September 16, 2010

வேற்றுகிரகவாசிகள்

பெய்து கொண்டிருந்த பெருமழையின் ஊடாக
நேற்று மாலை சரியாக 6 :31 மணிக்கு
வீட்டில் மின்சாரம் இல்லாமல் போனது

திருமதி செல்வம் பார்க்க முடியாதே
எனப் புலம்பியபடி அம்மாவும்
ஐபிஎல்லில் இன்றென்னாகுமோ
என்ற பதைபதைப்புடன் அப்பாவும்
அடுத்த நாள் மேத்ஸ் மேடம் தரப்போகும்
தண்டனையை எண்ணி கலக்கம் கொண்டவனாய் தம்பியும்
கடனைத் திருப்பிக் கேட்க வரும் நண்பர்களுக்கு
என்ன பதில் சொல்வதெனக் குழம்பியபடி நானும்
இருட்டாலும் என்னை ஒன்றும் செய்து விட முடியாதெனத்
தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும் தாத்தாவும் - என

ண்ணுக்குப் புலப்படா ஊற்றிலிருந்து பொங்கியபடியிருந்த இருளை
கூரியதொரு வெளிச்ச வாள் கொண்டு
கிழித்துப் போட்ட
மெழுகுதிரியினை சுற்றி கூடி இருந்த மனித வட்டம்
சூரியனைச் சுற்றும் கிரகக்
கூட்டங்களின் மாதிரியாய் இருந்தது

நேரத்தைப் போக்க ஆளுக்கொரு கதை சொல்வதென முடிவாகி
பால்ய காலத்தில் தான் பிரிந்த சினேகிதி ஒருத்தியினைத்
தான் சமீபத்தில் சந்தித்த கதையை
அம்மா சொல்லி முடித்தபோது
அவள் கண்ணோரம் துளிர்த்த இரு கண்ணீர்த்துளிகளை
வேறு யாரும்
கவனிக்கவே இல்லை

வாங்கி வரும் பொருட்களில் எல்லாம்
தனக்கும் ஒரு பங்கு
கொண்டு வந்து தரும்
பக்கத்து பெஞ்சு ப்ரீத்தியின் கதையை சொல்லும்போது
தம்பியின் கண்களில் இருந்த சந்தோசம்
நான் இதுவரை அவனிடம் கண்டிராதது


வேலை நேரத்தில் தான் சென்று வந்த
ஊர்களின் விநோதங்களை அப்பா
சொல்லத் துவங்கியபோது - அவற்றின் ஊடாக
மீண்டும் ஒரு முறை பயணிக்கும்
காலப்பயணியாக மாறி விட்டிருந்தார்


பேசுவது புரிகிறதா இல்லையா எனத் தெரியாமலேயே
எல்லாவற்றுக்கும் பொக்கைவாய் பிளந்து
சிரித்தபடி இருந்த தாத்தா
என்னையும் தம்பியையும் அடிக்கடி அருகே அழைத்து
அழுந்த முத்தமிட்டதில் - பேரன்பின் பெருநதி
திசையறியாது ஓடிக் கொண்டிருந்தது


னக்கான கதையை நான் சொல்ல யத்தனித்த வேளையில்
மிகுந்து எழுந்த தொலைக்காட்சியின் அலறல்
மின்சாரம் வந்து விட்டிருந்ததை சத்தமாக
அறிவிக்க
எல்லோரையும் இணைத்திருந்த அரூப இழையொன்று
சட்டென்று தெறித்து வீழ்ந்தது

நினைவுகளில் தொலைந்திருந்த அனைவரும்
அமைதியாக அவரவர் முகமூடியைத் தேடிப்போக
வேறொரு கிரகமாய் மீண்டும்
மாறத் துவங்கியிருந்தது வீடு..!!!

28 comments:

LK said...

arumai aasiriyare

வி.பாலகுமார் said...

//நினைவுகளில் தொலைந்திருந்த அனைவரும்
அமைதியாக அவரவர் முகமூடியைத் தேடிப்போக
வேறொரு கிரகமாய் மீண்டும்
மாறத் துவங்கியிருந்தது வீடு..!!//

அருமை, நல்லா வந்திருக்கு கார்த்தி.

es said...

