அன்பின் பதிவுலக நண்பர்களே.. இது உங்கள் அபிமான "பதிவர்கள் உங்கள் சாய்ஸ்" நிகழ்ச்சி. நான் உங்க பிரியத்துக்குரிய கப்சி ரமா. போன தடவை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏகோபித்த ஆதரவைக் கொடுத்து வெற்றிபெற செய்த உங்க அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்க கொடுத்த தைரியத்துல நம்ம பதிவர்களை கலாய்க்குற இந்த நிகழ்ச்சி தொடருது. வாங்க.. இன்னைக்கு பிரியாணி ஆகப்போற ஆடுங்க யார் யாருன்னு பார்ப்போம்.
மொதல்ல நாம பேசப்போற பதிவர் பதிவுலகின் டெர்ரர் மனிதர். ஜெயமோகனையே அலற விட்டவர். அவர்தான் நம்ம ”ஆல் இன் ஆல் அழகுராஜா” ராம்ஜி யாஹூ.
டிரிங் டிரிங்..
ரமா: வணக்கம் ராம்ஜி சார். என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
ராம்ஜி: வணக்கம். உலக இலக்கியத்துக்கும் உள்ளூர் சிட்டுக்குருவி லேகியத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்னன்னு விளக்க சொல்லி மச்சி சாருக்கு மெயில் பண்ணிக்கிட்டு இருந்தேன். நடுவுல நீங்க போன் பண்ணிட்டீங்க.
ரமா: பிரதியை எழுதி முடித்த பின் எழுத்தாளன் இறந்து போறான்னு இலக்கியவாதிகள் சொல்றாங்களே.. அது பத்தி என்ன நினைக்கிறீங்க?
ராம்ஜி: மரணம் எல்லாருக்கும் பொதுவானது. நம்ம சிலுக்கு கூட தூக்கு போட்டு செத்துப் போனாங்க. அதைப் பத்தி இவங்க யாரும் ஏன் பேச மாட்டேன்னு சொல்றாங்க?
ரமா: எப்படி சார் உங்களால மட்டும் இத்தனை விசயங்ளைப் பத்தி தெரிஞ்சு வச்சுக்க முடியுது?
ராம்ஜி: எல்லாம் நாம பாக்குற பார்வை தாங்க. நந்தலாலாவோ நாயர் கடை டீயோ.. நம்ம அறிவு தாகத்துக்கு ரெண்டு சொட்டு லிம்கா கிடைக்குதான்னு பார்க்கணும். இதைத்தானே இன்னைக்கு வைரமுத்துவும் அன்னைக்கே பூக்கோவெஸ்கியும் சொல்லிட்டுப் போயிருக்காங்க..
ரமா: ஆகா ஆகா.. புல்லரிக்குதுங்க. அப்புறம் ஒரு சந்தேகம். உங்க கணினியோட திரையில மட்டும் இருபது சானல் வரதாகவும், அதுல உலகின் அத்தனை செய்திகளும் வரதா பதிவுலகுல பேசிக்கிறாங்களே?
ராம்ஜி: எல்லாம் புரளிங்க. வயித்தெரிச்சல். உண்மையில வெறும் பதினாறு சானல் தாங்க வருது..:-(
ரமா: அடங்கப்பா.. முடியலடா சாமி.
ராம்ஜி: சாமிங்கிறது விக்ரம் நடிச்ச படம். அதுல திரிஷா ஒரு பாட்டுக்கு போட்டுக்கிட்டு வர்ற டிரஸ் கூட 1953இல் வெளிவந்த இசபெல்லா கோஸ்டாங்கிற கொலம்பியா படத்துல ஒரு அம்மணச் சாமியார் போட்டிருந்த டிரஸ்ஸோட காப்பிங்க.
ரமா: கிழிஞ்சது போங்க.. அய்யா இதுக்கு மேல எனக்குத் தாங்காது. உங்களுக்கான பாட்டு வருது கேளுங்க..
எவண்டா நம் முன்னே வந்து எதிர்ப்பவன் இங்கே.. தலை எகிறிப்போகும் அங்கே..
பேஸ்தடிச்சுப் போயிருக்கும் நேயர்கள் எல்லாரும் மறுபடியும் ஆட்டைய கவனிங்க. அடுத்து நாம பாக்கப் போறது ஒரு பிரபல பெண் பதிவர். பதிவர்னு சொல்றதை விட பிரபல பஸ்ஸர்னு சொல்லலாம்.
