September 12, 2010

நான்மாடக்கூடல் - புகைப்படங்கள்

நான்மாடக்கூடல் - மதுரை புத்தகத் திருவிழாவின் ஒரு பிரதான அங்கமாக மாறி வரும் ஓவியங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி. சென்ற வருடம் வைக்கப்பட்ட புகைப்படங்கள் மதுரையைப் பற்றியதாக இருந்தன. இந்த வருடம் தமிழக கட்டிடக்கலை சார்ந்த புகைப்படங்களும் ஓவியங்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பழங்காலச் சிறப்பை மக்களுக்கு விளக்கும் விதமாக கவிஞர் தேவேந்திர பூபதியின் "கடவு" அமைப்பும், பேரா.காந்திராஜனின் "சித்திரக்கல்" அமைப்பும் இணைந்து இந்த நல்ல விஷயத்தைச் செய்து வருகிறார்கள். கண்காட்சியில் இருந்து மதுரையின் புராதான அழகை படம்பிடித்துக் காட்டும் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

தமுக்கம் (தற்போதைய காந்தி அருங்காட்சியகம்)


தமுக்கம் மைதானம்


மீனாக்ஷி அம்மன் கோவில் - தெற்கு கோபுரம்


நாயக்கர் மகால் - முகப்புத் தோற்றம்


மீனாக்ஷி அம்மன் கோவில் - பொற்றாமரைக் குளம்


தெற்கு கோபுரம் - அருகே இருக்கும் குடிசைகள்


நாயக்கர் மகால் - உட்பகுதி


மகாலின் சிதிலமடைந்த பகுதி - இன்றைக்கு மாயமாக மறைந்து விட்டது


கோவில் - வடக்குக் கோபுரம்


புதுமண்டபம் பகுதி

நம்ம புத்தி, வழக்கம் போல மதுரையைப் பத்தின படங்களை மட்டும்தான் எடுத்துப் போட்டிருக்கேன். இதுதவிர காரைக்குடி, செஞ்சி, மாமல்லபுரம் என்று தமிழகக் கட்டிடக்கலைக்கு சான்றாக இருக்கும் முக்கியமான பகுதிகளின் படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. புத்தக விழாவுக்குப் போகும் எல்லாரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கண்காட்சி..

23 comments:

துளசி கோபால் said...

அதென்னங்க மாயமாய் மறைந்துவிட்ட பகுதி, நாயக்கர் மஹாலில்?

இடிச்சுட்டாங்களா என்ன?

அடடா.......:(

vasu balaji said...

நாயக்கர் மகல் போச்சா:((

Ganesan said...

@ துளசி டீச்சர், சிதிலமடைந்தவைகள் சரி செய்யப்பட்டு மிக பொழிவுடன் தற்பொழுது உள்ளது நாயக்கர் மகால்.

படங்களுக்கு நன்றி கா.பா.

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி கார்த்திகை பாண்டியன்.மகிழ்ச்சி!
கருப்பு வெள்ளை புகைப்படங்களில் நகரம் இன்னும் பொலிவாய் தோற்றம் கொண்டு மிளிர்கின்றது..

அத்திரி said...

innaikku ungkalukku leave illaiyaa

how is preethi

கார்த்திகைப் பாண்டியன் said...

//துளசி கோபால் said...
அதென்னங்க மாயமாய் மறைந்துவிட்ட பகுதி, நாயக்கர் மஹாலில்? இடிச்சுட்டாங்களா என்ன? அடடா.:( //

ஆமா மேடம்.. மொத்தம் மூணு பகுதியா இருந்த மகால்ல இன்னைக்கு வெறுமனே ரங்க விலாசம்ங்கிற ஒரு பகுதி மட்டும்தான் மிச்சம் இருக்கு

// வானம்பாடிகள் said...
நாயக்கர் மகல் போச்சா:((//

அதுக்கு சீன் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு பாலா சார்..:-(((

// காவேரி கணேஷ் said...
@ துளசி டீச்சர், சிதிலமடைந்தவைகள் சரி செய்யப்பட்டு மிக பொழிவுடன் தற்பொழுது உள்ளது நாயக்கர் மகால்.
படங்களுக்கு நன்றி கா.பா.//

சந்தோஷப்படாதீங்க தல.. புதுசு பண்றோம் பேர்வழின்னு சொல்லி உண்மையான ஓவியங்கள் மேல எல்லாம் பிளீச் பண்ணி நம்ம புராதான சின்னங்களை அழிக்கிற வேலைதான் நடந்துக்கிட்டு இருக்கு..:-(((

கார்த்திகைப் பாண்டியன் said...