நல்லா இருக்கு கார்த்தி

அன்புடன்-
எஸ்.ரா..

es said...

என்னப்பா அனானி ஆப்சன் காணோம்...

இருந்தாலும் பரவாயில்லை மெயில் ஐடி கிரியேட் பண்றேன்..

VELU.G said...

நல்லாயிருந்துச்சுங்க

Manoj said...

Finishin touch excellent sir.....one small power cut nu oru incident taa base sa veechu ......super ra frame panni erukkiga sir.....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.

முதல் பத்தியில் ‘ஊடாக’ என்ற வார்த்தைப் பிரயோகம் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. பெருமழையின் போது போதாதா என்ன?

கவித்துவ வார்த்தைகள் என நம்பப்படும் வார்த்தைகளைத் தூவி, அந்த வார்த்தைகளின் பலத்தினாலேயே நல்ல கவிதையாகிவிடும் என்று நம்புவதில் எனக்கு உடன்பாடில்லை.

கார்த்திகைப் பாண்டியன் said...

//LK said...
arumai aasiriyare//

நன்றிங்க..

//வி.பாலகுமார் said...
அருமை, நல்லா வந்திருக்கு கார்த்தி//

நன்றி பாலா..

@es

அனானி ஆப்ஷனே உன்னாலதான்யா எடுத்தேன்.. அவ்வ்வ்.. விடாது கருப்பு..

தருமி said...

ஒரு மாதிரி எங்கேயோ போய்க்கிட்டு இருக்கிறது மாதிரி தோணுதே!!

நல்லா இருங்க ...

கார்த்திகைப் பாண்டியன் said...

//VELU.G said...
நல்லாயிருந்துச்சுங்க//

நன்றி நண்பரே..

// Manoj said...
Finishin touch excellent sir.....one small power cut nu oru incident taa base sa veechu ......super ra frame panni erukkiga sir...//

நன்றிடா..

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.
முதல் பத்தியில் ‘ஊடாக’ என்ற வார்த்தைப் பிரயோகம் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. பெருமழையின் போது போதாதா என்ன? கவித்துவ வார்த்தைகள் என நம்பப்படும் வார்த்தைகளைத் தூவி, அந்த வார்த்தைகளின் பலத்தினாலேயே நல்ல கவிதையாகிவிடும் என்று நம்புவதில் எனக்கு உடன்பாடில்லை//

தவறாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை சுந்தர்.. மாறாக நேர்மையான விமர்சனங்களையே நான் எதிர்பார்க்கிறேன்.. எழுதிப் பழகும் என் எழுத்துகளை அது போன்றவையே மேம்படுத்தும் எனத் தீவிரமாக நம்பவும் செய்கிறேன்..

நீங்கள் சொல்லியதில் இருக்கும் உண்மைகளை நான் ஒத்துக் கொள்கிறேன்.. நீங்கள் ஒரு இடத்தை மட்டும்தான் சொல்லி இருக்கிறீர்கள்.. ஆனால் அதையும் தாண்டி பல இடங்களில் வார்த்திகளை வேண்டுமென்றே கடினப்படுத்தி இருக்கிறேன்..

//கண்ணுக்குப் புலப்படா ஊற்றிலிருந்து பொங்கியபடியிருந்த இருளை கூரியதொரு வெளிச்ச வாள் கொண்டு கிழித்துப் போட்ட
மெழுகுதிரியினை சுற்றி கூடி இருந்த மனித வட்டம் சூரியனைச் சுற்றும் கிரகக் கூட்டங்களின் மாதிரியாய் இருந்தது//

இந்த மொத்த பத்தியுமே அப்படித்தான் எழுதி இருக்கிறேன்.. வெகு எளிமையாக சொல்லும்போது அது வெறும் “ஸ்டேட்மெண்ட்” ஆக முடிந்து போய் விடுகிறது என்னும் நண்பர்களின் குற்றச்சாட்டின் காரணமாகவே இதை நான் செய்திருக்கிறேன்.. அது உறுத்தலாக தெரிகிறது எனும்போது மாற்றிக் கொள்கிறேன்.. சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பா..:-)))

அகல்விளக்கு said...

one of the masterpieces....