டிரிங் டிரிங்..
ரமா: வணக்கம் மயில் விஜி. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
விஜி: வணக்கங்.. கதைப்போட்டிக்கு நான் எழுதுன கதைய படிச்சதுக்கு அப்புறமா பரிசல்காரன் பதிவுல எழுதுறதையே நிப்பாட்டிட்டாருங்க.. அதனால.. முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்கிற மாதிரி.. மறுபடியும் அவருக்காக ஒரு கதை எழுதிக்கிட்டு இருக்கேங்க. படிச்சா அவருக்கு தெளிஞ்சுருங்க.
ரமா: ஐய்யய்யோ.. இன்னொரு கதையா? பரிசல் செத்தார். அப்புறம் விஜி.. பதிவுலகம் எப்படி இருக்கு? என்ன விசேஷம்?
விஜி: காபா ப்ரித்திக்கு க்யாரண்டி இருக்கான்னு கேட்டுக்கிட்டு இருக்கார். ஆதவன் அலமேலுவா இல்ல சேட்டனா இல்ல ஆதம்பாக்கம் அன்னலட்சுமியா இல்ல புலிக்குட்டியான்னு அலைபாயுறார். அப்புறம்..
ரமா: ஆத்தாடி. போதும் சாமி. உங்களப் பத்தி சொல்ல ஏதுமில்லையா?
விஜி: ஏன் இல்ல? இதோ சொல்றேன். நான் ஒரு அப்பாவி.
(அடிப்பாவி என யாரோ பின்னாடி இருந்து புலம்பும் சத்தமும் டொமீல் என ஏதோ கட்டையால் சாத்தும் சத்தமும் கேட்கிறது..)
விஜி: அப்புறம் ரமா வேற என்ன கேக்கணும்?
ரமா: ஹி ஹி ஹி. வேற ஒண்ணுமே இல்லைங்க. இப்போ அடி வாங்குன ஜீவனுக்காக ஒரு பாட்டு வந்துக்கிட்டே இருக்குங்கோவ்..
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு.. இதில் நீயென்ன.. ஞானப்பெண்ணே..
அடுத்து நாம பாக்கப்போறது ஒரு மூத்த பதிவர். மதுரை தந்த தங்கம், தன்மானச் சிங்கம், அன்புக்கும் பாசத்துக்கும் உரிய சீனா அய்யா அவர்கள்.
டிரிங் டிரிங்..
ரமா: அய்யா.. வணக்கம்.
சீனா: வணக்கம்.. சொல்லுங்கோ.
ரமா: எங்க நிகழ்ச்சி பத்தி என்ன நினைக்கிறீங்க?
சீனா: அருமை - பதிவர்கள் உரையாடல் - சகட்டு மேனிக்கு கலாய்த்தல் - உலகத்தரமான கேள்விகள் - அற்புதமான தொகுப்பாளினி - வாழ்த்துகள்.
ரமா: (ஆகா.. பின்னூட்டம் போடுற மாதிரியே பேசறாரே..)
சீனா: ரமா.. கேக்க மறந்துட்டேன்.. அப்புறம் எப்போ வலைச்சரம் எழுதுறீங்க?
ரமா: அய்யா.. நான் பதிவர் இல்லைங்க..
சீனா: அட ஆமாம்ல.. எல்லார்கிட்டயும் இதைக் கேட்டு பழகிப்போச்சு..
ரமா: அய்யா சமீபமாத்தான் உங்களுக்கு மணிவிழா நடந்ததா கேள்விப்பட்டோம். உங்களுக்கும் செல்விஷங்கர் அம்மாவுக்கும் இந்த நேரத்துல வாழ்த்து சொல்றதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுக்கான பாட்டு வந்துக்கிட்டே இருக்கு.. கேட்டு என்ஜாய் பண்ணுங்க..
நல்லதொரு குடும்பம்.. பல்கலைக்கழகம்..
அடுத்ததா நாம பாக்கப் போரது ஒரு சேட்டைக்காரப் பதிவர். மொக்கை போடுறதுல சூரர். வாங்க அவர் யாருன்னு பார்க்கலாம்.
டிரிங் டிரிங்..
ரமா: வணக்கம் மேவி. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
டம்பி மேவி: ரொம்ப கஷ்டமான வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். அதாவது.. சும்மா இருக்கேன்.
ரமா: சார்...
