September 30, 2010

ரஜினி என்றொரு மந்திரச்சொல்


தமிழ் சினிமா வரலாற்றில் எந்தப் படத்துக்கும் இல்லாத பரபரப்பும் எதிர்பார்ப்பும் "பாபா"வுக்கு இருந்தது. எங்கும் பாபா எதிலும் பாபா. ஊரின் சந்து பொந்து இண்டு இடுக்கெல்லாம் பாபா. நாளைக்குப் படம் ரிலீஸ். முந்தைய நாள் மாலைக்கான ரசிகர் ஷோவுக்கான டிக்கட் என் கையில் இருக்கிறது. சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் குதியாலத்தொடு "அண்ணாமலை" தியேட்டருக்குப் போய் விட்டேன்.

"தம்பி.. நைட்டு ரெண்டு ஷோ.. எட்டு மணிக்கு ஒண்ணு.. அடுத்தது பதினோரு மணிக்கு.. உங்ககிட்ட இருக்குறது பதினோரு மணி டிக்கட்டு.. போயிட்டு பொறுமையா வாங்க.."

"என்னது? பொறுமையா வாரதா.. அடப் போங்கையா.. தியேட்டர் வாசல்ல நின்னு ரசிகர்கள் ஆட்டத்தைப் பார்த்தா தானா பொழுது போகுது.."

ஏழு மணி போல யானை மீது வைத்து படப்பட்டியை எடுத்து வந்தார்கள். ஆட்டம்தான் பாட்டம்தான்.. ஏரியாவே கோலாகலமாக இருந்தது. எட்டு மணி ஷோ ஆரம்பித்து விட்டார்கள். ஒரே பசி. கையிலோ காசு ரொம்ப கம்மியாக இருந்தது. போய் இரண்டு வாழைப்பழம் வாங்கிக் கொண்டேன். ஒன்றை சாப்பிட்டுவிட்டு இன்னொன்றை பத்திரமாகப் பைக்குள் வைத்தாயிற்று. பதினோரு மணி வரைக்கும் தாக்குப்பிடிக்கணும் இல்லையா?

பத்து மணிக்கு கவுண்டரை திறந்து விட்டார்கள். கூட்டம்.. அடிதடி.. தள்ளு முள்ளு.. பெரிசுங்க யாராவது கஷ்டப்பட்டு உள்ளே நுழைந்திருந்தால் அன்றைக்கு "நேரடியாகவே" பாபாவைப் பார்ப்பதற்கான டிக்கட் கிடைத்திருக்கும். அடித்துப் பிடித்து உள்ளே போய் டிக்கட்டை எடுப்பதற்காக பாக்கெட்டுக்குள் கையை விட்டால்.. கூழ் கூழாக வருகிறது.

வாங்கியிருந்த வாழைப்பழமும் டிக்கட்டும் ஒன்றாகக் கசங்கிப் போய்.. ஒன்றும் செய்ய முடியாதென தியேட்டர் மானேஜரும் கையை விரித்து விட்டார். எனக்கு அழுகை வராத குறைதான். படம் பார்க்க முடியாமல் நொந்து நொம்பலமாகி வீட்டுக்கு வந்தபோது மணி பனிரெண்டு. நேராக டிவியின் முன் உட்கார்ந்து கொண்டேன். பேயறைந்த மாதிரி ராத்திரி ரெண்டரை வரை உட்கார்ந்தே இருக்கிறேன்.. தூங்கவே இல்லை. வீட்டில் பயந்து போய் அதட்டி என்னைப் படுக்க வைத்தார்கள். ஆனாலும் காலை நாலு மணிக்கெல்லாம் முழிப்பு வந்து விட்டது.

"பரேட்" பார்க்கப் போவதாக சொல்லி விட்டு ரயில்வே கிரவுண்டில் போய் உட்கார்ந்து கொண்டேன். ஐந்து மணிக்குக் கிளம்பி நேராக"குரு"தியேட்டர். ஆறு மணிக்கு ஷோ. பிளாக்கில் நூறு ரூபாய்க்கு டிக்கட். உள்ளே போய் உட்கார்ந்த பிறகுதான் நிம்மதி ஆனது.

ரஜினியின் அறிமுகக் காட்சி. சீட்கள் அந்தரத்தில் பறக்கின்றன. விசில்கள் காதைக் கிழிக்கின்றன. நான்கு பக்கங்களில் இருந்தும் அகிலா கிரேனில் சுத்தி சுத்தி காமிக்கிறார்கள். ஸ்க்ரீனில் ரஜினியைப் பார்த்தபோது ஏற்பட்ட பரவசத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது. (அதன் பிறகு தலைவர் புர்ர்ர்ரா என்றதும் படமும் அப்படியே ஆனது வேறுகதை)

வீட்டுக்கு வந்தால் எல்லோரும் டர்ன் போட்டுத் திட்டுகிறார்கள்.

