December 15, 2010

உக்கார்ந்து யோசிச்சது (15-12-10)

"ஆகா.. அது நீங்கதானா பாஸ்?"

"ரொம்ப நாளாவே உங்கள பாக்கணும்னு ஆசைண்ணே.."

"உங்களைப் பத்தி இப்படித்தான் இருப்பீங்கன்னு மனசுக்குள்ள ஒரு ஸ்கெட்ச் போட்டு வச்சிருந்தேன்.. அப்படியே.."

"சந்தோஷமா இருக்கு தல.. என்ன பேசுறதுன்னு தெரியல.."

எழுத்துகளாக மட்டுமே அறிந்த மனிதர்களை நேரில் சந்தித்து, உரிமையோடு தோளில் கைபோட்டு, பாஸு நண்பா அண்ணே என்றெல்லாம் கொஞ்சிக்குலாவி, மனம் திறந்து உரையாடி மகிழும் தருணங்கள் அற்புதமானவை. சங்கமம் 2010 மூலம் இந்த வருடமும் அப்படியானதொரு வாய்ப்பை ஈரோடு நண்பர்கள் நமக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.



நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு


நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்

* சிறுகதைகளை உருவாக்குவோம்

* புகைப்படங்களில் நேர்த்தி

* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்

* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்

* பதிவர்கள் கலந்துரையாடல்


நாம் அனைவரும் கலந்து கொண்டு கொண்டாட வேண்டிய திருவிழா இது. எனவே பதிவுலக வாசக நண்பர்கள் அனைவரும் சந்தோஷமாக கலந்து கொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

***************

என்னோடு கல்லூரியில் உடன் பணிபுரியும் ஆசிரியை அவர். சமீபத்தில் விடுமுறைக்கு தன்னுடைய மாமா வீட்டுக்குப் போயிருக்கிறார். சங்கரன்கோவில் அருகே இருக்கும் ஏதோ ஒரு சிற்றூர். முழுதும் நகரிலே வளர்ந்த இவர் அங்கே போவது இதுதான் முதல் முறை.

ஒருநாள் வீட்டுக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்மணியை "ஏங்க கொஞ்சம் இங்க வாங்க" என்று கூப்பிட்டு இருக்கிறார். அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இவரது மாமா இவரை ஓங்கி அடித்து விட்டாராம். இவர் என்ன ஏதென்று புரியாமல் திகைத்து இருக்கிறார்.

"அந்த ***** எல்லாம் மரியாதை கொடுத்துப் பேசி ஏத்தி விடுறதுக்கா? ஒழுங்கா நீ வா போ அவளே இவளேன்னுதான் பேசணும்"

இவர் அதிர்ச்சியாகி அந்த ஊரைப் பற்றி விசாரித்து இருக்கிறார். சுத்துப்பட்டில் இருக்கும் பதினெட்டு ஊர்களிலும் இதுதான் வழக்கமாம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனிக்குளம், இரட்டை கிளாஸ் முறை, பஸ்ஸில் ஏறக் கூடாதெனக் கட்டுப்பாடு, செருப்பு அணியக்கூடாது.. நாம் இருப்பது 2010 தானா என்று ரொம்ப சந்தேகமாகப் போய் விட்டது என வருத்தத்தோடும் அதிர்ச்சியும் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அம்பேத்கர் காந்தியிடம் சொல்வதாக இருந்த வசனம்தான் ஞாபகம் வந்தது. "இன்னும் அம்பது வருஷமானாலும் இந்த மக்களுக்கு விடிவு பிறக்கும்னு எனக்குத் தோணல.." அந்த மனிதரின் தீர்க்கதரிசனம் இன்றும் உண்மையாக இருப்பது கொடுமையான விஷயம். எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

***************

நண்பனொருவன் பல வருடங்களாக மார்க்கெடிங் லைனில் வேலை பார்த்து வருபவன். அவனோடு கூட வேலை பார்க்கும் ஒருவர் புதியவர் ஒருவரை அறிமுகப்படுத்தி பாவப்பட்ட பையன் எனவும் ஏதேனும் வேலை கிடைத்தால் கொஞ்சம் உதவியாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். நம்ம பயபுள்ளைக்கு ரொம்பவே இளகிய மனசு. ரெகமன்ட் பண்ணித் தன்னுடைய கம்பெனியிலேயே வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறான். அந்தப் பரதேசிக்கு ஏழுமலை வெங்கடேசன் மீது ரொம்ப பக்தி போல. மூன்று மாசம் அமைதியாக இருந்து விட்டு திடீரென ஒரு நாள் கலெக்ஷன் பணம் முப்பதாயிரத்தை எடுத்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா என ஆள் எஸ்கேப்.