:-)

Anonymous said...

மனதைத் தொடும் கவிதை....

Krishnapriya said...

அருமையான கவிதை

டம்பி மேவீ said...

அருமையா இருக்கு தல

இன்றைய காலகட்டத்தில் மனிதன் முகமுடி இல்லாமல் இருக்கும் சமயங்கள் மிகவும் குறைவே

Balaji saravana said...

நல்லா இருக்கு கா.பா

ஆ.ஞானசேகரன் said...

அருமை வித்தியாசமான எண்ணங்களில் வாழ்த்துகள் நண்பா

Karthik said...

செம! :)

அத்திரி said...

suuuuuuuuppppppppppppperrrrrrrrrrrrrrrrrrbbbbbbbbbbb

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

சுவாமிநாதன் said...

அருமையான பதிவு

M.G.ரவிக்குமார்™..., said...

எஸ்.ரா வின் தாக்கம் மிக அதிகம் தெரிகிறது உங்கள் எழுத்துக்களில்!..அவரை வாசிப்பதை கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கலாம் என நினைக்கிறேன்!...இது என் சின்ன வேண்டுகோள் மட்டுமே நண்பா!....

Mahi_Granny said...

கவிஞர்களுடன் நடந்த சந்திப்பின் தாக்கம் தெரிகிறது. நல்லா இருக்கு.

கார்த்திகைப் பாண்டியன் said...

// அகல்விளக்கு said...
one of the masterpieces....:-)//

ரொம்பப் பெரிய வார்த்தை.. அன்புக்கு நன்றி ராஜா

// Krishnapriya said...
அருமையான கவிதை//

நன்றிங்க

/டம்பி மேவீ said...
அருமையா இருக்கு தல இன்றைய காலகட்டத்தில் மனிதன் முகமுடி இல்லாமல் இருக்கும் சமயங்கள் மிகவும் குறைவே//

நன்றிப்பா.. உனக்காகத்தான் ஒரு வார்த்தையே பயன்படுத்தி இருந்தேன்.. கவனிக்கலையா:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

// Balaji saravana said...
நல்லா இருக்கு கா.பா//

நன்றி பாலாஜி

//ஆ.ஞானசேகரன் said...
அருமை வித்தியாசமான எண்ணங்களில் வாழ்த்துகள் நண்பா//

நன்றி தலைவரே

//Karthik said...
செம! :)//

:-))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
suuuuuuuuppppppppppppperrrrr
rrrrrrrrrrrrrbbbbbbbbbbb//

ஆத்தாடி.. இவ்ளோ அழுத்தமவா? நன்றிண்ணே

//T.V.ராதாகிருஷ்ணன் said...
Nice//

நன்றிங்க

//சுவாமிநாதன் said...
அருமையான பதிவு//

ரைட்டு சாமி :-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//M.G.ரவிக்குமார்™..., said...
எஸ்.ரா வின் தாக்கம் மிக அதிகம் தெரிகிறது உங்கள் எழுத்துக்களில்!.. அவரை வாசிப்பதை கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கலாம் என நினைக்கிறேன்!...இது என் சின்ன வேண்டுகோள் மட்டுமே நண்பா!....//

உண்மைதான் நண்பா.. சில இடங்களில் தெரிந்தே செய்கிறேன்.. சில இடங்களில் என்னையும் அறியாமல்.. மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயம்தான்.. முயலுகிறேன்.. உங்கள் அன்புக்கு நன்றி..

// Mahi_Granny said...
கவிஞர்களுடன் நடந்த சந்திப்பின் தாக்கம் தெரிகிறது. நல்லா இருக்கு///

நன்றிம்மா.. அப்பப்போ நமக்கும் லூசு பிடிச்சு இப்படி ஏதாவது எழுதுறது..:-)))

kannamma said...

nalla irunthathu SIR.......

kannamma said...

nalla irunthathu SIR.......