September 23, 2010

ஆபரேஷன் புளூ டைமண்ட் (சவால் சிறுகதை)

பாங்காக்கில் இருந்து சென்னை வரும் விமானம். 23ஆம் எண் இருக்கையில் அமைதியாக அமர்ந்து இருப்பவள்தான் காமினி.. நம் கதையின் நாயகி.

"இதுவரை எல்லாமே சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.. கடைசி வரை இப்படியே இருந்தால் சந்தோசம்.."

இருந்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு. வெகு நேரமாகத் தன்னை யாரோ உற்று கவனிப்பது போல.. சடாரென்று உள்ளுணுர்வு உந்தித் தள்ள திரும்பிப் பார்த்தாள்.

"இவ்வளவு நேரமாக அந்த சர்தார் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தானோ? ச்சே ச்சே இருக்காது..." தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்கும் என ஒலிபெருக்கி அழகி அறிவித்துக் கொண்டிருந்தாள்.

விமானத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து அவர்கள் நால்வரும் எழுந்தார்கள். எங்கிருந்து முளைத்ததெனத் தெரியாமல் அதிநவீன துப்பாக்கிகள் அவர்கள் கரங்களில் இருந்தன. ஒருவன் கேப்டனின் கேபினுக்குள் போக மற்றவன் ஓங்கிக் கத்தினான்.

"இப்போது முதல் இந்த விமானம் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்வரை நீங்கள் எல்லாரும் எங்களுடைய கைதிகள். எந்த வீம்பும் பண்ணாதவரை யாருக்கும் ஆபத்தில்லை."

காமினிக்கு லேசாக வியர்த்தது. இது என்ன எதிர்பார்க்காத சிக்கல்?

ரண்டு மணி நேரங்களாக விமானம் ஓடுதளத்தில்தான் நின்று கொண்டிருக்கிறது. பயணிகள் எல்லாரும் பீதியில் அமிழ்ந்து போய்க் கிடந்தார்கள். சிறிது நேரம் கழித்து கேப்டனின் கேபினுக்குள் இருந்த தீவிரவாதி ஆர்ப்பாட்டத்தோடு வெளியே வந்தான்.

"அரசு ஒத்துக் கொண்டு விட்டது. நம் நண்பர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள்.."

அவன் பேசிக் கொண்டிருந்தபோதே விமானத்தின் உள்ளே புதியதோர் நறுமணம் எழுந்தது. எங்கிருந்து இந்த வாடை வருகிறது என பிரயாணிகள் ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூரைவழி வெண்ணிறப் புகைமண்டலம் ஒன்று விமானத்தின் உள்ளே பரவத் தொடங்கியது.

"தோழர்களே.. நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம. ஏதோ சூது.." பேசிக் கொண்டிருந்த தீவிரவாதி மயங்கி விழுந்தான். கூடவே பயணிகளும்..

காமினி மெதுவாக சிரமப்பட்டுத் தன கண்களைத் திறந்தாள். கால்மாட்டில் ஓர் உருவம் மங்கலாகத் தெரிந்தது. டாக்டர்? அந்த அறையில் அவளைப் போலவே நிறைய பேர். கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள்.

"எத்தனை சீக்கிரம் முடியுமோ இங்கிருந்து கிளம்பி விட வேண்டும்"

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அது ஒரு நீண்ட வராண்டா. அதன் கடைசியில் இருந்த அறைக்குள் எல்லாருடைய உடைமைகளும் கிடந்தன. தன்னுடையதைத் தேடி எடுத்துக் கொண்டாள். அங்கிருந்த களேபரத்தில் யாரும் அவளைக் கவனிக்கவில்லை. சத்தம் போடாமல் மெதுவாக நடந்து வெளியே வந்தாள். சாலையில் போன ஆட்டோவை நிப்பாட்டி ஏறிக் கொண்டாள்.

"எக்மோர்.."

துரை. ஹோட்டல் பிரேம் நிவாஸ். ரூம் நம்பர் 206.

"ஹலோ.. ரிசப்ஷன்?"

"எஸ் மேடம்"

"எனக்கொரு கார் வேண்டும். அவசரமாக.."

"ஏற்பாடு செய்து விடலாம். டிரைவர்?"

"தேவையில்லை"

"நல்லது.. பதினைத்து நிமிஷம்."

காமினி குளித்து முடித்து வந்தபோது போன் ரிங்கிக் கொண்டிருந்தது.

"உங்களுக்கான கார் கீழே காத்துக் கொண்டிருக்கிறது. போர்ட் ஐகான். இளம்பச்சை நிறம்.."