எங்கு தேடியும் ஆள் கிடைக்கவில்லை. காற்றோடு கரைந்து போய் விட்டான். ஆளை அறிமுகப்படுத்தியன் என்று எனது நண்பனை கம்பெனியில் பிடித்துக் கொண்டார்கள். அப்படி இப்படி என்று பணம் புரட்டி பிரச்சினை இல்லாமல் தீர்த்து விட்டோம். "ஏண்டா, உன்கூட வேலை பாக்குற ஆளு தான் அறிமுகம் பண்ணி வைக்காம உன்ன விட்டு பண்ண சொல்றானேன்னு உனக்கு சந்தேகமே வரலையா"ன்னு கேட்டா வெறிக்க வெறிக்க விட்டத்தைப் பார்த்துட்டு ஙேன்னு நிக்கிறான். அவன என்ன பண்ண? இப்படிப்பட்ட சம்பவகள் நடக்கும்போதுதான் நாம யாருக்கும் உதவி பண்றதே தப்புன்னு தோண ஆரம்பிக்குது.. ஹ்ம்ம்..

***************

இமையத்தின் "கோவேறு கழுதைகள்" - க்ரியா வெளியீடு. வண்ணான்குடியின் பாடுகளை இத்தனை அழுத்தமாக வேறு யாரும் பதிவு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஊருக்குள் எல்லாமே நாம்தான் என அவர்களையே நம்பி வாழும் ஆரோக்கியத்தின் குடும்பம் எப்படி நகர மயமாக்கலின் பொருட்டும், கால மாற்றத்தின் காரணமாகவும் நிர்க்கதியாய் நிற்க நேரிடுகிறது என்பதை பெரும்பாரமாக நமக்குள் இறக்கி வைக்கிறார் இமையம். சாதி சார்ந்த ஒடுக்குமுறைகளும் அதை அம்மனிதர்கள் எப்படித் தங்களின் வாழ்க்கை முறையாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் துன்பியல் சித்திரங்களாக நம் கண்முன்னே விரிகின்றன. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

***************

இது சண்டைப்பட பிரியர்களுக்காக... 70 - 80 களை சீன குங்க்பூ படங்களின் பொற்காலம் என்று சொல்லலாம். நம்பவே முடியாத பயிற்சி முறைகள், பறந்து பறந்து போடும் சண்டைகள் என களை கட்டும். சமீபத்தில் அது போல மூன்று படங்களைப் பார்க்க நேர்ந்தது.

@ kid with the golden arms

@
invincible armour

@
the seven grandmasters

கிளாசிக்ஸ் என்று சொல்லக்கூடிய அருமையான படங்கள். டோரேண்டுகளில் கிடைக்கின்றன. அவசியம் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

***************

என்னுடைய பிளேலிஸ்டில் இருக்கும் இந்த வார டாப் 5 பாடல்கள்..

* அய்யய்யோ - ஆடுகளம்

* லோலிடா -
எங்கேயும் காதல்

* டைட்டில் பாட்டு - மன்மதன் அம்பு


* ஏதோ ஒரு ஏக்கமோ - தா


* கையப் புடி - மைனா


***************

கடைசியாக..

இந்த வருடமும் கோல்டன் குளோப் விருதுக்கு போட்டியிடுபவர்களில் நம் பிரியத்துக்குரிய ஏ.ஆர்.ரகுமானும் இருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துகள் தல..


இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))))

19 comments:

sathishsangkavi.blogspot.com said...

ஈரோடு சங்கமத்துக்கு வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்...

sathishsangkavi.blogspot.com said...

வடை எனக்குத்தானா...

sakthi said...

அப்போ கா பா வை ஈரோடு வந்தா பார்க்கலாம் :)

பவள சங்கரி said...

நல்லா யோசிச்சிருக்கீங்க.....வாழ்த்துக்கள். கட்டாயமாக வாங்க.நன்றிங்க.

மறத்தமிழன் said...

