கும் கதைகள் எல்லாமே புனைவின் அசாத்திய எல்லைகளைத் தொட முயலுகின்றன. கிரேக்கத்து முயல் என்றொரு கதை. இதில் எஸ்ராவே ஒரு பாத்திரமாக வருகிறார். என்ன ஒரு சிந்தனை பாருங்கள்? காலம் காலமாக ஆமைகளிடம் தாங்கள் தோற்று வரும் கதைபற்றி கோபம் கொண்டதொரு முயலின் கதையாக இது விரிகிறது. அருமையான கற்பனை. இப்படிப்பட்ட எழுத்துகள் நம்மிடம் இருப்பதே ஒரு பெருமையான விஷயம் இல்லையா? ஆனால் நாம் இத்தோடு தேங்கி நின்று விடக்கூடாது. இதை வெளியில் இருக்கும் மக்களுக்கும் கொண்டு போக வேண்டும். நல்ல தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து எல்லாருக்கும் கொண்டுபோய் சேர்க்கும் பணியை மனுஷ்யபுத்திரன் போன்றோர் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்".

கடைசியாக எஸ்ரா பேச வந்தார். புத்தகங்களைப் பற்றிய ஏற்புரை என்பதைத் தவிர்த்து "அன்டன் செகாவ்" பற்றிய சிறப்புரை ஒன்றை வழங்கினார். "நான் இப்படித் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் உயிர்மையும் மனுஷ்யபுத்திரனும்தான். அவர்களுக்கு என் நன்றி. இன்றைக்கு எழுதுபவனுக்கும் வாசகனுக்கும் இடையே உள்ள தூரம் குறுகி இருந்தாலும், அனைவரும் சந்தித்து உரையாட ஒரு பொதுவெளி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் இந்தப் புத்தக வெளியீடு விழா. பறவைகள் பறந்து போவது தொடங்கி அவைகள் குழுவாக இணைந்து இயங்குவது வரை பார்த்து தெரிந்து கொள்வதற்கான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. எந்த ஒரு விஷயமுமே நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. இங்கே வந்திருக்கும் ஒவ்வொருவரையும் நான் நிரம்பவே மதிக்கிறேன். அனைவருமே தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமானவர்கள்,. இப்போது சாருவை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட முப்பத்து ஐந்து வருடங்களாக தொடர்ந்து இயங்கி வருபவர். அவர்கள் எல்லாருமே தங்களுடைய இடத்தை அடைய அத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

இங்கே நான் கிளம்பி வரும்போது நண்பர் ஒருவர் கேட்டார். செகாவ் என்பது எங்கே இருக்கும் ரயில்வே நிலையம் என்று.. எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்றேன். இல்லை செகாவின் மீது பனி பெய்கிறது என்று எழுதி இருப்பதால் அவ்வாறு புரிந்து கொண்டேன் என்று சொன்னார். இதைப் போன்ற மக்களுக்கும் மிக முக்கியமான ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சி. ஏன் குறிப்பாக செகாவ்? கிட்டத்தட்ட 550 சிறுகதைகள் எழுதி இருக்கும் ஒரு அற்புதமான கலைஞன். இந்த வருடம் அவருடைய 150 ஆவது ஆண்டு விழா. ரஷ்யாவில் இதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடுகிறார்கள். அவர் வாழ்ந்த இடங்களுக்கு மக்களை சுற்றுலாவாக அழைத்துச் சென்று அவருடைய கதைகளை நடித்துக் காண்பிக்கிறார்கள். அவர் பிறந்த நாடு என்றில்லாமல் ஆஸ்திரேலியாவில் கூட அவரைச் சிறப்பிக்க விழா எடுக்கிறார்கள்.

நிறைய எழுத்தாளுமைகளைப் போலவே தன்னுடைய சிறு வயதில் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்தவர் செகாவ். அப்பா இறந்து போக அவர் பட்ட கடனுக்காக ஒரு சின்னக் கடையில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். அங்கே தான் பட்ட அவமானகளை எல்லாம் கஷ்டம் என்று எண்ணாமல் பகடி செய்ய ஆரம்பித்ததில் இருந்து தொடங்குகிறது அவருடைய இலக்கியப் பயணம். அவருடைய கதைகளில் மிக முக்கியமானது டார்லிங் எனப்படும் கதை. நான்கு மனிதர்களிடம் அவர்களுக்கெனவே வாழ்ந்து தன்னுடைய தனித்தன்மையைத் தொலைத்து வருந்தும் பெண்ணொருத்தியின் கதையது. இன்னொரு முக்கியமான கதை "பந்தயம்". வாழ்க்கையை சூதாக வைத்து தோற்கும் இரண்டு மனிதர்களின் கதை. சிறை என்பது எத்தனை கொடுமையானது என்பதை அத்தனை அழகாகச் சொல்லி இருப்பார். நாம் கொண்டாட வேண்டிய ஒரு முக்கியமான இலக்கிய ஆளுமைதான் செகாவ்.."அருமையாகப் பேசி முடித்தார் எஸ்ரா.

