November 26, 2010

நந்தலாலா - திரைப்பார்வை

இதுதான் சினிமா. சினிமா என்பது மொழியானால் இதுவே சினிமா. சினிமாவுக்கு ஒரு இலக்கணம் இருப்பது உண்மையானால் தமிழ்ச் சினிமாவில் இருந்து இதனை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் சினிமா ரசிகனுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்..! உலகச் சினிமாவில் தமிழ் மொழியின் கீழ் இடம் பிடித்திருக்கும் பெருமிதமானத் திரைப்படம் இது..! இயக்கம் அற்புதம் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமெனில் படத்தின் அத்தனை ஷாட்டுகளையும் சொல்லியாக வேண்டும்.. அப்படித்தான் இருக்கிறது..


மனநல மருத்துவமனை கேரக்டர்கள், உடல் ஊனமுற்றவர், ஸ்னிக்தா, குண்டர்கள், தோப்புக்குச் சொந்தக்காரர், மாட்டு வண்டி ஓட்டுபவர், போலீஸ் இன்ஸ்பெக்டர்.. அம்மாவைத் தேடிப் போகும்போது முதலில் கதவைத் திறந்து முகத்தில் அடித்தாற்போல் இல்லை என்று சொல்லி கதவை மூடும் பெண், சிறுவனின் அம்மா, மிஷ்கினின் அண்ணன், டூவிலர் மெக்கானிக் கடை வைத்திருக்கும் அந்த குள்ளமான தம்பதிகள்.. பீர் பாட்டில் இளைஞர்கள்.. ஆங்கிலத்தில் சங்கடத்தைப் பகிர்ந்து கொள்ளும் புதுமணத் தம்பதிகள்.. என்று படத்தில் இருக்கும் அத்தனை பேருமே நடித்திருக்கிறார்கள் என்பது மிகச் சிறப்பான விஷயம்....


இப்படத்திற்கு மணி மகுடமென்றால் அது இளையராஜாவை தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது. மொட்டை கலக்கியிருக்கிறார். ஆரம்ப காட்சியில் சலசலக்கும் நீரின் ஓசையோடு ஆரம்பிக்கும் இவரது ராஜ்ஜியம் படத்தின் கடைசி காட்சி வரை அதுவும் ரோலிங் டைட்டில் முடியும் வரை கலங்கிய கண்களோடு தியேட்டரில் நிற்கும் ரசிகர்களே அதற்கு சாட்சி. பின்னணியிசை என்றால் என்ன என்பதை இன்றளவில் உயர் நிலையில் இருக்கும் இசையமைப்பாளர்களும் சரி, புதியவர்களுக்கும் சரி பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாய் எங்கு இசை ஒலிக்கக்கூடாது என்பது சரியாக புரிந்து மெளனத்தையே இசையாய் கொண்டு வந்திருக்கும் ராஜா கடைசி இருபது நிமிடங்கள் இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார்.



என்னால் அந்த கடைசி நிமிடங்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை. படத்தின் காட்சி ஏற்படுத்திய பாதிப்பை விட அதை இசையால் சந்தோஷமோ, துக்கமோ, எல்லா உணர்வுகளையும் மெல்ல மெல்ல ஸ்லோ பாய்சன் போல நம்முள் ஏற்றி.. போதையாய், உருக்கமாய், உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார். முக்கியமாய் அகியின் அம்மா மிஷ்கினிடம் பேசும் வசனமேயில்லாத சிங்கிள் ஷாட் டாப் ஆங்கில் ஷாட்டில் ஒரு கதையை தன் இசையாலேயே சொல்லி கலங்கடித்திருக்கும் மொட்டை என் மொட்டை..


நாம் கடந்து செல்ல வேண்டுய இடம் அங்கேயே தான் இருக்கிறது . நாம் கடப்பதற்காக அது உருவாக்கப்படுவதில்லை. கடந்து போன பின்னும் அது அங்கேயே தான் இருக்க போகிறது. நந்தலாலாவில் பெரும்பாலான காட்சியமைப்புகள் அப்படித்தான் இருப்பதாக எனக்குத் தோன்றியது. வெற்று ஃப்ரேம்முதலில் எஸ்டாபிளிஷ் செய்யப்படுகிறது. அதற்குள் பாத்திரங்கள் வருகிறார்கள். நிகழ்வு முடிந்தவுடன் அடுத்த காட்சியின் தளத்துக்கு சென்று விடுகிறார்கள். நிகழ்வு நடந்த களம் மீண்டும் நமக்கு வெறுமையாய் காட்டப்படுகிறது. காட்சியின் ஆரம்பத்திலும் , முடிவிலும் ஒரு Freeze இருந்து கொண்டேயிருக்கிறது . பார்வையாளனை காட்சியுடன் ஒன்ற வைக்கும் இந்த உத்தி தமிழுக்கு புதிதும் , மிக அவசியமும் கூட….. அஞ்சாதேயில் கூட இந்த யுக்தியை பயன்படுத்தியிருந்தார் மிஷ்கின் . பிரமாண்டம் என்பது கோடிகளை கொட்டுவதால் மட்டுமே வராது .