"நன்றி"

காமினி லிப்டில் இருந்து வெளிப்பட்டாள். ரிஷப்ஷனில் இருந்து திரும்பும்போது காலில் ஏதோ இடறியது. குனிந்தாள்.

"டிஸ்யூங்"

தலைக்கு மேலே கண்ணாடி சிதறியது. "ஓ மை காட்.. யாரோ நான் இங்கே வந்திருப்பதை அறிந்திருக்கிறார்கள்.." சட்டெனக் குனிந்து ஓடி காருக்குள் ஏறினாள். விர்ரூம்.. பயங்கர வேகத்தில் கார் கிளம்பியது.

ஏதோ ஒரு மாடியில் ஒளிந்திருந்து சுட்டிருக்கிறார்கள. யாராக இருக்கும்? அவளுக்கு பிளாட்டில் பார்த்த சர்தார்ஜியின் ஞாபகம் வந்தது. அவனாக இருக்குமோ? சிந்தனை செய்தபடியே காரின் ரியர்வியூ மிரரைப் பார்த்தவள் திடுக்கிட்டாள்.

அவளுடைய காரின் வாலைப் பிடித்தபடியே ஒரு புல்லட். அதில் இருந்த இரண்டு பேரின் முகத்திலும் நாங்கள் நல்லவர்கள் இல்லை என்று தெளிவாக எழுதி இருந்தது. காரின் வேகத்தைக் கூட்டினாள்.

துரையின் குறுகிய ரோடுகளில் காரை அத்தனை வேகமாக ஓட்டுவது சிரமமாக இருந்தது. இருந்தும் காமினி சமாளித்து ஓட்டினாள். அவர்களும் விடாமல் துரத்தி வந்தார்கள். அபாயகரமான ஒரு வளைவில் காமினி காணாமல் போனாள்.

புல்லட் நின்ற இடம் ஒரு சந்தின் முனை. அங்கிருந்து ரோடு மூன்று வழிகளில் பிரிந்தது. அவர்கள் குழம்பிப் போனவர்களாக நின்றார்கள். அந்தப் பெண் எந்த பக்கமாகப் போனாள்? அவர்கள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது பின்னாடி இருந்து அந்த சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் விக்கித்துப் போனார்கள்.

காமினியின் கார் வேகமாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நடப்பதை உணர்ந்து அவர்கள் விலகுவதற்குள்.. டம்ம்.. அவர்கள் புல்லட் இரண்டு மூன்ற குட்டிக் கரணம் அடித்து சாலையின் ஓரமாக விழுந்தது. அவர்கள் தூக்கி வீசப்பட்டார்கள். கார் நிற்காமல் போய் விட்டிருந்தது.

ந்த டெலிபோன் பூத்தின் முன் காமினி தன காரை நிப்பாட்டினாள். மனப்பாடம் செய்திருந்த நம்பரை அழைத்தாள்.

"ஹலோ.."

".."

"வானவில்லின் நிறம் நீலம்.."

".."

"பத்திரமாக இருக்கிறது."

".."

"தெரியும்.. தப்பித்துக் கொண்டு விட்டேன்.."

".."

"சரி.. இன்னும் அரை மணி நேரத்தில் அங்கிருப்பேன்.."

காருக்குள் ஏறி உட்கார்ந்து வண்டியைக் கிளப்பினாள்.

"வண்டியைக் கொஞ்சம் ஓரமா நிப்பாட்ட முடியுமா?"

அதிர்ச்சியாகி பின்னால் திரும்பினாள். அங்கே இருந்தவன்.. இவன் தானே சர்தார்ஜி வேசத்தில் வந்தவன்?

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"நீ பொம்பளைப்பிள்ள.. உன்னையக் கஷ்டப்படுத்தக்கூடாது.. உனக்குத் தெரியாமலே வைரத்தை எடுத்திரணும்னுதான் முயற்சி பண்ணினேன். ஆனா அந்தத் திடீர் விமானக் கடத்தல்னால எல்லாம் மாறிப் போச்சு.. தயவு செஞ்சு பிரச்சினை பண்ணாம அந்த வைரத்தக் கொடுத்திரு.."

"சரி.. தரேன்.."

எதையோ எடுப்பவள் போலக் கீழே குனிந்தாள் காமினி. சின்னதொரு ஆர்வத்தில் சிவாவும் கீழே பார்க்க, அந்த நேரம் அவளுக்குப் போதுமானதாக இருந்தது. சராரென்று ரிவர்சில் கியரைப் போட்டு காரைக் கிளப்பினாள். அந்த வேகத்தில் சிவாவின் கையிலிருந்த துப்பாக்கி தவறி விழுந்தது. அவன் சுதாரிப்பதற்குள் வண்டியைக் கொண்டு போய் அருகில் இருந்த சுவரில் வேகமாக மோதினாள்.

காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள் காமினி. பின்சீட்டில் சிவா மயங்கிக் கிடந்தான். அவளுக்கும் காலில் அடி பட்டிருந்தது. நொண்டியபடியே அங்கிருந்து விலகி நடக்கத் தொடங்கினாள்.

ழகர்மலையின் அடிவாரத்தில் நின்று கொண்டிருந்தாள் காமினி. சரியான நேரத்துக்கு வந்தாயிற்று. இதுதான் அவர்கள் வர சொன்ன இடம்?

சிறிது நேரம் கழித்து ஒரு சுமோ அவளருகே வந்து நின்றது. உள்ளே இருந்தவன் கேட்டான். "காமினி?"

"ஆம்.."

"உள்ளே ஏறிக் கொள்.."

உள்ளே போனவுடன் அவள் கண்கள் கட்டப்பட்டன. அரைமணி நேரப் பயணம்.

வள் கண்களின் கட்டு அவிழ்க்கப்பட்டபோது ஒரு பிரமாண்டமான வீட்டின் உள்ளே நின்றிருந்தாள். எதிரே ஜிப்பா போட்ட ஒரு பெரிய மனிதர்.

"வைரம் எங்கே.."

அவள் மென்மையாகச் சிரித்தாள். கீழே குனிந்து தனது வலது காலின் செருப்பைக் கழட்டினாள். அதன் குதிகால் பாதியை தனியாக் பிரித்து உள்ளே இருந்த வைரத்தை எடுத்தாள். ஒரு பெரிய சைஸ் கோலிகுண்டைப் போல இருந்த அது நீல நிறத்தில் டாலடித்தது.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"இதை நாம் கொண்டாடியே ஆக வேண்டும். என்ன பண்ணலாம் சொல்.." பரந்தாமன் பேசிக் கொண்டிருக்கும்போதே டிஷ்யூங் என்று சுட்டுக் கொண்டே உள்ளே ஒரு பெரிய போலிஸ் படையே நுழைந்தது.

பரந்தாமனால் நம்ப முடியவில்லை. "எப்படி.. எப்படிக் கண்டுபிடித்தீர்கள்" என்று அலறியபடியே காமினியைப் பார்த்தார். அவள் இப்போது சிரித்துக் கொண்டே தன்னுடைய இடது காலின் செருப்பைக் கழட்டினாள். அதன் உள்ளே "பீப் பீப்" என்றபடி ஒரு ரேடியோ டிரான்ஸ்மீட்டர்.

"வாழ்த்துகள் காமினி.. உங்களால ரெண்டு மூணு கடத்தல் கும்பலை வளைச்சுப் பிடிச்சிருக்கோம்.. " கமிஷனர் சொன்னதைக் கேட்டு சிரித்தபடி உட்கார்ந்து இருந்தாள் காமினி.

"பை தி வே.. உங்களுக்கு இன்னொரு முக்கியமான மனிதரை நான் அறிமுக செய்ய வேண்டியிருக்கு.."

"யார் சார்.."

"இவர்தான்..உங்களை மாதிர்யே நம்ம டிபார்ட்மேண்டின் இன்னொரு அண்டர்கவர் ஆபிசர்.. மிஸ்டர்.சிவா.."

கமிஷனர் கைகாட்டிய திசையில் சிரித்தபடியே உள்ளே வந்தான் சிவா.

"ஏங்க ஒரு மனுஷன இப்படியாப் போட்டு அடிப்பீங்க.."

"அய்யய்யோ.. சாரிங்க.."

எழுந்து கைகுலுக்கிய காமினியின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.

23 comments:

Balakumar Vijayaraman said...

அட, கடைசீல லவ்ஸ் வேறயா? :)

கதை நல்லா இருக்கு.

அப்புறம், ஷூல வைரம் கடத்துறது வழக்கொழிஞ்சு போய்ட்டதா அயன் படத்துலயே சொன்னாய்ங்களே. அதான் நீங்க ரீமிக்ஸ் பண்ணி செருப்பு னு சொல்லிட்டீங்களோ! :)

கார்த்திகைப் பாண்டியன் said...

பாலா.. ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ளதான் கம்பு சுத்தணும்னு சொல்லிட்டாங்க.. வேறென்ன பண்ண முடியும்.. அதுதான் கொஞ்சம் அப்படி இப்படி..

