September 3, 2010

பதிவர்கள் உங்கள் சாய்ஸ்

வணக்கம் நேயர்களே.. நான்தான் உங்கள் அபிமான கப்சி ரமா பேசுறேன்.. இது உங்கள் அபிமான "பதிவர்கள் உங்கள் சாய்ஸ்" நிகழ்ச்சி.. இன்னைக்கு வரைக்கும் இந்த புரோக்ராம் இவ்வளவு சிறப்பா நடந்துக்கிட்டு இருக்குன்னா.. என்னது இன்னைக்குத்தான் நிகழ்சியவே ஆரம்பிக்கிறோமா... கம்பெனி சீக்ரட்ட வெளிய சொல்லாதீங்கப்பா... இதெல்லாம் நாமளாப் பார்த்து சொல்லிக்கிறதுதான.. சரி சரி.. ஆட்டைய கவனிங்க..

வாலிப வயோதிக அன்பர்களே.. ச்சே.. பழக்கதோஷம்.. நேயர்களே இந்த புரோக்ராம் இவ்ளோ நல்லா நடக்க பதிவர்களாகிய உங்களோட ஆதரவுதான் காரணம்.. இந்த நிகழ்ச்சில ஒரு புதுமை என்னன்னா.. எங்களுக்கு போன் போட்டு "காலைல கக்கூசுல முக்க மறந்தாலும் உங்களை டிவில பார்த்து லுக்க மறந்ததில்ல...", "ஆறு வருஷமா பல்லு விளக்குரமோ இல்லையோ உங்களுக்கு போன் லைன் டிரை பண்றத பொழப்பா வச்சுக்கிட்டு இருக்கோம்..", "மேடம் நீங்க தொடச்சு வச்ச வாஷ் பேசின் மாதிரி சும்மா பளபளன்னு இருக்கீங்க" அப்படின்னு எல்லாம் பொலம்ப வேண்டிய அவசியம் கிடையாது..

ஏன்னா வேலையத்துப்போய் நாங்களே உங்களுக்கு போன் போடப்போறோம்.. போனப் போட்டு உங்களையும் பிளேடு போட வைக்கிறோம்.. அதுக்கு அப்புறம் உங்களுக்குப் பிடிச்ச பாட்டப் போடுறோம்.. ஓகேவா.. வாங்க.. முதல் பதிவர் யாருன்னு பார்ப்போம்..

டிரிங்.. டிரிங்...

ரமா: சார்.. வணக்கம்.. உங்களைப் பத்திச் சொல்லுங்க..

நேசமித்ரன்: படுபொருட்களும் பாடுபொருட்களும் நிறை இருண்மை கண்டத்தின் பால்வெளியில் ஆலிவ் இலைகளும் செடார் மரங்களும் நெப்ட்யூன் பூக்களும் ஹெர்குலிஸ் பிரபஞ்சமும் வீச்சற்று சுற்றித்திரியும் ஜெசிக்காவின் போர்வாள் ஏந்திய பெருநகரப் பாணன் நான்...

ரமா: கிழிஞ்சது போங்க.. எவனுக்கும் எதுவும் புரியப் போறதில்ல.. பதிவர்களுக்காக ஏதாவது சொல்லுங்க சார்..

நேசமித்ரன்: பதிவு என்பது ஒரு பிரதி.. எழுதிப்பழக அதுவொரு தளம்.. பதிவென்பது ஆதியும் அந்தமும் அற்ற வெளியின் ஒரு துகள்.. அது படிப்பவர்களை வெறி கொண்டு ஓடச் செய்யும் உன்மத்த நிலையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.. படிமங்கள் குறைந்த பட்சம் நாலு படிக்குக் கீழேயாவது நம்மைத் தூக்கி அடிக்க வேண்டும்.. அதே போல..

ரமா: ஐயா.. நீரே புலவர்.. தெரியாமக் கேட்டுட்டேன்.. விடுங்க.. உங்களுக்கான பாட்டு வருது..

ஒண்ணுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது..

ரமா: அடுத்து நாம பேசப்போற பதிவர் ரொம்பக் கம்மியாப் பேசக்கூடியவர். அமைதியானவர்.. வாங்க...