டம்பி மேவி: சாருவா? எனக்கு அவரைத் தெரியாதே.. பீருன்னு ஒருத்தர் பழவந்தாங்கல்ல பலசரக்கு கடை வச்சிருக்கார். அவரை மட்டும்தான் தெரியும்.
ரமா: சுத்தம். நீங்க ஒரு பெரிய வாசகர். உலக இலக்கியத்த எல்லாம் கரச்சுக் குடிச்சவர்னு சொன்னாங்களே.. தஸ்தாவெஸ்கிய படிச்சிருக்கீங்களா?
டம்பி மேவி: என்னது.. தாத்தா கைல விஸ்கியா?
ரமா: அவ்வ்வ்வ்வ்.. ரமா.. இது உனக்குத் தேவையா?
டம்பி மேவி: இங்க எல்லாமே எல்லாருக்கும் தேவைதான் பாஸ். இப்படித்தான் ஒரு இங்க்மெர் பெர்க்மென் படத்துல...
ரமா: படத்துல?
டம்பி மேவி: யாருக்குத் தெரியும்? சும்மா வாயில வந்தத சொன்னேன்.
ரமா: அய்யோ.. எனக்குத் தலையே வெடிச்சிடும் போலயிருக்கு..
டம்பி மேவி: நான் வேணும்னா ஏதாவது பாட்டு பாடட்டுமா? பாடியே தலைவலியை போக்க முடியும்னு அபிதான சிந்தாமணில சொல்லியிருக்காங்க.. ஏழாம் நூற்றாண்டுல சமண முனிவர்கள் கூட..
ரமா: யோவ்.. இதுக்கு மேல ஏதாவது பேசுன உந்தலையில கல்லைத் தூக்கிப் போட்டுருவேன். பாட்டு போடுறேன்.. கேட்டுட்டு ஓடிப் போயிரு..
டம்பி மேவி: ஹே ஹே ஹே.. நீ என்னம்மா எனக்கு பாட்டு போடுறது? இப்போ நான் உனக்கு பாட்டு போடுறேன் பாரு..
சுட்டி சுட்டி உன் வாலக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளுடி..
ரமா: (ஆகா.. இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்ல போல இருக்கே.. நமக்கே பாட்டு போடுறாய்ங்களே.. எஸ்ஸாகிற வேண்டியதுதான்..)
ஆகவே நேயர்களே.. இந்த பதிவர்கள் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி இத்தோடு முடிகிறது. மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் வேறு சில பிரபல பதிவர்களோடு உங்களை சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து வடைபெறுவது.. உங்கள் அன்புத் தொகுப்பாளினி கப்ஸி ரமா. பை பை.

11 comments:
//டம்பி மேவி: என்னது.. தாத்தா கைல விஸ்கியா?//
super! hi hi :-)
யாப்பு இலக்கணத்தில் காப்பு காச்சுன்ன மாதிரியும் கராபூந்தியில் ஜிலேபி போட்ட மாதிரியும் இருக்கு இந்த பதிவு
பதிவு நல்லா இருக்கு பாண்டியன் :) ம்ம்ம் ரொம்ப நாள் அச்சு பதிவு படிச்சு:(
டம்பி மேவி அது "கராபூந்தியில்" இல்லே காராபூந்தி... எங்கே சொல்லுங்க காராபூந்தி:)
ஜீ
தொடரும் ஆதரவுக்கு நன்றிங்க..
மேவி
என் இலக்கியச் செம்மலே.. வாழ்க நீ எம்மான்
ரம்யாக்கா
ரொம்ப நாள் கழிச்சு.. நன்னி..:-))
@ ரம்யா : அக்கா, காராபூந்தில காரம் கம்மியா இருந்துச்சு அதனால ஒரு கால் எடுத்துட்டேன் ..... இது ஒரு இலக்கிய திறனாய்வு செய்த பின் எடுக்கப்பட்ட முடிவு
:-)))))))
//டம்பி மேவீ said...
இது ஒரு இலக்கிய திறனாய்வு செய்த பின் எடுக்கப்பட்ட முடிவு//
மொக்கச்சாமி.. முடியல..
//ஸ்ரீ
:)))))))))))//
அருமையா சொல்லியிருக்கீங்க.. ரொம்ப நன்றிண்ணே.. எனக்குப் புல்லரிக்குது போங்க..
கலக்கலான காமெடி.. சிரித்து ரசித்து படித்தேன். தொடருங்கள் கா.பா.
ரசித்தேன்
:)
(smilie mattum poduvor sangam)
Post a Comment