"நீயெல்லாம் படிச்சவந்தானா? இன்ஜினியராம் வெளக்கெண்ணை.. இதுல நீ நாலு பசங்களுக்கு பாடம் வேற சொல்லிக் கொடுக்குற.. அப்படி என்னதாண்டா இருக்கு அவன்கிட்ட?"

அதுதான் ரஜினி.

படித்தவர், படிக்காதவர், பெரியவர், சிறியவர் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்தவர் என்பதுதான் ரஜினி. எந்த வயதில் இருந்து நான் ரஜினிக்கு ரசிகன் ஆனேன் என்பது சரியாக நினைவில் இல்லை. ஆனால் விவரம் தெரிந்து பார்த்த முதல் படம் "அண்ணாமலை". தலையை நிமிர்ந்து ரசிகர்களைப் பார்த்து கண்ணடிக்கும் காட்சி.. வாவ்.. அந்த ஸ்டைலும் அழகும் யாருக்கு வரும்?

பின்பு ரஜினிக்குத் தீவிர ரசிகனாகிப் போனது பற்றி சொல்ல வேண்டுமானால் - பாட்ஷா, முத்து, படையப்பா.. சொல்லிக் கொண்டே போகலாம். கடைசியாக சிவாஜி பார்த்ததும் செம சுவாரசியம். ஒவ்வொரு தியேட்டராக சுற்றி விட்டு "வெற்றி" தியேட்டருக்கு காலை எட்டரை மணிக்கு வந்தபோதுதான் பொட்டி வந்தது. அப்படியே உள்ளே போய் விட்டோம்.

800 பேர் உட்காரக் கூடிய தியேட்டர். உள்ளே 1500 பேர் இருந்தோம். யாரும் உட்காரவில்லை. மூன்று மணி நேரமும் நின்று கொண்டே, ஆடியபடியே பார்த்தோம். எனக்கருகில் ஆடிக் கொண்டிருந்தவர் உகாண்டாவைச் சேர்ந்தவராம். படம் வெளியாகும் நேரம் பார்த்து விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தார். எப்பிடி..

சிறு வயதிலிருந்தே.. எப்போதும் இரண்டு நடிகர்களுக்குப் பின்னால் பிரிந்து கிடப்பது என்ற தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியின் காரணமாக.. ரஜினி - கமல் என்ற போட்டியில் நான் ரஜினியின் பின்னால் இருந்தேன். ரசிகர்களுக்கு உதவுபவர், நேர்மையானவர், அவருடைய படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் - இதெல்லாம் சின்ன வயசில் ரஜினி பற்றி எனக்கு சொல்லப்பட்ட விஷயங்கள்.

கமல் - அப்படியே நேர்மார். விக்ரம் படத்தின் "மீண்டும் மீண்டும் வா" என்ற பாட்டைப் பார்த்துவிட்டு "ச்சீ இந்த ஆளு அசிங்கமா நடிக்கிறாரு" என்று என்னுடைய பெண் தோழிகளிடம் நல்லவனாகக் காட்டிக் கொண்டது இப்போது கூட நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் கமல் ரசிகர்களை ஓட்டுவது என்றாலே அல்வா சாப்பிடுவது மாதிரி. அவரும் அதற்குத் தகுந்த மாதிரி அப்போது அட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த ஓடாத படங்களாகவே - குணா, சிங்காரவேலன், மகராசன், கலைஞன் .. நடித்துக் கொண்டிருந்தார் என்பது முக்கியம். கமல் ரசிகன் யாராவது எங்கள் கூட்டத்தில் சிக்கினால் சீன் சிந்தாபாத் தான்.

பாவம்.. எங்கள் வீட்டிலும் அப்படி ஒரு ஜீவன் இருந்தது. அது என் அப்பா. அவர் ஒரு தீவிர எம்,ஜி.யார் ரசிகர் (அ) வெறியர். அவருக்கு கமலைத்தான் பிடிக்கும். நண்பர்களோடு சேர்ந்து கொண்டு அவரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டியிருக்கிறேன்.

இந்த இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன் லக்கி - யுவகிருஷ்ணா எழுதிய சில வார்த்தைகளை சொல்ல வேண்டியிருக்கிறது. "இந்த ரசிகமனோபாவ லாஜிக்கில் இன்னொரு குளறுபடி ஒன்றினையும் நான் அப்போது கண்டுபிடித்திருந்தேன். எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள். சிவாஜியை ரசித்தவர்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள். ஆக்சுவலாக, இது உல்டாவாக இருந்திருக்க வேண்டும்."