டிரிங் டிரிங்..

உண்மைத்தமிழன்: வணக்கம்.. எம்பெருமான் முருகன் உங்க எல்லாரையும் நல்லா வச்சிருக்கட்டும்.. அத்தோட என்னையும் கொஞ்சம் கவனிச்சான்னா போதும்..

ரமா: வாழ்க்கைல யாருமே பார்க்காத படத்த எல்லாம் எப்படி சார் துணிஞ்சு பாக்குறீங்க..?

உண்மைத்தமிழன்: வாழ்க்கையே போர்க்களம்.. வாழ்ந்துதான் பார்க்கணும்.. என்னம்மா பண்ண சொல்றீங்க? நானும் ஏதாவது ஒரு படம் நல்லா இருந்துடாதான்னுதான் பாக்குறேன்.. அது ஹிட்டு படமா இல்லைன்னாலும் பரவாயில்ல.. அப்பப்ப பிட்டு படமாப் போயிடுது..

ரமா: என்ன சார் சொல்றீங்க?

உண்மைத்தமிழன்: ஆமாம்மா.. இப்படித்தான் பாருங்க.. "இலக்கணப்பிழை"னு ஒரு படம்.. நான் கூட தமிழ் இலக்கணத்தைப் பத்திய படமோன்னு நினச்சேன்.. அதாவது தமிழ்ல அணி இலக்கணம், யாப்பு இலக்கணம்னு நிறைய இருக்குல.. அது மாதிரின்னு நம்பிப்போனா.. எனக்கு வச்சான் பாருங்க அதுதான் ஆப்பு இலக்கணம்.. அங்க இலக்கணமே இல்ல.. வெறும் பிழை மட்டும்தான் இருந்துச்சு.. சரி அப்பன் முருகன் சோதிச்சுட்டானேன்னு அடுத்து அந்தரங்கம்னு ஒரு படத்துக்குப் போனேன்.. அங்க..

ரமா: அய்யா சாமி.. போதும்..

உண்மைத்தமிழன்: இல்லம்மா.. ஒரு நாலு வரி சொல்றேனே....

ரமா: உங்களோட நாலு வரி எப்படின்னு எல்லாருக்குமே தெரியும்.. அதனால பாட்டக் கேளுங்க..

ஓம் முருகா.. ஓம் முருகா.. உனக்கு நன்றி சொல்வேன்..

ரமா: சரி.. நம்ம அடுத்த பதிவர்.. ஒரு பெண் பதிவர்.. ஏன்னா நாளப்பின்ன இடஒதுக்கீட்டு பிரச்சினை வரக்கூடாது பாருங்க..

டிரிங் டிரிங்..

ரம்யா: ஹா ஹா ஹா.. நான் வந்துட்டேன்..

ரமா: ஆத்தாடி.. எதுக்குங்க இப்படி சிரிக்கிறீங்க..

ரம்யா: தப்பா எடுத்துக்காதீங்க.. பதிவுல எங்க பார்த்தாலும் சிரிப்பான் போட்டே பழகிப் போச்சு.. அந்த ஞாபகம்..

ரமா: சரி சரி.. பதிவர்களுக்கு என்ன சொல்ல போறீங்க..

ரம்யா: நான் பதிவர்களுக்கு ஒண்ணும் சொல்லல.. குட்டீஸ்க்கு கதை சொல்லப் போறேன்.. ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம்.. அப்போ.. ஐயோ.. ஹா ஹா ஹா... ஒரு கிழவிக்கிட்ட.. ஐயோ.. என்னால சிரிப்பா அடக்க.. ஹா ஹா ஹா.... ஒரே சிரிப்புதான் போங்க.. அந்தநரி.. ஹா ஹா ஹா..

ரமா: எங்க ஏதாவது சொல்லிட்டு சிரிங்க.. இல்ல சிரிச்சுட்டு சொல்லுங்க..

ரம்யா: ஏங்க கதையே அவ்ளோதாங்க.. அடுத்து பார்த்திபன் வடிவேலு காமெடி ஒண்ணும் சொல்லட்டுமா..