//லேகா said...
பகிர்தலுக்கு நன்றி கார்த்திகை பாண்டியன்.மகிழ்ச்சி! கருப்பு வெள்ளை புகைப்படங்களில் நகரம் இன்னும் பொலிவாய் தோற்றம் கொண்டு மிளிர்கின்றது..//

நன்றி தோழி..:-)))

//அத்திரி said...
innaikku ungkalukku leave illaiyaa//

விடுமுறை நாள் தாண்ணே..

// how is preethi//

மழை ஓஞ்சும் இன்னும் தூவானம் விடலையா?

நீச்சல்காரன் said...

அருமையான படங்கள.

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா,... புகைபடத்தை படம் எடுத்துள்ளீர்கள் என்று நினைக்கின்றேன்..... அதனால் பிளாஸ் ஒளி தெரிகின்றது,,,

ஹேமா said...

கார்த்திக்....பார்த்தேன்.
ரசித்தேன்.அழகு.

நேசமித்ரன் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி கா.பா

தொன்மங்களின் மீதம் எஞ்சியிருப்பதை பதிவு செய்ய வேண்டியது நமது கடமையும் இல்லையா

அந்தக் கிணறு ...
அந்தக் திருப்பங்குன்றத்து சமண குகைகள்...

மேவி... said...

தமுக்கம் மைதானம் iஇது மதுரை வீடு பகுதிகளின் ஒரு அகமாகிருச்சு ல ..... வேற எங்கையோ இத பத்தி படிச்சு இருக்கேன் ..


முக்கிய குறிப்பு - ப்ரீத்தியை கை விட்டுறாதீங்க

மேவி... said...

photo yedukkum pothu konjam flash reflect aagatha madiri yedunga thala... (angle of elevation ..trigonometry ellam padichu iruppeenga la )

மேவி... said...

சாரே .... இந்த வரலாற்று சுவடுகளை சுற்றி செல்லும் எதாச்சு நாவல்களிருந்தால் சொல்லுங்க ...படிச்சு பார்போம் (ஆமா ஏற்கனவே நீ வாங்கின்ன புஸ்தகத்தை எல்லாம் படிச்சிட்டியான்னு நீங்க கேட்க கூடாது)

Anonymous said...

நம்ம மதுரை படங்களை எப்போ பார்த்தாலும் சிலிர்ப்பு தான் :)
அருமை கா.பா!

ராம்ஜி_யாஹூ said...

CAN U PLS POST THE CURRENT PHOTOS OF MADURAI.

Anonymous said...

ஒரு சரித்திரப் பக்கம் திருப்பிப் பார்த்த மாதிரி இருந்தது சில படங்கள்....கோவில் படங்கள் அத்தனையும் அழகு ஆமாம் அதென்ன பாண்டியன் மாயமாய் மறைந்துவிட்ட பகுதி அழிச்சிட்டாங்களா?

குமரை நிலாவன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா..

சொல்லரசன் said...

அருமையான‌ பதிவு கா.பா.இதுபோல் பழமையான படங்கள் பதிவுசெய்தால்
நாளை தலைமுறைக்கு பயன்தரும்

மதுரை சரவணன் said...

அருமையான பகிர்வு. புகைப்படங்கள் மதுரையின் தொன்மையை விளக்குகின்றன. வாழ்த்துக்கள்

வழிப்போக்கன் said...

படங்கள் சுப்பர்...ஆனா ஏதோ ஆயிரத்தில் ஒருவன் படத்துல வர்ர மாதிரி இருக்கு...
:)

தருமி said...

ஒளி போய்க்கொண்டிருந்த நேரம். இவர் எடுக்கிற படமெப்படி வரப்போகிறதோ என்று நினைத்தேன்.

அசத்திட்டீங்க. படங்கள் நல்லா வந்திருக்கு. அதெல்லாம் எடுக்கிறவன் கையைப் பொறுத்துதான் போலும்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அருமை. நேரில் சென்று பார்க்கவேண்டும்.