பொதுவாகவே இப்படித்தான் இதை யோசிக்கத் தோன்றுகிறது.. ஏன் எம்,ஜி.யார் ரசிகர்களுக்கு ரஜினியைப் பிடிப்பதில்லை? மக்களிடம் செல்வாக்கோடு இருந்தவர் என்றால் எம்.ஜி.யாருக்குப் பிறகு ரஜினிதான். தங்கள் தலைவன் இருந்த இடத்தில் இன்னொருவன் என்பதாலேயே ரஜினியை எம்.ஜி.யார் ரசிகர்கள் வெறுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த டிரென்ட் இன்று கூடத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் நிறைய பேர் அஜித்தின் பின்னால்தான் - விஜயை வெறுப்பது போல..

ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது சில விமர்சனங்கள் உண்டு. குழப்பமானவர், ரசிகர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார், அது இதுவென.. எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் ரஜினி என்றொரு நடிகனின் ரசிகன். எனவே படத்தைப் பார்த்தோமா.. கொண்டாடினோமா என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான். அதைப் போலவே அரசியலுக்கு வா என்றெல்லாம் அவரை அழைக்க மாட்டேன். அவருக்கு அரசியல் சரிவராது என்பது எனது தனிப்பட்டக் கருத்து. "பாட்டாளி மச்சி தோழர்களே".. இன்னும் மறக்க முடியவில்லை.. அவ்வவ்..

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பரொருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவருடைய இரண்டரை வயது மகன் பத்திரிகையில் வந்திருந்த எந்திரன் விழாமபரத்தைக் காண்பித்து.."மாமா.. எந்தி எந்தி.. ரஜினி.." என்று சொல்லியபடியே தலையில் கை வைத்துக் கொண்டான். ஸ்டைல்பண்ணுகிறானாம். ரஜினி என்பது ஒரு மேஜிக். "எந்திரன்" அதை மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கும் என்று நம்புகிறேன். ரஜினி ராக்ஸ்..

(இந்தப் பத்தியை எழுத் தூண்டியது யுவகிருஷ்ணாவின் இந்தப் பதிவுதான் - அவருக்கு என் நன்றி..)

18 comments:

Balakumaran Lenin said...

Ha.. atlast first to comment on a post!!

feel proud to comment on such a scintillating post!!!

RAJINI magic still continues..!!
Whoever may be our current favorite.. it all started with Rajini for sure!!

Its the craze every youth still have.. Rajini still has proud fans crossing the age 50+ years!!

Hope ROBOT will rock inspite of its 15 theatres!!! :)

நையாண்டி நைனா said...

மக்களுக்கு உண்மையிலேயே விழிப்புணர்வு கொடுப்பவர் ரஜினி தான் பாசு...

இந்த புது படத்திலே... எதனை தடவை... எந்திரா... எந்திரா.. எந்திரா... எந்திரான்னு... எழுப்புராறு தெரியுமா...

Beski said...

அப்போ நாளைக்கே விமர்சனம் வந்துடும்.

//கமல் ரசிகன் யாராவது எங்கள் கூட்டத்தில் சிக்கினால் சீன் சிந்தாபாத் தான்.//
இதப் படிச்சதும் அன்னைக்கு சரவணபவன் முன்னாடி மாட்டிக்கிட்ட விஜய் ரசிகர் அத்திரிதான் ஞாபகத்துக்கு வந்தார்.

நையாண்டி நைனா said...

ஹி...ஹி.... எந்திரன் பாட்டு கேட்டுட்டு இருந்த எபக்டு...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

m.g.r சிவாஜி ,ரஜினி கமல் , அஜித் விஜய்ரசிகர்கள் பற்றி சொன்னது 100% சரி

Anbu said...

நாளைக்கு நைட் ஷோ-வுக்கு 18 டிக்கெட் எடுத்து இருக்கேன்..

அன்பேசிவம் said...

நானும் ரஜினியின் தீவிர ரசிகன்தான் (அட இங்கயும் ஒத்துப்போறமா? ஹி ஹி ஹி) ஆனால் எந்திரன் சல்லிசாக கிடைக்கும்வரை பார்க்கப்போவதில்லை... 400, 500 ந்னு பயமுறுத்துகிறார்கள்... அவ்வ்வ்...

நேசமித்ரன் said...

நீயெல்லாம் படிச்சவந்தானா? இன்ஜினியராம் வெளக்கெண்ணை.. இதுல நீ நாலு பசங்களுக்கு பாடம் வேற சொல்லிக் கொடுக்குற.. அப்படி என்னதாண்டா இருக்கு அவன்கிட்ட?"//

ஐ லைக் திஸ் செல்ப் டேமேஜ்

:)))

கட்டுரையின் இறுதி பகுதி இன்னும் பேசப்பட வேண்டிய சிந்தனைப் போக்கு .நன்று கா.பா

குடந்தை அன்புமணி said...