ரமா: ஐயோடா.. போதுங்க.. இந்தா பாட்டப் போட்டுடுறேன்..

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது..

ரமா: அடுத்த பதிவர்.. ஒரு உலகம் சுற்றும் வாலிபர்..

டிரிங் டிரிங்..

ராகவன்: தம்பி வணக்கம்..

ரமா: ஹலோ.. நாம் ரமா பேசுறேங்க..

ராகவன்: .. அப்படியா.. தங்கச்சி வணக்கம்..

ரமா: ஆமா.. அப்படித்தான்.. இப்போ எந்த ஊர்ல இருக்கீங்க..

ராகவன்: இன்னைக்கு மதுரைல மீட்டிங்கு.. நாளைக்கு அங்க இருந்து கோயம்புத்தூர் போறேன்.. அடுத்து ஈரோடு, திருப்பூர்..

ரமா: ஏங்க.. நான் என்ன உங்ககிட்ட தமிழ்நாடு மேப்பா கேட்டேன்?

ராகவன்: அட இதெல்லாம் நான் போற ஊரும்மா.. வெள்ளிக்கிழம மெட்ராஸ்.. அதுக்கு அடுத்த வாரம் சிங்கப்பூர்... அதுக்கு அப்புறம் நான் எங்க இருக்கேன்னு எனக்கேத் தெரியலையேப்பா..

ரமா: அடங்கப்பா.. தாங்க முடியல.. அப்புறம் சார்.. இந்த பா..

ராகவன்: அய்யய்யோ.. என்ன வார்த்தை சொல்லப் போறீங்க..

ரமா: இல்ல.. இந்தப் பா..

ராகவன்: இங்க பாரும்மா.. எனக்கு அரசியல் தெரியாது.. நான் பாட்டுக்கு சிவனேன்னு அமைதியா இருக்கேன்.. ஏன் தேவையில்லாம பேசுறீங்க?

ரமா: அட அதில்லீங்க.. இந்த பாசக்காரப் பதிவர்கள் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டேன்..

ராகவன்: அப்பாடா.. பதிவர்கள் எல்லாருமே ன்னோட பாசக்காரத் தம்பிங்க.. இப்படி எல்லாம் உறவுகள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. இப்பக்கூட பாருங்க.. அன்டார்டிக்காவுல இருந்து ஒரு தம்பி பின்னூட்டம் போட்டிருக்கார்.. அதனால் அடுத்த ட்ரிப்பு அங்கதான்னு நினைக்கிறேன்..

ரமா: அடேங்கப்பா.. உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு சார்.. ரைட்டு பாட்டக் கேளுங்க..

யாதும் ஊரே யாவரும் கேளிர்.. அன்பே எங்கள் உலக தத்துவம்..

ரமா: சரி நேயர்களே.. இன்றைய நிகழ்ச்சியோட கடைசி பதிவர் யாருன்னு பார்ப்போமா?

டிரிங் டிரிங் ..

கார்க்கி: வணக்கம் தோழி..

ரமா: என்னது நானும் தோழியா?

கார்க்கி: அதும் நானும் தோழி இல்லைங்க.. வெறும் தோழிதான்.. தோழி.. இப்பப் பார்த்தீங்கன்னா.. தோசைல சாதா ஸ்பெஷல் எல்லாம் இருக்குதுல்ல. அது மாதிரித்தாங்க..

ரமா: ரைட்டு.. பதிவர்களுக்கு ஏதாவது சொல்லுங்க..

கார்க்கி: இப்போ ஹாட்டு தோழி அப்டேட்ஸ் தாங்க.. புடிங்க ஒண்ணு.. சுற்றுலா போய் வந்த தோழி தானே எடுத்த புகைப்படங்களைக் காமித்துக் கொண்டிருந்தாள். சட்டென உனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் எதுடா என்று கேட்டால். சற்றும் யோசிக்காமல் சொன்னேன்.."உன் மடிதான்". சட்டென்று என் தோள்களில் சாய்ந்து கொண்டு சொன்னாள்.. "ச்சி.. பொறுக்கி.." ஆம். நீ சிந்து சிரிப்பைப் பொறுக்குபவன் நான்.