மகேஷ் முத்துசாமியின் கோணங்களும் , அசைவுகளும் முக்கியமாக ஷோல்டர் ஷாட்கள் பிரமிப்பை அல்ல. பாதிப்பை ஏற்படுத்துகிறது . அகன்ற மற்றும் உயர்நிலை கோணங்கள் மிஷ்கினின் காட்சியமைப்புக்கு பெரிய பலம். குறிப்பாக ஒரு பத்துக்கு பத்தடி அறையில் ஒரு டாப் ஆங்கிள் ஷாட் . வசனம் கிடையாது. பத்து பக்கங்களில் சொல்ல வேண்டியதை நமக்கு சொல்கிறது. சிறுவனின் அம்மாவை மிஷ்கின் சந்திக்கும் காட்சி அது . வேறு விவரணைகள் வேண்டாம். பார்த்து உணருங்கள். பார்வையாளனை தன் தோளில் தூக்கி கொண்டு காட்சிகளுக்குள் கொண்டு போகிறார் மகேஷ். ஹேட்ஸ் ஆஃப் டு யூ சார்.


நான் வேற என்னய்யா பண்றது? சொல்ல நினச்ச எல்லாத்தையும் இந்த மூணு பாவிகளும் அட்சரம் பிசகாம சொல்லியாச்சு. படத்துக்கு ஜீவன் சேர்ப்பது மூன்று மனிதர்கள். இளையராஜா, மகேஷ் முத்துசாமி, மிஷ்கின். படத்துல ரெண்டு மூணு இடத்துல என்னையும் மீறி அழுதுட்டேன். குறிப்பா ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் பாட்டு. படத்துல எனக்கு பிடிச்ச மூணு முக்கியமான காட்சிகள்:

--> பெராக்கு பார்த்துக்கிட்டுப் போய் சைக்கிள்ல கீழ விழற பொண்ணு. மிஷ்கின் அவ பாவாடையை லேசா உசத்த அந்தப்பொண்ணு அறையுறதும், அதை அவர் பொருட்படுத்தாம வலிக்குதான்னு கேட்டு எச்சி தொட்டு அப்பிட்டு இப்பக் குளுருதான்னு கேக்குற சீன்.. கிளாஸ். அதே பொண்ணு டிராக்டர் எடுத்துட்டு வந்து இவங்களைக் கொண்டு வந்து விட்டுட்டு, மிஷ்கினோட தோளுல சாஞ்சு அழுதுட்டு திரும்பிப்பார்க்காம போறது.. கவிதை.

--> ஹார்னைத் திருடி விட்டார் என்று மிஷ்கினை நாயடி அடிக்கும் லாரி டிரைவர், அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிந்து அன்பு செல்லுத்துவதும் தொடரும் பாடலும்

--> அன்பு செலுத்தும் சிறுவனும் தன்னை மெண்டல் என்று சொல்லிவிட்டானே என மிஷ்கின் அழுது புலம்பும் இறுதிக்காட்சி

தன்னுடைய சோகத்தை ஸ்னிக்தா பகிர்ந்து கொள்ளும் காட்சியும், இளநி வெட்டும் முதியவர் காட்சிகளும் அருமை. கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லாருமே நல்லவர்கள் என்பது அழகு. மனநிலை சரியில்லாத ஒருத்தரின் செயல்களைக் கிண்டல் செய்து விட்டார்கள் என ஒரு சிலர் வசைபாடக் கூடும். ஆனால் படம் சீராகப் பயணிக்க அந்த காட்சிகள்தான் இறுக்கத்தை தளர்த்துகின்றன.

கடைசியா மிஷ்கினுக்கு.. 1500 பக்கமெழுதி அதுல 150 பக்கம் எடுத்துப் பண்ணினதுதான் நந்தலாலான்னு எல்லாம் பினாத்திக்கிட்டு இருக்குறதா சொன்னாங்க. பாபா படத்துல ஒரு வசனம் வரும். தெரிந்தவன் பேசமாட்டான். தெரியாதவன் பேசாமல் இருக்க மாட்டான்.. அப்படின்னு. உங்க படம் உங்களுக்காகப் பேசட்டும். நீங்க பேசாதீங்க. "பூ"ன்னு ஒரு படம் வந்தது. அதுல டைட்டில் கார்டுல "தி ரோடு ஹோம்" படத்துக்கு நன்றின்னு ஸ்லைடு போட்டிருப்பாரு சசி. அந்த மனசு உங்களுக்கு ஏனில்லை மிஷ்கின். இந்தப் படத்துல "கிகுஜிரோ" பாதிப்பு இல்லைன்னு உங்களால மனசத் தொட்டு சொல்ல முடியுமா? நந்தலாலா நல்ல படம்தான். ஆனா நேர்மையான படம் இல்லை. இதை நீங்க உணர்ந்து அமைதியா இருந்தா போதும்.