அற்புதமான நிகழ்வொன்றில் நண்பர்களோடு இணைந்து கலந்து கொண்ட மகிழ்ச்சியோடு புத்தகங்களை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்..!!!

22 comments:

Anonymous said...

அருமையா இருக்கு கா.பா.
இந்த நிகழ்ச்சிய நேரடியா பார்த்த மாதிரி இருக்கு.

Unknown said...

அருமை.
Thanks for Sharing.

கார்த்திகைப் பாண்டியன் said...

// Balaji saravana said...
அருமையா இருக்கு கா.பா. இந்த நிகழ்ச்சிய நேரடியா பார்த்த மாதிரி இருக்கு//

thanks balaji

// செல்வராஜ் ஜெகதீசன் said...
அருமை.Thanks for Sharing.//

:-)))))))

தருமி said...

கிருஷ்ணகுமாரை விட்டு விட்டீர்களே ..

அன்றைய காலைப் பொழுது மிக இனிமையாக இருந்தது. நல்ல பேச்சுகள்.

M.G.ரவிக்குமார்™..., said...

நான் வளைகுடாவில் வாழும் ஜெய்ஹிந்த்புரத்துக்காரன்!...உங்கள் எழுத்துக்கள் நானே அந்த விழாவில் கலந்து கொண்ட உணர்வைக் கொடுத்தது!....மிக்க நன்றி கா.பா!.....இதற்கான உங்கள் உழைப்பைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!...தொடருங்கள்!...

மாதவராஜ் said...

சிறப்பான தொகுப்பு.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

ஒவ்வாக்காசு said...

மிக நல்ல முறையில் தொகுத்துள்ளீர்கள்... பாராட்டுகளும் நன்றிகளும்... :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//தருமி said...
கிருஷ்ணகுமாரை விட்டு விட்டீர்களே ..அன்றைய காலைப் பொழுது மிக இனிமையாக இருந்தது. நல்ல பேச்சுகள்.//

ஐய்யா.. ரெண்டு இடுகையா போட்டிருக்கேன்.. முதல் இடுகைல கிருஷ்ணகுமார்தான் அன்னைக்கு ஹீரோன்னே சொல்லிட்டேன்..

// M.G.ரவிக்குமார்™..., said...
நான் வளைகுடாவில் வாழும் ஜெய்ஹிந்த்புரத்துக்காரன்!...உங்கள் எழுத்துக்கள் நானே அந்த விழாவில் கலந்து கொண்ட உணர்வைக் கொடுத்தது!....மிக்க நன்றி கா.பா!.....இதற்கான உங்கள் உழைப்பைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!...தொடருங்கள்!...//

நம்ம ஊருக்காரரா? ரொம்ப சந்தோஷங்க.. நான் இருந்ததும் ஒரு எட்டு வருஷம் ஜெய்ஹிந்துபுரம்தாங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மாதவராஜ் said...
சிறப்பான தொகுப்பு.பகிர்வுக்கு மிக்க நன்றி.//

நன்றிண்ணே..

//ஒவ்வாக்காசு said...
மிக நல்ல முறையில் தொகுத்துள்ளீர்கள்... பாராட்டுகளும் நன்றிகளும்... :-)//

முதல் வருகைக்கு நன்றிங்க

Ashok D said...

நன்றி :)

"உழவன்" "Uzhavan" said...

நல்ல பகிர்வு நண்பா.. அங்க நடந்த சம்பவங்கள் அனைத்தையும் எழுத்திலேயே கொடுத்துவிட்டீர்கள்.

anujanya said...

சுவாரஸ்யமாக எழுதி இருக்கீங்க கார்த்தி. வாங்கிய புத்தகங்களை வாசித்த பின் 'நூல் விமர்சனம்' முயலுங்களேன்.

இதில் கோணங்கி இல்லை. நீங்களும் நானும் மட்டும் :)

அனுஜன்யா

அத்திரி said...

varungkala elakkiyaviyathi annan kaa.paa. vaazka

M.G.ரவிக்குமார்™..., said...