ரமா: சுத்தம்.. முத்திப்போச்சு.. சீக்கிரம் இவரைக் கொஞ்சம் கவனிங்கப்பா..

கார்க்கி: நாங்க எல்லாம் தளபதியோட தளபதிங்க.. கொஞ்சம் அதப் பத்தியும் கேளுங்க..

ரமா: ஹலோ ஹலோ.. பாருங்க.. ஏதோ ஒரு பேரச் சொன்னாரு.. தானா லைன் கட்டாகிப் போச்சு.. சரி வாங்க பாட்டக் கேப்போம்..

நீ தோழியா என் காதலியா சொல்லடி என் கண்ணே..

நேயர்களே.. இன்றைய நிகழ்ச்சி இத்தோடு முடிகிறது.. இதுக்கு நீங்க தர ஆதரவைப் பொறுத்துத்தான் அடுத்த நிகழ்ச்சி பத்தி நாங்க யோசிக்க முடியும்.. வேற யார் யாரை கலாய்க்கலாம்னு சொல்லுங்கப்பா.. அதனால இப்போதைக்கு அப்பீட்டிக்குறேன்..:-)))

(முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே..)

62 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//சுற்றுலா போய் வந்த தோழி தானே எடுத்த புகைப்படங்களைக் காமித்துக் கொண்டிருந்தாள். சட்டென உனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் எதுடா என்று கேட்டால். சற்றும் யோசிக்காமல் சொன்னேன்.."உன் மடிதான்". சட்டென்று என் தோள்களில் சாய்ந்து கொண்டு சொன்னாள்.. "ச்சி.. பொறுக்கி.." ஆம். நீ சிந்து சிரிப்பைப் பொறுக்குபவன் நான்.//

;)

இது நக்கலு மாதிரியே இல்ல நல்லாவே இருக்கு...!

அதுக்கடுத்து நான் படிக்கலை

கார்க்கிபவா said...

hihihihi

ஹாஹாஹாஹா

முழுக்க முழுக்க சிரிச்சேன் சகா

சுவாமிநாதன் said...

தொடரட்டும் வாழ்த்துக்கள்

vasu balaji said...

:)). சூப்பர்ப்

Thomas Ruban said...

கல்விக் கண்களை திறக்கும் உங்களைப்
போன்ற எல்லா ஆசிரியர்களுக்கும் ஆசிரிய தின வாழ்த்துக்கள் நன்றி சார்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ப்ரியமுடன் வசந்த் said...
;)இது நக்கலு மாதிரியே இல்ல நல்லாவே இருக்கு...!அதுக்கடுத்து நான் படிக்கலை//

நன்றி தல.. நீங்க படிக்கலைன்னு நானும் புரிஞ்சுக்கிட்டேன்..:-))

// கார்க்கி said...
hihihihi ஹாஹாஹாஹா
முழுக்க முழுக்க சிரிச்சேன் சகா//

அதேதான்.. ரைட்டு சகா..;-)))

//சுவாமிநாதன் said...
தொடரட்டும் வாழ்த்துக்கள்//

நன்றிங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//வானம்பாடிகள் said...
:)). சூப்பர்ப்//

நீங்களும் லைன்ல இருக்கீங்க பாலா சார்..:-)))

//Thomas Ruban said...
கல்விக் கண்களை திறக்கும் உங்களைப் போன்ற எல்லா ஆசிரியர்களுக்கும் ஆசிரிய தின வாழ்த்துக்கள் நன்றி சார்..//

அட்வான்ஸ் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி நண்பா

Mahi_Granny said...

நேச மித்ரனின் பதிலும் அதற்கான பாடல் தெரிவும் அமர்க்களம் தம்பி

Mahi_Granny said...

நேச மித்ரனின் பதிலும் அதற்கான பாடல் தெரிவும் அமர்க்களம் தம்பி

☼ வெயிலான் said...

நல்லாருந்தது கார்த்தி!

"உழவன்" "Uzhavan" said...

நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி :-)

எல் கே said...

me the escapee


nalla irunkku nanbare

Anbu said...

:-)))

இராகவன் நைஜிரியா said...

//வணக்கம் நேயர்களே.. //

நன்றி. வணக்கம். ஆரம்பிக்கலாமா?

இராகவன் நைஜிரியா said...

// நான்தான் உங்கள் அபிமான கப்சி ரமா பேசுறேன்.. //

பேசுங்க... யார் வேண்டான்னு சொன்னாங்க

இராகவன் நைஜிரியா said...

// நான்தான் உங்கள் அபிமான கப்சி ரமா பேசுறேன்.. //

பேசுங்க... யார் வேண்டான்னு சொன்னாங்க

இராகவன் நைஜிரியா said...

// வாலிப வயோதிக அன்பர்களே.. ச்சே.. பழக்கதோஷம்.. //

சொன்னா கேட்கறீங்களா... மருத்துவ டிவி விளம்பரத்தில் நடிக்காதீங்கன்னா.. பாருங்க இங்கேயும் அதே மாதிரி ஆயிடுச்சு..

இராகவன் நைஜிரியா said...

// நேயர்களே இந்த புரோக்ராம் இவ்ளோ நல்லா நடக்க பதிவர்களாகிய உங்களோட ஆதரவுதான் காரணம்.. //

எப்படி இது மாதிரி வாய் கூசாம பொய் சொல்ல முடியுது...

இராகவன் நைஜிரியா said...

// சார்.. வணக்கம்.. உங்களைப் பத்திச் சொல்லுங்க..

நேசமித்ரன்: படுபொருட்களும் பாடுபொருட்களும் நிறை இ... //

சொந்த செலவில் சூன்யம் வச்சுகிறதுன்னா இதுதான்..

இனிமேலும் இந்த நிகிழ்ச்சியை நடத்துனமா அப்படின்னு அவங்க ஓடிப்போயிடலை..

Anonymous said...

பட்டைய கிளப்புங்க..

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன்: படுபொருட்களும் பாடுபொருட்களும் நிறை இருண்மை கண்டத்தின் பால்வெளியில் ஆலிவ் இலைகளும் செடார் மரங்களும் நெப்ட்யூன் பூக்களும் ஹெர்குலிஸ் பிரபஞ்சமும் வீச்சற்று சுற்றித்திரியும் ஜெசிக்காவின் போர்வாள் ஏந்திய பெருநகரப் பாணன் நான்...//

இப்படி எழுதியிருந்தீங்கன்னா இன்னும் ரொம்ப நல்லா இருந்திருக்கும்

நேசமித்ரன்:
படுபொருட்களும் பாடுபொருட்களும் நிறை இருண்மை கண்டத்தின் பால்வெளியில்
ஆலிவ் இலைகளும்
செடார் மரங்களும்
நெப்ட்யூன் பூக்களும்
ஹெர்குலிஸ் பிரபஞ்சமும்
வீச்சற்று சுற்றித்திரியும்
ஜெசிக்காவின் போர்வாள் ஏந்திய
பெருநகரப் பாணன் நான்...

எல்லாம் சரி... இந்த கமா, முற்றுப்புள்ளி அப்படின்னு சில விஷயங்கள் இருக்கே... அதெல்லாம் போடவே மாட்டீங்களா... # டவுட்டு டு நேசன்

இராகவன் நைஜிரியா said...

// ரமா: கிழிஞ்சது போங்க.. எவனுக்கும் எதுவும் புரியப் போறதில்ல.. பதிவர்களுக்காக ஏதாவது சொல்லுங்க சார்.//

அவங்களுக்கும் எதுவும் புரியாததால் தான் உங்களிடம் அனுப்பினோம்.. உங்களுக்குமா?

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன்: பதிவு என்பது ஒரு பிரதி.. //

இதெல்லாம் வலைப்பதிவு எழுதறவங்களுக்குத்தான்... எனக்கில்லை... நான் அவன் இல்லை

இராகவன் நைஜிரியா said...