இந்த மொத்தக் கதையுமே எனக்கு ரொம்பப் பிடிச்ச சுபாவுக்கும் (எழுத்தாளர்கள் சாமிகளா..) , 90ஸ்ல நான் வாசிச்ச சூப்பர் நாவல்களுக்கும் சமர்ப்பணம் எனும்போது இப்படி எழுதணும்தான் ஆசையா இருக்கு..:-)))

Paleo God said...

நல்லா இருக்குங்க கார்த்திகைப் பாண்டியன்.

// 90ஸ்ல நான் வாசிச்ச சூப்பர் நாவல்களுக்கும் சமர்ப்பணம் எனும்போது இப்படி எழுதணும்தான் ஆசையா இருக்கு..:-))//

பாக்கெட் நாவலுக்கு ஒரு பயணம் பண்ண வெச்சிட்டீங்க.:))

சிவக்குமரன் said...

good attempt friend. all the best.

கார்த்திகைப் பாண்டியன் said...

// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நல்லா இருக்குங்க கார்த்திகைப் பாண்டியன். பாக்கெட் நாவலுக்கு ஒரு பயணம் பண்ண வெச்சிட்டீங்க.:))//

அந்த உணர்வைக் கொண்டு வரணும்னுதான் எழுதினேன் நண்பா..

//இரா.சிவக்குமரன் said...
good attempt friend. all the best//

நன்றி தலைவரே

Anonymous said...

பரிசு பெற வாழ்த்துக்கள் கா.பா!

பிரபாகர் said...

அருமையாய் எழுதியிருக்கிறீர்கள், பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவின்றி. வாழ்த்துக்கள்.

பிரபாகர்...

கார்த்திகைப் பாண்டியன் said...

// Balaji saravana said...
பரிசு பெற வாழ்த்துக்கள் கா.பா//

நன்றி நண்பா..

// பிரபாகர் said...
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள், பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவின்றி. வாழ்த்துக்கள்.//

பரபரப்புங்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுதா.. அப்பாடா.. ஓகே ஓகே.. ஒருத்தருக்கு பிடிச்சிருந்தாக் கூட போதும் தல..:-)))

Unknown said...

Potti athigamaakikkitte poguthe?

Nalla irukku kaa.paa.

ஹேமா said...

வெற்றிக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள் கார்த்தி.

Anbu said...

\\\எழுந்து கைகுலுக்கிய காமினியின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.\\

அப்போ ப்ரீத்தியோட நிலைமை?

வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//முகிலன் said...
Potti athigamaakikkitte poguthe?
Nalla irukku kaa.paa.//

உங்க கதையும் என்னோட கதையும் கிட்டத்தட்ட ஒரே ட்ரீட்மென்ட் இல்ல முகிலன்?

//ஹேமா said...
வெற்றிக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள் கார்த்தி.//

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.. நன்றி தோழி

// Anbu said...
அப்போ ப்ரீத்தியோட நிலைமை?
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணே..//

அடப்பாவி.. நீயும் ப்ரீத்தி புராணத்த ஆரம்பிச்சுட்டியா?

*இயற்கை ராஜி* said...

nice story...

Karthik said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்ங்ணா. பரிசல் அண்ணா கதையை படிச்சிட்டு மறுபடி வரேன். :)

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் நண்பா

kannamma said...

kutti rajeshkumar naaval maathiri irunthathu.nalla attempt Sir..........

கார்த்திகைப் பாண்டியன் said...

//*இயற்கை ராஜி* said...
nice story...//

நன்றி டீச்சர்

//Karthik said...
வெற்றி பெற வாழ்த்துக்கள்ங்ணா. பரிசல் அண்ணா கதையை படிச்சிட்டு மறுபடி வரேன். :)//

யோவ்.. பரிசல்தான்யா போட்டிய நடத்துறதே.. அவர் கதையெல்லாம் எழுதல..:-)))

//"உழவன்" "Uzhavan" said...
வாழ்த்துகள் நண்பா//

நன்றி தலைவரே..:-))

// kannamma said...
kutti rajeshkumar naaval maathiri irunthathu.nalla attempt Sir........//

நன்றிமா.. இது சுபா:-))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

புல்லரிக்குதுங்க.

M.G.ரவிக்குமார்™..., said...

நல்லாத் தாங்க இருக்கு!...பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்!...

Vidhoosh said...

நல்லா இருக்குங்க.

எனக்கும் அந்த வரிகள் கொஞ்சம் block ஆனது போலத்தான் இருக்கு.. :))

க ரா said...

சூப்பருங்க :)

R. Gopi said...

நல்லா இருக்கு

Abhi said...

நல்லா எழுதியிருக்கீங்க ... நானும் எழுதியிருக்கேன் படிச்சுப் பாருங்க !

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html