மத்தபடி நந்தலாலா - தாலாட்டு. கண்டிப்பா தமிழ் சினிமால இதுக்குன்னு ஒரு பேர் இருக்கும்.


15 comments:

அத்திரி said...

raittu

ஆனந்தி.. said...

ம்ம்...trailer இல் ராஜா சார் இன் அந்த தீம் மியூசிக் கேட்டே கொஞ்ச நேரம் ஒரு மாதிரி இருந்தது...கடைசியில் சொன்ன வார்த்தைகள் கூட பன்ச்..anyway ..அத்திபூத்தார்போலே வரும் இந்த மாதிரி படங்களை வரவேற்போம்...))))

Unknown said...

நல்லா இருக்கு! :))
படம் பார்க்க காத்திருக்கிறேன்!

செ.சரவணக்குமார் said...

ஆஹா..

Cable சங்கர் said...

:))

மணிஜி said...

இந்த விஷயத்தை நான் மிஷ்கினிடம் பர்சனலாக சொல்ல நினைத்திருந்தேன்...நன்றி கா.பா

தருமி said...

உங்க கூட படம் பார்க்க முடியாமல் போச்சே... சீக்கிரம் பார்த்திர்ரேன்.

பாலா said...

உடனே போய் படத்த பார்த்திடுறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

@ அத்திரி

வாங்கண்ணே.. சீக்கிரம் படத்தப் பாருங்க..

//ஆனந்தி.. said...
ம்ம்...trailer இல் ராஜா சார் இன் அந்த தீம் மியூசிக் கேட்டே கொஞ்ச நேரம் ஒரு மாதிரி இருந்தது... க டைசியில் சொன்ன வார்த்தைகள் கூட பன்ச்..anyway .. அத்திபூத்தார்போலே வரும் இந்த மாதிரி படங்களை வரவேற்போம்...))))//

நிச்சயம் வரவேற்க வேண்டிய படம்.. ராஜாவின் இசை ராஜாங்கம்..

//ஜீ... said...
நல்லா இருக்கு! :)) படம் பார்க்க காத்திருக்கிறேன்!//

பாருங்க நண்பா..

//செ.சரவணக்குமார் said...
ஆஹா..//

:-)))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//Cable Sankar said...
:))//

//மணிஜீ...... said...
இந்த விஷயத்தை நான் மிஷ்கினிடம் பர்சனலாக சொல்ல நினைத்திருந்தேன்... நன்றி கா.பா//

ரெண்டு பேருமே ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க.. அதான் எடுத்துப் போட்டேன் மக்களே.. மணிஜி.. கண்டிப்பா மிஷ்கின்ட்ட சொல்லுங்கண்ணே..

//தருமி said...
உங்க கூட படம் பார்க்க முடியாமல் போச்சே... சீக்கிரம் பார்த்திர்ரேன்.//

அதனால என்னய்யா? இன்னொரு தரம் உங்ககூட பார்த்தாப் போச்சு..:-))

/BALA KRISHNAN said...
உடனே போய் படத்த பார்த்திடுறேன்//

பாரு பாலா.. ரொம்ப நல்லாயிருக்கு

மேவி... said...

ரைட்டு ...

ஆனா தனது பழைய படங்களிருந்தே புதிய படங்களுக்கு கதை எடுக்கும் சில ஹீரோக்கள் / இயக்குனர்கள் எல்லாம் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா ????

Anonymous said...

ok

Balakumar Vijayaraman said...

எல்லாரும் சேர்ந்து படத்தைப் பார்க்க வச்சிருவீங்கன்னு தான் தோனுது.

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
ரைட்டு ...ஆனா தனது பழைய படங்களிருந்தே புதிய படங்களுக்கு கதை எடுக்கும் சில ஹீரோக்கள் / இயக்குனர்கள் எல்லாம் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா ????//

நீங்க நேரடியா பேரை சொல்லியே கேட்கலாம் மேவி..:-))

ஆனந்த் & பாலகுமார்

படம் பார்க்காம விடமாட்டோம்.. ஒழுங்கா பாருங்க மக்களே.. இது ஒரு அனுபவம்

subra said...

பார்க்காவிட்டால் பெரிய வருத்தமாக போய்விடும்
நல்ல படங்களுக்கு நாம் கண்டிப்பாக ஆதரவு
கொடுக்க வேண்டும் .அதில் இது நல்ல தரமான
படம் .