பாண்டியன்,

நல்லாத்தான் யோசிச்சிருக்கிங்க.

ஈரோடு சங்கமத்திற்கு வாழ்த்துகள்.....

தீண்டாமை கொடுமை இன்னும் சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள ஊரில் இருக்கிறது என பொத்தாம் பொதுவாக எழுதியிருக்கிங்க. பெயரையும் எழுதினால் தான் சமூக அமைப்புகளோ,சமூக ஆர்வலர்களோ தீர்க்க முற்படுவார்கள்...இல்லையெனில் சன்கரன் கொவில் பக்கத்துல எதோ ஒரு ஊரில் தாழ்த்தப்பட்ட் மக்களை ஏதோ ஒரு சமூக மக்கள் கொடுமை படுத்துகிறார்கள் என்ற அளவிலே நின்றுவிடும்.பெயரையும் தெரியபடுத்தவும்.முடிந்தவரை தீர்க்கப்பாடுபடுவோம்.

அன்புடன்,
மறத்தமிழன்.

சி.பி.செந்தில்குமார் said...

குட் போஸ்ட்

Anonymous said...

ஈரோடு சங்கமத்திற்கு வாழ்த்துகள்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றிங்க கா.பா

நையாண்டி நைனா said...

ம. வே. காளை பாண்டியன் அவர்களே... நீங்கள் பார்த்த பாப்பா போட்ட தாப்பா படத்தை பற்றி ஒன்னும் யோசிக்கலையே.... அதை பற்றி அடுத்த வாரம் யோசித்து சொல்லுங்க....

என்னாலே ஒரு பதிவரையே சந்தித்து நீண்ட நேரம் உரையாட முடிய வில்லை.. பல பதிவர்களா!!!! ஆவ்வ்வ்வவ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

பதிவுலக சுறா அண்ணன் மா. வே. காளை பாண்டியன் வாழ்க.

நையாண்டி நைனா said...

பதிவுலக வேட்டைக்காரன் அண்ணன் மா. வே. காளை பாண்டியன் வாழ்க.

நையாண்டி நைனா said...

பதிவுலக அழகிய தமிழ் மகன் அண்ணன் மா. வே. காளை பாண்டியன் வாழ்க.

ஈரோடு கதிர் said...

கோவேறு கழுதைகள் - படிக்கனும்

சங்கமம் - நன்றி கார்த்தி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//வண்ணான்குடியின் பாடுகளை//
//நகர மயமாக்கலின்//
//துன்பியல் சித்திரங்களாக //
எலக்கியத் திமிங்கிலம் கா.பா. வாழ்க.

மேவி... said...

பொருளாதார போராட்டத்தில் எங்க காபா இலக்கியத்தை வளர்க்க நேரமிருக்கிறது ???? ஏதோ நீங்க இந்த மாதிரி போய் எல்லோரையும் பார்த்துட்டு வந்து எழுதுங்க ......நான் வழக்கம் போல் படித்துக் கொள்கிறேன்

மேவி... said...

"உக்கார்ந்து யோசிச்சது (15-12-10)"

இன்னைக்கு மட்டும் தான் யோசிப்பீங்களா ??? other days no thing ah ?

செ.சரவணக்குமார் said...

கோவேறு கழுதைகள் வாசித்திருக்கிறேன்.

ஈரோடு சங்கமம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்.

சங்கரன்கோவில் அருகிலுள்ள ஊர்களில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைகளை நினைத்தால் வேதனையாகவும், அவமானமாகவும் உள்ளது. எழுத்தாளர் திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் இந்த அவலங்களை தனது படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்துவருகிறார். உங்களின் சக ஆசிரியைக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை வாசிக்கையில் எனக்கு மேலாண்மையின் 'கடிதம்' கதை ஞாபகம் வந்தது.

தாராபுரத்தான் said...

படித்துத்திட்டேன்ங்க..நானும் ஈரோடுக்கு வருவேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

என் இனமா நீங்க !!! நானும் மிகப்பெரிய குங்பூ ரசிகன்... நீங்க சொல்லி இருக்கிற படமெல்லாம் பார்த்து இருக்கேன்... இன்னமும் நிறைய இருக்கு .... Shoalin Invinsible, Five deadly Venoms,Masked Avengers, Doney yen series எல்லாம் பார்த்து இருக்கேன்... :)