// அது படிப்பவர்களை வெறி கொண்டு ஓடச் செய்யும் உன்மத்த நிலையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.. //

ஹலோ இப்பவே பாதி பயபுள்ளக அப்படித்தான் அலையுது... இதுல நீங்க வேறயா?

இராகவன் நைஜிரியா said...

// படிமங்கள் குறைந்த பட்சம் நாலு படிக்குக் கீழேயாவது நம்மைத் தூக்கி அடிக்க வேண்டும்.. அதே போல..//

ரொம்ப குறைச்சு மதிப்பிடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

குறைந்தது 400 மீட்டராவது தூக்கி அடிக்கும்..

இராகவன் நைஜிரியா said...

// ரமா: அடுத்து நாம பேசப்போற பதிவர் ரொம்பக் கம்மியாப் பேசக்கூடியவர். அமைதியானவர்.. வாங்க... //

இது என்னமோ வாஸ்த்தவம் தான்... பேசும் போது ரொம்ப கம்மியாகத்தான் பேசுகின்றார்... எழுதும் போதுதான்... அப்பன் முருகப் பெருமானுக்கே வெளிச்சம்.

நட்புடன் ஜமால் said...

படிச்சிட்டு அடிக்கனுமா படிக்காம அடிக்கனுமா

அட கும்மிய சொன்னேங்க

நட்புடன் ஜமால் said...

படிச்சிட்டு அடிக்கனுமா படிக்காம அடிக்கனுமா

அட கும்மிய சொன்னேங்க

இராகவன் நைஜிரியா said...

// டிரிங் டிரிங்..

ரம்யா: ஹா ஹா ஹா.. நான் வந்துட்டேன். //

ஹா...ஹா...ஹா...

நட்புடன் ஜமால் said...

பதிவ படிக்காமலே அடிச்சிருக்கலாம் கும்மி

படிச்ச பிறகு கும்மி ஆயிடுது கம்மி

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...
படிச்சிட்டு அடிக்கனுமா படிக்காம அடிக்கனுமா

அட கும்மிய சொன்னேங்க //

படிச்சுட்டும் அடிக்கலாம்
படிக்காமலும் அடிக்கலாம்

ஏன் என்றால் இது கும்மி..

அட்டா இது கும்மி !! (ஆச்சர்ய குறி)

நட்புடன் ஜமால் said...

! இது ஆச்சர்ய குறிதான்

அதில் என்ன ஆச்சர்யம்!!!

இராகவன் நைஜிரியா said...

// ரம்யா: தப்பா எடுத்துக்காதீங்க.. பதிவுல எங்க பார்த்தாலும் சிரிப்பான் போட்டே பழகிப் போச்சு.. அந்த ஞாபகம்.. //

ஏங்க இவங்க இன்னும் வலைப்பதிவர்தானுங்களா?

இராகவன் நைஜிரியா said...

// ரமா: அடுத்த பதிவர்.. ஒரு உலகம் சுற்றும் வாலிபர்.. //

ஹும்.. இப்படியெல்லாம் வேறயா..

நட்புடன் ஜமால் said...

படுபொருட்களும் பாடுபொருட்களும் நிறை இருண்மை கண்டத்தின் பால்வெளியில் ...

ஆஹா! கண்ண கட்டுதே

இராகவன் நைஜிரியா said...

// இன்னைக்கு மதுரைல மீட்டிங்கு.. நாளைக்கு அங்க இருந்து கோயம்புத்தூர் போறேன்.. அடுத்து ஈரோடு, திருப்பூர்..//

ரொம்ப சந்தோஷம்.. விட்டுப் போன ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் பம்ப் அடிக்க போறாங்க...

அதிலேயும் இந்த அதிரைக்காரர் இருக்காரே... அண்ணே உங்களுக்கு அதிரை எல்லாம் கண்ணுக்கு தெரியாதா அண்ணேன்னு கேட்கப் போறார்..

நட்புடன் ஜமால் said...

அதிலேயும் இந்த அதிரைக்காரர் இருக்காரே... அண்ணே உங்களுக்கு அதிரை எல்லாம் கண்ணுக்கு தெரியாதா அண்ணேன்னு கேட்கப் போறார்..]]