கா.பா.நான் ஏற்கனவே நேசன்-ங்குற பேர்ல உங்களுக்கு பின்னூட்டம் போட்ருக்கேன்.போன மாசம் ஊருக்கு வந்திருந்தேன்!உங்களைக் கூப்புட்டு பேசனுன்னு நினைச்சேன் ஆனா ஏதோ ஒரு தயக்கம் அதான் பேசலை.அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா சந்திக்குறோம்!..

மதுரை சரவணன் said...

நல்லவிதமாகத் தொகுத்துள்ளீர்கள்.... வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

// D.R.Ashok said...
நன்றி :)/

வருகைக்கு நானும் நன்றிக்கிறேன் நண்பா....

// "உழவன்" "Uzhavan" said...
நல்ல பகிர்வு நண்பா.. அங்க நடந்த சம்பவங்கள் அனைத்தையும் எழுத்திலேயே கொடுத்துவிட்டீர்கள்//

நன்றி நவனீதன்..:-))

//அனுஜன்யா said...
சுவாரஸ்யமாக எழுதி இருக்கீங்க கார்த்தி. வாங்கிய புத்தகங்களை வாசித்த பின் 'நூல் விமர்சனம்' முயலுங்களேன்.//

கண்டிப்பாக தல.. எழுத வேண்டிய புத்தகம் நிறைய இருக்கு..

// இதில் கோணங்கி இல்லை. நீங்களும் நானும் மட்டும் :)//

அதுல பாருங்க.. கோணங்கி ஒரு மாயக்கதையாளன்ல... எங்கனையாவது ஒளிஞ்சு இருப்பாரு..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
varungkala elakkiyaviyathi annan kaa.paa. vaazka//

இதுல ஒரு சந்தோஷம்?

// M.G.ரவிக்குமார்™..., said...
கா.பா.நான் ஏற்கனவே நேசன்-ங்குற பேர்ல உங்களுக்கு பின்னூட்டம் போட்ருக்கேன்.போன மாசம் ஊருக்கு வந்திருந்தேன்!உங்களைக் கூப்புட்டு பேசனுன்னு நினைச்சேன் ஆனா ஏதோ ஒரு தயக்கம் அதான் பேசலை.அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா சந்திக்குறோம்!.//

ஆகா நேசனா? மிஸ் பண்ணிட்டேனே நண்பா.. அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக சொல்லுங்க.. சந்திப்போம்..

//மதுரை சரவணன் said...
நல்லவிதமாகத் தொகுத்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்//

நன்றி தலைவரே..

தேடுதல் said...

சாருவை ஒருமுறையேனும் நேரில் பார்த்துவிட வேண்டும் அவரது பேச்சையும் நேரில் கேட்டுவிடவேண்டும் என்ற ஆவலில் நானும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றேன். அவரது தளத்தில் அதிரடியாக அடாவடியாக எழுதுகிறாரே அவரை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் தான்.

ஆனால் அவர் பேச்சு முகத்தை சுழிப்பதாகவே இருந்தது. எஸ்.ராவின் புத்தகத்தை பற்றி பேச ஆரம்பிக்காமல் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். தம் அடிக்க பாதியிலேயே கிளம்பிவிட்டேன். இடையில் ஒருமுறை அவர் அரங்கை விட்டு வெளியே வந்தார். ஆள் சரியான குட்டை.

அன்று கிருஷ்ண்குமார் அவர்கள் பேச்சு அருமை. புத்தகத்தைப் பற்றி, அதை விட்டு விலகாமல் அவர் அடுக்கிக் கொண்டு பேசிய பேச்சு அருமை. மிக சரளமாக இயல்பாக அவருக்கு பேச்சு கைகூடுகிறது.

மேவி... said...

என்னது காந்தி செத்துட்டாரா ???

நல்லாயிருக்கு கார்த்திகை ..... அடுத்ததடவை இங்கன்ன வரும் போது அதுல இருந்து நீங்க படிச்சு முடிச்ச புஸ்தகத்தை கொண்டு வந்து எனக்கு தரீங்க ...

(பிறகு இப்படி நீங்க இலக்கியம் இலக்கியம்ன்னு சுத்திகிட்டு இருக்கிறதல தான் உங்க அம்மா கல்யாண பேச்சை எடுக்காம இருக்காங்க ...)

மேவி... said...

"கண்டிப்பாக தல.. எழுத வேண்டிய புத்தகம் நிறைய இருக்கு.."

முதல படிக்க வேண்டிய புஸ்தகம் நிறைய இருக்குன்னு சொல்லுங்க .... ஆனால் உங்களால் நூல் விமர்சனம் எழுத முடியுமான்னு தெரியல. வேண்டுமானால் நூல் அறிமுகம் எழுதுங்கள்

selventhiran said...

வெரி நைஸ்!

R. Gopi said...

super