"ஹலோ.. வணக்கம்.. யார் பேசுறீங்க?"
"...."
"ஹலோ.."
"பிரியத்துக்குரிய என் செல்லம் நிஷாக்குட்டிக்கு இனிய மாலை வணக்கம்.."
"ஹையோ.. சுமதி அக்கா.. எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன்மா.. நீங்க எப்படி இருக்கீங்க?"
"சூப்பரா இருக்கேன்.. போங்கக்கா.. உங்க மேல எனக்கு கோபம்.. ஒரு வாரமா ஏன் பேசவே இல்ல?"
"அப்படி சொல்லாதடா கண்ணு... ஒரு வாரமா லைனே கிடைக்கல தெரியுமா? உன்கூட பேசாம நான் மட்டும் சந்தோஷமாவா இருப்பேன்.."
"அதான பார்த்தேன்.. சொல்லுங்க.. இன்னைக்கு என்ன பண்ணப் போறீங்க?"
"பாட்டு பாடப் போறேன்மா.."
பூவே பூச்சூடவா
என் நெஞ்சில் பால் வார்க்கவா..
"அருமை.. ரொம்ப அழகா பாடினீங்க.. அட்டகாசமா பாடி அசத்திய சைதை சுமதி அக்காவுக்காக ஒரு பாடல் வந்துக்கிட்டே இருக்கு.. பார்க்கலாம் வாங்க.."
போனை வைத்து விட்டு திரும்பினாள் சுமதி. நான்காம் வகுப்பு படிக்கும் அவள் பிள்ளை ரிதின்யா கையில் நோட்டோடு நின்று கொண்டிருந்தாள்.
"அம்மா.. இந்த கணக்கு புரியல.. கொஞ்சம் சொல்லித் தாயேன்.."
"சனியனே.. அதான் மாசா மாசம் ஸ்கூலுக்கு ஆயிரக்கணக்குல கொட்டிக் கொடுக்குறோம்ல.. அங்க ஒழுங்கா சொல்லித் தர மாட்டாங்களா? இங்க வந்து என் உயிரை வாங்கிக்கிட்டு? ச்சீ.. இந்த வீட்டுல அஞ்சு நிமிஷம் நிம்மதியா இருக்க முடியுதா? எல்லாம் என் தலையெழுத்து.. வந்து தொலை.."
சுமதி பிள்ளையை இழுத்து உக்கார வைக்க டிவியில் அவளுக்கான பாடல் சமர்ப்பணம் ஆகிக் கொண்டிருந்தது.
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே..

9 comments:
பல வீடுகளில் இன்று இது தான் நடக்கது...
சரியான அறை பாஸ்!
அந்த மாதிரி "சுமதி"கள் இந்தக் கதையை படிக்க ஆண்டவன் அருள் புரிவாராக :)
எல்கே
நன்றி நண்பா
சங்கவி
வருத்தபட வேண்டிய உண்மை தலைவரே
பாலாஜி
ஆமா நண்பா.. மக்கள் கொஞ்சமாவாது மாறினா சரி
என்னத்த சொல்ல இப்படியும் நடக்குது
நல்லாயிருக்கு காபா.... ஆனா குமுதம் ஒரு பக்க கதை மாதிரி இருக்கு. ஒரு பக்க (சரி முக்கால் பக்க ) கதையேன்றாலே இந்த கட்டமைப்பில் எழுத வேண்டும் என்று சட்டம் எதாவது இருக்க ?????
நிலாவன்
ஆமாம் தல..:-((
மேவி
ஃபார்மட் எல்லாம் இல்ல மேவி.. சும்மா ஒப்பேத்துறதுக்காக அந்த மாதிரி சொல்றது..
கதை ரொம்ப நல்லாருக்கு..
காபா, இதை விட சில ஆங்கில / தமிழ் கவிதைகளை கொண்டு ஒரு பக்க கதை எழுதுங்க ...அது இதை விட நல்லாயிருக்கும்
மின்மினி
ரொம்ப நன்றிங்க
மேவி
நேட்டிவிட்டி முக்கியம் அமைச்சரே.. நாம நமக்கு வர்ற விஷயத்த ஒழுங்கா செய்வோம் தல..
Post a Comment