அண்ணே கேட்காம விட்டுட்டேன், நம்ம அண்ணாச்சேன்னு ...

இராகவன் நைஜிரியா said...

// ரமா: ஏங்க.. நான் என்ன உங்ககிட்ட தமிழ்நாடு மேப்பா கேட்டேன்?//

யாருப்பா அது... இந்த 4 ஊர்தான் தமிழ்நாடுன்னு இந்த அம்மாவுக்கு சொன்னது..

இராகவன் நைஜிரியா said...

// ரமா: வாழ்க்கைல யாருமே பார்க்காத படத்த எல்லாம் எப்படி சார் துணிஞ்சு பாக்குறீங்க..? //

இது சூப்பர் கேள்வி.. இதுக்கு ஒரு இடுகை எழுதிப் போடப்போறாரு பாருங்க.. அப்ப இருக்கு உங்களுக்கு எல்லாம்

இராகவன் நைஜிரியா said...

// ராகவன்: அப்பாடா.. பதிவர்கள் எல்லாருமே என்னோட பாசக்காரத் தம்பிங்க.. இப்படி எல்லாம் உறவுகள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. இப்பக்கூட பாருங்க.. அன்டார்டிக்காவுல இருந்து ஒரு தம்பி பின்னூட்டம் போட்டிருக்கார்.. அதனால் அடுத்த ட்ரிப்பு அங்கதான்னு நினைக்கிறேன்.. //

ஆமாங்க... அடுத்து அண்டார்டிகாவுக்குத்தான் டிரிப்... அதுவும் பேமலியோட..

நட்புடன் ஜமால் said...

இல்லம்மா.. ஒரு நாலு வரி சொல்றேனே....]]

ஒரு நாளைக்கு ஒரு வரிதான் படிச்சி முடிக்க முடியும் சீக்கிரம் விடியும்

நட்புடன் ஜமால் said...

அன்டார்டிக்காவுல இருந்து ஒரு தம்பி பின்னூட்டம் போட்டிருக்கார்.. அதனால் அடுத்த ட்ரிப்பு அங்கதான்னு நினைக்கிறேன்.]]


ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

அடுத்து அண்டார்டிகாவுக்குத்தான் டிரிப்... அதுவும் பேமலியோட..]]

தனியா போகலாமுன்னு ஒரு ப்ளான் இருக்கா

( ட்ரிங் ட்ரிங் - ஹலோ அன்னி ...)

நட்புடன் ஜமால் said...

அடுத்த பதிவர்.. ஒரு உலகம் சுற்றும் வாலிபர்..]]


சூப்பரு

இராகவன் நைஜிரியா said...

தனியே இதுக்கு மேல ஒன்னும் செய்ய முடியாததாலும், ஆணி இருப்பதாலும் மத்த பின்னூட்டங்களைப் பார்த்து அப்பாலிக்கா வந்து கும்மி அடிக்கப்படும் என்று பணிவன்புடன் தெரிவித்துக் கொண்டு இங்கிருந்து வடை பெறுகின்றேன்..

நட்புடன் ஜமால் said...

நீ சிந்து சிரிப்பைப் பொறுக்குபவன் நான்.

அட கவிதையா பேசுறாரே இந்த கார்த்திகை பாண்டியரு

நட்புடன் ஜமால் said...

என்னா அண்ணே ஒரு 50 கூட அடிக்காம சீக்கிரமே வடை பெற்று கொண்டீர்கள்

மேலும் தனியாவா

நான் ஒருத்தன் கீறேன் இங்கே ...

நட்புடன் ஜமால் said...

ரம்யா: ஹா ஹா ஹா.. நான் வந்துட்டேன்..
]]

வாங்க வாங்க

நட்புடன் ஜமால் said...

ரம்ஸ் நல்லா சிரிங்க

சிரிப்பது சிரிக்க வைப்பது நல்லதே

பத்மா said...

super

நேசமித்ரன் said...

கா.பா கலக்கல்பா

ரசித்தேன் :))))

ராகவன் அண்ணே இந்தா வந்துட்டேன்

நாளை முதல் ....

a said...

ஹா ஹா ஹா............