நானும் ரஜினி ரசிகன்தானுங்க... எனது சொந்த ஊரான கும்பகோணத்தில் ரஜினி, கமல் படம் வெளியாகும்போது ஏற்படும் பரபரப்புக்கு வேறு எந்த ஊரிலும் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. அப்படியிருக்கும். ரஜினி ரசிகர்கள் ஓவியர்களாக இருப்பதால் பேனர்களும், கட்டவுட்களும் தூள் பறக்கும். இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. ஒரு புது இடுகைக்கு அடித்தளமிட்ட கா.பா.வுக்கு நன்றி...

கார்த்திகைப் பாண்டியன் said...

@பாலா

நன்றிப்பா.. தலைவர் தலைவர்தான்:-))

//நையாண்டி நைனா said...
மக்களுக்கு உண்மையிலேயே விழிப்புணர்வு கொடுப்பவர் ரஜினி தான் பாசு...இந்த புது படத்திலே... எதனை தடவை... எந்திரா... எந்திரா.. எந்திரா... எந்திரான்னு... எழுப்புராறு தெரியுமா...//

இது ஓவர் குசும்பு தல..

//அதி பிரதாபன் said...
அப்போ நாளைக்கே விமர்சனம் வந்துடும்.இதப் படிச்சதும் அன்னைக்கு சரவணபவன் முன்னாடி மாட்டிக்கிட்ட விஜய் ரசிகர் அத்திரிதான் ஞாபகத்துக்கு வந்தார்.//

ஹா ஹா.. அது அத்திரியின் ஊழ்வினை பிரதாப்..

// புதிய மனிதா said...
m.g.r சிவாஜி ,ரஜினி கமல் , அஜித் விஜய்ரசிகர்கள் பற்றி சொன்னது 100% சரி//

நன்றிங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said...
நாளைக்கு நைட் ஷோ-வுக்கு 18 டிக்கெட் எடுத்து இருக்கேன்..//

குரூப்பா என்சாய்..:-))

//முரளிகுமார் பத்மநாபன் said...
நானும் ரஜினியின் தீவிர ரசிகன்தான் (அட இங்கயும் ஒத்துப்போறமா? ஹி ஹி ஹி) ஆனால் எந்திரன் சல்லிசாக கிடைக்கும்வரை பார்க்கப் போவதில்லை... 400, 500 ந்னு பயமுறுத்துகிறார்கள்... //

மறுபடியும் ஒத்துப்போறோம் முரளி.. சீக்கிரம் பருங்க..

// நேசமித்ரன் said...
ஐ லைக் திஸ் செல்ப் டேமேஜ் :)))
கட்டுரையின் இறுதி பகுதி இன்னும் பேசப்பட வேண்டிய சிந்தனைப் போக்கு .நன்று கா.பா//

இந்த மனநிலையைப் பத்தி நீங்க கூட எழுதலாம் தலைவரே

@அன்புமணி

கலக்குங்க தலைவரே.. சீக்கிரம் எழுதுங்க..

Anonymous said...

அப்போ நாளைக்கு விமர்சனம் ரெடியாயிரும் :)

குமரை நிலாவன் said...

படத்தை பார்த்துட்டு சீக்கிரம் விமர்சனம் போடுங்க

மோகன்ஜி said...

சுவாரஸ்யமான பதிவு.. ஹைதராபாதுல ஞாயிற்றுக்கிழமை எந்திரன் பார்த்துடுவேனே!

கார்த்திகைப் பாண்டியன் said...

//Balaji saravana said...
அப்போ நாளைக்கு விமர்சனம் ரெடியாயிரும் :)//

// குமரை நிலாவன் said...
படத்தை பார்த்துட்டு சீக்கிரம் விமர்சனம் போடுங்க//

படம் இன்னைக்கு சாயங்காலம் பார்க்கிறேன் மக்களே.. ஆனா எல்லாரும் விமர்சனம் எழுதறதால நானும் எழுதணுமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் ...

//மோகன்ஜி said...
சுவாரஸ்யமான பதிவு.. ஹைதராபாதுல ஞாயிற்றுக்கிழமை எந்திரன் பார்த்துடுவேனே!//

படம் சூப்பரா இருக்காம் பாஸ்.. என்ஜாய்

Karthik said...

ஜூப்பரு. ப்ளாஷ்பேக்லாம் செம கலர்ஃபுல்லா இருக்கும் போலிருக்கே. :)

மதுரை சரவணன் said...

rajini no words to compare the magic. thanks for sharing.

செந்தமிழ் செல்வன் said...

www.ramesh-coimbatore.blogspot.com