மேவி... said...

அண்ணே ..என்னன்னே இரண்டு மூணு இலக்கிய பதிவு எழுதிட்டு , அதுக்கு யாருமே வரலன்ன உடனே ஒரு காமெடி பதிவு எழுதிடீங்களா ???

ரைட்டு .. நல்ல வேளை நேசமித்ரன் சமையல் குறிப்பு சொல்லுற மாதிரி நீங்க எழுதவில்லை .... அவர்கிட்ட நீங்க எப்புடின்னே பேசி சமாளிசீங்க ????

மேவி... said...

கார்க்கி மேட்டர் மட்டும் ஏதோ பொறமை ல எழுதினன மாதிரி இருக்கு. உங்களுக்கு கோழி சாரி தோழி இல்லாட்டி அவரை ஏன் .....???

பாஸ் கார்க்கிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு ..... வீணா வம்பு வேண்டாம். உங்க இலக்கிய உடம்பு தங்காது

rvelkannan said...

முழுக்க முழுக்க ரசித்தேன் சிரித்தேன்

RAMYA said...

ஹேய்! என்னாப்பா என்னைய பத்தி எழுதி இருக்கீங்க? என் கிட்டே சொல்லவே இல்லையே மவனே!

எழுத நேரமில்லாம ஏதோ சிரிப்பான் போட்டு சமாளிச்சுகிட்டு இருந்தா கம்பெனி சீக்ரட்டை இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே!

இதுக்கும் ஒரு சிரிப்பான்:)

RAMYA said...

வடிவேலு பார்த்திபனையா கிண்டல் பண்றீங்க? தோ வராங்க இருங்க.... :)

வடிவேலு: ஹல்லோ ஹல்லல்லோ யாரு பேசறது?

பார்த்திபன்: முண்டம் போன் பண்ணினது நீயி, எனனையா கேள்வி கேக்கறே? ராகம் போடாம பேச தெரியாதா உனக்கு? என்ன விஷயம்?

வடிவேலு: நீ தானேப்பா போன் போடச் சொன்னே!

பார்த்திபன்: என்ன போன் போட சொன்னேனா? முண்டம் யாரோட போனை போட்டே? உடைஞ்சி போச்சா? அடி எப்படி?

வடிவேலு: என்னப்பா சொல்றே? இந்த நேரத்துக்கு பேசுன்னு சொன்னே இல்லே?

பார்த்திபன்: சொன்னேனா? இல்லையா? சரியா பேசணும். லூசு மாதிரி ஒளரக்கூடாது.

வடிவேலு: இவன் தப்பு தப்பா பேசறானா? இல்லை நான்தான் தப்பு தப்பா பேசறேனா?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// ரம்யா: தப்பா எடுத்துக்காதீங்க.. பதிவுல எங்க பார்த்தாலும் சிரிப்பான் போட்டே பழகிப் போச்சு.. அந்த ஞாபகம்.. //

ஏங்க இவங்க இன்னும் வலைப்பதிவர்தானுங்களா?
//

அண்ணா ஏன் இந்த வில்லத்தனம்?

RAMYA said...

கார்த்திக், பதிவு நல்லா இருந்துச்சு, என்ன ரொம்ப நாள் கழிச்சி வரேன்:(

இது சிரிப்பான் இல்லே அழுவான்:(

மதுரை சரவணன் said...

கலக்கல் காபா. சூப்பர். அசத்துங்க... வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

அருமையான நிகழ்ச்சி. கேள்விகளூம் பதிலும் அருமை. நேச மித்ரனின் சுய அறிமுகம் அருமை. மிக மிக ரசித்து மகிழ்ந்தேன். அவரது இடுகைகளுக்கு சமமான இடுகைகள் இன்னும் வர வில்லை. உன்மைத்தமிழன், ரம்யா, இராகவன் அண்ணன் - அனைவருமே பேட்டியில் பிரமிக்க வைக்கின்றனர்.

நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

நட்புடன் சீனா

Anonymous said...

பாண்டியன் நல்லா சிரிச்சேன்...தொடரட்டும் உங்கள் சேவை...